Inside Man

ருத்ரா திரைப்படம் பார்த்திருந்தவர்களுக்கு, இந்தப் படம் அவ்வளவு ஷாக் கொடுக்காது. ருத்ரா திரைப்படத்தில் பேங்கைக் கொள்ளையடிக்க பபூன் வேஷம் போட்டு உள்ளே நுழைவார். அங்கிருக்கும் மக்களை பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்துக்கொண்டு அது வேணும் இது வேணும் என்று கேட்ப்பார். பிறகு தான் ஒரு பிணைக்கைதியைப் போலவே பயந்து பயந்து வெளியே வருவார். நம்மூர் போலீசும் அவரை கண்டுகொள்ளாது. பாக்கியராஜ் தப்பித்துவிடுவார்.

கிட்டத்தட்ட அந்த விஷயம் தான். நம்மூர்க்காரர்கள் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இதை இரண்டரை மணி நேரப் படத்தில் பத்து நிமிடக் காட்சியாக எடுத்தனர். ஆனால் ஹாலிவுட் மக்கள் இதையே முழு படமாக எடுத்திருக்கின்றனர். கொஞ்சம் சுவராஸ்யமாக.

Dalton Russel (Clive Owen) மற்றும் அவரது டீம் மொத்தம் நான்கு பேர். பெயின்ட் அடிக்கும் வேலை செய்பவர்களாக ஒரு பேங்க்கிற்குள் நுழைகின்றனர். infra red கதிர் வீச்சைக் கொண்டு செக்யூரிட்டி கேமிராக்களை shutdown செய்கின்றனர். அங்கிருக்கும் மக்களை பினைக்கைதிகளாகப் பிடிக்கின்றனர். எல்லோரையும் தங்களது டிரஸைக் கலையச் செய்து இவர்கள் கொண்டுவந்திருக்கும் uniform ஐ போடச்சொல்கின்றனர். இப்பொழுது பேங்கிற்குள் இருக்கும் எல்லோருக்கும் – கொள்ளையடிக்க வந்தவர்களையும் சேர்த்து – ஒரே டிரஸ், ஒரே முகமூடி. யார் பிணைக்கைதிகள் யார் கொள்ளையர்கள் என்பதை எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது. எல்லோரையும் முகமூடி அணிந்திருக்கச் செய்கின்றனர். முகமூடியை கழட்டினால் அடி உதை தான். இதற்கு பயந்து கொண்டே எல்லோரும் முகமூடியைக் கழட்டுவதில்லை.

keith frazier (Denzel Washington) துப்பறிவாளர். அவருடைய அசிஸ்டெண்ட் chiwetel. இருவரும் சம்பவ இடத்திற்கு விரைகின்றனர். ருசலுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அவன் ஒரு ஜெட் மற்றும் ஒரு பஸ்ஸ¤ம் கேட்கிறான்.

Russel ஒரு சாதாரணத் திருடன் இல்லை. அவனது இலக்கு பணம் மட்டும் இல்லை. இந்த குறிப்பிட்ட வங்கியைக் கொள்ளையடிக்க அவன் திட்டமிட்டதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இந்த வங்கியின் சேர்மன் மற்றும் நிறுவனருமான Arthur Case இன் உண்மை சொருபத்தைக் காட்டுவதே Russel இன் முதன்மை இலக்கு.

Arthur Case இரண்டாம் உலகப்போரில் நாசிக்களிடம் யூதர்களைக் காட்டிக்கொடுத்து அதில் வந்த பணத்தை முதலீடு செய்திருக்கிறார். மேலும் அவரிடம் ஒரு மோதிரம் இருக்கிறது. அதுவும் அவருடன் வேலை செய்த ஒரு யுதனின் திருமண மோதிரம். He is a war criminal.

இந்த உண்மையை மறைக்க Arthur Case அவரது பேங்க்கிலே லாக்கர் என் 392 இல் நிறைய வைரங்களையும் அந்த மோதிரத்தையும் சில documents களையும் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருக்கிறார். அவரது பேங்க் ரெக்கார்ட்ஸில் இந்த லாக்கருக்கான எந்த குறிப்பும் இல்லை.

