காற்றில் உன் கை விரல்கள்

அதிகாலை நேரம்
ஜன்னலோர பயணம்…
தலைகோதிச் செல்லும்
காற்றில் உன் கை விரல்கள்…
சிலிர்த்தது காது மடல்

Advertisements

கவிதைகள் புரிவதேயில்லை!!

கனவுகளைத்தின்னும் இரவுகள்..
அகிலன்

பற்கள் முளைத்த
இரவுகள்
கனவுகளைத் தின்று
கொழுத்தன..

தூக்கத்தை
சிறையிலடைத்த
இரவின் படைவீரர்
விழிகளைச் சூறையாடினா.;

என்றைக்கும்
இருக்கட்டும் இரவு.

நீள இரவின்
பெருமூச்சு….
துப்பாக்கிகளினின்றும்
புறப்படுகிறது
பெரும் ஊழியாய்.

என் கனவின் மீதியை
வானில் கரைக்கிறது
நடுநிசியில்
வீரிட்டுப்பறக்கும்
ஒரு பறவை.

எனக்கு ஏனோ இம்மாதிரி கவிதைகள் புரிவதேயில்லை!!

பறவையை சுட வானம் விழுந்ததேன்?

விகடனில் வெளியாகும் ‘தேசாந்திரி’ யில் எஸ்.ராமகிருக்ஷ்ணன் இந்த கவிதையை குறிப்பிட்டிருந்தார்.

ஒரு பறவை பறந்துகொண்டிருக்கும்போது
மிதந்து கொண்டிருக்கிறது
கூடவே வானமும்
பறவையை சுட்டார்கள்
விழுந்ததோ
ஒரு துண்டு வானம்

-பாலைநிலவன்

பறவையை சுட வானம் விழுந்ததேன்?
யோசித்துக்கொண்டிருகிறேன்.