கவிதைகள் பிழைத்துப் போகட்டும்

துவும் எழுதக்கிடைக்காவிட்டால் நான் கவிதை எழுதலாம் என்று நினைப்பதுண்டு. அதனாலேயே நான் இன்று வரை கவிதை எழுதத் தலைப்படவில்லை. ஆனால் கவிதைகள் நிறையப் படிப்பதுண்டு. படித்துவிட்டு புரியாமல் விழிப்பதும் உண்டு. பெரும்பாலும் கணையாழி, தீராநதி போன்ற இதழ்களில் வரும் கவிதைகள் என்றைக்குமே எனக்குப் புரிவதில்லை, அன்றும் சரி, இன்றும் சரி. சில சமையம் நமக்கேன் வீண் வம்பு என்று நான் விலகிச்செல்வதும் உண்டு. ஆனால் இன்று பல புதிய கவிஞர்கள் எழுதும் கவிதைகளே சில சமையங்களில் புரிவதில்லை. சில சமையம் படித்துவிட்டு நான் மிகுந்த எரிச்சல் பட்டதும் உண்டு.

அவ்வாறான வேளைகளில் ஆபத்பாந்தவனாக வருபவன் என் அறை நண்பன் மட்டுமே. அவனுக்கு புரிகிறதோ இலலையோ, சரியோ தவறோ, கவிதை சொன்ன அடுத்த நொடி எதேனும் ஒரு விளக்கம் கண்டிப்பாகத் தருவான். விளைவுகளைப் பற்றி அவன் யோசிப்பதேயில்லை, தற்கால கவிஞர்களைப் போல.

சில சமையம் அவனுக்கும் புரியாமல் போவதுண்டு. அப்பொழுதெல்லாம் கவிஞர்கள் என் நண்பனின் கடுங்கோபத்திற்கு ஆளாவார்கள். சில சமையம் மிகுந்த எரிச்சலாகி, அவன், இது என்னடா கவிதை, நான் சொல்கிறேன் பார், என்று உடனே எடுத்துவிடுவதுண்டு. பல சமையம் எனக்கு தவறு செய்து விட்டோமோ என்று தோனுவதுமுண்டு. சில சமையங்களில் சில் நல்ல சிரிக்கத்தக்க கவிதைகளை அவன் சொல்வதுமுண்டு.

ஒரு நாள் நான் எங்கோ படித்த கவிதை எத்தனை முயன்றும் அவனுக்கு புரியாமல் போகவே, கடுங்கோபத்துக்குள்ளாகி, நானும் எழுதுகிறேன் பார் என்று சபதம் போட்டு, மறுநாள் அலுவலகம் சென்று, கவனிக்க, அலுவலகம் சென்று, முதல் வேளையாக ஒரு கவிதை(??) எழுதி எனக்கு மின்னஞ்சல் அனுப்பினான். அந்த கவிதை உங்கள் பார்வைக்கு,

அரும்பு மீசை

காலைக் கதிரவன் ஜன்னல் வழியே சீண்டினான்,
அவன் எழுந்து அன்ன நடை போட்டான்,
கண்ணாடி முன் சென்று அவன் முகத்தைப் பார்த்தான்,
ஏதோ ஒரு மாற்றம் தெரிந்தது,
பூமியில் இருக்கும் சிற்றெறும்பை
வானத்தில் இருந்து பார்த்ததைப் போல்
சிறியதாய் ஏதோ சில அவன் மூக்கின் கீழே
மற்றும் உதட்டின் மேலே
தெரிந்தது ஒன்று
அவன் அதைக் கண்டதும்
நீண்ட நாள் மழைக்காக காத்திருந்த விவசாயி
பெய்த சிறு மழை துளிகளை
கண்டதை போல களிப்புற்றான்

இந்த வரியை டைப் செய்து முடிக்கும் பொழுது, ‘இது என்ன, கடவுளே! புரியாது கடவுளே!’ என்ற புதுப்பேட்டையில் வரும் பாடல் எனது மடிக் கணினியில் ஒலித்துக்கொண்டிருந்தது, முற்றும் எதிற்பாராத ஒன்று, அதற்கு நான் பொறுப்பும் அல்ல. அன்று முதல் அவனது பெயரின் முன் கவிஞர் என்ற அடை மொழியை இனைத்தே அழைக்கிறோம்.

மற்றொரு நாள் நானும், எனது நண்பர்களும் இந்தக் கவிதையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த பொழுது, கவிஞர், கடுங்கோபத்துக்குள்ளாகி, இன்னொரு கவிதை சொன்னார். அது,

கடலில் எழுவது கடலலை
ஆனால் அங்குள்ள
இளைஞர்கள் போடுவதோ கடலை

சபை மரியாதை கருதி இந்தக் கவிதை? சிறிது மாற்றி எழுதப்பட்டிருக்கிறது. அதற்கப்புறம் கவிஞர், அவருடைய கவிதைகளுக்கு, தனி ப்ளாக் ஆரம்பிக்கப்போவதாக,கூறியிருக்கிறார்.

மற்றொருநாள், என் இன்னொரு நண்பர் ஒருவர், எங்கள் இருவரையும், எதிரும் புதிரும், என்று குறிப்பிட, அடுத்த மைக்ரோ செக்கண்ட், ‘ஏன் எதிரும் பொதரும்னு சொல்லவேண்டியதுதானே?’ என்றான். நான் கொஞ்சம் நீண்ட தலைமுடி தற்பொழுது வைத்திருக்கிறேன் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கவிதைகள் பிழைத்துப் போகட்டும், விட்டு விடுங்கள் கவிஞரே!

எதிர்பாராத திருப்பம்

எதிர்பாராத திருப்பம் சிறுகதை

ட்டோவின் வேகம் குறைந்தது. இயந்திரம் மெதுவாக சத்தம் போட்டு பின் சுத்தமாக அடங்கியது. சுஜிதா ஆட்டோக்குள்ளிருந்து தலையை வெளியே நீட்டி எட்டிப்பார்த்தாள். ‘ரெயில்வே க்ராஸிங்மா’ ஆட்டோக்காரன் இருக்கையை விட்டு எழுந்து பெட்டிக் கடையில் பீடியைப் பற்ற வைத்துக்கொண்டான். சுஜிதா கைக்கெடிகாரத்தைப் பார்த்தாள். மணி இரவு 8:10. இன்னும் 20 நிமிடங்கள் இருந்தன. இதயம் படபடத்தது.இரத்த ஓட்டம் அதிகமானது போல் இருந்தது. அப்பாவை நினைத்தால் பயமாகவும் இருந்தது, பாவமகவும் இருந்தது. சீட்டில் சாய்ந்து முகத்தைத் திருப்பிப் பார்த்தாள். தியாகராஜர் பொறியியற் கல்லூரிக்குச் செல்லும் சாலை மெர்க்குரிச் வெளிச்சத்தில் பிரகாசமாக வெரிச்சின்று இருந்தது.

