கனவுகளைத்தின்னும் இரவுகள்..
அகிலன்
பற்கள் முளைத்த
இரவுகள்
கனவுகளைத் தின்று
கொழுத்தன..
தூக்கத்தை
சிறையிலடைத்த
இரவின் படைவீரர்
விழிகளைச் சூறையாடினா.;
என்றைக்கும்
இருக்கட்டும் இரவு.
நீள இரவின்
பெருமூச்சு….
துப்பாக்கிகளினின்றும்
புறப்படுகிறது
பெரும் ஊழியாய்.
என் கனவின் மீதியை
வானில் கரைக்கிறது
நடுநிசியில்
வீரிட்டுப்பறக்கும்
ஒரு பறவை.
எனக்கு ஏனோ இம்மாதிரி கவிதைகள் புரிவதேயில்லை!!