எதிர்பாராத திருப்பம்

எதிர்பாராத திருப்பம் சிறுகதை

ட்டோவின் வேகம் குறைந்தது. இயந்திரம் மெதுவாக சத்தம் போட்டு பின் சுத்தமாக அடங்கியது. சுஜிதா ஆட்டோக்குள்ளிருந்து தலையை வெளியே நீட்டி எட்டிப்பார்த்தாள். ‘ரெயில்வே க்ராஸிங்மா’ ஆட்டோக்காரன் இருக்கையை விட்டு எழுந்து பெட்டிக் கடையில் பீடியைப் பற்ற வைத்துக்கொண்டான். சுஜிதா கைக்கெடிகாரத்தைப் பார்த்தாள். மணி இரவு 8:10. இன்னும் 20 நிமிடங்கள் இருந்தன. இதயம் படபடத்தது.இரத்த ஓட்டம் அதிகமானது போல் இருந்தது. அப்பாவை நினைத்தால் பயமாகவும் இருந்தது, பாவமகவும் இருந்தது. சீட்டில் சாய்ந்து முகத்தைத் திருப்பிப் பார்த்தாள். தியாகராஜர் பொறியியற் கல்லூரிக்குச் செல்லும் சாலை மெர்க்குரிச் வெளிச்சத்தில் பிரகாசமாக வெரிச்சின்று இருந்தது.

‘மதுரை,திருச்சி,விழுப்புரம் மார்க்கமாக சென்னை எழும்பூர் செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் இன்னும் சிறிது நேரத்தில் முதல் பிளாட்பாரத்தில் இருந்து புறப்படும்’. சுரேக்ஷ் பொறுமை இழந்து செல்லை எடுத்து பொத்தானை அழுத்தினான்.’காலிங் சுஜிதா…..’ என்று ஸ்கிரீனில் தெரிந்தது. காதில் வைத்துக்கொண்டான். ‘கமான் சுஜிதா..கமான் டேக்கிட்’ என்றவன் சுற்றும் முற்றும் பார்ததான். முகம் வெளுத்திருந்தது.

******************************

சுரேக்ஷ் தனக்கும் பிராசத்துக்கும் டீ சொல்லிவிட்டு, தினத்தந்தி பேப்பரை எடுத்துக் கொண்டு ஹாயாக பெஞ்சில் உட்கார்ந்தான்.பைக்கை நிறுத்தி விட்டு பிரசாத்தும் வந்து அவன் பக்கத்தில் உட்கார்ந்தான்.சுரேக்ஷ¢டமிருந்து ஒரு பேப்பரை வாங்கி தானும் படிக்கத்துடங்கினான்.காலேஜ் முடிந்து பெண்கள் தத்தம் வடுகளுக்குச் சென்று கொண்டிருந்தனர்.

காலேஜ் முடிந்தவுடன் இப்படி இங்கு வந்து டீ குடிப்பது அவர்கள் வழக்கம்.’டேய் சுரேக்ஷ்..நீஎழுதின கதை ஒன்னு குமுதத்தில்….’ தோளில் கை விழுந்தவுடன் பிராசாத் பேச்சை நிறுத்திவிட்டுத் திரும்பினான்.மூன்று நான்கு கனத்த உருவங்கள் நின்று கொண்டிருந்தன.’சுரேக்ஷ் யாருடா இங்க?’ உருவத்தைப் பார்த்த பிரசாத் மிரண்டான். அவனையும் அறியாமல் அவன் கண்கள் சுரே¨க்ஷ நோக்கித் திரும்பின.சுரேக்ஷ் ஒன்றும் புரியாமல் விழிக்க, நங்கென்று குத்து ஒன்று முகத்தில் விழுந்து மூக்கு உடந்தது.

அதற்கப்புரம் விழுந்த அடிகள் தர்ம அடிகள். எல்லாம் முடிந்து போகும் போது ஒரு உருவம் சொல்லியது,’தூத்தேறி, கதை எழுதினியே பேரு ஊரு எல்லாம் மாத்து எழுதத் தெரியாது?. முண்டம். நீயெல்லாம் கதை எழுதி…’ என்று சொல்லி மண்டும் ஒரு மிதி மிதித்துச் சென்றது.சுரேக்ஷ் நினைவிழந்தான்.

