தயிர்வடைகள்

தயிர்வடை சாப்பிடுபவர்கள் Traditional, பக்கார்டி சாப்பிடுபவர்கள் Organic என்ற மிகப்பெரிய கண்டுபிடிப்பை கண்டுகொள்ளாமல் இவ்வளவு நாட்கள் தெரியாமல் இருந்துவிட்டிருக்கிறேன் என்று நினைக்கும் போது எனக்கே என் மீது கோபம் கோபமாக வருகிறது. என்ன ஜென்மம் நான்? ஆதாலால் குடி மக்களே உங்களுக்கு இந்த அரிய உண்மையை சுட்டிக் காட்டியதற்கு நீங்கள் எனக்கு நன்றி சொல்லத்தேவையில்லை, திரு. “ஆர்கானிக் எழுத்தாளர்” சாரு நிவேதிதாவிற்கு நேரடியாகச் சொல்லிவிடுங்கள்.

விசயத்துக்கு வருவோம். கோணல் பக்கங்களின் மூன்றாவது தொகுதியில் “உண்மையான பெரியார்” என்ற கட்டுரை (கட்டுரைகள் எழுதுபவர்கள் மன்னிக்கவும், அப்படித்தான் அந்த புத்தகத்தில் இருக்கிறது. மேலும் இந்தப்புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய நாஞ்சில் நாடன் இந்த மாதிரி இலக்கியத்திற்கு(?!) இன்னும் பெயர் வைக்கப்படவில்லை என்கிறார்!) யில் இவ்வாறு சொல்கிறார், சாரு நிவேதிதா:

காந்தியை, மகாத்மா என்று சமூகம் சொன்னால் நாமும் கிளிப்பிள்ளை மாதிரி திருப்பிச் சொல்லுதல். மாறாக அவர் மகாத்மாவாக வாழ்வதற்கு மற்றவர்கள் என்ன விலை கொடுக்க வேண்டியதிருந்தது என்பது பற்றி கேள்வியே கேட்காமல் இருத்தல்.

காந்தி இயற்கையாக இறந்த மாட்டின் தோலினால் செய்யப்பட்ட செருப்பை மட்டுமே அணிவது என்று முடிவெடுத்த பின்னர், இயற்கையாக இறந்த மாட்டைத்தேடி இரு குழுக்கள் நாடெங்கும் அலைந்தது திரிந்து கண்டுபிடித்து, அவருக்கு செருப்பு வாங்கிக் கொடுத்தார்களாம். இவ்வகையில் காந்தி அணிந்த செருப்பின் விலை அந்தக் காலகட்டத்தில் சாதாரண செருப்பை விட ஐம்பது மடங்கு கூட இருந்ததாம்.

அதனால் அவரை மகாத்மா என்று சொல்வதற்கு கேள்விகள் கேட்கவேண்டுமாம்.

காந்தி, கண்டிப்பாக எங்கிருந்தாலும் இறந்த மாட்டைக் கண்டுபிடித்து எனக்கு செருப்பு வாங்கிவாருங்கள் என்று அடம் பிடித்தாரா? அவர் இயற்கையாக இறந்த மாட்டின் தோலினால் செய்த செருப்பை மட்டுமே அணிவேன் என்று முடிவெடுத்த பின்னர், அவரது தொண்டர்கள், அவர் வேண்டாம் எனினும், அவருக்காக தேடி அலைந்து திரிந்து கண்டுபிடித்து வாங்கி வந்திருக்கலாம். இவ்வாறு தொண்டர்கள் வாங்கி வராமல் இருந்திருந்தால் கூட, காந்திக்கு இது ஒன்றும் மேட்டரே அல்ல, அவர் செருப்பு அணிவதையே விட்டிருப்பார். கோட்சூட் அணிந்து செல்வத்தில் திளைத்திருந்த போது, கந்தல் ஆடை அணிந்த மக்களைப் பார்த்ததும் அனைத்தையும் தூக்கி எறிந்த அவருக்கு செருப்பு அணியாமல் நடப்பதா பெரிய விசயம்? இதைக்கூட விட்டுத்தள்ளுங்கள். எக்காலத்திலும் உண்மையே பேசுவது என்பது எவ்வளவு பெரிய சமாச்சாரம்? அதை செய்யக்கூடிய அளவுக்கு மனதைரியமும், self-control லும் இருந்தவருக்கு சாதாரண செருப்பு அணியாமல் இருப்பதா பெரிய வேலை? மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக நாற்பத்தியெட்டு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தவருக்கு செருப்பு அணியாமல் இருப்பதா கஷ்டம்?