‘மதுரை,திருச்சி,விழுப்புரம் மார்க்கமாக சென்னை எழும்பூர் செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் இன்னும் சிறிது நேரத்தில் முதல் பிளாட்பாரத்தில் இருந்து புறப்படும்’. சுரேக்ஷ் பொறுமை இழந்து செல்லை எடுத்து பொத்தானை அழுத்தினான்.’காலிங் சுஜிதா…..’ என்று ஸ்கிரீனில் தெரிந்தது. காதில் வைத்துக்கொண்டான். ‘கமான் சுஜிதா..கமான் டேக்கிட்’ என்றவன் சுற்றும் முற்றும் பார்ததான். முகம் வெளுத்திருந்தது.

******************************

சுரேக்ஷ் தனக்கும் பிராசத்துக்கும் டீ சொல்லிவிட்டு, தினத்தந்தி பேப்பரை எடுத்துக் கொண்டு ஹாயாக பெஞ்சில் உட்கார்ந்தான்.பைக்கை நிறுத்தி விட்டு பிரசாத்தும் வந்து அவன் பக்கத்தில் உட்கார்ந்தான்.சுரேக்ஷ¢டமிருந்து ஒரு பேப்பரை வாங்கி தானும் படிக்கத்துடங்கினான்.காலேஜ் முடிந்து பெண்கள் தத்தம் வடுகளுக்குச் சென்று கொண்டிருந்தனர்.

காலேஜ் முடிந்தவுடன் இப்படி இங்கு வந்து டீ குடிப்பது அவர்கள் வழக்கம்.’டேய் சுரேக்ஷ்..நீஎழுதின கதை ஒன்னு குமுதத்தில்….’ தோளில் கை விழுந்தவுடன் பிராசாத் பேச்சை நிறுத்திவிட்டுத் திரும்பினான்.மூன்று நான்கு கனத்த உருவங்கள் நின்று கொண்டிருந்தன.’சுரேக்ஷ் யாருடா இங்க?’ உருவத்தைப் பார்த்த பிரசாத் மிரண்டான். அவனையும் அறியாமல் அவன் கண்கள் சுரே¨க்ஷ நோக்கித் திரும்பின.சுரேக்ஷ் ஒன்றும் புரியாமல் விழிக்க, நங்கென்று குத்து ஒன்று முகத்தில் விழுந்து மூக்கு உடந்தது.

அதற்கப்புரம் விழுந்த அடிகள் தர்ம அடிகள். எல்லாம் முடிந்து போகும் போது ஒரு உருவம் சொல்லியது,’தூத்தேறி, கதை எழுதினியே பேரு ஊரு எல்லாம் மாத்து எழுதத் தெரியாது?. முண்டம். நீயெல்லாம் கதை எழுதி…’ என்று சொல்லி மண்டும் ஒரு மிதி மிதித்துச் சென்றது.சுரேக்ஷ் நினைவிழந்தான்.

*********************

சுஜிதா…காலிங்பெல் சத்தம் கேட்குது பார். போய் யாருன்னு பாரு!’ சமையலரையில் இருந்து அம்மாவின் குரல் கேட்கவே..படித்துக் கொண்டிருந்த குமுதத்தை வைத்து விட்டு எழுந்து சென்று கதவைத் திறந்தாள், சுஜிதா. ‘எம்.எல்.ஏ சார் இல்லையாமா?’ கதர் வேக்ஷ்டி சட்டை ஒன்று கேட்டது.’ஏன் கேட்கும் போது இருக்கரானு கேக்க மாட்டீங்களா?’ சுஜிதா அரட்டினாள். ‘எம்.எல்.ஏ சார் இருக்காராமா?’ கதர் வேக்ஷடி சலைக்கவில்லை. ‘இல்லை. பெரிய வீட்டில் இருப்பார்’பட்டென்று சொல்லிவிட்டு சட்டன்று கதவைச் சாத்தினாள் சுஜிதா.

உள்ளே வந்து குமுதத்தை எடுத்து மறுபடியும் அரசு பதில்களைப் படிக்கத் துடங்கினாள். ‘யாரும்மா வெளியில?’ உள்ளே இருந்து குரல் கேட்டது,’தெரியலைம்மா’ பக்கத்தைத் திருப்பினாள். ‘எதிர்பாராத திருப்பம்’ சிறுகதை பிரசுரமாகி இருந்தது. படிக்கத் துடங்கினாள்.

************************

ணி எட்டாகிறது. இன்னும் என்னடா தூக்கம். உன் பிரண்டு பிரகாக்ஷ் வந்திருக்கான்’ காபியை வைத்துவிட்டு அக்கா போனாள். சுரேக்ஷ் கண் முழித்துப் பார்த்தான். வெயில் சுள்ளென்று அடித்துக் கொண்டிருந்தது மொட்டை மாடியில். எழுந்து முகத்தைக் கழுவிக்கொண்டு கிழே போனான். பிராசாத் பேப்பர் பார்த்துக் கொண்டிருந்தான். ‘வாடா. எப்போ வந்த?’ ‘இப்போத்தான். என்னாடா இன்னும் தூக்கம், மேட்ச் இருக்கு, மறந்துட்டியா?’ ‘பொருடா, அப்பா வெளியே கிளம்பட்டும்’ என்று சொல்லிக்கொண்டே டீவியை ஆன் செய்து விட்டு குளிக்கப்போனான் சுரேக்ஷ்.

குளித்து சாப்பிட்டுவிட்டு பாஸ் வேம்ப்பையர் கிரிக்கட் பேட்டை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பும் வேளையில் ‘டேய் சுரேக்ஷ், ஒழுங்கா அப்பா மதியம் சாப்பிட வருவதற்குள் வந்திடு, அப்புறம் நல்லா வாங்கிக்கட்டிக்கிடாதே’ அம்மாவின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் பிராசாத்தின் ஸ்ப்லண்டரில் தொத்திக் கொண்டான். ‘பிராசாத் வண்டியை நிறுத்து பால் வாங்கனும்’ வண்டி தன்ராஜ் ஸ்டோரின் முன் நின்றது.’வாடா சுரேக்ஷ், என்ன கிரிக்கட் பாலா?’ என்று கேட்டான் தன்ராஜ்.சுரேக்ஷ¤க்கு நண்பன். உறவினனும் கூட. ‘ஆமா தன்ராஜ் போய் எடுத்திட்டு வா.’

‘ஒரு ஒன் குயர் அன்ரூல்ட் நோட்புக் கொடுங்க’ தேனில் குழைத்து எடுத்தாற் போல் ஒரு குரல் கேட்கவே, சுரேக்ஷ் திரும்பிப் பார்த்தான். ‘அழகிய இருவிழி என்னைத் தொட என்னைத்தொடப் பார்த்ததே ஹ¤…ஹ¥…’ காற்றில் அவள் கேசம் படபடத்தது. ‘நெரிசலில் நடுவினில் கவிதையின் தரிசனம் நீளுதே..ஹ¤…ஹ¥’. அளவாக அழகாக செதுக்கப்பட்ட நாசி. அதற்குக் கீழே வரைந்தார் போல உதடு. ‘நுரைதொட்டு கரைதொட்டு புது வெள்ளம் மனதினில் பாயுதே..ஹ¤..ஹ¥!’ ‘ஹாய்’ என்றான் சுரேக்ஷ். பதில் இல்லை. சுரேக்ஷ் சுற்றும் முற்றும் பார்த்தான். மறுபடியும் ‘ஹாய்’ என்றான். ம்ம்ஹ¤ம். ‘உங்க பேர் என்ன?’ ம்ம்ஹ¤ம். பதில் இல்லை பார்க்கவும் இல்லை. நோட்டை வாங்கிக் கொண்டு விறு விறுவென்று நடந்து சென்று தன் சன்னியை ஸ்டார்ட் செய்தாள்,அந்தப் பெண்.