*********************

சுஜிதா…காலிங்பெல் சத்தம் கேட்குது பார். போய் யாருன்னு பாரு!’ சமையலரையில் இருந்து அம்மாவின் குரல் கேட்கவே..படித்துக் கொண்டிருந்த குமுதத்தை வைத்து விட்டு எழுந்து சென்று கதவைத் திறந்தாள், சுஜிதா. ‘எம்.எல்.ஏ சார் இல்லையாமா?’ கதர் வேக்ஷ்டி சட்டை ஒன்று கேட்டது.’ஏன் கேட்கும் போது இருக்கரானு கேக்க மாட்டீங்களா?’ சுஜிதா அரட்டினாள். ‘எம்.எல்.ஏ சார் இருக்காராமா?’ கதர் வேக்ஷடி சலைக்கவில்லை. ‘இல்லை. பெரிய வீட்டில் இருப்பார்’பட்டென்று சொல்லிவிட்டு சட்டன்று கதவைச் சாத்தினாள் சுஜிதா.

உள்ளே வந்து குமுதத்தை எடுத்து மறுபடியும் அரசு பதில்களைப் படிக்கத் துடங்கினாள். ‘யாரும்மா வெளியில?’ உள்ளே இருந்து குரல் கேட்டது,’தெரியலைம்மா’ பக்கத்தைத் திருப்பினாள். ‘எதிர்பாராத திருப்பம்’ சிறுகதை பிரசுரமாகி இருந்தது. படிக்கத் துடங்கினாள்.

************************

ணி எட்டாகிறது. இன்னும் என்னடா தூக்கம். உன் பிரண்டு பிரகாக்ஷ் வந்திருக்கான்’ காபியை வைத்துவிட்டு அக்கா போனாள். சுரேக்ஷ் கண் முழித்துப் பார்த்தான். வெயில் சுள்ளென்று அடித்துக் கொண்டிருந்தது மொட்டை மாடியில். எழுந்து முகத்தைக் கழுவிக்கொண்டு கிழே போனான். பிராசாத் பேப்பர் பார்த்துக் கொண்டிருந்தான். ‘வாடா. எப்போ வந்த?’ ‘இப்போத்தான். என்னாடா இன்னும் தூக்கம், மேட்ச் இருக்கு, மறந்துட்டியா?’ ‘பொருடா, அப்பா வெளியே கிளம்பட்டும்’ என்று சொல்லிக்கொண்டே டீவியை ஆன் செய்து விட்டு குளிக்கப்போனான் சுரேக்ஷ்.

குளித்து சாப்பிட்டுவிட்டு பாஸ் வேம்ப்பையர் கிரிக்கட் பேட்டை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பும் வேளையில் ‘டேய் சுரேக்ஷ், ஒழுங்கா அப்பா மதியம் சாப்பிட வருவதற்குள் வந்திடு, அப்புறம் நல்லா வாங்கிக்கட்டிக்கிடாதே’ அம்மாவின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் பிராசாத்தின் ஸ்ப்லண்டரில் தொத்திக் கொண்டான். ‘பிராசாத் வண்டியை நிறுத்து பால் வாங்கனும்’ வண்டி தன்ராஜ் ஸ்டோரின் முன் நின்றது.’வாடா சுரேக்ஷ், என்ன கிரிக்கட் பாலா?’ என்று கேட்டான் தன்ராஜ்.சுரேக்ஷ¤க்கு நண்பன். உறவினனும் கூட. ‘ஆமா தன்ராஜ் போய் எடுத்திட்டு வா.’

