சுடர் : தனித்தீவு

சுடர் இளவஞ்சிகிட்ட இருந்து ரொம்ப பிரகாசமா என்கிட்ட வந்திருக்கு. அதை அணைச்சுடாம நிர்மல் கிட்ட கொடுத்திடனும்ங்கிறது தான் நேத்திலிருந்து எனக்கு ஒரே சிந்தனை. அதுவும் இளா வேற ஒரு தினுசா கேள்வி கேட்டிருக்கார். அஜீத்துக்கு கதை, ஒரு தீவு-ஒரு மாதம்-ஒரு மனிதன்-ஐந்து பொருட்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் மட்டுமே மனிதனின் குணாதிசயங்களை கண்டுகொள்ளலாம், அப்புறம் ஆறுதலுக்கு ஒரே ஒரு ஈசியான கேள்வி : நல்ல தமிழில் எழுதாதவர்களைப் (இளாவை ப் போலவாம்! இவர் நல்ல தமிழில் எழுத மாட்டாராம்! ஹம்.. நான் நல்ல தமிழில் எழுதுகிறேனாம். ஐயகோ!) படிக்கும் போது நான் என்ன நினைக்கிறேன் என்று நான்கு கேள்விகள்.

ஒரு தீவு-ஒரு மாதம்-ஒரு மனிதன்-ஐந்து பொருட்கள்

கேள்விகளைப் படித்தவுடன் BE ஏழாவது செமஸ்டரில் LIC பரிட்சை question paper ஐ பார்த்து முழித்த முத்து, போல முழித்தேன். நாலு கேள்கிகளில் ஒரே ஒரு கேள்விக்கு தான் திட்டவட்டமாக answer தெரிகிறது. மத்த கேள்விகள் எல்லாம் abstract class போல, என்னவென்று தெரியும், எப்படியென்று தெரியாது! தீவுக்கு போவதா? தனியா ஒரு மாசமா? ஐந்து பொருட்கள் எடுத்துப் போக வேண்டுமா? பதில் தெரியாம சட்டுன்னு கூகிள் கிட்ட கேக்காலாமான்னு கூட யோசிச்சேன். என்ன பண்றது எதுக்கெடுத்தாலும் கூகிள்ட்ட கேட்டு கேட்டே பழக்கமாகிடுச்சு.

என்னுடைய கலீக் ஒருத்தர் சொன்னார் : உனக்கு, ஒரு செல் போன், நிறைய காபி , அப்புறம் லேப்டாப் இருந்தா போதாதா முத்து, ஒரு மாசம் ஓட்டிடுவேயில்ல என்றார். உண்மைதான். ஆனா செல்போனுக்கு பேட்டரி சார்ஜ் போயிடுச்சுன்னா எங்க போய் சார்ஜ் பண்றதாம்? என்னோட லேப்டாப் கூட இரண்டு மணி நேரத்துக்கு மேலே சார்ஜ் தங்காது என்றேன். அப்படீன்னா ஒன்னு செய் முத்து, பேசாம நிறைய பேட்டரி எடுத்துட்டு போயிடு என்றார். இளவஞ்சி ஒத்துக்குவாரான்னு தெரியலயே?

அப்புறம் ஒரு ப்ரண்ட் கிட்ட கேட்டப்போ, அவர் சட்டுன்னு, முத்து ஆர் யூ ஓகே. உடம்புக்கு ஒன்னும் இல்லியேன்னு என்னைய ஒரு விசித்திரமான லுக்விட்டுட்டே கேட்டார். பிறகு நான் நம்ப சுடரைப் பத்தி விளக்கி சொன்னவுடன், சீரியசாக யோசிக்க ஆரம்பித்தார். திடீர்னு, அங்கே சாப்பாடெல்லாம் கிடைக்குமா? என்றார். ம்ம்..நாயர் டீஸ்டால் கூட ஒன்னு இருக்காம்ன்னு சொன்னேன். அப்படியா என்றார் அப்பாவியாய். (அவரிடம் கேள்விகளுக்கு பஞ்சம் இருக்காது. கேள்விமேல கேள்வி கேட்டுகிட்டேயிருப்பார்.அதனாலேயே அவருக்கு கேள்வியின் நாயகன் என்றொரு பெயர் உண்டு) யோவ் உன்னைய தனியா தான இருக்க சொல்லியிருக்காய்ங்க இதுல சாப்பாடு கிடைக்குமா மசாலா டீ கிடைக்குமான்னு என்யா டுபாகூர் மாதிரி கேக்குறன்ன, பிறகு அமைதியாய் ரொம்ப நேரம் யோசிச்ச அவர், திடீர்னு :

கண்டிப்பா தீக்குச்சி எடுத்திட்டு போக மாட்டேன்னார். ஆதி காலம் மாதிரி அவரே கல்லெல்லாம் உரசி தீ பத்தவெச்சுப்பாராம். அப்புறம், கண்டிப்பா கம்பளி எடுத்துட்டு போவேன், எனக்கு குளிர் தாங்காது என்றார். நான் தண்ணி வேணாமான்னு கேட்டேன். தீவுல கடல் இருக்குமான்னு கேட்டார். (அடப்பாவி!) நான் சிரிக்காம கண்டிப்பா இருக்கும்னு சொன்னேன். அப்படீன்னா கடல் தண்ணிய குடிச்சுக்கவேண்டிது தானே என்றார்.நான் ஒன்னும் சொல்லல. பிறகு கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு : முக்கியமா கொசு வத்தி சுருள் எடுத்திட்டு போவேன்னார். என்னது கொசு வத்தி சுருளா? செம்பு ரொம்ப (சிக்கன்குனியாவால) அடிவாங்கியிருக்கும் போல! அவருக்கு நாலு பொருள் தான் தெரிஞ்சது. அஞ்சாவது? பராவாயில்ல நான் எடுத்துட்டு போகல்லன்னார்! எவ்ளோ சிக்கனம்!

