இப்பொழுதெல்லாம் சில நிமிடங்கள் இடைவெளி கிடைத்தால் கூட படித்துக்கொண்டிருக்கும் நாவலில் ஒரு சில பக்கங்களையாவது படித்துவிடத் துடிக்கிறேன். சிறிது சிறிதாக ஒரு புத்தகப்புழுவாக மாறிக்கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். ‘புத்தகப்புழு’ என்ற வார்த்தை புத்தகப்பிரியர்களுக்கு தவறான சொல் என்பது என் எண்ணம். புத்தகம் என்ற பறந்து விரிந்த அனு அண்டமெல்லாம் சிதறிக்கெடக்கும் ஒரு உலகில் அலைந்து திரிந்து மூழ்கித் திளைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு புழு என்ற சொல் பொருத்தமானதாகத்தெரியவில்லை. மேலும் வாசித்தல் என்பது அவ்வளவு எளிதான காரியமும் அல்ல, சன் டீவியில் கோலங்கள் பார்ப்பதைப் போல. எத்தனை நபர்கள் புத்தகத்தைக்கண்டால் ஜிஞ்சர் திண்ண மங்கி மாதிரி முகத்தை வைத்துக் கொள்கிறார்கள் தெரியுமா?
என் நண்பன் ஒருவன் இருக்கிறான். அவன் குமுதம் ஆனந்த விகடன் கூட படிக்க மாட்டான். குமுதத்தை வாங்கையவுடன் வேகவேகமாக படங்களை மட்டுமே பார்ப்பான். அப்புறம் இது தேறாது என்று மார்க்போடுவான். மற்றபடி ஒரு எழுத்து ஒரு வரி கூட படிக்க மாட்டான். இவனுக்கு படிப்பறிவு இருக்கிறதா இல்லையா என்று கூட சமயத்தில் நினைக்கத்தோன்றும். ஒரு வேளை நம் கிரிக்கெட் ப்ளேயர்களுக்கு கிரிக்கெட் மறந்துபோனது மாதிரி அவனுக்கு வாசிக்க மறந்து போயிருக்கலாம். வாய்ப்பிருக்கிறதில்லியா?
புத்தகப்புழுவாக இருப்பதில் சில தீமைகளும் பல நன்மைகளும் இருக்கின்றன. தீமைகள் என்றால் முக்கியமாக நண்பர்களை இழத்தல். ஆனால் முற்றிலுமாக அல்ல. புத்தகங்களை விடவா நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள்? என்னதான் சொல்லுங்கள் புத்தகத்திடம் ஒரு ஐம்பது ரூபாய் கடன் வாங்க முடியுமா என்ன? பிறகு சில பல முக்கியமான காரியங்களை மறத்தல், உதாரணமாக : ஆபீஸ் செல்வது.
நன்மைகள் என்றால் ஏராளம். ஏராளம். உலகத்தில் உள்ள நன்மைதீமைகளையும், மனிதர்களையும், அறிவையும், அனுபவத்தையும் ஒரு மனிதன் பெற வேண்டுமென்றால் ஒரு ஜென்மம் போதாது. இவை அனைத்தையும் பெற வேண்டுமெனில் புத்தகம் மட்டுமே உதவும். ஏன் டிஸ்கவரிச் சேனலும் நேசனல் ஜியோகிராபி சேனலும் இருக்கிறதே? என்று கேட்டால், நம் சுதந்திரம் கெட்டுப்போகிறதே. நம் இஷ்டத்திற்கு நாடுகளை பற்றித்தெரிந்து கொள்ள இயலாதே? அந்த சேனலில் வரும் தகவல்களை மட்டுமே நாம் பெற முடியும். தாய்பேய்க்கு பதில் தாய்லாந்து பற்றி அறிந்துகொள்ள வேண்டுமெனில் என்ன செய்வது? இப்படி புத்தகத்தின் அருமை பெருமைகளை ஒரு சமயம் பேசிக்கொண்டிருந்த பொழுது கடுப்பான என் நண்பன் ஒருவன் (மேற்குறிப்பிட்ட நபர் தான்) மிகுந்த கோபமுடன், புத்தகத்தில ஜிலேபின்னு எழுது வாசிச்சா, ருசி கிடைக்குமாடா என்றான். என்னைக்கேட்டால் சில சமையம் கிடைக்கும் என்று தான் சொல்வேன். நாவல் படித்துக்கொண்டிருக்கும் போது சிரிக்கிறோமே அல்லது சில சமயம் புல்லரிக்கிறதே (இன்று கூட ஜெயமோகனின் கொற்றவையைப் படித்துக்கொண்டிருக்கும் போது முதல் “பழம் பாடல் சொன்னது” என்னை புல்லரிக்க வைத்தது, தொடர்ந்து இரண்டாவதும்) அந்த சுவையை நாம் உணரும் போது ஜிலேபியின் சுவையையும் உணர வாய்ப்பிருக்கிறது. சில நேரங்களில் மட்டுமே.
