விசில்


இப்ப தான் போக்கிரியின் “ஆடுங்கடா” பாடல் கேட்டுக்கொண்டிருக்கிறேன். suddena இந்த பாட்ட இந்தியாவில விசிலடிச்சுக்கிட்டே பாத்தா எப்படியிருக்கும்னு தோணுச்சு. இந்தியாவில வேனா பாக்கலாம். ஆனா விசிலடிக்கிறதுங்கறது முடியாத ஒன்னு. நானும் நிறைய தடவ try பண்ணிருக்கேன். வெறும் காத்து தான் வரும்.சில சமயம் ரொம்ப எரிச்சலா வரும்.நல்ல அடி பாட்டோ நல்ல சண்டைக்காட்சியோ வரும் போது தியேட்டரில விசிலடிக்க முடியாது. முக்கியமா ரஜினி படம் பாக்கும்போது, பக்கத்துல உட்காந்திருக்கறவன் கூட agreement போடனும். நான் ம்ம் ன்னு சொன்ன உடனே விசிலடிக்கனும்டான்னு. என்ன பண்ண வண்டியோட்ட தெரியாதவன் driver வெச்சுக்கிறதில்லையா. அத மாதிரிதான். சரி எப்படி விரல் use பண்ணி விசிலடிக்கிறதுன்னு internet ல பாக்கலாம்னு தேடினேன். முதல் ரிசல்ட் google answer ல்ல இருந்தது. நிறைய பேரு try பண்ணியிருக்காய்ங்க. பரவாயில்ல.

http://answers.google.com/answers/threadview?id=419588

ஏதோ என்னாலானா உதவி. படிச்சுக்குங்க.எதெதுக்கு google ட்ட கேக்குறதுன்னு ஒரு விவஸ்த்தை இல்லாம போச்சு. அப்புறம் “வசந்தமுல்லை” பாட்டும் நல்லா இருந்துச்சு. “என் செல்ல பெரு ஆப்பிள்” பாடலும் நல்லா இருந்துச்சு. வரிகளும் நல்லா இருந்துச்சு.

என் செல்ல பேரு ஆப்பிள் நீ சைஸா கடிச்சுக்கோ.

வசந்தமுல்லை பாட்டுல சில வரிகள்:

காதல் என்பது ஆந்தையப் போல
நைட்டு முழுதும் முழிக்கும்
கம்பன் வீட்டு
நாயைப் போல
கவிதையாய் குரைக்கும்
அவ தும்மல் அழகுடா
அவ பிம்பில் அழகுடா
அவ சோம்பல் அழகுடா

காதல் என்பது காப்பியப் போல
ஆறிப்போனா கசக்கும்
காஞ்சு போன மிளகாய் பஜ்ஜி
கேக்கு போல இனிக்கும்
தாடி வெச்சிருக்கும்
கேடி முகம்
லேடி பிகர் போல
தெரியுது மாமு..

(say slow,very slow) தெரியும்..தெரியும்.. (say fast) தெரியு தெரியு..தெரியு…தெரியும்.. (copy rights reserved. friend கேட்டா உதைப்பா.)

ரஜினி படம் இங்கே சுடப்பட்டது.

6 thoughts on “விசில்

  1. மொமு: என்ன தெரியும்?நெருப்பு(?!) சிவா: வருகைக்கு நன்றி! உங்கள் வருகையால் என் பதிவே செம ஹாட் ஆகிடுச்சு. (நெருப்பு!)

    Like

  2. கார்மேகராஜா: முதலில் என்னை மன்னிக்க வேண்டும். இந்தியா வந்தும் உங்களை கால் செய்யாததற்கு. பொங்கலுக்கு ஊர் பக்கம் போனீங்களா? நானும் வரவேண்டியது. ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன். வீட்டில் எல்லாருக்கும் – ஒருவர் விடாமல் – சிக்கன் குனியா. நான் மட்டும் தப்பித்தேன். விசாரித்ததில் மனிதர்களுக்கு மட்டும் தான் வருமாமே?!வீட்டிலிருந்து வந்ததும் ஒரே ஹோம் சிக். எழுதவும் பிடிக்கவில்லை. இப்போ ஓகே. நீங்க எப்படி இருக்கீங்க? பொங்கல் போட்டோ இருந்தா அனுப்பி வைங்க.

    Like

Leave a comment