அவர் சொன்ன இன்னொரு பொருள்: அந்த தீவில இருக்குற மரங்கள்ல இருக்கிற பழங்களைப் பறிச்சு சாப்பிடறதுக்கு ஒரு நீண்ட குச்சி (முனையில கொக்கியோடு!) எடுத்திட்டுப் போவாராம். நீங்களே கல்லெல்லாம் உரசி தீ பத்தவெச்சுக்கிறீங்களே, மரத்த உடச்சு நீங்களே கொக்கியும் செஞ்சுக்க வேண்டியது தானேன்னு சொன்னேன், அடஆமால்ல, அதானே! என்றார்.

என்னோட ப்ரண்ட் ஒருத்தி, நடு ராத்திரியில எழுப்பி, முத்து, நீ உன்னோட சோடபுட்டிய மறந்திடாம எடுத்திட்டு போயிடு, என்னா உனக்கு கண்ணு தெரியாதில்லன்னு சொன்னா. நான் தான் லென்ஸ் போட்டுக்குவேனே அப்படீன்னு சிரிச்சேன். அதுக்கு அவ, லென்ஸ்ன்னா, லென்ஸ் வெக்கிற கேஸ், கிளீனிங் liquid எடுத்திட்டு போகணும், அதுவே ரெண்டு பொருள் count ஆகிடுச்சு, சோடாபுட்டின்னா கணக்கில வராது, நீ பாட்டுக்கு போட்டுட்டு ஜாலியா போயிடலாம். அதுக்கப்புறமும், தீவில போய் நீ தனியாதான் இருக்கபோற, அங்க girls யாரும் இருக்கப்போறதில்ல, அதனால லென்ஸ் போட்டுட்டு நீ ஒன்னும் சீன் போட தேவையில்லன்னா. கரெக்ட் தான்!

cast away ன்னு ஒரு படம் பார்த்திருப்பீங்க, இளவஞ்சியோட கேள்வியப் படிச்சதும் எனக்கு அந்தப் படம் தான் ஞாபகம் வந்தது. அதிலும் Tom Hanks நீண்ட நாள் கடின முயற்சிக்குப் பிறகு தீ பற்றவைத்து விட்டு, கத்தி கூப்பாடு போட்டு டான்ஸ் ஆடுவது. ரொம்ப அழகாக செய்திருப்பார் அவர்.

நானே முயற்சி செஞ்சு தீ பற்றவைப்பதுக்குள் இளா வந்து, முத்து ஒரு மாசம் முடிஞ்சிடுச்சு, வாங்க போகலாம்ன்னு சொல்லிடுவார். அதனால நான் அவ்வளவெல்லாம் கஷ்டப்படப்போவதில்லை. ஒரு லைட்டர் : தேடிக்கண்டுபிடித்து இருக்கறதிலியே பெரிய லைட்டர் ஒன்னு கண்டிப்பாக எடுத்துப்பேன். அது வொர்க் ஆகலைன்னா? இல்ல, மழையில நனைஞ்சு struk ஆகிடுச்சுன்னா? அடபோங்கப்பா, நான் தீ கண்டுபிடிச்சுக்கறேன்.

முனையில் வளைந்த கூர்மையான ஒரு ஆயுதம். கண்டிப்பாக தேவைன்னு நினைக்கிறேன். ஏதாவது திறக்கனும்னா? (suppose இளநிர். நினைப்பு தான்டா உனக்கு. விட்டா, இளனிக்கு straw கேப்பபோல. இளா, தென்னை மரமெல்லாம் இருக்கா அங்க?) மேலும் தற்காப்புக்கு கூட பயன் படுத்திக்கலாம் இல்லியா? ஒரு சிங்கம் (தீவில ஏதுடா சிங்கம்? அதுவும், ஒரு உரையில ஒரு கத்தி தான் இருக்கும்கிறமாதிரி, ஒரு தீவில ஒரு சிங்கம் தான் இருக்கும்னு விஜய.டி.ஆர் கூட சொல்லியிருக்கார். அதனால நீ இருக்கறதால, இன்னொரு சிங்கம் அங்க இருக்க சான்ஸே இல்லடா முத்து! 🙂 ) கிங்கம் வந்தா அது கூட சண்டை போடுறதுக்கு உதவியா இருக்கும்ல. அப்புறம் சுராமீன் (!?) ஏதும் கரை ஒதுங்கிச்சுன்னா அதை கிழிக்கறதுக்கு உதவியா இருக்கும். சுராமீன் ஒதுங்கிச்சுன்னா ஒரு மாசதுக்கு கவலையே இல்ல. இளா அஞ்சு பொருள் restriction கொடுக்கலைன்னா, ஆச்சி மசாலாதூள் பாக்கெட் கூட எடுத்திட்டு போகலாம். 🙂

கவட்டை போன்ற ஒன்று. துப்பாக்கி வேண்டாம்னு நினைக்கிறேன். ஏன்னா very simple, எனக்கு சுடத்தெரியாது. மேலும் துப்பாக்கியால் சுட்டு, கடல்ல கொஞ்ச தூரத்தில் சென்று கொண்டிருக்கும், Pirates (of the caribean) இன் கவனத்தை ஈர்க்க விரும்பவில்லை. வேலியில போற ஓணான எட்த்து வேட்டியில விட்டுக்கினு, அப்பால, வானா வானான்னா விட்டுடுமா? துப்பாக்கியைப் பயன் படுத்தினால் அங்கே இருக்கிற உயிரினங்கள் (wild) உசாராவதுக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் கவட்டைய பயன் படுத்தி சில பறவைகளை – காட கவுதாரி கொக்கு -(கொஞ்சம் கஷ்டப்பட்டு தான்! சின்ன வயதில் பயன்படுத்தியிருக்கிறேன்) வீழ்த்தலாம். அப்புறம் சுட்டு சாப்பிடலாம். வாவ். intersting இல்ல? (interetinga? அங்க போனப்புறம் தெரியும்டி!)