எங்கே, இவர்களை ஒரு நாள் – ஒரே ஒரு நாள்- உண்ணாவிரதம் இருக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்.

சரி. கிடக்கட்டும். அவரை மகாத்மா என்று அழைப்பதில் யாருக்கு என்ன கெடுதல் வந்து விட்டது? எவ்வளவு நல்ல பழக்கங்களை வைத்திருந்திருக்கிறார். அதற்கு ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு : அவருடைய பாத்ரூம்மை அவரே கழுவுவது. இது என்ன பெரிய விசயம், என்கிறீர்களா? எனது நண்பர்கள் சிலரே கூட தாங்கள் உபயோகித்த பாத்ரூம்மை தாங்களே கழுவி விட மாட்டார்கள். சாதாரண மனிதர்களும் நேரம் இல்லை என்றும் ( நேரம் இல்லையா? பாத்ரூம் போவதற்கு நேரம் இருக்கும் போது, கழுவிவிட நேரம் இருக்காதா என்ன? அதெல்லாம் இல்லை, சோம்பேறித்தனம் தான் காரணம் ), இன்னும் வேறு காரணங்கள் சொல்லி தப்பித்துக்கொண்டிருக்கும் போது, ஒரு நாட்டின் தலைவர், குற்றம் சாட்டப்பட்டு கூண்டில் ஏறும் போது இங்கிலாந்து நீதிபதியே கூட எழுந்து நிற்கும் அளவுக்கு மரியதைக்குரியவர், ஏன் பாத்ரூம் கிளீன் பண்ண வேண்டும்? அவரை மகாத்மா என்று அழைப்பதில் என்ன தவறு வந்துவிடப்போகிறது? யார், எங்கே குறைந்து போகிறார்கள்?

அவ்வாறு சொல்லும் இலக்கியவாதிகளை, சாரு நிவேதிதா : தயிர்வடை இலக்கியவாதிகள் என்று சொல்லுகிறார்.

1875 இல் இருந்து பாதுகாக்கப்பட்ட ஒயின், கூபாவின் பக்கார்டி, பாங்க்காக் கேலிக்கை விடுதிகள், ஜப்பானியப் பெண்கள் அருகிலிருந்து ஊற்றிக்கொடுக்க, தரையிலமர்ந்து ஸாக்கே என்ற மது வகையை அருந்துவது, கேப்ரே பார்கள், “ரா” வாக மட்டுமே அடிக்க வேண்டும் என்ற மிக நல்ல ரூல்ஸைக்கொண்டுள்ள Geronimous என்ற பார், அதில் தொடர்ச்சியாக பதினேழு ஷாட்கள் அடித்து பதக்கம் வாங்கியதைப் பற்றியல்லாம் எழுதுவது எந்த வகை இலக்கியம்? இவர்கள் தான் organic இலக்கியவாதிகளா? (organic wines பற்றி சொல்லியிருப்பாரோ என்று கூட சில நிமிடம் யோசித்தேன். )

கேட்டால், ethics வேறு ஒழுக்கம் வேறு என்கிறார். எடுத்துக்காட்டாக அவரது ப்ராண்ஸ் தேசத்து நண்பரின் ஆப்ரிக்க மனைவி கன்னத்தில் முத்தமிட்டு வறவேற்ற சம்பவத்தைக்கூறி அது அங்கே பழக்கம் ஆனால் இங்கே அப்படி செய்யமுடியாது என்கிறார். அப்படியானால் உங்கள் கட்டுரைகளை ஆப்பிரிக்க மொழியில் எழுதுவது தானே?