சுரேக்ஷ் பிரசாத்திடமிருந்து சாவியைப் பறித்து, ஸ்ப்லண்டரை ஸ்டார்ட் செய்தான். அவளைப் பின் தொடர்ந்தான்.

விரட்டிச் சென்ற சுரேக்ஷ், சட்டென்று அவள் பைக்கின் முன்னால் கட் அடித்து நிறுத்தினான். அந்தப் பெண் பயத்தில் உலன்றது. நல்ல வேளை கழே விழ வில்லை. சுரேக்ஷ் வருத்தப்பட்டான். மண்டும் ஸ்டார்ட் செய்தான். சிறிது நேரம் கழித்து அவளும் பின் தொடர்ந்தாள்.இந்த முறை அவளின் அருகில் பைக்கில் சென்று கொண்டே ‘உங்க பேர் என்னனுதானே கேட்டேன்’ என்றபடி அவளது அவளது பைக்கை ஒதுக்கினான். அந்த பெண் ரோட்டை விட்டு மண்ணில் இறங்க வேண்டியது ஆயிற்று, வேறு வழியின்றி அந்த் பெண் பைக்கை நிறுத்தி பேந்த பேந்த விழித்தது.

‘ஏய் என்னாப்பா அங்க?’ இரண்டு பேர் கேட்கவும் சுரேக்ஷ் வண்டியை ஸ்டார்ட் செய்து பறந்தான். சிறுது தூரம் சென்று திரும்பிப் பார்த்தான். அந்தப் பெண் அங்கேயே நின்று கொண்டிருந்தது. தன்ராஜ் கடை. சுரேசும், பிரசாத்தும் அமர்ந்திருந்தனர். ‘சுரேக்ஷ், அந்தப் பொண்ண விரட்டிட்டுப் போனியே என்னாச்சு?’ சுரேக்ஷ் ‘ ஒன்னும் ஆகலை, பேர் கேட்டேன்உடனே அழ ஆரம்பித்து விட்டாள்’ என்றான். ‘என்கிட்ட கேளு நான் சொல்றேன். அந்தப் பெண் பெயர் சுஜிதா. நம்ம ஊர் தனபதி எம்.எல்.ஏ வோட பொண்ணு. டேஞ்சர் பார்ட்டி.அவங்கப்பா பயங்கரமானவன், பார்த்து நடந்துக்கோ.’ சுரேக்ஷ¤க்கு அடி வயிற்றில் புளியைக் கரைத்தது. ‘அந்தப் பெண் நம்மை அடயாளம் கண்டுக்குமோ?’

லைவாணித் தியேட்டர். திருநகர் இரண்டாவது நிறுத்தம். சுரேக்ஷ் மற்றும் பிராசாத்தின் நண்பர் கூட்டம் அரட்டைக் கச்சேரி ஆரம்பித்திருந்தது.பள்ளிக்கூடம் விடும் நேரம். சுரேக்ஷ் மட்டும் உன்னிப்பாக எதையோ கவனித்துக்கொண்டிருந்தான். நேரிசல் மிகுந்த அந்த சாலையின் மறுபுறம் சுஜிதா சன்னியை விட்டு இறங்கிக்கொண்டிருந்தாள். சுற்றும் முற்றும் பார்த்தாள். பின் சுரே¨க்ஷப் பார்த்தாள். வண்டியை உருட்டிக் கொண்டு போய் மரத்தின் அடியில் நிறுத்தினாள்.சுரேக்ஷ் பிராசாத்தை தட்டி அவளைக் காண்பித்தான்.சுஜிதா கைப்பையில் எதையோ தேடி பின் ஒன்றை வெளியில் எடுத்தாள். செல்போன்.சுஜிதா நம்பர்களை அழுத்தி காதில் வைத்தாள். எதோ பேசினாள். ‘டேய் சுரேக்ஷ், அந்த பொண்ணு நடந்ததை எல்லாம் அவங்க அப்பாகிட்ட சொல்லி உன்னைக் காட்டிக் கொடுக்கப்போகுது டா! வா, போயிடலாம்’ என்றான் பிரசாத். நடந்ததை கேட்ட பாதி நண்பர் கூட்டதைக் காணவில்லை. அந்தப் பெண் இவர்களையே வெறித்துக் கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில், சீறிப் பாய்ந்து ஒரு டாடா சுமோ வந்து நின்றது. உள்ளேயிருந்து ஆட்கள் இறங்கினார்கள்.சுஜிதாவை நோக்கிச் சென்றனர்.சுரேக்ஷ்,பிரசாத்தைத் தவிற அனைவரும் எஸ்கேப். அந்தப் பெண் இவர்களை நோக்கிக் கையைக் காண்பித்தது. பின் சுமோவில் ஏறிக் கொண்டது.பிரசாத்தும் இனி நிற்பது டேஞ்சர் என்று ஓடி விட்டான்.
சுமோவில் வந்தவர்களில் ஒருவன் சுஜிதாவின் சன்னியைத் தள்ளிக் கொண்டு சாலையைக் கடந்து இவனை நோக்கி வந்தான்.சுரேக்ஷ் ஒன்றும் புரியாமல் விழிக்க, வந்தவன் சாலையைக் கடந்து, இவனுக்குப் பின்னால் சென்றான். சுரேக்ஷ் திரும்பிப்பார்க்க ஒர்க்க்ஷ¡ப். சுஜிதாவின் வண்டி டயர் பங்சர்.

சுரேக்ஷ¢ற்கு உயிர் வந்தது.

************************************

தையைப் படித்து முடித்த சுஜிதா வெளிறினாள். மறுபடியும் காலிங் பெல் சத்தம் கேட்டது. குமுதத்தை வைத்து விட்டு, எழுந்து போய் கதவைத் திறந்தாள். தனபதி.’போய்க் கொஞ்சம் தண்ணர் கொண்டுவாம்மா’ என்று சொல்லிக் கொண்டே வந்து சோபாவில் அமர்ந்தார் தனபதி. எதிரே டீ பாயில் இருந்த குமுதத்தைப் பிரித்தார். ‘எதிர் பாராத திருப்பம்’ கதை தெரிந்தது. படிக்கத் துடங்கினார்.