எனவே Russel இன் கண்களுக்கு தெரியாமல் – ஆனால் Russel க்கு அந்த வைரங்களைப் பற்றியும், மோதிரம் பற்றியும், Nazi Documents பற்றியும் தெரியும் என்பது Arthur Case க்கு தெரியாது – அந்த பொருளைப் பாதுகாப்பாக வெளியே எடுத்து வர whites (Jodie Foster)ஐ அணுகுகிறார். அவர் போடும் கண்டிஷன் : ஒன்று அந்த லாக்கர் மறைக்கப்படவேண்டும் இல்லையேல் அழிக்கப்படவேண்டும் எக்காரணத்தை முன்னிட்டும் வெளிஉலகத்துக்குத் தெரியக்கூடாது.

whites உள்ளே சென்று Russelஇடம் பேசும் போது அவன் ஏற்கனவே எடுத்து வைத்திருப்பது தெரிகிறது. மேலும் அவன் பத்திரமாக வெளியே கொண்டு வருகிறேன் எனக்கு பணம் கொடுத்து விடுங்கள் என்கிறான். ஆனால் உண்மையில் அவன் கொடுக்கப்போவது இல்லை. அவனது இலட்சியமே இந்த விசயம் – Arthur Case ஒரு துரோகி என்பது – வெளி உலகத்திற்கு தெரியவேண்டும் என்பது தானே. ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை , Russel க்கு எப்படி யாருக்கும் தெரியாத Arthur Case ரகசியம் தெரிந்தது?

frazier அவன் கேட்ட ஜெட் மற்றும் பஸ் ஒன்றும் கொடுக்க ஒத்துக்கொள்கிறான் ஆனால் அதற்கு முன் தான் பிணைக்கைதிகள் அனைவரும் உயிரோடு தான் இருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும் என்கிறான். Russel இதற்கு சம்மதித்து frazier ஐ அழைத்து பிணைக்கைதிகளைக் காட்டுகிறான். frazier சிறிது அவசரப்பட்டு Russel இன் முகமூடியைக் கழட்டப் பார்க்கிறான். முடியவில்லை. இந்த சண்டையில் frazier தோற்கிறான். ஆனால் Russel, frazier ஐ கொல்லாமல் விட்டு விடுகிறான். போகும் போது frazier தனக்கு ஒரு காதலி இருப்பதாகவும் அவளுக்கு ரிங் வாங்க பணமில்லாமல் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் சொல்கிறான். அதற்கு Russel : do you love each other? then money is not a problem என்கிறான். Frazer, russel இடம் இவ்வளவு தன்னம்பிக்கையாக இருக்கிறாயே எப்படி நீ எங்களிடமிருந்து தப்பிக்கப்போகிறாய் என்கிறான். அதற்கு Russel இதோ இந்த பேங்கின் வாசல் வழியே தான் நடந்து செல்வேன் என்கிறான்.

போலீஸ் உள்ளே சென்று விட தீர்மானிக்கிறது. போலீஸ் உள்ளே செல்லும் முன்னர் உள்ளே குண்டு வெடிக்கிறது. பிணைக் கைதிகள் மற்றும் russel இன் டீம் வெளியே வருகிறார்கள். போலீஸ் அனைவரையும் பிடித்து வைத்து விசாரனை செய்கிறது. Frazier அனைவரையும் விசாரனை செய்கிறார். No clues. யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. எல்லோரும் mask போட்டிருந்ததால் எங்களுக்கு தெரியவில்லை என்கின்றனர்.

நிறைய நாட்கள் கழித்து Frazier பேங்க்கின் ரெக்கார்ட்ஸ் பார்த்துக்கொண்டிருக்கும் போது லாக்கர் 392 பற்றிய தகவல்கள் இல்லாமல் இருப்பதை பார்த்து, அந்த லாக்கரைத் திறக்க judge இடம் அனுமதி வாங்கிக்கொண்டு வருகிறான்.

அப்பொழுது தான் Russel பேங்க்கிற்குள்ளே தான் setup செய்த ரகசிய அறையிலிருந்து வெளியே வர முயற்சிக்கிறான். தனது டீம் மெம்பர்ஸை பத்திரமாக வெளியே அனுப்பிவிட்டு Russel மட்டும் உள்ளேயே (Inside Man) இவ்வளவு நாட்கள் இருந்திருக்கிறான். உணவுக்கு முன்பே பிணைக்கைதிகளை காட்டி வாங்கிய pizza இருக்கிறது. நிலமை சீராகும் வரை ஸ்டோர் ரூம் போல தோற்றம் அளிக்கும் இடத்தில் rack க்கிற்கு பின்னே ஒரு சிறு அறை அமைத்து -இவர்கள் பிணைக்கைதிகளை பிடித்து வைத்திருக்கும் போது செய்தது- அதனுள்ளே இருந்திருக்கிறான். Master Plan.