நீண்ட ஸ்ட்ராங்கான கயிறு. சுனாமியோ, இல்ல global warming (இதுக்கு தான் ஓவரா இங்கிலீஸ் படம் பாக்காதன்னு சொல்றது!) ன்னாலயோ கடல் தண்ணீர் தீவுக்குள்ள வந்திடுச்சுன்னு வெச்சுக்குங்க ஒரு பெரிய மரத்தைப் பார்த்து அதுல கயிறு போட்டு ஏறி உச்சியில் உக்காந்துகிடலாம்ல. மேலும், இளா இந்த பதிவை படிச்சுட்டு, அடப் பாவி, இவ்ளோ மொக்க போடுற, உன்னல்லாம் அந்த தீவிலயே விட்டுட்டு வந்திடனும்டான்னு, அங்கேயே விட்டுட்டாருன்னு வெச்சுக்கோங்க, நான் மரம் வெட்டி (தற்செயலாக வந்த வார்த்தைதான்!) இந்த கயிற use பண்ணி படகு போல ஏதோ செஞ்சு தப்பிசுடலாம் பாருங்க. cast away ல Tom Hanks இப்படி தப்பிக்கிற போது அவர் மறுபடி மறுபடி அலைகளால் கரைக்கே இழுத்து வரப்படுகிற காட்சி மனதில் தோன்றி சற்று கிலி ஏற்படுத்தத்தான் செய்கிறது. இளா, ஒரு மாசம் கழிச்சு வந்து என்ன கூப்பிட்டுப்பீங்கள்ல?

என்னுடைய நண்பர் ஒருவர் சொன்னார்: நான் ஒரு மாசத்துக்கு தேவையான சாப்பாடு கட்டிட்டு போயிடுவேன். சாம்பார் ரசம் (ரொம்ப முக்கியம்!) எல்லாம் சேர்த்து ஒரே பாக்கெட்டா எடுத்துப்பாராம். ஒரு மாசத்துக்கு தேவையான சாப்பாடு கட்டிட்டுப் போனா அது கெட்டுப் போயிடாதா? புளிச்சாதம் கூட ஐந்து நாட்களுக்கு தான் வரும். (நாங்க கோவிலுக்கு போகும் போது எடுத்துட்டு போவோம். மூனாவது நாளே சாப்பிட முடியாது. அந்த smell வந்தாலே வயித்த புரட்டிட்டு வரும்) மேலும் தீவில் அதிகம் வேலை இருக்காது so hopefully அதிகம் பசி இருக்காது. பழங்கள் if lucky ஏதோ மீன், பறவை கிடைத்தால் போதும். சமாளிச்சுகிடலாம்.

என்னுடைய இன்னொரு நண்பரிடம் கேட்டதற்கு அவர் உடனே லேப்டாப் எடுத்துட்டு போவேன்னார். லேப்டாப் வெச்சு என்ன பண்ணுவீங்கன்னு கேட்டப்போ, ம்..ம்..பாட்டு கேப்பேன், படம் பாப்பேன் என்னமோ செய்வேன்னார். சார்ஜ் போயிடுச்சுன்னா என்ன பண்ணுவீங்கன்னு கேட்டப்ப, ஓ அப்படி ஒரு விசயம் இருக்கான்னு முழிச்சார். ஒன்று மட்டும் தெரிகிறது. நமது வாழ்க்கையில் லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கின்றன.

அப்புறம் அவர் நிதானமாக யோசித்து சொன்ன ஐந்து பொருட்கள்: ஒரு பெரிய சாக்லேட் பாக்கெட் (எனர்ஜிக்கு), சீட்டு கட்டு (solitaire விளையாட. பொழுது போய்விடும்), கூர்மையான ஒரு ஆயுதம், கம்பளி (குளிருக்கு. மழை பெய்தா என்ன பண்ணுவீங்கன்னு கேட்டப்போ, அட போடாங்கற மாதிரி பார்த்தார்!) , பேப்பர் பேனா (எழுதுவதற்கு. இப்பொழுது அவர் ஆங்கிலத்தில் கதை எழுத ஆரம்பித்திருக்கிறார். கேட்டு வாங்கி publish செய்கிறேன்!)

ஓகே சாய்ஸ் தான், இல்லயா?

தண்ணீருக்கு என்ன பண்ணுவது என்ற சீரியசான யோசனை எனக்கு வந்தது. கடல் தண்ணீரை குடிக்க முடியாதே. கேள்வியின் நாயகன் கடல் தண்ணீரை குடித்து சமாளித்து விடுவேன் என்றார். (அவர் wife கிட்ட சொல்லி சாப்பாட்ல உப்பு கம்மியா போடச் சொல்லனும். மனுசன் ரொம்ப பொறுமைசாலின்னு நினைக்கிறேன்.) என்னால முடியாது. ரொம்ப உப்பா இருக்கும், அவர் தெரியாம சொல்லுறார். ஆனா எனக்கிருக்கிற ஒரே நம்பிக்கை, தீவில் கண்டிப்பாக back waters இருக்கும். அல்லது fresh water சுணை கண்டிப்பாக ஏதோ ஒரு இடத்தில் இருக்கும். (Idea: Life Of Pie) எனவே அதை குடித்து சமாளித்துக்கொள்ளலாம். மேலும் மழை வந்தால் பிடித்து வைத்துக்கொள்ளலாம். ஆமாம், பிடித்து வைக்கப் பாத்திரம்? இதுக்கு தான் கேள்வியின் நாயகன் கொள்றதுக்கு பாத்திரம் எடுத்துப்போவேன் என்றார். (முதலில் “ல்” பிரச்சனையால், பாத்திரத்த வெச்சு கொல்லுவாரா? தலையில கவுத்திவிட்டு மூச்சு திணற வெச்சு கொல்லுவாரோ? புதுமையான டெக்னிக்கா இருக்கேன்னு நான் சீரியசா யோசிச்சேன்) ஆனால் பாத்திரம் எடுத்துப்போகும் அளவுக்கு இளா வாய்ப்பளிக்கவில்லை. ரொம்ப stingy அவர்.

so தண்ணீர் பிரச்சனை solved. டென்ட் அடிக்கும் அளவுக்கு ஒரு பெரிய பிளாஸ்டிக் ஷீட். அதை (மழை மற்றும் கடுமையான வெயிலில்) டென்ட்டாகவும் use பண்ணலாம், குளிருக்கு போர்வையாகவும் பயன்படுத்திக்கலாம்.