************************************

பிராசாத்தும் சுரேக்ஷ¤ம் கோவிலில் உட்கார்ந்திருந்தனர். சுரேக்ஷ¢ன் கையில் மாவுக்கட்டுப் போடப்பட்டிருந்தது. தூரத்தில் சுஜிதா தெரிந்தாள். சுஜிதாவைக் கண்டதும் சுரேக்ஷ் எழுந்து காலை இழுத்து இழுத்து நடந்தான். கட்டு என்னமோ கையில் தான். சுரே¨க்ஷப் பார்த்துவிட்ட சுஜிதா முதலில் தயங்கி நின்றாள். பின் மெதுவாக நடந்து இவர்களிடம் வந்தாள். பிராசாத்தப் பார்த்தாள். பிரசாத் சுரே¨க்ஷப் பார்த்தான். சுரேக்ஷ் சுஜிதாவைப் பார்த்தான். காற்றில் கேசம் பறந்தது. ‘நுரை தொட்டு கரை தொட்டு புது வெள்ளம் மனதினில் பாயுதே..ஹ¤..ஹ¥’ ‘ஹாய் சுரேக்ஷ் சாரிப்பா, எல்லாம் என்னாலதான். என்னை மன்னிச்சிடுங்க ப்ளீஸ். நானாக எதையும் சொல்லவில்லை. கதையைப் படித்து விட்டு அப்பாவே புரிந்து கொண்டார். நான் எவ்வளவு தடுத்தும் கேட்கவில்லை. ஆனாலும் உங்களுக்கு தைரியம் தான். பேரைக் கூட மாற்றாமல் எழுதியிருக்கீங்களே. மறுபடியும் சாரி. இந்தாங்க பிரசாதம். திருநீரை எடுக்கப் போய், சுஜிதவின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டான் சுரேக்ஷ். சிரித்த சுஜிதாவும் கைகளை விடுவிக்க முயற்சிக்கவில்லை. பிரசாத் இடத்தைக் காலி செய்தான்.

*******************

ல்லப்பா என்னால் வேறு ஒருவரைக் கல்யாணம் செய்துக்க முடியாது’ என்றாள் சுஜிதா. பளார் என்று அறை விழுந்தது.’நானும் படிச்சுப் படிச்சு கிளிப்பிள்ளைக்குச் சொல்றமாதிரி சொல்லிக்கிட்டு இருக்கிறேன், நீயும் கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதையே சொல்றியா?’ தனபதி ருத்ர மூர்த்தியாகியிருந்தார். ‘பாவம் படிக்கிற பையன்னு உயிரோட விட்டா, என்கிட்டையே விளையாடுரானா? அவன் உயிரோடு இருந்தால் தானே நீ அவனைக் கல்யாணம் செய்துப்ப?’ ‘பாக்கியம்’ மனைவியை அழைத்தார். ‘இவளை ஒழுங்கா உள்ள பூட்டி வை. இன்னும் ஒரு வாரத்தில இவளுக்கும் எம்.எல்.ஏ. தனசேகரன் பையனுக்கும் கல்யாணம். நான் அந்த பயலப் பார்த்துட்டு வாரேன்’ அனல் பறக்க வெளியேரினார் தனபதி.

* ***********

செல்போன் ஸ்கிரீனில் ‘காலிங் சுஜிதா…..’ என்று தெரிந்தது. பதற்றத்துடன் செல்போனைக் காதில் வைத்துக் கொண்டான் சுரேக்ஷ். ரெயில்வே ஸ்டேசன் இரைச்சலாக இருந்தது. ‘கமான்…கமான்…சுஜிதா..டேக் இட்’ செல்போன் சத்தம் கேட்டு பையில் செல்போனைத் தேடினாள் சுஜிதா.

தடக்..தடக்..தடக்.தடக்..பேரிரைச்சலோடு ரயில் ஒன்று சென்றது. செல்போனைக் காதிற்குக் கொடுத்தாள்.’ம்…ம்ம்…ம்…ம்…சரி. டோன்ட் ஒரி டா. நான் இன்னும் 10 நிமிடத்தில் ஸ்டேசனில் இருப்பேன்…’

ரெயில்வே க்ராசஸிங் கேட் திறந்தது. ஆட்டோக்காரான், பீடியை அனைத்து விட்டு ஒடி வந்து ஆட்டோவை ஸ்டார்ட் செய்தான். ஆட்டோ நகர்ந்தது. சுஜிதா பின் ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். பிரசாத்தும், மற்றும் பல சுரேக்ஷ¢ன் நண்பர்களும் பைக்கில் பின்னால் வந்து கொண்டிருந்தனர்.
திருப்பரங்குன்றம் மலை அவளை விரட்டிக் கொண்டு வந்தது;

********************************************************

‘இட’ ஒதுக்கீடு உண்டா எங்களுக்கு?


எங்களுக்கும் உண்டா ‘இட’ ஒதுக்கீடு? நாங்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில்தான் இருக்கிறோம்.

அவர்கள் எல்லோருக்கும் சேர்த்துத்தான் போராட்டம் செய்கிறார்களாம். எங்களுக்கும்சேர்த்துத் தானே?

குழந்தை






சமுத்திரக் கரையில்
ஒதுங்கும் கிளிஞ்சல்கள்
குழந்தைக்கு வைரங்கள்
காட்சிதானே நிஜ வைரம்
காண்பவன் குழந்தையானால்
கிளிஞ்சல்கள் போதுமே!

– நா.விச்வநாதன்

இடஒதுக்கீடு பற்றி ஞானி

இடஒதுக்கீடு பற்றி நாட்டில் உள்ள அனைவரும் விவாதங்கள் செய்து கொண்டிருக்கும் இந்த வேலையில், ஞானி, விகடனில் சிறந்த விளக்கம் அளித்திருக்கிறார். அதில் சில இங்கே,

பிற்படுத்தப்பட்டவருக்கு மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் இடம் ஒதுக்குவதால் என்ன ஆபத்து வந்துவிடும் என்று எதிர்க்கிறார்கள்?
தகுதி திறமை இல்லாதவர்கள் டாக்டர்களாகவும் இன்ஜினீயராகவும் ஆகிவிடுவார்கள் என்பதே எதிர்பவர்களின் வாதம். இந்த வாதம் படு ஓட்டையானது என்பதற்கு தென்னிந்தியாவே சாட்சி! கட்ந்த ஐம்பது ஆண்டுகளில், தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான் டாக்டர்கள்/இன்ஜினீயர்கள் பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட ஜாதியில் இருந்து வந்திருக்கிறார்கள்.வட இந்தியாவின் உயர் சாதி டாக்டர்கள்/இன்ஜினீயர்களை விட இவர்கள் திறமைக் குறைவானவர்கள் என்று சொல்ல ஒரு சாட்சியமும் இல்லை. மருத்துவ சிகிச்சைக்காக வட இந்தியா முதல் பாகிஸ்தானிலிருந்தெல்லாம் நோயாளிகல் தேடி வருவது தென்னிந்தியாவைத்தான்.

யாருக்கெல்லாம் தகுதியும் திறமையும் இருக்கிறதோ அவர்கள் எல்லோரும் படிக்கட்டுமே! எதற்காக் இடஒதுக்கீடு?
எந்தப் படிப்பையும் படிக்க விரும்பிகிற எல்லோருக்கும் வாய்ப்பு தர வேண்டும் தான். ஆனால் அதற்கான கல்லூரிகள் இட வசதி இதற ஏற்பாடுகள் குறைவாக இருக்கும் நிலையில், யாருக்கு முன்னுரிமை என்று தீர்மானிக்க வேண்டியிருக்கிறது.

