சமீபத்தில் குமுதம் செய்த போக்கிரி திரைப்படத்தின் விமர்சனத்தைப் படிக்க நேர்ந்தது, குமுதத்தின் ரசனை ஏன் இப்படி மாறிக்கொண்டே வருகிறது?
வடிவேலுவின் நகைச்சுவைப் பற்றிக்கூறும் போது.
“வழக்கம்போல அடி வாங்கும் பாத்திரத்தில் வடிவேலு. அண்ணே, மாத்துங்கண்ணே உங்ககிட்ட ரொம்ப எதிர்பார்க்கறாங்கண்ணே. தண்ணீர் குழாய் சமாச்சாரம் மட்டும் கலகல”
எதிர்மாறான விமர்சனம் இது. தண்ணீர் குழாய் சமாச்சாரம் மட்டும் தான் கலகல இல்லை. அது தான் கொஞ்சம் நெளிய வைத்த காமெடி. “தண்ணீர் எங்கிருந்து வந்தாலும் பிடிப்பீங்களா” என்று வடிவேலு கேட்கும் போது “கலகல” சிரிப்பு வருவதைவிட எரிச்சலே வருகிறது. அதை எப்படி குமுதம் கலகல என்று சொல்கிறது? மேலும் படம் பார்த்த அனைவரும் சொல்லும் வடிவேலு ஆடும் சுட்டும் விழி சுடரே பாடல் பற்றி ஒரு கமெண்ட்டும் இல்லை. அவரது கெட்டப் பற்றியும் பேச்சில்லை. சன் டீவியில் காட்டப்பட்ட கிளிப்பிங்சைப் பார்த்து விமர்சனம் செய்கிறார்களோ?
அப்புறம் பிரகாஷ்ராஜ் பற்றியது:
“பிரகாஷ்ராஜுக்கு நடிக்க ஸ்கோப் இல்லை.”
அவர் என்ன படத்தோட ஹீரோவா? பாசமலரில் சிவாஜி சார் நடித்த கேரக்டர் போன்றா இதற்கு முன்னர் நடித்துக்கொண்டிருந்தார்? அவர் வேலையை அவர் கரெக்ட்டாக செய்திருக்கிறார். ஜெயிலில் அவர் அடிக்கும் லூட்டி ஒன்றே போதுமானது. அதைப்பற்றியும் குறிப்பிடவில்லை.
கடைசியாக:
சண்டைப்பிரியர்களுக்கு போக்கிரி ஜாங்கிரி மற்றவர்களுக்கு வீங்கிரி.
ஜாங்கிரி ஓகே அதென்ன வீங்கிரி? டீராஜேந்தர் மாதிரி வசனம் கண்டிப்பாக சொல்லவேண்டும் என்கிற அவசியம் ஏதும் இருக்கிறதா குமுதம் சார்?
குமுதம் அண்ணே கொஞ்சம் ஒழுங்கா விமர்சனம் பண்ணுங்கண்ணே, உங்கள நம்பி நெறைய பேரு படத்துக்குப் போறாங்கண்ணே.
பிறகு அட்டையில் “ரஜினி வாய்ஸ் ரகசியம்” என்று போட்டிருந்தார்கள். உண்மையச்சொல்லுங்க சார், ரஜினி வாய்ஸ் ன்னா நமக்கு என்ன தோணும்? உள்ளே ஒண்ணுமே இல்லை. ரஜினிக்கு இருக்கும் பேஸ் வாய்ஸ் எப்படி வந்தது என்று சொல்கிறார்கள். காலையில் எழுந்து சீரகத்தண்ணீரில் வாய் கொப்பளிக்கவேண்டுமாம், அப்படி செய்தால் ரஜினியின் வாய்ஸ் நமக்கு வந்துவிடுமாம்.
ரஜினியின் வாய்ஸ் என்றால் எல்லோருக்கும் ரஜினி அரசியலில் கொடுக்கும் வாய்ஸ் என்று தான் சட்டென்று எண்ணத்தோன்றும். அவருடைய குரல் வளம் பற்றியா யோசிப்போம்? ஏதோ அரசியல் விசயம் போல என்று நினைத்து சிலர் குமுதம் வாங்கலாம் இல்லியா? அதுதான் ட்ரிக்.
வியாபாரம் செய்வதற்கு என்னென்ன தந்திரங்கள் செய்யவேண்டியிருக்கிறது பாருங்கள்.
// (நான் அஜித் ரசிகன் என்பதை நினைவில் கொள்க!) //anne, ippadi “Poi” sollikittu ungaLa maari vimarsanam ezhuthuvathai vida, Padam paarkaama “KUmudam” ezhuthurathu evvalavoe better ! :-))PongaLukku vantha rendu padamae “KUppaigaL” ithuLa jaan enna muzham enna.. Vimarsanam enna !:-))
LikeLike
இப்படி தான் விவேக் பற்றி குமுதம் விமர்சனம்(படம்:ஜாம்பவான்) எழுதி அதற்கு பதில் கடிதம் விவேக் போட்டு அதை குமுதமும் பிரசுரித்ததே..நீங்க படிச்சீங்களா? பாவம் குமுதம்.இப்படியாது பப்ளிசிட்டி தேடிக்கட்டும்
LikeLike
என்னங்க அண்ணா பகிடியாதானே ! சொல்லுறீங்க ! இன்றைய வெகுசனப் பத்திரிகை விமர்சனம் பார்த்துப் படம் பார்ப்பதாக!!!அவங்களுக்கு விமர்சனம் என்றால் என்ன??என்னு தெரியுமா???முதலே காசு வாங்கிவிட்டுதான் விமர்சனம் செய்யுமாப் போல இருக்கு !!இது நான் பல வருடங்களுக்கு முதல் எடுத்த முடிபு.யோகன் பாரிஸ்
LikeLike
அனானி: நான் உண்மையிலே அஜித் ரசிகன் தானுங்க. இனிமேல் certificate கொடுத்தா வாங்க்வெச்சுக்கனும். Prove பண்றதுக்கு வசதியா இருக்கும். அமர்களம் திரைப்படத்தை காலேஜ் படிக்கும் போது ஐந்து முறையாவது பார்த்திருப்பேன். உண்மையைச் சொல்லுங்கள் அமர்களத்தில் வந்தது போல இருக்கிறாரா அஜித்?கார்த்திக்: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.johan-paris: நீங்கள் சொல்வது கொஞ்சம் உண்மைதான். ஆனால் விகடன் விமர்சனம் ஐந்துக்கு இரண்டு பழுதில்லை என்று நினைக்கிறேன்.
LikeLike