‘ஒரு ஒன் குயர் அன்ரூல்ட் நோட்புக் கொடுங்க’ தேனில் குழைத்து எடுத்தாற் போல் ஒரு குரல் கேட்கவே, சுரேக்ஷ் திரும்பிப் பார்த்தான். ‘அழகிய இருவிழி என்னைத் தொட என்னைத்தொடப் பார்த்ததே ஹ¤…ஹ¥…’ காற்றில் அவள் கேசம் படபடத்தது. ‘நெரிசலில் நடுவினில் கவிதையின் தரிசனம் நீளுதே..ஹ¤…ஹ¥’. அளவாக அழகாக செதுக்கப்பட்ட நாசி. அதற்குக் கீழே வரைந்தார் போல உதடு. ‘நுரைதொட்டு கரைதொட்டு புது வெள்ளம் மனதினில் பாயுதே..ஹ¤..ஹ¥!’ ‘ஹாய்’ என்றான் சுரேக்ஷ். பதில் இல்லை. சுரேக்ஷ் சுற்றும் முற்றும் பார்த்தான். மறுபடியும் ‘ஹாய்’ என்றான். ம்ம்ஹ¤ம். ‘உங்க பேர் என்ன?’ ம்ம்ஹ¤ம். பதில் இல்லை பார்க்கவும் இல்லை. நோட்டை வாங்கிக் கொண்டு விறு விறுவென்று நடந்து சென்று தன் சன்னியை ஸ்டார்ட் செய்தாள்,அந்தப் பெண்.

சுரேக்ஷ் பிரசாத்திடமிருந்து சாவியைப் பறித்து, ஸ்ப்லண்டரை ஸ்டார்ட் செய்தான். அவளைப் பின் தொடர்ந்தான்.

விரட்டிச் சென்ற சுரேக்ஷ், சட்டென்று அவள் பைக்கின் முன்னால் கட் அடித்து நிறுத்தினான். அந்தப் பெண் பயத்தில் உலன்றது. நல்ல வேளை கழே விழ வில்லை. சுரேக்ஷ் வருத்தப்பட்டான். மண்டும் ஸ்டார்ட் செய்தான். சிறிது நேரம் கழித்து அவளும் பின் தொடர்ந்தாள்.இந்த முறை அவளின் அருகில் பைக்கில் சென்று கொண்டே ‘உங்க பேர் என்னனுதானே கேட்டேன்’ என்றபடி அவளது அவளது பைக்கை ஒதுக்கினான். அந்த பெண் ரோட்டை விட்டு மண்ணில் இறங்க வேண்டியது ஆயிற்று, வேறு வழியின்றி அந்த் பெண் பைக்கை நிறுத்தி பேந்த பேந்த விழித்தது.

‘ஏய் என்னாப்பா அங்க?’ இரண்டு பேர் கேட்கவும் சுரேக்ஷ் வண்டியை ஸ்டார்ட் செய்து பறந்தான். சிறுது தூரம் சென்று திரும்பிப் பார்த்தான். அந்தப் பெண் அங்கேயே நின்று கொண்டிருந்தது. தன்ராஜ் கடை. சுரேசும், பிரசாத்தும் அமர்ந்திருந்தனர். ‘சுரேக்ஷ், அந்தப் பொண்ண விரட்டிட்டுப் போனியே என்னாச்சு?’ சுரேக்ஷ் ‘ ஒன்னும் ஆகலை, பேர் கேட்டேன்உடனே அழ ஆரம்பித்து விட்டாள்’ என்றான். ‘என்கிட்ட கேளு நான் சொல்றேன். அந்தப் பெண் பெயர் சுஜிதா. நம்ம ஊர் தனபதி எம்.எல்.ஏ வோட பொண்ணு. டேஞ்சர் பார்ட்டி.அவங்கப்பா பயங்கரமானவன், பார்த்து நடந்துக்கோ.’ சுரேக்ஷ¤க்கு அடி வயிற்றில் புளியைக் கரைத்தது. ‘அந்தப் பெண் நம்மை அடயாளம் கண்டுக்குமோ?’