மேலும் ஆதாரத்திற்கு: அண்டார்டிக்காவில், அண்டாகாகஜம் என்ற மிகப்புகழ் பெற்ற இலக்கியவாதி -அண்டாகாகஜம் என்ற இலக்கியவாதி பனிகுகைக்குள்ளிருந்து அவருடைய அன்னை டபாகாகுஜமுக்கு யாருக்கும் புரியாத புருஷ்கியா மொழியில் எழுதிய கடிதங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டும் – SubSnow Stupidity என்ற தொகுதியில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார் என்று சொல்லி தப்பிப்பது பலருக்கும் வழக்கமாகிவிட்டது.

நாம் நமது நாட்டினர் மகாத்மா என்று சொன்னதை கேள்வி கேட்க்காமல் ஏற்றுக்கொண்டு தயிர் வடை இலைக்கியவாதி ஆகிவிட்டோம், ஆனால் ரனஜித் சொன்னதை அப்படியே நம்பினால் – என்னது? ஆதாரம் இருக்கிறதா? காந்தி மகாத்மா என்பதற்கு எங்களிடம் ஆதாரங்கள் இல்லையா என்ன? -அந்த இலக்கியவாதிகளுக்கு என்ன பெயர்?

5 thoughts on “தயிர்வடைகள்

 1. பின்னீட்டீங்க!! சும்மா வாய்க்கு வந்தத பேசிட்டு அது தான் இலக்கியம் அப்பிடிங்கறது இப்போ fashion.

  Like

 2. s: வருகைக்கு நன்றி. கருத்துச் சுதந்திரம் என்ற ஒன்று இருக்கிறது தான், இல்லையென்று சொல்லவில்லை, அதற்காக அடிமடியிலே கை வைப்பதா? ஜீ.முருகன் என்றவர் எழுதிய சிறுகதையை தீராநதியில் படிக்க நேர்ந்தது. முதல் பேராவில் அவ்வளவு முகம் சுளிக்க வைக்கும் விசயங்கள்.open-mindedness அவ்வப்போது தேவைதான், எப்பொழுதும் தேவையா என்பதைத் தான் சிந்திக்கவேண்டும். தண்ணிஅடிப்பது மனித உரிமை. இல்லை என்று நான் சொல்லவில்லை. குடியுங்கள். பிழையில்லை. அதை டீடெயில்டாக எழுதவேறு செய்யனுமா? நாம் தான் நம்மால் முடிந்தவரை ethics க்கு அப்பாற்பட்டு செய்கிறோமே, நல்லது செய்தவர்களையுமா கேலி கிண்டல் செய்வது?

  Like

 3. இதுவும் நன்று!காந்தியை மகாத்மா என்று அழைப்பவர்கள் தயிர்வடை இலக்கியவாதிகள் என்றால்நாங்களும் தயிர்வடை இலக்கியவாதிகளே!(அப்படியாவது இலக்கியவாதிகள் என்று ஒப்புக் கொண்டால் சரி)