கவட்டைக்கு பதில் நான் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டு, சாக்லேட் பாக்கெட் அல்லது சீட்டு கட்டு எடுத்துட்டு போகலாம்.

ஆனால் நான் கண்டிப்பாக ஒரு மாதம் தனிமையில் – அதுவும் செல் போன் இல்லாம – இருக்க வாய்ப்பே இல்லை. கண்டிப்பா லூசாயிடுவேன். (இப்ப மட்டும் எப்படியிருக்கியாம்? ன்னு நீங்க கேக்குறது என் காதுல விழல!)

அஜீத்துக்கு கதை

இது ரொம்ப கஷ்டமான வேலை. எனக்கு மேஜிக் தெரியாது. என்ன முழிக்கிறீங்க? கதைதான எழுதச் சொன்னோம், இவன் என்ன மேஜிக் கீஜிக்குன்னு பீலா விடறான்னு பாக்குறீங்க தான?. அஜீத் படத்தில் (அல்லது சமீபத்திய தமிழ் ஹீரோக்கள் படங்களில் ) கதை என்பது பறம்பொருள் போல. இருக்கும் ஆனால் இருக்காது. தேடுங்க தேடுங்க தேடிட்டேயிருங்க.

ஆனாலும் நான் நம்ப “தலை”க்கு ஒரு கதை யோசிச்சு வெச்சிருக்கேன். அதுல அவர் மட்டும் தான் நடிக்க(?!) முடியும். வேற யாரும் பக்கத்துல கூட வரமுடியாது. அவருக்கே அவருக்கான கதை இது. புது இயக்குனர்களை – கதாசிரியர்களை- அவரைப் போல ஆதரிப்பவர்கள் யாராவது இருக்கிறார்களா என்ன?

படம் ஆரம்பிக்கிறது. ஒரு கழுதை சாந்தமாக நிற்கிறது. காமிரா top angle ல இருக்கு. காமிரா அப்படியே மெதுவா கீழே இறங்கி வருகிறது, அப்போது தான் தெரிகிறது அது உண்மையிலே கழுதை இல்லை, கழுதை வேசத்தில் இருக்கும் அஜித். அவரது கண்கள் மூடியிருக்கின்றன. திடீரென்று வெளிச்சம் அவர் மீது விழுகிறது. கேமிரா பல ஆங்கிளில் சுழல்கிறது. ரீரெக்கார்டிங் காதைப் பிளக்கிறது. (நான், உஷாராக கொண்டுபோயிருந்த பஞ்சை காதில் வைத்துக்கொண்டேன். ஐ, நான் தான் ஆழ்வார் பாத்திருக்கேனே!) கேமிரா focus-outoffocus ஆகிக் கொண்டேயிருக்கிறது. (நான் ஏற்கனவே சோடாபுட்டி, எனக்கு தலை சுற்றவே நான் பயத்தில் கண்களை கையைவைத்து இறுக்கமாக மூடிக்கொண்டேன்.) சட்டுன்னு அஜித் கண்களை திறக்கிறார். வித்தியாசாகரிடம் சொல்லி இந்த பிரேமில் matrix revolutions music க்கையும் கழுதை கத்தும் சத்தத்தையும் mix செஞ்சுறலாம். செமத்தியான introduction.

அஜித் அப்படியே slow motion இல் நடந்து வந்து கட்டிலில் படுத்து நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் ஒருத்தனை உதைத்தே கொல்கிறார். நடு நடுவே கழுதை கத்திக்கொள்கிறது.

அடுத்த பிரேம். ஹீரோயின் introduction. அவர் IIM இல் படித்தவர். அஜித் தங்கியிருக்கும் flat க்கு பக்கத்தில் குடிவருகிறார். வந்த அன்றே பக்கத்து flatல் (அஜித் தங்கியிருக்கும் flat) கழுதை குதிரை கனைப்பது போன்ற சத்தம் கேட்டு மிரண்டு போகிறார். மறுநாள் அஜித்தைப் பார்க்கிறார். இவர் தான் இப்படி mimicry செய்தார் என்று யூகித்தவுடன் (atleast நான் ஒரு காரணமாவது சொல்கிறேன் என்று சந்தோஷப்பட்டுக்கொள்ளுங்கள்) அவருக்கு உடனே காதல் வந்து விடுகிறது. உடனே டூயட். யாரும் எடுத்திறாத அன்டார்டிக்கா பனிசருக்குகளில் அஜித் மற்றும் IIM ஹீரோயின் கழுதைகளுடன் நடனமாடுகின்றனர். அவ்வளவு பனியிலும் நமது ஹீரோ full suit இல் இருக்க, ஹீரோயினும் அவர் LKG யில் போட்ட frock மட்டுமே கொடுக்கப்படும்.

அடுத்த பிரேம். அஜித் ஒட்டகத்தைப் போன்று வேடம் போட்டிருக்கிறார். இந்த முறை ஒரு புதுமையான டெக்னிக்கை கையாள்கிறார். ஒட்டகம், கட்டிலில் விட்டத்தைப் பார்த்து படுத்துக்கொண்டிருப்பவனின் முகத்துக்கு அருகே சென்று வாயைத் திறந்து மூச்சு விடுகிறது. அவன் அங்கேயே பரலோகம் செல்கிறான். மறுபடியும் தீம் மியூசிக் + கழுதை கத்தும் சத்தம்.

அடுத்த பிரேம். ஹீரோயின் அஜித் எங்கே வேலை செய்கிறார் என்று கண்டுபிடிக்க follow செய்கிறார். அவர் zoo வில் கிளீன் செய்யும் வேலை செய்வது தெரிகிறது. அவர் வேலை செய்யும் நேரம் போக ஒரு காலியான கூண்டிலேயே உட்கார்ந்திருப்பது தெரிகிறது. கூண்டுக்கு வெளியே. The Donkey – 1999-2007 என்று போட்டிருக்கிறது.

