பார்த்த ஞாபகம் இல்லையோ?
சிங்கப்பூர். ரா·பிள்ஸ் பிளேஸ். ·பிட்னஸ் பர்ஸ்ட்.
வாடா வாடா வாங்கிடா
வாய்ல பீடா போட்டுக்கடா
போடா போடா பொழச்சுப்போடா
புடவ வாங்கி கட்டிக்கோடா
என்று பாடிக்கொண்டே வியர்வை வழிய ட்ரெட்மில்லிலிருந்து இறங்கினேன். அவர் என்னைப் பார்ப்பதைப் போல உணர்ந்தேன். என்ன “அப்படி குர்ருன்னு பாக்குற” என்று வடிவேலு போல கேட்கவேண்டும் என்று நினைத்தேன். கேட்கவில்லை. அப்புறம் நாமாச்சு நம்ப ஐபாட் ஆச்சு நம்ப வொர்க் அவுட் ஆச்சுன்னு கொஞ்ச நேரம் இருந்துட்டு, சரி கிளம்பலாம்னு நினைக்கறப்போ, “ஹலோ” ன்னு ஒரு குரல். திரும்பிப்பாத்தா அதே நபர். நானும் ஹலோ என்று சொன்னேன். அவர் கொஞ்ச நேரம் தயங்கி பிறகு “நீங்க முத்து” தானே என்றார். ஆமா “நீங்க” என்றேன். “என்னைத்தெரியலையா. **** you man” என்று சொல்லி அப்போத்தான் டம்பிள்ஸ் அடிச்சிருந்த கையை மடக்கி ஒங்கி வயித்துல ஒரு குத்து விட்டார். ஹெஹே..நாங்களும் சிக்ஸ் பேக்ஸ் வர்றதுக்கு இப்பத்தான வொர்க் அவுட் முடிச்சோம்..அவர் விரல்கள் ஒன்னு ரெண்டு க்ராக் ஆயிருந்தாலும் ஆயிருக்கும்..சொல்லமுடியாது.”அடப்பாவி. இந்த குத்து குத்தறான். கெட்டவார்த்தையில வேறு திட்டறான். ரொம்ப தெரிஞ்சவனா இருப்பானோ” ன்னு நானும் என் மூளையில் கூகிள் செய்தும் அது MSN செர்ச் போல முற்றிலும் சம்பந்தமில்லாத ரிஸல்ட்களையே கொண்டுவந்து கொடுத்தது. ” இன்னும் தெரியலையா. ஐ வில் கில் யூ மேன்” என்று சொல்லி கழுத்தைப் பிடித்து “நான் தான் ப்ரகாஷ். மலேஷியா ப்ரகாஷ். ஏர் ஏசியா. கே எல் எக்ஸ்ப்ரஸ். சித்ரா” “ஓ எஸ். ஹவ் ஸ்டூப்பிட் ஆம் ஐ. நௌ ஐ ரிமெம்பர் யூ. ஓ மை ப்ரகாஷ். யூ லுக் சோ வெரி ****ing changed. யூ லுக் சோ டிபரென்ட்.” அப்புறம் கட்டிக்கொண்டோம்.
***
மலேஷியா. கோலாலம்பூர். கே.எல்.எக்ஸ்பிரஸ். டாசிக் செலாடான் ஸ்டேஷன்.
அன்று சனிக்கிழமை. த வெரி சேம் ஸ்டூபிட் சாட்டர்டே. நான் அந்த ஸ்டேஷனில் ட்ரெயினுக்காக காத்துக்கொண்டிருந்தேன். ஒரு தமிழ் குடும்பம் வந்தது. ஒரு தாத்தா (அல்லது தாத்தா போல தோற்றமளித்தவர்) ஒரு அம்மா அப்புறம் ஒரு பெண். நேச்சுரலி, நான் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். அங்கிருந்த ஒரு அலுவலர் அவர்களுக்கு புத்ரஜெயாவில் இறங்கி சைபர்ஜெயாவுக்கு செல்வது எப்படி என்று பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். அந்த தாத்தாவும் விடாமல் கேள்விகேட்டுக்கொண்டேயிருந்தார். நான் புத்ரஜெயாவில் தான் இறங்கவேண்டும். சைபர்ஜெயாவுக்கு செல்லும் பஸ்ஸ¤ம் அங்கு தான் வரும். எனவே நான் தாத்தாவிடம் சென்று நான் உங்களை சைபர்ஜெயாவுக்கு பஸ் ஏற்றி விடுகிறேன். எனக்கு தெரிந்த நண்பர்கள் சிலர் இருந்தால் உங்களை பத்திரமாக இறக்கிவிட சொல்கிறேன் கவலைப்படாதீர்கள் என்றேன்.
