எண்ணம் எனது : ஆகாசம் பதிவை படித்தேன். அதன் தொடர்ச்சியாக!!
(ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதினால் கவிதைதானே? பார்த்திபன் கூட ஒரு படத்திலே சொல்லுவார். )
ரோடெங்கும் நயாகராக்கள்:
பெய்யென பெய்யுமா
மழை?
திறந்திடு என்றால்
திறக்குமா அணை?
மழை பொய்க்கும்
ஆச்சரியமில்லை.
நல்லார் ஒருவர் உளரேல்
அவர் பொருட்டு பெய்யும்
மழை
நல்லார் : மரம்?
சென்னை முழுதும்
நல்லார்கள் – சில
நாட்களுக்கு மட்டும்!
நல்லார் பலர் உளரேல்
வேண்டாமெனினும்
வற்றாமல் தேங்கும்
மழை
மழையின் வீடுகளை
ஆக்கிரமித்தோம்.
நம் வீடுகளை
மழை ஆக்கிரமித்தது.
இலாபமில்லை
இருவருக்கும்!
ஏரி தெருக்கள்
எருமை கார்கள்
முதலை மனிதர்கள்
ரோடெங்கும் நயாகராக்கள்!
மழை. தெருவிலே கிடக்கிறது.
அதற்கு அப்பார்ட்மெண்ட்
பழக்கமில்லை.
லிப்ட் ஏறத்தெரியாது.
**
வத்ராயிருப்பில்
வருடந்தோரும்
வெள்ளம்.
தே. கள்ளுப்பட்டியில்
வருடந்தோரும்
வரட்சி.
நீர் சேகரிப்பா?
கலர் டீவியா?
ஏரியில் ‘செல்வி’
தெரியுமா?
எட்டிப்பார். தெரியும்.
நதி நீர் இணைப்பு?
(உண்ணாவிரதமா?
இந்தமுறையும்
கூட்டம் வருமா?)
கனவு இன்·பினிடி.
1 கோடி / 0.
மின்சாரம் தருகிறோம்.
அனு சக்தி தயாரிக்கிறோம்.
விளைவுகள் எங்களுக்கு.
பயன் எல்லோருக்கும்.
மந்திரிகளும் தருகிறோம்.
கண்ணீரும் தருகிறோம்
பண்டமாற்று முறையில்
தண்ணீர் தாருங்கள்.
**
எஞ்சி நிற்பது
கூல் சட்டிகளும்
விவசாயிகளின்
கண்ணீரும் தான்.
கண்ணீர் சேமிப்புத்திட்டம்
ஒன்றை அறிவியுங்கள்.
சேமிக்காதவர்களுக்கு
அபராதம் நிச்சயம்.
சேமித்தவர்களுக்கு?
கண்ணீரில்
பயிர் விளையுமா?
நெல் உப்புகரிக்குமா?
கையேந்துகிறார்கள்.
கண்ணீர் சிந்துகிறார்கள்.
போராட்டம் நடத்துகிறார்கள்.
உண்ணாவிரதம் ஷ்பெசல்.
நேரடி ஒளிபரப்பு.
விவசாயிகளின் துயரம்?
யாருக்குவேணும்.
ப்ரைம்டைமில் இடமில்லை.
(பிறகு கோழி வெடக்கோழி
எப்போ போடுவதாம்?)
**
அணை திறக்குமா?
தன்னலம் அனைவருக்கும்
பொது.
நாம்
குழாயடி சண்டைகளை
நிறுத்தியிருக்கிறோமா?