மேலும் இந்த டீவியின் தொல்லையிலிருந்து தப்பிக்க முடிகிறதே அதுவே பெரிய விசயம். இல்லையேல் விஜய் டீவியில் வரும் “குட்டி தங்கக்கட்டி” என்ற நிகழ்ச்சியின் விளம்பரத்தையே தான் பத்து நிமிடத்திற்கொருமுறை பார்க்க நேரிடும். போதாக்குறைக்கு “வாடிப்பட்டிக்கு பக்கத்தில” என்ற காத்து கருப்பின் விளம்பரம். என்ன கொடும சரவணா இது?
இந்தியா சென்று திரும்பியதும் home sick லிருந்து தப்பிக்க நிறைய படங்களும் சில புத்தகங்களும் படித்தேன்.
கொஞ்சமாவது நன்றாக இருந்த படம் என்றால் அது : “Texas Chain Saw Massacre : The beginning” மட்டுமே. த்ரில் மற்றும் போன பாகத்தில் வந்தவர்களைப் பற்றிய கதைகள் நன்றாக இருந்தன. சுத்தியலால் அந்த டாக்டரின் முகத்தில் ஓஓஒங்ங்கி அடித்துக் கொல்லும் முதல் காட்சி மனதை உறையச்செய்யும் காட்சி. முகத்திற்கு பக்கத்தில் சுத்தியல் வரும் போது காமிராவை நகர்த்திவிடுவார்கள் என்று நினைத்தது தவறாகிவிட்டது. மேலும் THX ஒலியில் பார்த்ததால் கூட படம் நன்றாக இருந்திருக்கலாம். இந்தியாவில் திரையிடப்பட்டால் நிச்சயம் பாருங்கள்.
மற்றபடி ‘crank’, ‘covenant‘ ‘grudge2’ போன்றவை பரவாயில்லை ரகம். “Grudge 2” படம் பார்த்தவர்கள் காயோகாவை மறந்திருக்க முடியாது.
இந்த படத்தை மிக அருமையான திரில் படம் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். என்னைப்பொருத்தவரை முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் நன்றாக இருந்தது. காயோகாவின் ப்ளாஷ்பேக் காட்டப்படுகிறது. சில காட்சிகள் பயமாக இருந்தது. சிறிது நாட்களுக்கு முன் ‘Grudge 1′ படத்தை டீவிடியில் பார்த்தோம். அந்தப் படம் பார்த்தவர்களுக்கு பேய் வரும்பொழுது கூடவே வரும் சத்தம் ஞாபகம் இருக்கும். இந்த சத்தத்தைக்கேட்டு என் நண்பர் வட்டாரம் : என்னடா பேய் ஏப்பம் ஏப்பமா விடுது? என்றனர். பிறகு ஒவ்வொரு முறை ஏப்பம் விடும் பேய் வரும் பொழுதெல்லாம் காமெடி ஸ்டோரிதான்.
“crank” ஒரு வித்தியாசமான (by the standards of hollywood) கதை தான். அதாவது விஷம் செலுத்தப்பட்ட ஒரு நபர், சாகாமல் இருக்க வேண்டுமென்றால் இதயத்தை துடித்துக்கொண்டேயிருக்க செய்ய வேண்டும். அதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதெல்லாம் படத்தில் உண்டு. கொஞ்சம் ஓவராக.