அவருக்கு புத்ரஜெயாவில் வேலை கிடைத்திருக்கிறது என்றும் திங்கட்கிழமை வேலையில் சேரவேண்டும் என்றும் அதற்காகத்தான் இன்று சும்மா இடத்தைப் பார்த்துவிட்டு வரலாம் என்று போகிறேன் என்றார். மேலும் ரயிலில் செல்லும் போது எக்கச்சக்கமாக கேள்விகள் (எனக்கு பதில் தெரியுதோ இல்லியோ) கேட்டுக்கொண்டே வந்தார் அந்த தாத்தா. அந்த அம்மாவும் பெண்ணும் அமைதியாக அமர்ந்திருந்தனர். எனக்கு எப்படா புத்ரஜெயா வரும் என்றாகிவிட்டது. பத்து நிமிஷம். எப்பவும் சைபர்ஜெயாவுக்கு செல்லும் பஸ்தான் ரெடியாக நிற்கும். எங்கள் ஆபிஸ¤க்கு செல்லும் பஸ் கொஞ்சம் லேட்டாத்தான் வரும். எனவே வேகமாக அவரைக் கழட்டிவிட்டுவிடலாம் என்று நினைத்துக்கொண்டேன்.
ஆனால் அன்று சைபர்ஜெயாவுக்கு போகும் பஸ் ரொம்ப நேரமாக வரவில்லை. டைம். ரொம்ப நேரம் கழித்து வந்த பஸ் ஒன்றில் அவர்களை ஏற்றிவிட்டு நான் என் ஆபிஸ¤க்கு சென்றேன்.
***
புதன்கிழமை. புத்ரஜெயா கே.எல்.எக்ஸ்பிரஸ் ஸ்டேஷன்.
நான் வழக்கம்போல ட்ரெயினுக்கு வெயிட்டிங். சைபர்ஜெயா மக்கள் வந்தார்கள். கூடவே அந்த பெண். எந்த பெண்? அந்த தாத்தா வந்தாரே, அவரோடு வந்ததே அந்த பெண். அந்த பெண் என்னைப் பார்த்ததும் என்னை அடையாளம் கண்டு கொண்டாள்.(ஷீ மஸ்ட் பி சோ கிளவர் டு ரிமெம்பர் சச் எ ஸ்டூபிட் ·பேஸ்) ஆனால் சிரிக்கவில்லை டப்பென்று முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டாள். நான் அவளிடம் சென்று ஹாய் என்றேன். அவளும் ஹாய் என்றாள். பிறகு “நீங்க இங்க எங்க” என்றேன். அவள் கொஞ்ச நேரம் தயங்கிவிட்டு பிறகு “சாரிப்பா. அன்னிக்கு வந்தது என்னோட அப்பாதான். அவர் சொன்னமாதிரி அவருக்கு வேலை கிடைக்கல்ல, எனக்கு தான் வேலை கிடச்சது. நான் தான் திங்கட்கிழமை ஜாயின் பண்ணனும். அதுக்குதான் அவர் என்னக்கூட்டிட்டு இடத்த பாக்க வந்தார். அவர் ஏன் பொய் சொன்னார்னு தெரியல ஆனா சாரி” என்றாள். அவர் பொண்ணுக்குத்தான் வேலை கிடச்சிருக்குன்னு சொன்னா நூல் விட்ருவோம்னு நினைச்சிட்டாரோ? இல்லாட்டினா நூல் விடமாட்டோமா என்ன? “உங்க பேர்” “சித்ரா” “வாவ். நைஸ் நேம்”
அன்று ஆரம்பித்து எங்கள் நட்பு கே.எல்.எக்ஸ்பிரஸின் வேகத்தைவிட இன்னும் அதிவேகமாக சென்றது.
***
கே.எல். எக்ஸ்பிரஸ்.
எக்ஸ்பிரஸ் அதிரடியாக சென்று கொண்டிருந்தது. ஐ லைக் திஸ் ட்ரெயின். ஒரு காரணம் இது நல்ல வேகம். இரண்டாவது இதன் அழகு. நல்ல spacious கூட. அன்று நான் கொஞ்சம் லேட்.
என்னருகில் வந்து அவர் உட்கார்ந்தார். ஹாய். ஹாய். ஐயாம் ப்ராகாஷ். ஓ. நைஸ் டு மீட் யூ. ஐயாம் முத்து. ஷேக் ஹேண்ட்ஸ். மௌனம். ஐயாம் வொர்க்கிங் அஸ் சம் டுபாகூர் மானேஜர் இன் ஏர் ஏசியா பசிபிக். ஓ தாட்ஸ் கிரேட். உங்களுக்கு சம்பளம் எப்படி பட்ஜெட் சம்பளமா இல்ல முழு சம்பளமா? அன்ட் பைதவே ஐயாம் வொர்க்கிங் அஸ் எ ஸ்டூபிட் புரோகிராமர் ·பார் ஹைடெக். ஐயாம் ·ப்ரம் கோயம்புத்தூர். ஐயாம் ·ப்ரம் மதுரை. ஓ மதுரையா நீங்க. பாத்தா அப்படித்தெரியல. (பின்ன எப்படித்தெரியுது பான் ஷாப்பில கல்லாக்கு பின்னாடி உக்காந்திருக்கிற ஷேட்டு மாதிரி தெரியுதா?)