ஹீரோயின் அஜித்திடம் காதலைச் சொல்லுகிறார். அஜித் முதலில் பிகு பண்ணாலும் டூயட் மட்டும் பாடிக்கொண்டிருக்கிறார். பிறகு ஒரு நாள் ஹீரோயின் அஜீத்திடம் கழுதை போல கத்திக் காண்பிக்கச்சொல்ல அஜித் டென்சனாகிறார். உனக்கு தெர்யுமா. நான் தனியாளில்ல. நான் பேஸ்மாட்டேன். கத்துவேன். என்று காச்மூச்சென்று கத்துகிறார். பிறகு flashback சொல்கிறார். ஹீரோயின் (ரசிகர்களும்) நான் கேக்கவேயில்லையேன்னு சொல்றத அவர் கண்டுக்கல.

அஜித் zooவில் வேலை பார்க்கிறார். அங்கே சிறுத்தை, சிங்கம், யானை போன்ற மிருகங்கள் இருக்கின்றன. அஜித்துக்கு கிளீன் செய்யும் வேலை. அந்த zoo வில் ஒரு கழுதை இருக்கிறது. அதுவும் பார்வைக்கு வைக்கப்பட்டது தான். வேலையெல்லாம் முடித்து விட்டு அஜித் அங்கு தான் வந்து உட்கார்ந்து கொள்வார். (கழுதை ஒன்றும் செய்யாது அது பாட்டுக்கு இருக்கும். மேலும் கழுதையை யாரும் பார்க்கவரமாட்டார்கள் -visitors- நன்றாக தூங்கலாம் என்பது எண்ணம்) கழுதை ஏதோ தன் மீதான பாசம் என்று நினைத்துக்கொள்கிறது. ஒரு நாள், கழுதை அஜீத்திடம் ஏன் என்னை உனக்கு பிடிக்கிறது என்று கேட்கிறது. அஜித் மற்றொரு flashback சொல்ல ஆரம்பிக்கிறார். கழுதை நான் கேட்கல கேட்கலன்னு கத்திக்கொண்டே கூண்டுக்குள்ளே அழுது புலம்புவதை அஜீத் கவனிக்கவில்லை.

அஜித்தின் அப்பா அந்த கிராமத்தில் துணி துவைத்துக் கொடுப்பவர். அவருக்கு ஒரு கழுதை இருக்கிறது. ஒரு நாள் கழுதைக்கு உடம்பு சரியில்லாமல் போக அஜித் மூட்டையைத் தூக்கிகொண்டு செல்கிறார். அப்போது தான் அவருக்கு கழுதைகளின் வலி புரிகிறது. கண்களில் நீர் வழிந்தோடுகிறது. கழுதைகளின் நலனுக்காக போராடுவேன் என்று அழுக்கு துணிகளின் முன்னால் சபதம் எடுத்துக்கொள்கிறார். க.மு.க என்று ஒரு கட்சியும் தொடங்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார். கமுக என்வென்று தெரியாத மக்களுக்கு : கழுதைகள் முன்னேற்றக் கழகம்.

கழுதை மொக்க தாங்க மாட்டாமல் அழுகிறது. அஜீத் எப்பவும் போல தன்னுடைய flashback கேட்டு அழுகிறது என்று நினைத்துக் கொள்கிறார்.

கழுதைக்கு கடுமையான நோயினால் பாதிக்கப்படுகிறது. டாக்டர்கள் கழுதை அதிர்ச்சியான ஜீரனிக்க முடியாத செய்தியைக் கேட்டதால் (should be ajith’s flashback) இப்படி ஆகிவிட்டதென்று சொல்கிறார்கள். மாட்டு டாக்டர் -அப்பரண்டீஸ்- ஒருவர் தவறான மருந்து கொடுத்துவிடுகிறார். கழுதை செத்துவிடுகிறது. ஆனாலும் அஜித்திடமிருந்து தப்பித்துவிட்ட சந்தோசம் அதில் கண்ணில் தெரிகிறது.

அஜித் கோபமாகிறார். கொந்தளிக்கிறார். (ஏன்னா, கழுதை செத்தபிறகு அந்த zoo வேற கழுதை வாங்கல, அந்த கூண்டுக்கு ஒரு காண்டாமிருகத்த கொண்டுவந்திடுச்சு. மக்கள் நிறைய பேரு வாரதால அஜித்தால நிம்மதியா தூங்கமுடியல)
கழுதையின் சாவுக்கு காரணமாயிருந்த அந்த அப்பரண்டீஸ் டாக்டர், அவரோட வந்த கம்பவுண்டர்ஸ் அப்படீன்னு எல்லாத்தையும் கழுதை family (கழுதை, குதிரை. ஒட்டகம், வரிக்குதிரை, ஒட்டசிவிங்கி. இதில் ஒட்டகசிவிங்கி மேக்கப் போடுவதற்கு அமேசான் காடுகளிலிருந்து ஆதி வாசிகளை கூப்பிட்டு வரலாம் என்ற யோசனை இருக்கிறது!) வேசம் போட்டு பழிவாங்குகிறார்.

பிறகு கமுக கட்சி ஆரம்பிக்கிறார். தேர்தலில் நின்று வெற்றியும் பெறுகிறார்.

(இவை அனைத்தும் ஒரே தீம் சாங்.

வெற்றிக் கொடி கட்டு
கழுத முதுகில துணி கட்டு” ன்னு ஏதாவது தத்து-பித்துன்னு வைரமுத்துவிடம் கேட்டு வாங்கிவிடலாம்.)

ஹீரோயின் என்ன ஆனார்? மூனு பாட்டுக்கு ஆடினாங்கல்ல அது போதும். ஒரு பாட்டுக்கு யாராவது லத்தீன பாடகரைக் கூப்பிட்டு “கழா கழா கழா நீ தானே கோவேரி கழா” ன்னு பாடச்சொல்லலாம்.
அகராதி: கழா – கழுதை செல்ல பெயர்.

யாராவது கால்ஷீட் வாங்கிக்கொடுங்கப்பா!