“covenant” போகட்டும் விட்டுவிடுங்கள்.
அப்புறம் புது ஜேம்ஸ்பாண்ட் படம். ‘the casino royale’. நிறைய விமர்சனங்கள் Daniel Craig பற்றி. ஏன் நானே சொல்லியிருக்கிறேன். Brossnan இருந்த இடத்தில் இவரா என்று. ‘Munich‘ பார்க்கும் போது கூட : கருமம் கருமம் கிழிஞ்ச பேண்ட் மாதிரி இருக்கான் இவனெல்லாம் ஜேம்ஸ்பாண்டா? என்று கமெண்ட் அடித்திருக்கிறோம்.
ஆனால் சும்மா சொல்லக்கூடாது. ஜேம்ஸ்பாண்டுக்கு ஒரு புது இலக்கணம் வகுத்திருக்கிறார், Daniel Craig. என்ன கம்பீரம், என்ன மிடுக்கு? என்ன நடை? என்ன உடை? ஆனால் உதட்டை எப்பொழுதும் கிஸ்ஸ¤க்கு ரெடி என்பது போலவே வைத்திருப்பது சற்று எரிச்சலைத் தருகிறது. Ask the girls!
படத்தில் வரும் Title Graphics க்கும், அந்த ‘You know my name’ பாடலுக்கும், முதல் chase சண்டைக்காட்சிக்கும், படிக்கட்டில் வரும் சண்டைக்காட்சிக்குமே கொடுத்த காசு சரியாகப்போகிறது. Bond girl? ம்ம்..Bonus. நாங்கள் இந்தப் படத்தி ஏசியாவிலே மிகப்பெரிய திரையில் GV MAX (24.2 M wide) பார்த்தோம். அனுபவம் புதுமை.
பெரிய திரைதான், ஆனால் கோலாலம்பூரில் இருக்கும் iMax திரை போல வராது. அது திரை மட்டுமே ஐந்து மாடிக்கு இருக்கும். இங்கு தான் ‘The Polar Express’ பார்த்தோம். இரண்டு வருடங்களுக்கு முன்பு. இந்தியாவில் iMax ஹைதராபாத்தில் இருக்கிறது என்று கேள்விப்பட்டுள்ளேன். தெரியவில்லை.
புத்தகங்கள்?? அடுத்த பதிவில். ப்ளீஸ்.
முத்து//நம் கிரிக்கெட் ப்ளேயர்களுக்கு கிரிக்கெட் மறந்துபோனது மாதிரி அவனுக்கு வாசிக்க மறந்து போயிருக்கலாம். வாய்ப்பிருக்கிறதில்லியா?//:-)
LikeLike
Nice to see you back buddy. Keep going.
LikeLike
ivlo naal ezhuthaalar enggu ponaar? – mondha mooki
LikeLike
நிர்மல் : வாங்க சார். ஏன் இப்படி நம் ப்ளேயர்கள் சொதப்புகிறார்கள்? எப்படி இருந்த நாம் இப்படி ஆகிட்டோம்,ஹ்ம்ம். :(சிவா: yeah. am up and running. thanks.MM: outta city (and blogosphere!) idiot.
LikeLike
முத்து, வணக்கம். இன்று ஏதோ கூகுளில் தேட உங்கள் பதிவுக்கு – இன்றுதான் முதல் விஜயம் (என நினைக்கிறேன்).பல பதிவுகள் ஆச்சரியப்படுத்தியது, பெரும்பாலும் என்னோடு ஒரு சினேகமான தொனி கொண்டிருந்தது. இறுதியில் நீங்கள் சிங்கையிலிருப்பது ஒரு இன்ப அதிர்ச்சி.ஒரு காலத்தில் தமிழ்மணமே கதியாய் இருந்து – சில காலம் விலகி இருப்பதில் நிறைய தொலைத்திருக்கிறேன்!நேரம் கிடைக்கும்போது ஒரு வரி எழுதுங்கள்: lsanbu@gmail.com
LikeLike