லைவாணித் தியேட்டர். திருநகர் இரண்டாவது நிறுத்தம். சுரேக்ஷ் மற்றும் பிராசாத்தின் நண்பர் கூட்டம் அரட்டைக் கச்சேரி ஆரம்பித்திருந்தது.பள்ளிக்கூடம் விடும் நேரம். சுரேக்ஷ் மட்டும் உன்னிப்பாக எதையோ கவனித்துக்கொண்டிருந்தான். நேரிசல் மிகுந்த அந்த சாலையின் மறுபுறம் சுஜிதா சன்னியை விட்டு இறங்கிக்கொண்டிருந்தாள். சுற்றும் முற்றும் பார்த்தாள். பின் சுரே¨க்ஷப் பார்த்தாள். வண்டியை உருட்டிக் கொண்டு போய் மரத்தின் அடியில் நிறுத்தினாள்.சுரேக்ஷ் பிராசாத்தை தட்டி அவளைக் காண்பித்தான்.சுஜிதா கைப்பையில் எதையோ தேடி பின் ஒன்றை வெளியில் எடுத்தாள். செல்போன்.சுஜிதா நம்பர்களை அழுத்தி காதில் வைத்தாள். எதோ பேசினாள். ‘டேய் சுரேக்ஷ், அந்த பொண்ணு நடந்ததை எல்லாம் அவங்க அப்பாகிட்ட சொல்லி உன்னைக் காட்டிக் கொடுக்கப்போகுது டா! வா, போயிடலாம்’ என்றான் பிரசாத். நடந்ததை கேட்ட பாதி நண்பர் கூட்டதைக் காணவில்லை. அந்தப் பெண் இவர்களையே வெறித்துக் கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில், சீறிப் பாய்ந்து ஒரு டாடா சுமோ வந்து நின்றது. உள்ளேயிருந்து ஆட்கள் இறங்கினார்கள்.சுஜிதாவை நோக்கிச் சென்றனர்.சுரேக்ஷ்,பிரசாத்தைத் தவிற அனைவரும் எஸ்கேப். அந்தப் பெண் இவர்களை நோக்கிக் கையைக் காண்பித்தது. பின் சுமோவில் ஏறிக் கொண்டது.பிரசாத்தும் இனி நிற்பது டேஞ்சர் என்று ஓடி விட்டான்.
சுமோவில் வந்தவர்களில் ஒருவன் சுஜிதாவின் சன்னியைத் தள்ளிக் கொண்டு சாலையைக் கடந்து இவனை நோக்கி வந்தான்.சுரேக்ஷ் ஒன்றும் புரியாமல் விழிக்க, வந்தவன் சாலையைக் கடந்து, இவனுக்குப் பின்னால் சென்றான். சுரேக்ஷ் திரும்பிப்பார்க்க ஒர்க்க்ஷ¡ப். சுஜிதாவின் வண்டி டயர் பங்சர்.

சுரேக்ஷ¢ற்கு உயிர் வந்தது.

************************************

தையைப் படித்து முடித்த சுஜிதா வெளிறினாள். மறுபடியும் காலிங் பெல் சத்தம் கேட்டது. குமுதத்தை வைத்து விட்டு, எழுந்து போய் கதவைத் திறந்தாள். தனபதி.’போய்க் கொஞ்சம் தண்ணர் கொண்டுவாம்மா’ என்று சொல்லிக் கொண்டே வந்து சோபாவில் அமர்ந்தார் தனபதி. எதிரே டீ பாயில் இருந்த குமுதத்தைப் பிரித்தார். ‘எதிர் பாராத திருப்பம்’ கதை தெரிந்தது. படிக்கத் துடங்கினார்.

************************************

பிராசாத்தும் சுரேக்ஷ¤ம் கோவிலில் உட்கார்ந்திருந்தனர். சுரேக்ஷ¢ன் கையில் மாவுக்கட்டுப் போடப்பட்டிருந்தது. தூரத்தில் சுஜிதா தெரிந்தாள். சுஜிதாவைக் கண்டதும் சுரேக்ஷ் எழுந்து காலை இழுத்து இழுத்து நடந்தான். கட்டு என்னமோ கையில் தான். சுரே¨க்ஷப் பார்த்துவிட்ட சுஜிதா முதலில் தயங்கி நின்றாள். பின் மெதுவாக நடந்து இவர்களிடம் வந்தாள். பிராசாத்தப் பார்த்தாள். பிரசாத் சுரே¨க்ஷப் பார்த்தான். சுரேக்ஷ் சுஜிதாவைப் பார்த்தான். காற்றில் கேசம் பறந்தது. ‘நுரை தொட்டு கரை தொட்டு புது வெள்ளம் மனதினில் பாயுதே..ஹ¤..ஹ¥’ ‘ஹாய் சுரேக்ஷ் சாரிப்பா, எல்லாம் என்னாலதான். என்னை மன்னிச்சிடுங்க ப்ளீஸ். நானாக எதையும் சொல்லவில்லை. கதையைப் படித்து விட்டு அப்பாவே புரிந்து கொண்டார். நான் எவ்வளவு தடுத்தும் கேட்கவில்லை. ஆனாலும் உங்களுக்கு தைரியம் தான். பேரைக் கூட மாற்றாமல் எழுதியிருக்கீங்களே. மறுபடியும் சாரி. இந்தாங்க பிரசாதம். திருநீரை எடுக்கப் போய், சுஜிதவின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டான் சுரேக்ஷ். சிரித்த சுஜிதாவும் கைகளை விடுவிக்க முயற்சிக்கவில்லை. பிரசாத் இடத்தைக் காலி செய்தான்.