நட்பு பற்றிக்கொண்டது. அவர் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறார். கே. எல் -லில் ஏர் ஏசியா பசிபிக்ல ஏதோ மானேஜரா வேலை பாத்துக்கொண்டிருந்தார். அங்கு ஒரு மலேஷிய தமிழ் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு, அங்கேயே செட்டிலாகி, ஒரு குழந்தையும் பெற்றுக்கொண்டார். அவருக்கு இருந்த ஓரிரு இந்திய தமிழ் நண்பர்களில் நானும் எனது நண்பர் சரவணனும் இருவர்.
ஒரு நாள் திடீரென்று அவரது மகனுக்கு பிறந்தநாள் அதனால் கண்டிப்பாக வரவேண்டும் என்றார். முதலில் பிகு பண்ணிவிட்டு பிறகு சரி என்று போவதற்கு ஒத்துக்கொண்டோம்.
***
கோலாலம்பூர். செராஸ். மாலை எட்டு மணி.
ப்ராகாஷ் மகனின் பிறந்தநாள் விழா. விழா என்று சொல்லமுடியாது ஜஸ்ட் எ கொண்டாட்டம். தெரிந்த நபர்கள் சிலர் மட்டுமே வந்திருந்தனர். நானும் சரவணனும் ஆஜர். கொண்டுபோயிருந்த கேக் மற்றும் கிப்ட்டைக் கொடுத்துவிட்டு உள்ளே நின்று கொண்டிருந்தோம். வந்திருந்த அனைவரும் மலேஷியாவில் குடியேறியிருந்த தமிழ் மக்கள். எங்களிடம் விடாமல் இந்தியாவைப்பற்றியும் தமிழகத்தைப் பற்றியும் நிறைய விசயங்கள் கேட்டுக்கொண்டேயிருந்தனர். அவர்களில் நிறைய பேர் இந்தியாவுக்கு சென்றதில்லை. ஆனால் தமிழகத்திற்கு ஒரு முறையாவது சென்றுவிடவேண்டும் என்கிற ஆர்வம் அவர்களிடம் நிறைய இருக்கிறது.
அதோ அங்கிருக்கும் கும்பலில் அந்த தாத்தாவும் இருக்கிறார். என்னை ஏமாற்றிய தாத்தா. அப்புறம் அந்த அம்மா. இவர்கள் இங்கே என்ன செய்கிறார்கள் என்று நினைக்கும் போதே “ஹாய் முத்து. வாட் எ சர்ப்ரைஸ். நீ என்ன இங்க” என்றொரு ஸ்வீட்டான குரல். சித்ரா. “சித்ரா நீ இங்க?” “இது என்னோட அக்கா வீடு. குழந்தை அக்காவோடது”
ப்ராகாஷ் வந்தார். சித்ராவையும் அவளுடைய பேமிலியையும் அறிமுகப்படுத்தி வைத்தார். தாத்தா ப்ராகாஷினின் மாமனார். தாத்தாவுக்கு என்னைப் பார்க்கவேமுடியவில்லை.
மறுமுறை இந்த வாழ்க்கையில் என்னை சந்திக்கவே போவதில்லை என்று நினைத்து அவர் அன்று அந்த பொய்யை சொல்லியிருக்கலாம். ஆனா உலகம் ரொம்ப -இப்ப ரொம்ம்ம்ம்ம்ம்ப- சின்னது.
***
நான் சிங்கப்பூர் வந்தது ப்ராகஷ¤க்கு தெரியாது. நான் புத்ரஜெயாவிலிருந்து ஐமோக்கா என்ற இங்கிலாந்து பேஸ்ட் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பொழுது அவரிடமும் அவர் குடும்பத்திடமும் தொடர்பு விட்டுப்போய்விட்டது. நடுவில் நான் சிம் கார்ட் தொலைத்து வேறு வாங்கினேன்.
நீண்ட நாட்கள் கழித்து அவரை இங்கு ஜிம்மில் சந்திப்பேன் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. திடீரென்று சந்தித்த பொழுது அவரை சட்டென நினைவுக்கு கொண்டுவரமுடியவில்லை. அவர் நிறைய மெலிந்திருந்தது காரணமாக இருக்கலாம். இல்லை எனது ஞாபக சக்தி மழுங்கிவிட்டது கூட காரணமாக இருக்கலாம்.
***
* பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
(மற்ற இன்சிடென்ட்ஸ் பகுதிகள் தொடர்கள் தலைப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளன.)
daily gym ku poveenggalo? -mm
LikeLike
இந்த சம்பவம் சுவாரசியம். பதிவின் முடிவு வந்தவுடன், முதல் 2 பத்தியை மறுபடியும் படித்தேன். மெல்ல கசியும் ஒரு சோகத்தை உணர முடிகிறது.
LikeLike
mm : mmலக்ஷ்மணன்: உண்மைதான். சோகம் தான். எப்படி இந்த மனிதரை மறந்தேன் என்பது தான் சோகம். அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. என்னாலும் தான். இப்பொழுதெல்லாம் ஞாபகமறதி அதிகமாகிக்கொண்டே போகிறது. 😦
LikeLike