ஆந்திரா (காரம் குறைந்த) மசாலா. தெலுங்கு போக்கிரி நான் பார்க்கவில்லை (என்னிடம் படம் இருக்கிறது), ஆனால் கண்டிப்பாக தமிழ் போக்கிரியைவிட பெட்டரா இருக்கும்னு நினைக்கிறேன். கதை? ஏற்கனவே நிறையமுறை பார்த்த கதைதான். சாமியில் வரும் முதல் 10 நிமிஷம் தான் படத்தின் கதை. பாண்டியனையும் சேர்த்து மிக்ஸ் செய்யுங்கள், அப்புறம் இனிப்புக்கு இருக்கவே இருக்கிறார் அசின், ஏலக்காய் முந்திரிப்பருப்பாக வடிவேலு மற்றும் பிரகாஷ்ராஜ். பொங்கல் வைக்கத்தெரியாத புது மனைவி முதல் முறை பொங்கல் வைத்து அதிசயமாக அது சுமாராவாவது இருக்கும் பட்சத்தில் ஒரு ஆச்சரியம் வருமே, அது போல கொஞ்சம் டிவிஸ்டுகள் (எனினும் எதிர்பார்க்கக்கூடியதே!) மொத்தத்தில் மசாலா பொங்கல். பொங்கல் கொஞ்சம் சுமாரா இருந்தாலும், இன்னும் நல்லா வெச்சிருக்கலாம்.
விஜய் அழகாக இருக்கிறார். ஸ்லிம்மாக. ட்ரிம்மாக. (நான் அஜித் ரசிகன் என்பதை நினைவில் கொள்க!) படு யூத்தாக இருக்கிறார். காஸ்டியூம்ஸ் கலக்கல். அதுவும் “நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்” பாடலில் படு ஸ்டைலாக இருக்கிறார். நன்றாக டான்ஸ் ஆடுகிறார் என்று நான் சொல்லத்தேவையில்லை. ஆடுங்கடா என்ன சுத்தி பாடலில் பிரபு தேவாவும், விஜயும் ஒரே காஸ்டியூமில் ஆடுகிறார்கள். (படையப்பா ரஜினி, கே.எஸ்.ரவிக்குமார் போல.) கருத்துப்!! பாடலும் நன்றாக இருக்கிறது. ரசிகர்களுக்கு செம தீனி.இந்த முறை ஓபனிங் பைட். ரஜினி எவ்வழியோ நானும் அவ்வழி என்கிறார் விஜய். ரஜினி பெயர் ஒரு முறையும் சந்திரமுகி பாடல் ஒரு முறையும் காட்டப்படுகிறது.தியேட்டர் கிழிகிறது.
ரசிகர்களை என்னவென்று சொல்ல? விஜய் வரும்போது விசில். பயங்கர சத்தம். சரி. அசின் வந்தார் அதற்கும் விசில், சத்தம்.அப்புறம் வடிவேலு வந்தார் அவருக்கு படு பயங்கர சத்தம். விஜய்க்கு கிடைத்ததைக் காட்டிலும் அதிகம். அதற்கப்புறம் பிரகாஷ்ராஜ் வரும் பொழுது அவருக்கு இன்னும் அதிகமான விசில் சத்தம். இதில் எல்லா முறையும் நானும் ஜோதியில் ஐக்கியமாகிக்கொண்டேன்.
எனது விசில் பயிற்சி தோல்வியைக் கண்டது. ஆனால் படத்தில் ஒரு காட்சி : விஜய் அசினை ஆட்டோவில் ஏற்றி விடுவதற்கு விசில் அடித்து ஆட்டோவைக் கூப்பிடுகிறார். அசின் விசிலடிப்பதை ரசித்து எனக்கும் சொல்லிக்கொடுங்க என்கிறார். விஜய் அவருக்கு பாடம் நடத்துகிறார். கொழுத்துங்க விஜய். இதுக்காகவாது விசிலடிக்க கத்துக்கணும், என்ன சொல்றீங்க?
படம் சூட்டிங் ஆரம்பித்த பொழுதிலிருந்து பிரபுதேவா எப்போ இன்டர்வியு கொடுத்தாலும் படத்தில் ஒரு லிப்ட் சீன் இருக்கிறது கவித்துவமாக வந்திருக்கிறது என்று சொல்லிக்கொண்டேயிருந்தார். கவிதை (அசின்) இருந்ததே லிப்டுக்குள், அதனால் சொல்லியிருப்பாரோ? கவிதைதான். கத்துக்குட்டி கவிஞரின் முதல் கவிதை.