சரி. ஏன் சாதி அடிபடையில் முன்னுரிமை தர வேண்டும்?
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாதி அடிப்படையில் உயர்வு தாழ்வு சொல்லப் பட்டு வந்ததுதான் காரணம். அப்படி இருந்திராவிட்டால்,இதுவும் தேவைப்பட்டிராது.சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வு நிலவி வரும் இந்த சமூகத்தில், அதை மாற்ற சாதி அடிப்படையில் தான் சலுகை தரப்பட்டாகவேண்டும்.

ஏன் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தரக் கூடாது? எல்லா சாதி ஏழைகளுக்கும் முன்னுரிமை தருவது தானே நியாயம்?
பொருளாதார அடிப்படையில் ஏழைக்கு முன்னுரிமை தரலாமே என்ற கோரிக்கையை, சாதி ரீதியிலான இடஒதிக்கீடு வரும்போது மட்டும் எழுப்புவார்கள்.ஏற்கனவே பணக்காரர்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு இருக்கும் இடங்களில் ஏன் எழுப்பவில்லை என்று யோசியுங்கள்.

புரியவில்லை. பணக்காரர்களுக்கு எங்கே இட ஒதுக்கீடு இருக்கிறது?
தனியார் பொறியியல், மருத்துவ இதர கல்லூரிகளில் மேனேஜ்மென்ட் கோட்டா என்ற பெயரில், சீட்டுக்கு இவ்வளவு தொகை நன்கொடை என்று ஏற்பாடு இருக்கிறதே அது என்னவாம்? பணம் உள்ளவர்கள் சீட்டை வாங்கிக் கொள்ளலாம் என்பது பணக்காரர்களுக்கு இருக்கும் இடஒதுக்கீடு தானே?தவிர ஐ.ஐ.எம். போன்ற உயர்மட்டக் கல்லூரிகளில் கட்டணத்தைக் குறைக்கக்கூடாது என்று வற்புறுத்தப்பட்டதே,அதற்கு என்ன அர்த்தம்? பணம் உள்ளவர்கள் மட்டுமே அங்கு படிக்கவரும் நிலை தொடரவேண்டும் என்பதற்குத்தானே?

அப்படியானால் உயர் சாதியில் இருக்கும் எழைகளின் நிலை என்ன?
பொது ஒதுக்கீட்டில் வரும் எல்லோருக்குமே, பொருளாதார அடிப்படையில் தனி ஒதுக்கீடு தரலாம் என்று வி.பி.சிங். போன்றவர்கள் யோசனைகூறியிருக்கிறார்கள்.ஆனால் இடஒதுக்கீடு என்பது சாதி எற்றத் தாழ்வைச் சரி செய்ய வந்ததே தவிர வர்கக வேறுபாட்டை சரிசெய்ய அல்ல.அதற்கு இன்னொரு திட்டம் தேவை.

PS:
blogger2 க்கு மாறின உடனே நான் மே மாதத்தில் போட்ட இந்தப் பதிவு உயிர் பெற்றிருக்கிறது. Er..Actually நான் இந்தப் பதிவு தான் புதுசா post பண்ணினேன். 😦

செல்லம்மாள்

புதுமைப்பித்தனின் ‘செல்லம்மாள்’ கதையை இன்று மறுபடியும் படித்தேன். புதுமைப்பித்தன் கதைகளை விமர்சிக்கும் தகுதி எனக்கு இருக்கிறதா இல்லையா என்பது வேறு விசயம், ஆனால் புதுமைபித்தனின் கதைகளை சிலாகிக்கும் உரிமை எனக்கு உண்டு.

புதுமைப்பித்தனின் சிறுகதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமான சிறுகதை இதுதான். புதுமைப்பித்தன் மிகப் பெரிய கதை சொல்லி இல்லை என்று சிலபேர் வாதிடலாம். ஆனால் அவர் மிகச்சிறந்த எழுத்தாளர். அவரைப் போல் நாட்டு நடப்புகளை கதையோடு இணைத்து சொன்னவர்கள் இல்லை என்றே சொல்லலாம். நாட்டு நடப்புகளை நையாண்டியோடும் மனவருத்தத்தோடும் மிக எளிதாகச் சொல்லிவிடுவார். சாதாரண வாசிப்பாளர் அதை கண்டுகொள்ளாமல் கடந்து செல்வதற்கும் வாய்ப்பு உள்ளது.

செல்லம்மாள் கதை மிக ஆழமான ஒரு காதல்கதை. ஒரு மிகச்சிறிய துணிக்கடையில் வேலை செய்யும் ஒருவருக்கும்நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக கிடக்கும் அவருடைய மனைவிக்கும் இடையேயானகாதலைச் சொல்லும் கதை இது. காதலைச் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது பிற விசயங்களையும்புதுமைப்பித்தன் கதை போகும் போக்கிலே நம் மனதில் விதைக்கிறார்.

கதையின் நாயகனின் வேலையைப் பற்றிச் சொல்லும் போது, வேலையை, வயிற்றுப் பிழைப்பின் நிலைகளம் என்று கூறுகிறார். வயிற்றுப் பிழைப்பின் நிலைகளம், உண்மைதான் அல்லவா?

கதையின் நாயகன் சந்தித்த வாழ்க்கையை சொல்லும் போது, ‘அவர் ஏறிய சிறுசிறு மேடுகள்யாவும் படிப்படியாக இறங்கி கொண்டே போகும் பள்ளத்தின் கோளாறுகளேயாகும்’, என்று அருமையாக கூறிவிடுகிறார்.

மேலும் ‘ஒரு கஜம், அரக்கஜம், பட்டு, பழுக்கா, சேலம், கொள்ளே காலம், பாப்லின், டுவில்-என்றெல்லாம் பம்பரமாக வயிற்றுக் கடவுளுக்கு லக்சார்ச்சனை செய்து கொண்டிருந்தார்’ என்று சொல்கிறார்.

மனைவியின் நோய்க்கு டாக்டரைக் கூப்பிடப் போன நாயகன் டாக்டர் கிடைக்காமல், டாக்டரின் வீட்டின் முன் விலாசம் எழுதி வைத்து வருகிறார். இவர் வீட்டுக்கு வந்த சில நேரத்திற்கெல்லாம் டாக்டர், நாயகனின் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்து வந்துவிடுகிறார். அதை, ‘ அதே சமயம் ஒரு ரிக்ஸா வந்து நின்றது. ‘ஸார், உள்ளே யார் இருக்கிறது?’என்று குரல் கொடுத்துக் கொண்டே கைப்பெட்டியும் வறுமையுமாக டாக்டர் உள்ளே வந்தார்’ என்கிறார்.

வைத்தியம் முடித்து டாட்டர் புறப்படும்பொழுது, ‘ இந்த ரிக்சாகாரனுக்கு ஒரு நாலணா கொடுங்கள்’ என்று சொல்லிக்கொண்டேவண்டியில் ஏறிக் கொண்டார். மடியில் இருந்த சில்லறை மனித மாட்டின் மடிக்கு மாறியது’ என்கிறார்.

கதையைப் படித்து விட்டு சிறிது நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன், அவருக்குப் பெயர் பொருத்த மாகத்தான் இருக்கிறது.

இடஒதுக்கீடு இப்பொழுதும் தேவையா?

உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதென்ற மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் அர்ஜூன் சிங்கின் முடிவை எதிர்த்து வட மாநிலங்களில் வரலாறு காணாத அளவில் போராட்டங்கள் நடந்து வருகிறது. எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆதரவளிக்காத நிலையில் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து வலுப்பெற்று வருவது ஒரு ஆச்சரியமான நிகழ்வே. டில்லி, பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மற்றும் டாக்டர்களின் போராட்டத்தால் ராணுவ டாக்டர்களை வரவழைக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.

என்ன தான் நடந்தது? அமைச்சர் அர்ஜுன் சிங் வாதிடும் சட்டத்திருத்தம் இதுதான்,

Amendment of article 15.-
In article 15 of the Constitution, after clause (4), the following clause shall be inserted, namely:-

“(5) Nothing in this article or in sub-clause (g) of clause (1) of article 19 shall prevent the State from making any special provision, by law, for the advancement of any socially and educationally backward classes of citizens or for the Scheduled Castes or the Scheduled Tribes in so far as such special provisions relate to their admission to educational institutions including private educational institutions, whether aided or unaided by the State, other than the minority educational institutions referred to in clause (1) of article 30.”.

(1) New Indian Express 10th April -Arjun rushes in where SC didn’t tread The phrase, “socially and educationally backward classes,” has been twisted by Arjun Singh to mean OBCs. This is significant given that, as Justice Khare says, not one of the three key Supreme Court rulings on the subject, Pai, Islamic Academy and Inamdar, mentioned OBCs as a target group for reservations in educational institutions. Justice Khare, who presided over the bench in both Pai and Islamic Academy case, made it clear: “The interpretation of Pai judgment means there can be reservation fixed for the weaker sections but never was there any mention of OBC. The Constitution doesn’t define or recognise OBC, it’s a government interpretation.” Consider the key SC rulings on the subject:

இதில் அமைச்சர் அர்ஜுன்சிங் கூறுகிறார் போல் பிற்பட்ட ஜாதி என்ற சொல் இல்லை, 27% இட ஒதுக்கீடு என்பதும் இல்லை. இந்த திருத்தம் இட ஒதுக்கீட்டிற்கு வகை செய்கிறது, அதை கட்டாயமாக்கவில்லை. அதாவது அரசு மாணவர் சேர்க்கையில் சிறப்பு விதிகளை செய்ய உரிமை தருகிறது. அரசு கட்டாயம் செய்ய வேண்டும் என்றோ, இட ஒதுக்கீடு 27% இருக்க வேண்டும் என்றோ அது கூறவில்லை. இந்த 27% என்பது மண்டல் கமிஷன் சிபாரிசு செய்தது.

சரி, உயர்கல்வியில் இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இப்பொழுதும் தேவையா, என்ற மிக முக்கியமான கேள்வி எழுந்துள்ளது. மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் பிற்பட்ட வகுப்பினருக்கு எதிரான அல்லது தடையாக ஏதேனும் உள்ளது என்று யாரும் கூறவில்லை. விடைத்தாள் திருத்தம், தேர்வு முறை யில் அவர்களுக்கு எதிரான பாரபட்சம் நிலவுவதாகவும் புகார் இல்லை. அப்படி இருக்கும் போது திடீரென ஏன் இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும், அதுவும் 27%. இவற்றில் பிற்பட்ட மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள், தேர்ச்சி பெறுகிறார்கள். பாரபட்சம் இல்லாத போது எதற்காக 27% இட ஒதுக்கீடு தேவை?

49.5% இட ஒதுக்கீடு என்பது கிட்டதட்ட 50% இட ஒதுக்கீடு. அதாவது இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் 50% ஜாதி அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது என்றால் இது அனைவருக்கும் சம வாய்ப்பு என்பதையே கேலிக் கூத்தாக்குகிறது. அரசே இப்படி ஜாதி அடிப்படையில் பாரபட்சங்களை, சமநிலைசீர்குலைவினை செய்தால் ஜாதி அடிப்படையில் சமூகம் செயல்படுவதை அரசு ஊக்குவிக்கிறது, ஜாதிய கட்டுமானத்தினை இன்னும் வலுவாக்குகிறது என்றுதான் பொருள். ஜாதிதான் தீர்மானிக்குமெனில் ஜனநாயகம், சம உரிமை, பாரபட்சமின்மை, ஜாதிய பாகுபாடுகளை ஒழிப்பது போன்றவற்றை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு ஜாதிதான் பிரதானம், இதில் முதலிடத்தில் பிற்பட்டோர், பின் தலித்கள்,பழங்குடியினர், பின்னர் முற்பட்ட ஜாதிகள் என்று அறிவித்து விடலாம்.

அம்பேத்கார் இட ஒதுக்கீடு என்பது குறைந்த அளவிலேயே இருக்க வேண்டும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார். இப்போது உள்ள 69% இட ஒதுக்கீடு 50% ஒதுக்கீடு போன்றவை அவர் கருத்திற்கு முரணாக உள்ளன. அம்பேத்கரும், அரசியல் சட்டத்தினை உருவாக்கியவர்களும் இட ஒதுக்கீட்டினை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான தீர்வாகவே கண்டனர். இட ஒதுக்கீட்டின் பெயரில் ஜாதி வேறுபாடுகளை உருவாக்குவதோ அல்லது அதிகரிப்பதோ அல்லது சமூகத்தில் பிளவு ஏற்படுத்துவதோ அவர்கள் நோக்கம் இல்லை. ஆனால் இப்போது அவர்கள் கருத்துக்கள் மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டு ஜாதி ரீதியினால இட ஒதுக்கீடு எங்கும் வேண்டும், எதிலும் வேண்டும், எப்போதும் வேண்டும் என்ற நிலைப்பாடே சரியானது என்று வாதிடப்படுகிறது. இது தொடருமானால் ஒரு நாள் இட ஒதுக்கீட்டினால் பாதிக்கப்பாடுவோர் பொறுமை இழந்து விடுவர். அதுதான் இப்பொழுது நடந்திருக்கிறது.

உயர் கல்வியில் போட்டி போடும் மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட சமமான தகுதியைப் பெற்றிருப்பர். உதாரணமாக மருத்துவத்தில் முது நிலை, பொறியியலில் முது நிலை போன்றவற்றைப் படிக்க அடிப்படை தகுதி உள்ளது. அத்தகுதியை எட்டிய பின் யார் பிற்பட்டோர் யார் முற்பட்டோர் இருவரும் ஒருவர்தான். பிற்பட்டோர் என்பதால் இட ஒதுக்கீடு ஆரம்பக் கல்வியுடன் நின்றுவிடுவதில்லையே. BE, MBBS,BTECH என்ற அளவிலும் இருக்கிறது. இதற்கு அப்புறமும் இட ஒதுக்கீடு வேண்டும் என்பது என்ன நியாயம். உயர் ஜாதி மாணவர், பிற்பட்ட ஜாதி மாணவர் இருவரும் ஒரே படிப்படைப் படித்து ஒரே பட்டத்தினை பெற்றிருக்கும் போது அவர்களிடையே ஒருவருக்கு மட்டும் ஜாதி அடிப்படையில் முன்னுரிமை, சலுகை தருவது என்ன நியாயம்.IIM களில் மேலாண்மை முதுகலை படிப்பிற்கான நுழைவுத் தேர்வு எழுதுவோரில் பலர் BE/BTECH படித்தவர்கள், வேலை அனுபவம் கொண்டவர்களும் உண்டு. இங்கு ஜாதி ரீதியில் பாகுபடுத்துவது எப்படி சரியான தேர்வு முறையாக இருக்க முடியும். வேலை அனுபவம், மற்றும் படிப்பு உள்ள முற்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஒருவரை விட படிப்பு மட்டுமே உள்ள ஒருவர் பிற்பட்ட ஜாதி என்ற ஒரே காரனத்திற்காக முன்னுரிமை பெறுவது என்பது சரியானதல்ல.