மனிதர்களின் உண்மையான குணாதிசயங்களை சந்தர்ப்ப சூழ்நிலைகளில் தான் உணர்ந்து கொள்ள முடியும்

உண்மை. முற்றிலும் உண்மை. என்னுடைய physics வாத்தியார் சொல்லுவார் : ஒரு மாணவனின் உண்மையான குணங்களை அறிய வேண்டுமென்றால் அவனை அவனது நெருங்கிய தோழர் வட்டாரத்தில் விட்டுப்பார்க்கவேண்டும் என்பார். மிகவும் அமைதியான மாணவன் கூட சந்தர்ப்பம் கிடைக்கும் போது குணங்களை மாற்றிக்கொள்கிறான். liberalize ஆகிறான். liberation : break all rules.

நான் பெரும்பாலும் நெகடிவ் சமாச்சாரங்களை மனதிலே வைத்து, அந்த நெருப்புக்கு நெய் ஊற்றுபவன் அல்ல (போதும்டா உன் புகழபுராணம்!) ஆனால் இளாவின் இந்த கேள்வி எனது மனதின் ஆழத்தில் புதைந்திருந்த ஒரு சம்பவத்தை மேலெழுப்பி விட்டது. நண்பர்களின் உண்மை குணங்களை நான் அறிந்து கொண்டது அப்போதுதான். உமா மகேஸ்வரியின் யாரும் யாருடனும் இல்லை என்ற வரியை ஞாபகப்படுத்துவது. நாம் அனைவரும் தனித்தனியே தான். யாரும் யாரையும் சார்ந்தவர்கள் அல்ல. சந்தர்ப்பம் கிடைத்தால் உறவுகளை (நட்பையும்) முறித்துக்கொள்ள சிறிதும் சஞ்சலப்படாதவர்கள். எனினும் நான் அந்த சம்பவத்தை சொல்ல விரும்பவில்லை.

இன்னொரு சம்பவத்தை சொல்கிறேன். நான் கல்லூரி படிக்கும் போது எனக்கு ஒரு நண்பன் இருந்தான். சொல்லப்போனால் அவன் தான் கல்லூரியில் எனக்கு முதல் நண்பன். கல்லூரியை விட்டு வரும் வரையில் நாங்கள் மிக நெருங்கிய நண்பர்கள். முந்தாநாள் அவனது பிறந்த நாள். நான் வாழ்த்து கூட சொல்லவில்லை. அவன் எங்கிருக்கிறான் என்றும் தெரியவில்லை.

கல்லூரி காலங்களில் paper presentation என்றொரு நிகழ்வு பல வெளி கல்லூரிகளில் நடக்கும். அந்த விழாவிற்கு நாங்கள் apply பண்ணுவோம். எங்களிடம் virtual reality and education என்றொரு அருமையான article இருந்தது. எந்த கல்லூரி paper presentation க்கு அனுப்பினாலும் கண்டிப்பாக தேர்வாகிவிடும். அப்படியிருக்க, என்னுடைய நண்பன் (ராஜன்: பெயரை மாற்றியிருக்கிறேன்) திருச்சிக்கே அனுப்புமாறு சொல்லிக்கொண்டேயிருப்பான். இரு முறை நாங்கள் presentation க்கு திருச்சி சென்று வந்தோம். இதைப் பற்றி வேறு எண்ணங்கள் எனக்கு இருந்ததில்லை. நான் யோசிக்கவும் இல்லை.

அப்புறம் தான் தெரிந்தது அவனுக்கு திருச்சியில் ஒரு காதலி இருந்தாள். அவள் அவனுக்கு அத்தை பெண் தான். நம்மூரில் தான் யாருடனும் அனுசரித்துப் போவோம், இரத்த பந்தகள் சொந்தகளுடன் கண்டிப்பாக அனுசரித்துப் போக மாட்டோமே, வழக்கம் போல அவனுடைய வீட்டுக்கும் அவளுடைய வீட்டுக்கும் சண்டை. ஆனால் இவர்கள் இருவருக்குள்ளும் காதல் கடல் போல கொந்தளித்துக்கொண்டிருக்கிறது. நான் அவளுக்கு அண்ணனானேன்.

இருவரும் திருச்சியில் எல்லா இடமும் சுற்றியிருக்கிறார்கள். முக்கியமாக they loved each other and infact he knows about his mother. அவனுடைய அம்மா அவனது காதலுக்கு கண்டிப்பாக ஓகே சொல்ல போவதில்லை என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும்.

இவன் காலேஜ் முடித்தான். அவளும் காலேஜ் முடித்தாள். அவள் வீட்டில் மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார்கள். அவள் இவனை கல்யாணம் செய்து கொள்ள வற்புறுத்தினாள். இவன் அவளை பொறுத்திருக்குமாறு கூறினான். அவள் எவ்வளவு காலம் பொறுத்திருப்பாள்? நம் நாட்டில் பெண்ணிற்கு என்ன உரிமை -பல சமயங்களில் ஆணுக்கே இருப்பதில்லை என்பது வேறு விசயம்- இருக்கிறது? அவள் இவனை வற்புறுத்த வற்புறுத்த இவன் மறுக்க ஆரம்பித்தான். அவள் போன் கால்களை அட்டென்ட் செய்யாமல் அவளை மனதளவில் சாகடித்தான். அவள் என்னைத் தொடர்பு கொண்டாள். அண்ணா, அவனிடம் எடுத்துச் சொல்லுங்கள் என்றாள். நான் அவனிடம் கேட்டதற்கு அவன் சொன்ன பதில்: வீட்ல ஒத்துக்க மாட்டாங்கடா.

புல்ஷிட். வீட்ல ஒத்துக்காதது முன்னமே தெரியாதா? அவளோடு கை கோர்த்து நகர் வலம் வரும்போது இது தெரியாதா? காதலித்தாயா இல்லையா? காதலிக்கும் வரை காதலித்து விட்டு கடைசியில் நெருக்கடி வரும் போது, இனி வேறு வழியில்லை என்று வரும் போது, வீட்ல ஒத்துக்கமாட்டாங்கன்னு காரணம் சொல்வது எந்த விதத்தில் நியாயம்?