வெளியே வரும் பொழுது Frazier மீது இடித்து விடுகிறான்.

Frazier பேங்கிற்குள் நுழைந்து லாக்கர் 392 திறந்து பார்க்கிறான். உள்ளே மோதிரம் இருக்கிறது. அதை வைத்து சேர்மேனை – Arthur Case – war crimes case போடுகிறான்.

வீட்டிற்கு வந்து தனது ஜாக்கெட்டைக் கழட்டும் போது பையில் ஒரு வைரம் இருப்பதைப் பார்க்கிறான். அப்பொழுது தான் பேங்கில் யாரோ தன் மீது மோதியது ஞாபகம் வருகிறது மேலும் Russel சொன்ன : நான் இந்த பேங்க்கின் வாசல் வழியே தான் நடந்து வெளியேறுவேன் என்கிற டயலாக்கும் if you love each other then money money is not a matter என்கிற டயலாக்கும் ஞாபகம் வருகிறது.

Frazier சிரித்துக்கொள்கிறான்.

எல்லாம் சரி படத்தில் எழுத்துப்போடும் போது தில் சே படத்தின் “ச்சைய ச்சைய ச்சைய்யா ச்சைய்யா” பாடல் ஏன் போட்டார்கள் என்று தான் தெரியவில்லை.

மேலும் படத்தில் ஒரு சீக்கியர் வருகிறார். அவர் கொள்ளையடிக்கப்படுகின்ற மேங்க்கில் வேலை செய்பவர். கொள்ளையர்கள் அந்த சீக்கியரை வெளியே விட்டுவிடும் போது, வெளியே நிற்கும் NYPD அவரை பிடித்து கீழே தள்ளி- அவர் நான் பேங்க்கில் வேலை செய்பவன் என்று சொல்வதையும் பொருட்படுத்தாமல் – அவரது டர்பனை அவிழ்க்கச் சொல்கிறது. மேலும் அவரது மீசை தாடியைப் பார்த்து – wooo..Arab..- என்கிறது. சீக்கியவர் நான் Arab இல்லை சீக்கியவன் என் டர்பனைத் தாருங்கள் அது மதம் சம்பந்தப்பட்டது. நான் டர்பன் இல்லாமல் நான் இருக்கக்கூடாது என்று கத்திக்கொண்டேயிருக்கிறார்.

பின்னர் விசாரனைக்கு அவரை அழைத்து பேசும் போது – உள்ளே இருக்கும் கொள்ளையர்களைப் பற்றி செய்திகள் தெரிந்து கொள்வதற்கு- அந்த சீக்கியவர் சொல்கிறார் : why cant I go anywhere without getting harrassed?

ஏனென்றால் அது நம் நாடு இல்லை.

எனினும் படத்தில் அவரது கேள்விக்கு பதில் இல்லை.

2 thoughts on “Inside Man

  1. ருத்ரா original என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?!!!. 1990 இல் வெளி வந்த பில் முர்ரே படமான quick change (http://en.wikipedia.org/wiki/Quick_Change)இல் இருந்து சீன் பை சீன் சுட்டது தான் ருத்ராவில் வரும் பஃபூன் காட்சி. திருடுவதில் நம்மாளுக்கு இணை கிடயாது. சும்மா நம்மாளு தமிளன் ஹாலிவுட்டுக்கு முந்தியே செஞ்சிட்டான்னு பெருமையா சொல்றதுக்கு முந்தி விசாரிச்சுப் பாருங்க – you will find 99% of interesting tamil movie scenes/plots have been stolen from all over the world

    Like

  2. // சும்மா நம்மாளு தமிளன் ஹாலிவுட்டுக்கு முந்தியே செஞ்சிட்டான்னு பெருமையா சொல்றதுக்கு முந்தி விசாரிச்சுப் பாருங்க //ஹாலிவுட்டுக்கு முன்னாடியே செஞ்சுட்டான்னு நான் எங்கயுமே சொல்லல பாலா. நான் ருத்ராவைக் கம்ப்பேர் தான் பண்ணியிருக்கேன். ருத்ராவில் வந்ததைப்போன்ற ஒன்றைத்தான் குறிப்பிட்டேன். //திருடுவதில் நம்மாளுக்கு இணைகிடையாது.எல்லா இடத்திலும் நடப்பது தானே இது. //you will find 99% of interesting tamil movie scenes/plots have been stolen from all over the worldஇருக்காது என்றே நம்புகிறேன்.சினிமா ஆராய்ச்சியாளர்கள் தான் பதில் சொல்லவேண்டும்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s