*******************

ல்லப்பா என்னால் வேறு ஒருவரைக் கல்யாணம் செய்துக்க முடியாது’ என்றாள் சுஜிதா. பளார் என்று அறை விழுந்தது.’நானும் படிச்சுப் படிச்சு கிளிப்பிள்ளைக்குச் சொல்றமாதிரி சொல்லிக்கிட்டு இருக்கிறேன், நீயும் கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதையே சொல்றியா?’ தனபதி ருத்ர மூர்த்தியாகியிருந்தார். ‘பாவம் படிக்கிற பையன்னு உயிரோட விட்டா, என்கிட்டையே விளையாடுரானா? அவன் உயிரோடு இருந்தால் தானே நீ அவனைக் கல்யாணம் செய்துப்ப?’ ‘பாக்கியம்’ மனைவியை அழைத்தார். ‘இவளை ஒழுங்கா உள்ள பூட்டி வை. இன்னும் ஒரு வாரத்தில இவளுக்கும் எம்.எல்.ஏ. தனசேகரன் பையனுக்கும் கல்யாணம். நான் அந்த பயலப் பார்த்துட்டு வாரேன்’ அனல் பறக்க வெளியேரினார் தனபதி.

* ***********

செல்போன் ஸ்கிரீனில் ‘காலிங் சுஜிதா…..’ என்று தெரிந்தது. பதற்றத்துடன் செல்போனைக் காதில் வைத்துக் கொண்டான் சுரேக்ஷ். ரெயில்வே ஸ்டேசன் இரைச்சலாக இருந்தது. ‘கமான்…கமான்…சுஜிதா..டேக் இட்’ செல்போன் சத்தம் கேட்டு பையில் செல்போனைத் தேடினாள் சுஜிதா.

தடக்..தடக்..தடக்.தடக்..பேரிரைச்சலோடு ரயில் ஒன்று சென்றது. செல்போனைக் காதிற்குக் கொடுத்தாள்.’ம்…ம்ம்…ம்…ம்…சரி. டோன்ட் ஒரி டா. நான் இன்னும் 10 நிமிடத்தில் ஸ்டேசனில் இருப்பேன்…’

ரெயில்வே க்ராசஸிங் கேட் திறந்தது. ஆட்டோக்காரான், பீடியை அனைத்து விட்டு ஒடி வந்து ஆட்டோவை ஸ்டார்ட் செய்தான். ஆட்டோ நகர்ந்தது. சுஜிதா பின் ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். பிரசாத்தும், மற்றும் பல சுரேக்ஷ¢ன் நண்பர்களும் பைக்கில் பின்னால் வந்து கொண்டிருந்தனர்.
திருப்பரங்குன்றம் மலை அவளை விரட்டிக் கொண்டு வந்தது;

********************************************************

7 thoughts on “எதிர்பாராத திருப்பம்

  1. Nice one da. I have just imagined those madurai areas in mind, so i could easily able to follow the story.Do not know, if somebody who were never been @ that place can get the picture while reading.Anyway pretty good narration. expecting more……..BTW, this story writer is still alive to read this?????????Navaneeth

    Like

  2. ஹலோ சுவாமிநாதன். வணக்கம். கதைகளை பொறுமையாக படித்து பின்னூட்டம் அளித்ததற்கு மிக்க நன்றி. எதிர்பாராத திருப்பம் என்பது இந்த கதையில் வரும் இன்னோரு கதையின் -குமுதத்தில் இடம்பெறும் கதை- பெயர் அவ்வளவே. வேறு எந்த எதிர்பாராத திருப்பமும் கதையில் இல்லை.

    Like

Leave a comment