பெற்றோருக்காக தூக்கியெறியப்பட்ட காதல்கள் கணக்கிலடங்காமல் காற்றில் சுற்றித் திரிகின்றன. பெற்றோர் தூக்கியெறிந்த காதல்களும் அந்தரத்தில் மோட்சமற்று பிசாசாய் திரிகின்றன. பிள்ளைகளால் தூக்கியெறியப்பட்ட பெற்றோர்களின் மீதான காதல்களும் போவதற்கு வழி தெரியாமல் ஒரு செக்கு மாட்டைப் போல பிள்ளைகளையே சுற்றி சுற்றி வருகின்றன. ஏன் இத்தனை கஷ்டங்கள்? நமக்கு நாமே பூட்டிக்கொண்ட அர்த்தமற்ற தேவையில்லாத விலங்குகளை என்று அவிழ்த்தெரியப் போகிறோம்? எப்போது நமக்கு விடுதலை?

பெற்றோரின் மீது நாம் வைத்திருக்கும் பாசமும் மரியாதையையும் போன்று, நம்மிடம் பெற்றோருக்கு பாசமும் அன்பும் இருக்கிறதா இல்லையா? நாம் அவர்களின் உணர்வுகளை மதிக்கும் போது, அவர்கள் நமது உணர்வுகளை மதிக்கமாட்டார்களா என்ன? மதிக்கவில்லை என்றால் பிறகு அன்பென்ன பாசமென்ன? வரட்டு பிடிவாதம் தானே இருக்கிறது.

இதை தவறு என்றும் சரி என்றும் நான் சொல்லவில்லை. சொல்வதற்கு நான் யார்? ஆனால் மனிதன் ஒரு சூழ்நிலைக் கைதி என்பது மட்டும் உண்மை.

பேச்சுத்தமிழில் எழுதும் பதிவர்களைப் பற்றி:

பொறாமை. பேச்சுதமிழில் எழுதுவது என்பது மிகவும் கஷ்டம். அனால் successfull ஆக எழுதினால் எளிதாக ரீச் ஆகும். முக்கியமாக நகைச்சுவை உணர்வை அதிகரிக்கும். ஆனால் நான் அருமையான தமிழில் பதிவிடுகிறேன் என்பது, வேறொன்றுமில்லை, கண்டிப்பாக உள்குத்து தான். எனக்கு சில சமயங்களில் பேச்சுத்தமிழில் எழுதியதைப் படிப்பது எரிச்சலாக இருக்கும். குறிப்பாக ஜெயமோகனின் காடு நாவல் மற்றும் அவரது சில சிறுகதைகள். நெல்லை தமிழில் கேரள வாடை அடித்து மம்முட்டி படம் பார்த்த அனுபவமே மேலிடுகிறது.

ஜெகத் எழுதிய நடை பற்றிய பதிவு நான் சமீபத்தில் ரசித்துப் படித்தேன். நன்றாக சிரித்தேன். கோணங்கி பற்றிய இதே போன்றதொரு விமர்சனத்தை சாருநிவேதிதாவின் கோணல் பக்கங்களிலும் படிக்க நேர்ந்தது. மேலும் பயங்கர ஹிட் ஆன வீராசாமி பற்றிய விமர்சனமும் வயிறு வலிக்க வைத்தது.

இனி நிர்மலுக்கான கேள்விகள்:

1. நடிகர்கள் அரசியல் தலைவர்கள் ஆகலாமா? நாட்டை ஆட்சி செய்யலாமா? நன்மை தீமை?

2. புரியவே புரியாத கவிதைகளை கண்டிப்பாக எழுதித் தானாக வேண்டுமா? இப்பொழுது கதைகள் கூட புரியாத அளவுக்கு எழுதுகிறார்களே, இது தேவைதானா? மேலும் பெண்ணியம் என்ற பெயரிலும் எதார்த்தம் என்ற பெயரிலும் சொல்லவே நா கூசும் அளவுக்கான வார்த்தைகளை உபயோகித்து எழுதுவது அவசியம் தானா?

3. உண்மையைச் சொல்லுங்கள் திரிஷா அழகு தானே?

4. காவிரிப் பிரச்சனைக்கு என்னதான் வழி? நதிகளை நாட்டுடைமை ஆக்கலாமா?

5. உங்களை தமிழ்நாட்டின் முதலமைச்சராக்கினால் -of course you can act independently!- என்ன செய்வீர்கள்?

வாய்ப்பளித்த இளாவுக்கு நன்றிகள் பல!
Pass to நிர்மல்.

இளாவின் சுடர் :http://ilavanji.blogspot.com/2007/02/blog-post.html

11 thoughts on “சுடர் : தனித்தீவு

 1. முத்து: இளா வேற இளவஞ்சி வேற.தனியாகத் தீவு. ஐந்து பொருட்கள். அதுமட்டுந்தான் அவசரவசரமாகப் படித்தேன். காஸ்ட் எவே – சரி. Lost பார்த்திருக்கீங்களா? எங்கேயோ இருக்கும் ஒரு தீவு. (ஹவாய். முன்னாடி இருந்த இடமென்பதாலேயே ரொம்ப பாசத்தோடு பார்க்கிறேனாக்கும். 😉 ). அந்தத் தீவுக்கு கைல பெருசா ஒண்ணுமே இல்லாமத்தான் வந்தாங்கய்யா. காஸ்ட் எவே மாதிரி விமானத்திலருந்து சில பொருட்கள் கிடைச்சது. ஆனாப்பாருங்க தீவுக்குள்ளயே ஒரு புதையல் கிடைச்சது அவங்களுக்கு. Stack உள்ள இல்லாத பொருட்களே இல்லையாக்கும். என்ன, சீரான இடைவேளையில சில எண்களை ஓரிடத்தில் உட்செலுத்தவேண்டும். போதைப்பொருள்கூட ‘கடவுள் புண்ணியத்தில’ கிடைச்சுதுன்னாப் பாருங்களேன். அதனால, ஜாலியாப் போங்க… ;)-மதி

  Like

 2. முதல் கேள்விக்கு அலசல் நன்றாக வந்துள்ளது. இந்த தனியாய் ஒரு தீவில் அல்லது காட்டில் சிக்கிக் கொள்வதுப் போலஎனக்கும் தோன்றியிருக்கிறது. நானே போக வேண்டும் என்றால் என் பட்டியல்1- கண்ணாடி (இது முக்கியம், இல்லாட்டி எதிரில் வருவது சிங்கமா மனுஷனான்னு தெரியாதே)2- நல்ல குண்டு புத்தகம் (கொற்றவை மாதிரி, வேகமாய் முடியும் த்ரில்லர் எல்லாம் இல்லை)3- கேஸ் லைட்டர் (நெருப்பு பற்ற வைக்க,பாதுகாப்புக்கு)4- தலைகாணி (என்னோட பிரத்யோக தலாணி இல்லாட்டி தூக்கம் வராது)5- ஒரு போர்வை (குளிருக்கு)இது போதும். இலை, தழையை சாப்பிட்டுக் கொண்டு , சொர்க்கம்…..