மருத்துவ உயர் படிப்புகளில் இடங்கள் மிகவும் குறைவு.சில பிரிவுகளில் ஒரு கல்லூரியில் 20 இடங்கள் இருக்கும், மாநிலம் முழுவதும் 100 இடங்கள் இருந்தால் அதிகம். இதில் 50% இடஒதுக்கீடு அடிப்படையில் மட்டும் ஒதுக்கப்படும் என்பது என்ன நியாயம். மீதி 50% இடங்களுக்கும் பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட ஜாதியினர் போட்டி போடலாம் என்று இருக்கும் போது இட ஒதுக்கீட்டினால் பாதிக்கப்படுவர்களுக்கு என்ன கிடைக்கும், கிட்டதட்ட பூஜ்யம். தமிழ் நாட்டில் இப்படித்தான் நிலைமை இருக்கிறது.முற்பட்ட வகுப்பினர் MS, MD போன்றவற்றில் சேர்வது மிகமிக கடினமாக இருக்கிறது. இதால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஒரே நம்பிக்கை மத்திய அரசின் கீழ் இருக்கும் மருத்துவ ஆராய்ச்சி,கல்வி நிறுவனங்கள். அங்கும் 50% இட ஒதுக்கீடு என்றால் அவர்கள் எங்கு போவார்கள், என்ன செய்வார்கள். ஒரே குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள் பிற்பட்ட ஜாதி என்பதால் தாத்தா, மகன்/மகள், பேரன்/பேத்தி என்று தொடர்ந்து சலுகை அனுபவிப்பார்கள். ஆனால் முற்பட்ட ஜாதி என்றே ஒரே காரணத்திற்காக ஒருவருக்கு இடம் கிடைக்காது.
இதுதான் சமூக நீதி என்றால் அந்த சமூக நீதி இன வெறுப்புக் கோட்பாட்டிற்கு ஒப்பானதுதான்.

ஒரு புறம் தமிழ் நாடு முன்னேறிய மாநிலம் என்கிறோம். ஆனால் தமிழக மக்கள் தொகையில் இட ஒதுக்கீட்டினால் பயன் பெறுவோர் மொத்த மக்கள் தொகையில் 87%. (BC-46.14%, MBC-17.43%, Denotified Communities 3.44%, SC- 19% ST1.04%) (2) .அப்படியானால் தமிழ்நாட்டில் மக்கள் தொகையில் 87% socially and educationally backward ஆக இருக்கிறார்களா. 1947 முதல் முன்னேற்றமே இல்லையா.நீதிக்கட்சி காலத்திலிருந்தே பிற்பட்ட ஜாதிகள் அதே நிலையில்தான் உள்ளனவா. socially and educationally backward என்ற நிலையிலிருந்து எந்த ஜாதியும், முன்னோக்கி நகரவே இல்லையா. இப்போதும் இட ஒதுக்கீடு கட்டாயம் தேவை என்ற நிலையிலா எல்லா பிற்பட்ட ஜாதிகளும் உள்ளன?

உதாரணத்திற்கு 2004 ஆம் ஆண்டில், ஹிண்டு தினப் பத்திரிக்கையில் (23-08-2004) வந்த செய்தி,
பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள், 1224 மருத்துவக் கல்லூரி இடங்களில் 952 இடங்களை பெற்றிருக்கின்றனர். இது மொத்தம் 77.9 விழுக்காடு ஆகும். முதல் 14 ரேங்க்குகளும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கே கிடைத்தன. அதிலும் open competition category யில், 5 தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் இடம் பெற்றிருக்கின்றனர். மேலும் முதல் 400 ரேங்க்குகளில், 31 மாணவர்கள் தான் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். முதல் 100 ரேங்குகளில், வெறும் 6 மாணவர்கள் மட்டும் தான் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள், 79 மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களும் மீதமுல்ல13 மாணவர்களும் மிகவும் பிற்படுத்தபட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

இந்த செய்தியை வைத்துப் பார்த்தால் FC மாணவகளை விட BC,MBC மாணவர்களே முன்னேறியுள்ளனர். இவ்வாறான நிலையில் இடஒதுக்கீடு முதலில் தேவையா என்கின்ற கேள்வி எழுகிறது? அப்படியே தேவைப்பட்டாலும் சமூக அடிப்படையில் தான் இருக்கவேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது.

சரி, பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுக்கலாம் என்றால், அரசியல் சட்டத்தில் இடமில்லை.

இட ஒதுக்கீடு என்பது கல்விரீதியாக, சமூகரீதியாக பின் தங்கியுள்ள வகுப்புகளுக்கு என்றே அரசியல் சட்டம் கூறுகிறது. நரசிம்ம ராவ் அரசு பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ளோருக்கு ஒரு குறிப்பிட்ட சதவீத இட ஒதுக்கீடு தரும் ஆணையைப் பிறப்பித்தது. பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு குறித்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்ற பெஞ்ச் அந்த ஆணை செல்லத்தக்கது அல்ல என்று நிராகரித்துவிட்டது. ஏனெனில் அரசியல் சட்டத்தில் அப்படி இட ஒதுக்கீடு தர இடமில்லை. இட ஒதுக்கீடு என்பது வறியவர்களை முன்னேற்றும் திட்டம் அல்ல. பின் தங்கிய வகுப்புகள் சமூக ரீதியாக,கல்வி ரீதியாக முன்னேறவும், அந்த முன்னேற்றம் காரணமாக அரசு வேலைகள் போன்றவற்றில் உரிய இடங்களைப் பெற உதவும் ஒரு கருவி. பொருளாதார முன்னேற்றம் அதன் மூலம் ஏற்பட்டாலும் இட ஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல.
எனவே அரசியல் சட்டத்தில் மாற்றம் செய்யாமல் அத்தகைய இட ஒதுக்கீடு செய்ய முடியாது. துரதிருஷ்டவசமாக இந்த உண்மைகள் பெரும்பாலோருக்குத் தெரிவதில்லை.