**
முத்து, என் மாமா விவசாயக் குடும்பம். அவரிடம் பேசிக் கொண்டிருக்கையில் குடும்பம் பெருக நிலமெல்லாம் குறுகி போகையில் என்ன செய்வது என வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். விவசாயம் வாழ்க்கை முறையாய் இல்லாமல் குறுநில விவசாயிக்கு பயனுள்ள வகையில் தொழில் மயமாக்கப்பட்டால் நல்லதாயிருக்குமென சொல்லிக் கொண்டிருந்தார். அவர் வருத்தம் கேட்டு எழுதியது ஆகாசம்.//(ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதினால் கவிதைதானே? பார்த்திபன் கூட ஒரு படத்திலே சொல்லுவார். )//பார்த்திபன் என்ன சொல்லறது. முத்து சொன்னா சரிதான்//அணை திறக்குமா?தன்னலம் அனைவருக்கும்பொது.நாம்குழாயடி சண்டைகளைநிறுத்தியிருக்கிறோமா?//நல்லா வரிகள். எங்க பக்கம் குழாய்களே இல்லாதாலோ என்னமோஇது போல இதை யோசித்ததில்லை.//கையேந்துகிறார்கள்.கண்ணீர் சிந்துகிறார்கள்.போராட்டம் நடத்துகிறார்கள்.உண்ணாவிரதம் ஷ்பெசல்.நேரடி ஒளிபரப்பு.விவசாயிகளின் துயரம்?யாருக்குவேணும்.ப்ரைம்டைமில் இடமில்லை.(பிறகு கோழி வெடக்கோழிஎப்போ போடுவதாம்?)//ப்ரைம் டைம்ல வெடைக்கோழி இல்லாம எல்லாமே சீரியஸா இருந்தா என்னாகறது. பொழுது போக்கும் வேணுமே. இல்லாட்டி மனசு இறுகி போய்டும். வெடைக்கோழியும் இருக்கனும், வேற விஷயமும் இருக்கனும். மலரும் மொட்டும், நலந்தானா போன்ற நிகழ்ச்சிகள் நல்லா இருக்குங்க. இது போல இன்னும் கொஞ்சம் வந்தா நல்லது.//மழை. தெருவிலே கிடக்கிறது.அதற்கு அப்பார்ட்மெண்ட்பழக்கமில்லை.லிப்ட் ஏறத்தெரியாது.////மழையின் வீடுகளைஆக்கிரமித்தோம்.நம் வீடுகளைமழை ஆக்கிரமித்தது.இலாபமில்லைஇருவருக்கும்!//யோசிச்சு எழுதியிருக்கிங்க.
LikeLike
எண்ணம் எனது : வருகைக்கு நன்றி. நாம் மழையின் வீடுகளை ஆக்கிரமித்தோம், தவறுதான் ஆனால் வேறு வழியில்லை. மக்கள் தொகை பெருக பெருக ஏரிகள் அப்பார்ட்மண்ட்களாக்கப்படுகின்றன. ஆனால் நமது சுயநலத்திற்காக காட்டையும், நிலத்தையும், ஏரிகளையும் ஆக்கிரமித்துக்கொண்டே வருவதால், பின்னாளில் என்ன நடக்கும்? இப்பொழுதே சென்னைக்கு தண்ணீர் வேறு ஊர்களிலிருந்து கொண்டுவரப்படுகிறது, ஏன் வேளச்சேரி ஏரியை ஆக்கிரமிப்பு செய்யாமல், சரியாக தூர் வாரியிருந்து, மழை நீரை சரியாக வாய்க்கால் வழியாக கொண்டுசெல்ல எவ்வளவு செலவாகும்? அதனால் மழை நீர் தேங்காமல் சாலைகளாவது நன்றாக இருக்குமே? மேலும் கொஞ்சம் நீர் பஞ்சத்தையாவது போக்கலாமே? மழைக்காலத்தை தவிர எப்பொழுதாவது தெருவில் தண்ணீர் தேங்குவதைப் பற்றி மக்கள் முறையிட்டு நாம் பார்த்திருக்கிறோமா? வத்றாயிருப்புக்கும் காடநேரிக்கும் 40 கி.மீ தான் இடைவெளி. வத்றாயிருப்பில் வருடம்தோரும் வெள்ளம் வந்தும் ஏன் சுற்றுப்புற பூமிகள் வானத்தை பார்த்தே தவம் கிடக்கின்றன? அந்த சுற்றுவட்டாரத்தில் ஏரி எங்கே இருகிறது? எத்தனை இருக்கிறது? அப்படியே இருந்தாலும், அவை பதிமூன்றாம் புலிகேசி கட்டியதாயிருக்கும். நமக்கு இதையெல்லாம் விட குஷ்புவின் மீதும், சுகாசினி மீதும் தானே அக்கறை.
LikeLike
அடிப்படை கட்டுமானத்தில் நமது அரசாங்கத்துக்கு அக்கறை குறைவுதான்.நான் உங்களோடு உடன்படுகிறேன்.வெள்ளத்திலும் சாவு, வறட்சியிலும் சாவுண்டு.ஆனால் நாமும்தானே இந்த அரசாங்கத்தின் ஒரு பகுதி. இன்றைக்கு நமது மனநிலை அடிப்படை கட்டுமானத்தின் அவசியங்களை உணர்வது போல் நமது தொகுதியில் உள்ள பெரும்பாலானோர் உணரவேண்டும். அது வரை இலவச டிவிதான் கிடைக்கும்.
LikeLike
நிர்மல்://நாமும்தானே இந்த அரசாங்கத்தின் ஒரு பகுதிமிகவும் சரி. நாம் தான் அரசாங்கம். முன்னர் மன்னர் ஆட்சியில், மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி, இப்பொழுது, மக்கள் எவ்வழியோ மன்னர் அவ்வழி. பம்ப் செண்ட் விளம்பரத்திற்கு ரம்பா, விநாயகருக்கு தேங்காய், பிழைத்துப்போங்கள், மக்களுக்கு கலர் டீவி.
LikeLike