  Like

 4. திரு. முத்து!அவர் எழுதியதில் என்ன தவறு கண்டுவிட்டீர்கள்? யாரோ எழுதிய வரலாறு சரி என்று இன்று வரை நம்பியது போது! கொஞ்சம் உங்க பள்ளியில் படித்த வரலாறு பாடத்தை விட்டு வெளியே வாங்க சார்! அவை உண்மையா, தகுதி உள்ளதா என்று ஆராய்ந்து ஏற்றுக்கொள் என்று சொல்லியிருக்காரு அவ்வளவு தானே! சாருவும் தான் உண்மையை சொல்லி, எழுதறாரு! அவரும் மகாத்மாவா??//அவர் வேண்டாம் எனினும், அவருக்காக தேடி அலைந்து திரிந்து கண்டுபிடித்து வாங்கி வந்திருக்கலாம். இவ்வாறு தொண்டர்கள் வாங்கி வராமல் இருந்திருந்தால் கூட, காந்திக்கு இது ஒன்றும் மேட்டரே அல்ல, அவர் செருப்பு அணிவதையே விட்டிருப்பார்.//என்ன சார், தலைவன் – தொண்டன் இந்த கொடுமையான கோட்பாடு அந்த கருமத்தால தானே இன்னும் நம் மக்கள் உருப்படாம இருக்காங்க! அதை ஏன் காந்தி திருத்தவில்லை! தம்பி எனக்கு செருப்பு வாங்க அலைவதைவிட ஏன் உன் வீட்டு வேலையையோ அல்லது மினிமம் இந்திய சுதந்திரத்துக்கு போராட முயற்சி எடுன்னு சொல்லியிருக்கலாமே!! இல்ல நீங்க சொல்லறமாதிரி செருப்பு போடறத விடிருந்தால் காங்கிரஸ் கட்சியின் எவ்வளவு காசு மிச்சம்!!//அதற்கு ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு : அவருடைய பாத்ரூம்மை அவரே கழுவுவது.//ஐயா கமெடி தாங்கல! நாம்ம பாத்ரூமை நம்ம கழுவரது ஒரு பெரிய மேட்டரா? இது இவ்வளவு பெரிய மேட்ட்டர்ன்னு நீங்க சொல்லித்தான் தெரியுது! //எக்காலத்திலும் உண்மையே பேசுவது என்பது எவ்வளவு பெரிய சமாச்சாரம்?//உண்மையை மறைக்கலாமா?? எவ்வளவு உண்மைகள் மறைக்கப்பட்டதுன்னு ஏதாவது ஐடியா இருக்கா உங்களுக்கு! தலைவா போய் உண்மை வரலாறு தெரிந்து கொண்டு பேசுங்க!!! உண்மைகள் பல மறைக்கப்பட்டிருக்கு! இன்று அவர் பேரன்களும் மகன்களும் அள்ளி அள்ளி வீசுறதை பாருங்க! பொய் பேசக்கூடாது! ஆனா உண்மையை மறைக்கலாம் அப்படித்தானா?? என்ன உண்மைகள் மறைக்கப்பட்டது என்று கண்டுபிடிக்கமுடியவில்லை என்றால் எனக்கு ஒரு தனி மடல் இடுங்க சார், உங்களுக்கு நிறைய சுட்டிகள் தருகிறேன்!சாரு சொன்னது தப்பொன்று இருப்பதாக தெரியவில்லை!நன்றி!நா ஜெயசங்கர்

  Like

 5. முத்து,இந்த விஷயத்தை எடுத்துக்கொண்டதற்கு நன்றி,மேலும்,அவரவர் எண்ண்த்தை அந்த கோணத்திலேயே தான் பார்க்க வேண்டும்.காந்தி ஒரு முழு Practical மனிதர்,சாரு, எழுத்தாளர் அவ்வப்போது புரட்சிகரமாக சிந்திப்பதாக நினைப்பவர், இணையத்திலேயே கோணல் பக்கங்களின் வாயிலாக எதையாவது எழுதி பரபரப்பு தேடுபவர். காந்தியின் பல முயற்சிகள் கடைசியில் தோல்வி அடைந்திருக்கலாம், ஆனால் அவை மிக மி்க சத்தியமானவை.நான் இன்னும் காந்தியை முழுமையாக அறிய முயற்சித்துக்கொண்டு இருக்கிறேன், பல ஆண்டுகளாக.உண்மைய சொன்னதற்காக மட்டும் அல்ல,Mr. we the people,அவற்றை பரிசோதித்து கடைபிடித்து, மற்றவர்களையும், அதை பின் பற்ற செய்தார், அது தான் நூற்றாண்டுகளில் அறிதான ஒன்று.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s