அசின் அழகாக இருக்கிறார். முதல் பாதியில் கொஞ்சம் வருகிறார். பிற்பாதியில் பாடலுக்கு முன்னால் மட்டுமே வருகிறார். விஜய் படத்தில் அவர் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
வடிவேலு அமர்க்களம். சிரிப்புக்கு கியாரண்டி. விஜயை வேவு பார்க்க பல கெட்டப்புகளில் (சிம்புவைப் போல கண்ணாடி அணிந்து கொண்டு இறங்கு மீசையும், உதட்டுக்கு கீழ் தாடியுமாக வருவது சூப்பர்) வரும்பொழுதெல்லாம் விஜயின் நண்பர்கள் அவரை அடையாளம் கண்டுகொள்ள கடுப்பான வடிவேலு, ஏண்டா இவ்வளவு கஷ்டப்பட்டு கெட்டப் சேஞ்ச பண்ணிட்டு வந்திருக்கிறேன் இவ்வளவு ஈசியா புடிக்கிறீங்களே, கெட்டப்புக்கு கொஞ்சமாவது மரியாதை கொடுங்கடா என்று புலம்புவது சிரிக்கவைக்கிறது.
சுட்டும் விழிச் சுடரே பாடலுக்கு வடிவேலுவும், அசினும் ஆடுவது சூப்பரோ சூப்பர். வடிவேலுவில் எக்ஸ்பிரசன் மற்றும் பாடி லாங்வேஜ் கேட்கவே வேண்டாம்.
பிரகாஷ்ராஜ் எப்பொழுதும் போல. அவர் வேலையை கன கச்சிதமாக செய்திருக்கிறார். நெப்போலியன் அவரை கைது செய்து செல்லில் அடைத்து, சுற்றி நிற்கும் போலீஸ்காரர்களிடம், இவன் தூங்கினால் அடிங்க என்று சொல்லிவிட்டு சென்று விட, பிரகாஷ்ராஜ் தூக்கம் தள்ளத் தள்ள தூங்காமல் சுற்றி சுற்றி வந்து கொண்டிருப்பது சிரிக்கவைக்கிறது.
ஒரு கவர்ச்சி பாடல் வேறு. என் செல்லப்பேரு ஆப்பிள் பாடலுக்கு யாரோ நடனம் ஆடினார். யாரென்று தெரியவில்லை.(தெரிந்தவர்கள் துப்பு கொடுக்கவும்). பக்கத்தில் உட்கார்ந்திருந்த என் நண்பர் : ஆப்பிளா? தர்பூசணி மாதிரி இருக்கா! என்றார்.
சில ரசிக்கத்தகுந்த சமாச்சாரங்கள் இருந்தாலும் படத்தில் தொய்வு இருந்து கொண்டேயிருக்கிறது. இன்டர்வெல் விட்ட பொழுது இப்பொழுதுதான் இன்டர்வெல்லா என்று கேட்கும் அளவுக்கு. கடைசியில் படம் முடிந்த பொழுது ஆடுங்கடா என்ன சுத்தி பாடல் எப்பொழுதோ ரொம்ப நேரத்துக்கு முன்னால் கேட்ட மாதிரி இருந்தது.
ஆனந்த விகடனில் வந்த ஜோக்:
“சுவீட் கடைக்காரர் விஜயை வைத்து படம் எடுத்தால் என்ன பேர் வைப்பார்?”
“பேக்கரி”
பிரபுதேவாவின் டச் அங்காங்கே தெரிந்தாலும் இது முழுக்க முழுக்க விஜய் படமே!
தமிழ் போக்கிரியை இன்னும் பார்க்கவில்லை. தெலுங்கில் பார்த்தேன். கண்டிப்பாக ஒரிஜினல் படம் பெட்டர். விஜய் இந்த படத்தில் கோஸ்டியுமைகூட காப்பிதானே அடித்திருக்கிறார் மகேஷிடமிருந்து… படம் பார்க்க வேண்டாம் என்று நினைத்தேன்.. நீங்கள் கண்ஃபார்ம் பண்ணீட்டீங்க.. 😉
LikeLike
படம் பராவாயில்லை. ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம் சார்.
LikeLike
Applelo Dharboosaniyo!! avar payaer Mumaith Khan from mumbai…!!
LikeLike