இடஒதுக்கீடு பற்றி நாட்டில் உள்ள அனைவரும் விவாதங்கள் செய்து கொண்டிருக்கும் இந்த வேலையில், ஞானி, விகடனில் சிறந்த விளக்கம் அளித்திருக்கிறார். அதில் சில இங்கே,
பிற்படுத்தப்பட்டவருக்கு மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் இடம் ஒதுக்குவதால் என்ன ஆபத்து வந்துவிடும் என்று எதிர்க்கிறார்கள்?
தகுதி திறமை இல்லாதவர்கள் டாக்டர்களாகவும் இன்ஜினீயராகவும் ஆகிவிடுவார்கள் என்பதே எதிர்பவர்களின் வாதம். இந்த வாதம் படு ஓட்டையானது என்பதற்கு தென்னிந்தியாவே சாட்சி! கட்ந்த ஐம்பது ஆண்டுகளில், தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான் டாக்டர்கள்/இன்ஜினீயர்கள் பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட ஜாதியில் இருந்து வந்திருக்கிறார்கள்.வட இந்தியாவின் உயர் சாதி டாக்டர்கள்/இன்ஜினீயர்களை விட இவர்கள் திறமைக் குறைவானவர்கள் என்று சொல்ல ஒரு சாட்சியமும் இல்லை. மருத்துவ சிகிச்சைக்காக வட இந்தியா முதல் பாகிஸ்தானிலிருந்தெல்லாம் நோயாளிகல் தேடி வருவது தென்னிந்தியாவைத்தான்.
யாருக்கெல்லாம் தகுதியும் திறமையும் இருக்கிறதோ அவர்கள் எல்லோரும் படிக்கட்டுமே! எதற்காக் இடஒதுக்கீடு?
எந்தப் படிப்பையும் படிக்க விரும்பிகிற எல்லோருக்கும் வாய்ப்பு தர வேண்டும் தான். ஆனால் அதற்கான கல்லூரிகள் இட வசதி இதற ஏற்பாடுகள் குறைவாக இருக்கும் நிலையில், யாருக்கு முன்னுரிமை என்று தீர்மானிக்க வேண்டியிருக்கிறது.
சரி. ஏன் சாதி அடிபடையில் முன்னுரிமை தர வேண்டும்?
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாதி அடிப்படையில் உயர்வு தாழ்வு சொல்லப் பட்டு வந்ததுதான் காரணம். அப்படி இருந்திராவிட்டால்,இதுவும் தேவைப்பட்டிராது.சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வு நிலவி வரும் இந்த சமூகத்தில், அதை மாற்ற சாதி அடிப்படையில் தான் சலுகை தரப்பட்டாகவேண்டும்.
ஏன் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தரக் கூடாது? எல்லா சாதி ஏழைகளுக்கும் முன்னுரிமை தருவது தானே நியாயம்?
பொருளாதார அடிப்படையில் ஏழைக்கு முன்னுரிமை தரலாமே என்ற கோரிக்கையை, சாதி ரீதியிலான இடஒதிக்கீடு வரும்போது மட்டும் எழுப்புவார்கள்.ஏற்கனவே பணக்காரர்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு இருக்கும் இடங்களில் ஏன் எழுப்பவில்லை என்று யோசியுங்கள்.
புரியவில்லை. பணக்காரர்களுக்கு எங்கே இட ஒதுக்கீடு இருக்கிறது?
தனியார் பொறியியல், மருத்துவ இதர கல்லூரிகளில் மேனேஜ்மென்ட் கோட்டா என்ற பெயரில், சீட்டுக்கு இவ்வளவு தொகை நன்கொடை என்று ஏற்பாடு இருக்கிறதே அது என்னவாம்? பணம் உள்ளவர்கள் சீட்டை வாங்கிக் கொள்ளலாம் என்பது பணக்காரர்களுக்கு இருக்கும் இடஒதுக்கீடு தானே?தவிர ஐ.ஐ.எம். போன்ற உயர்மட்டக் கல்லூரிகளில் கட்டணத்தைக் குறைக்கக்கூடாது என்று வற்புறுத்தப்பட்டதே,அதற்கு என்ன அர்த்தம்? பணம் உள்ளவர்கள் மட்டுமே அங்கு படிக்கவரும் நிலை தொடரவேண்டும் என்பதற்குத்தானே?
அப்படியானால் உயர் சாதியில் இருக்கும் எழைகளின் நிலை என்ன?
பொது ஒதுக்கீட்டில் வரும் எல்லோருக்குமே, பொருளாதார அடிப்படையில் தனி ஒதுக்கீடு தரலாம் என்று வி.பி.சிங். போன்றவர்கள் யோசனைகூறியிருக்கிறார்கள்.ஆனால் இடஒதுக்கீடு என்பது சாதி எற்றத் தாழ்வைச் சரி செய்ய வந்ததே தவிர வர்கக வேறுபாட்டை சரிசெய்ய அல்ல.அதற்கு இன்னொரு திட்டம் தேவை.
PS:
blogger2 க்கு மாறின உடனே நான் மே மாதத்தில் போட்ட இந்தப் பதிவு உயிர் பெற்றிருக்கிறது. Er..Actually நான் இந்தப் பதிவு தான் புதுசா post பண்ணினேன். 😦
நல்ல பதிவு!பதிவுக்கு மிக்க நன்றி!
LikeLike
கிட்டத்தட்ட இதுபோன்ற கேள்விகள் சிலவற்றைக் கேட்டு நான் கொடுத்த பதில்கள் என் பதிவில் இங்கே:http://thoughtsintamil.blogspot.com/2006/05/blog-post_19.html
LikeLike