  Like

 3. பல இடங்களில் படிப்பதை நிறுத்தி சிரிக்க வைத்த சுடர் இது!மிக அருமையாக எரிகிறது!முதல் கேள்விக்கான பதிலில் புத்தகங்கள் எடுத்துச் செல்வேன் என ஒருவருமே [நீங்கள் உட்பட] சொல்லாதது கொஞ்சம் வருத்தமாய் இருந்தது!வாழ்த்துகள்!

  Like

 4. முத்து,காட்டுப்ளான் ஒரு அருமையான அலசல்.நல்ல வேளை! தனியாளா போங்கன்னு சொன்னேன். அஞ்சுபேரா போங்கன்னு சொன்னா உங்க கும்பலு காட்டையே பிரிச்சு மேஞ்சிருப்பீங்க போல :)தலயோட ஃப்ளாஸ்பேக்ல ரொம்பத்தான் பாதிக்கப் பட்டிருக்கீங்க போல. ஆனா கதையப்படிச்சப்பறம் ஒரு சந்தேகம் வந்துருச்சு! நீங்க நெஜமாகவே தல ரசிகரா?! :))))SK, விடுங்க… காட்டுலயாவது இந்த ஆளு கொஞ்ச நாளைக்கு புத்தகம் படிக்காம இருக்கட்டும்! 🙂

  Like

 5. 2- நல்ல குண்டு புத்தகம் (கொற்றவை மாதிரி, வேகமாய் முடியும் த்ரில்லர் எல்லாம் இல்லை)//Sk, can you see my comment?Muthu, but i can read all comments.

  Like

 6. usha, are you talking about this page? if yes, am able to read all comments (including yours). But I told -javascript errors and not able to see my comment- about your blog. Am getting lots of javascript errors when the page loads!

  Like

 7. மதி: ம்ம்..lost பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பார்த்ததில்லை. போதைப் பொருள் கூடவா? ம்ம். இளவஞ்சியை சுருக்கி இளான்னு ஆக்கிக்கிட்டேன். இளான்னு இன்னொருத்தர் இருக்கிறார் என்பது மறந்துவிட்டது. :(உஷா: கண்ணாடி?! (நம்ப கேஸா?) கொற்றவை? தனிமையே பைத்தியம் புடிக்கவைக்கும், இதில் கொற்றவை புத்தகம் வேறா? நான் ஒரு புத்தகம் படிப்பதற்காக வாங்கி (அல்லது borrow பண்ணி) ஜஸ்ட் பத்து பக்கம் மட்டும் படித்து விட்டு திருப்பிக்கொடுத்த புத்தகம் இது மட்டும் தான். என்னுடைய strict advice: தயவு செய்து வேறு புத்தகங்கள் (அப்புசாமியும் குத்துவிளக்கும் போன்ற நகைச்சுவை புத்தகங்கள்) எடுத்துச் செல்லவும். மற்றபடி உங்களை தீவில் சந்திக்கிறேன். :)) வருகைக்கு நன்றி உஷா. உங்கள் ப்ளாகில் நிறைய java script errors வருது. வரிக்கு ஒன்று!

  Like

 8. பேச்சுநடையில வரலன்னு இந்த பதிவு முழுசாவே பேச்சு நடையில நல்லாதான எழுதியிருக்கிங்க. ;))

  Like

 9. //சரி. Lost பார்த்திருக்கீங்களா? எங்கேயோ இருக்கும் ஒரு தீவு. (ஹவாய். முன்னாடி இருந்த இடமென்பதாலேயே ரொம்ப பாசத்தோடு பார்க்கிறேனாக்கும். 😉 ). அந்தத் தீவுக்கு கைல பெருசா ஒண்ணுமே இல்லாமத்தான் வந்தாங்கய்யா. காஸ்ட் எவே மாதிரி விமானத்திலருந்து சில பொருட்கள் கிடைச்சது. ஆனாப்பாருங்க தீவுக்குள்ளயே ஒரு புதையல் கிடைச்சது அவங்களுக்கு. Stack உள்ள இல்லாத பொருட்களே இல்லையாக்கும். என்ன, சீரான இடைவேளையில சில எண்களை ஓரிடத்தில் உட்செலுத்தவேண்டும்.//நானும் கேள்விப்பட்டுருக்கேன் மதி அவர்களே!என்னோட நண்பர் ஒருத்தர் ரொம்ப வெறித்தனமா பாத்துட்டு இருக்காரு. மூணாவது சீசன் இன்னும் வரல அதுக்கோசரம் காத்திருக்கேன்னு சொல்லிட்டு முந்தின ரெண்டு சீசன் DVD என்கிட்ட கொடுத்துட்டாரு. பாக்கணும்.அதுக்குமுன்னாடி அந்த LOST பற்றி கதைச்சுருக்கும் மாதிரி ஒரு பதிவு போடுங்க என்னை மாதிரி ஆஙகிலம் அதிகம் தெரியாதவங்களுக்கு வசதியா இருக்கும்.(அதுல சப்டைட்டில் கூட இல்லிங்க :(( )

  Like

 10. தம்பி: வருகைக்கு நன்றி. நல்லாயிருந்துச்சா? *blush*தம்பி(2): நீங்களும் நம்ப கேஸ் தானா! (subtitle இல்லீன்னா படம் தெளிவா புரியரதில்லீங்!)

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s