சிலர் இந்த போராட்டத்தை எதிர்த்தும், கடுமையாக விமர்சித்தும் வருகிறார்கள், ஆனால் மாணவர்கள் தங்கள் எதிர்கால நலனுக்காகப் போராடுகிறார்கள், உரிமைகளுக்காக, சம வாய்ப்பிற்காக போராடுகிறார்கள். அதனால் பொது மக்கள் சிரமப்படுவது உண்மை. அதற்கு பொறுப்பு அரசுதான். இட ஒதுக்கீடு கொண்டு வர எண்ணியுள்ளோம், உங்கள் நலன்களை பாதிக்க விரும்பவில்லை, எனவே உங்கள் ஆலோசனைகளைக் கோருகிறோம் என்று மாணவர்களிடம் கூறி, அறிவிப்பு வெளியிடும் முன்னர் பேச்சு வார்த்தைகள் நடத்தியிருக்கலாமே. மத்திய அரசு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் இயக்குனர்கள், ஆசிரியர்கள், தொழிற் துறை. கல்வியாளர்களை கலந்தாலோசிக்காமல் ஒரு அறிவிப்பினை வெளியிட அவசியம் என்ன.

இத்தகைய ஒரு மாற்றம் ஒரு பெரும் மாற்றம் என்பதால் அதற்கு தேவையான கால அவகாசத்தினை யோசித்திருக்க வேண்டும். இட ஒதுக்கீடு தர நினைக்கிறோம், அதே சமயம் தகுதி,திறமை உடையவர்கள் நலனும் பாதிக்கக்கூடாது என்று விரும்புகிறோம். எனவே நாடு தழுவிய ஒரு விவாதம் ஏற்பட்டு, பல்வேறு தரப்பினர் கருத்தினை ஆய்ந்த பின் கருத்தொற்றுமை ஏற்பட வழி செய்வோம் என்று அரசு முடிவு செய்திருக்கலாமே.
அரசு தன் முடிவினை ஒரு தலைபட்சமாக திணிக்க முயன்றது. இதற்கு எதற்கு மாணவர்களை குறை சொல்ல வேண்டும். மேலும்,
மத்திய அரசு அமைத்துள்ள கமிட்டியில் இருவர் வெளிப்படையாக இட ஒதுக்கீட்டினை ஆதரிப்பவர்கள்.எனவே அந்த கமிட்டி எத்தகைய முடிபுகளை எடுக்கும் என்பது வெளிப்படை.மாணவர்கள் கூறிவது போல் ஒரு கமிஷன் அமைக்க வேண்டும். இந்த கமிட்டி என்ற கண்துடைப்பினை மாணவர்கள் நமப்த்தயாரில்லை என்பது நியாயமானதே.

ஒரு குறிப்பிட்ட சில ஜாதி ஓட்டுகளுக்காக, இட ஒதுக்கீடு என்ற பெயரிலும், சமூக நீதி என்ற பெயரிலும் கல்வித்துறையில், உயர்கல்வியில் உள்ள பிரச்சினைகளை மூடி மறைக்கப் பார்க்கிறார்கள் நமது பாசத்திற்கும் நேசத்திற்கும் உரிய இரத்தத்தின் ரத்தங்களான, அரசியல்வாதிகள்.

– சில செய்திகள் தின்னை யிலும், சில ஹிண்டுவிலும் எடுக்கப்பட்டுள்ளன.

இன்னும் அதிர்கிறது என் இதயம் ..

உலகில் உள்ள அனைத்து காதல் தேவதைகளும் தபூ சங்கரிடம் தான் குடி கொண்டிருக்கின்றன போலும் அதனால் தான் அவர் தும்மினால் கூட காதல் கிருமிகள் தான் காற்றை நிறப்புகின்றன. இதோ என்னை அட்டாக் செய்தகிருமிகள் சில. முகமூடி அணிந்துகொண்டு வாருங்கள், இவை அந்தராக்ஸ் கிருமியை விட பயங்கரமானவை.

—————————————-
சற்றுமுன் நீ நடந்துபோன
தடயம் எதுவுமின்றி
அமைதியாய்க் கிடக்கிறது வீதி.

எனினும்
அதிவேக ரயிலொன்று
கடந்துபோன தண்டவாளம் போல
இன்னும் அதிர்கிறது
என் இதயம்.

——————————

சூரியன் வந்த பிறகுதான்
நீ வருகிறாய் என்றாலும்
நீ வரும்போதுதான்
விழிக்கிறது இந்த வீதி
——————————-

இந்த மலையைக் குடைந்து
ரயில்பாதை அமைத்தவனுக்காவது தெரியுமா
உன் கல்மனசுக்குள்
நுழைவது எப்படி என்பது
———————————

உன்னைக் கேலி பேசுபவனையெல்லாம்
முறைத்துப் பார்க்கிறாய்
உன்னை நேசிக்கிற என்னை மட்டும்
சாதாரணமாகக்கூட பார்க்க மறுக்கிறாயே.
————————————————

நீயோ
சூரிய வெளிச்சம் முகத்தில் படாமலிருக்க
புத்தகத்தால் உன் முகத்தை
மறைத்துக் கொள்கிறாய்.

சூரியனோ
உன்னைப் பார்க்க முடியாத கோபத்தில்
எல்லோரையும் சுட்டெரித்துக்
கொண்டிருக்கிறது.
——————————————————–

சிறுமியைப்போல்
கடல் அலையில் கால் நனைத்து
விளையாடிக்கொண்டிருந்தாய்
கடலோ
கொந்தளித்துக்கொண்டிருந்தது
———————————————-

உனது ஆடையையும்
எனது ஆடையையும்
அருகருகே காயவைத்திருக்கிறாயே
இரண்டும்
காய்வதை விட்டுவிட்டு
விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்.
——————————————–

எல்லா கவிதைகளுமே
உன்னைப் பற்றியவைதாம் எனினும்
ஒரு கவிதைகூட
உன்னை மாதிரி இலலையே
———————————–

ஞாபகம் இருக்குமா ?

கவிஞர் அறிவுமத்தியின் ‘நட்புக்காலங்கள்’ கவிதையை எத்தனை முறை படித்தாலும் அத்தனை முறையும்புத்தம் புதிதாகவே இருக்கும்.
என் மனதை தொட்ட சில கனங்கள்,

உன் பிறந்த நாளுக்கான
வாழ்த்து அட்டைகளில்
நல்லவாசகம்
தேடித் தேடி
உண்டான சலிப்பில்
உண்டானது
உனக்கான
என்
கவிதை
——————-
புரிந்து கொள்ளப்படாத

நாள்களின்
வெறுமையான நாட்குறிப்பில்
தாமாகவே வந்து
அமர்ந்திருக்கிறது
எனக்குபிடித்தமான
உன்புன்னகை
——————–
நேரமாகிவிட்டது

எழுந்து போங்கள்
என்று சொல்கிற
பூங்காக்கள் உள்ளவரை
வாழ்க்கை
அநாகரீகமானதுதான்
—————————
கடற்கரையின்

முகம் தெரியாத இரவில்
பேசிக் கொண்டிருந்த நம்மை
நண்பர்களாகவே
உணரும் பாக்கியம் எத்தனை கண்களுக்கு
வாய்த்திருக்கும்
—————————
பார்வையாளர் நாள்.

குளித்துக் கொண்டிருந்த நீ
வருகிற வரை
எனக்கு துணையாய் இருந்த
உன் விடுதிஅணிலுக்கு
இப்போதும்
ஞாபகம் இருக்குமா
என்னை.
—————————