எனக்கு சனிக்கிழமை ரொம்ப தலைவலி. வீடு வேற மாத்தறமா, நிறைய வேலை வேற. க்ளீனிங். பேக்கிங். புத்தகங்களப் பேக் பண்றதுக்கு தான் கொஞ்சம் நேரம் பிடிச்சது. நல்லா ரெண்டு அட்டைப்பெட்டி வாங்கி உள்ள அடச்சுட்டேன். மதியம் சாப்பிடப்போறதுக்கு சாயங்காலம் நாலு மணி ஆயிடுச்சு. போய் க்ராப் ஒரு புடி பிடிச்சேன். அதுவும் இனியவன் சூப்பரோ சூப்பர். அஞ்சப்பர் மாதிரி காஸ்ட்லி கிடையாது ஆனால் அஞ்சப்பரை விட நல்ல டேஸ்ட் இருக்கு. (அஞ்சப்பர் மற்றும் இனியவன், இவங்க ரெண்டு பேரும் யாருப்பான்னு அப்பாவியா கேக்குற அம்மாஞ்சிகளுக்கு. இவை ரெண்டும் லிட்டில் இந்தியாவிலிருக்கும் உணவகங்கள்) சாப்பிட்டுட்டு நாலு டீவிடி வாங்கினேன். இதே வேலையாப்போச்சு. ஒன்னு புத்தகம் இல்லீன்னா டீவிடி. ஆனாஎன்னக்கேட்டா புத்தகத்த விட டிவிடி பெட்டர். டிவிடிய கண்டிப்பா பாத்திருவோம். புத்தகம்? என்கிட்ட எத்தன புத்தகம் இருக்கு தெரியுமா இன்னும் டச் கூட பண்ணாம? (வாங்கினப்ப டச் பண்ணியிருப்பல்ல? ஏன் இப்படி பீலா விடறன்னு கேக்குற அதிமேதாவிகளுக்கு: இன்னும் தாங்க்ஸ் பேஜ் கூட படிக்காம அப்படியே வைத்திருக்கிற புத்தகங்கள்)இந்த தடவ பேக் பண்றப்போதாதான் இன்னும் எத்தனி புத்தகம் படிக்கனும்டா நீன்னு கேட்டுக்கிட்டேன். (இப்போ விஜய் டீவியில யார் மனசுல யாரு ஓடிட்டிருக்கு. அதில கலந்துக்க வந்த ஒருத்தர்ட்ட நம்ப க்ராண்ட் மாஸ்டர் உங்களுக்கு பாடத்தெரியுமான்னு கேட்டுத்தொலச்சுட்டார். கலந்துக்க வந்தவர் இது தான்டா சான்ஸ்ன்னு ஆமா ஆமான்னு பாட (சாரி. பேச) ஆரம்பிச்சார். கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா பாடல். கண்றாவி. இவென் கவலையே படறதில்ல. நாலு பேரு சாவறாங்கன்னு கவலையே படறதில்லன்னு பொலம்பினான். எதுனாச்சும் தெரியுமான்னு புரோகிராம் நடத்துறவர் கேட்டா, இல்லீங்ணா ஒன்னும் தெரியாதுங்ணான்னு சொல்லி தப்பிக்கலாம்ல. எங்கள ஏன் படுத்தறீங்க?)
நான் சொல்ல வந்ததே வேற. அன்னக்கி சனிக்கிழமை சாயங்காலம் க்ராப் கிராப் எல்லாம் சாப்ட்டு முடிச்சிட்டு வீட்டுக்கு வந்தா செம தலைவலி. பேசாம தூங்கிடலாமன்னு யோசிச்சேன். ஆனா சும்மாவே நமக்கு ராத்திரி தூக்கம்வரமாட்டேங்குது. (இத நான் சொல்லனும்ங்கற அவசியம் கிடையாது. ஏன்னா இது எல்லா ப்ளாக்கர்ஸ்க்கும் இருக்கற ஒரு காமன் charaச்ter. தூக்கம் வருதுன்னா நாங்க ஏன்யா post போடப்போறோம்?) இதுல சாயங்கலம் தூங்கினா கண்டிப்பா சிவராத்திரி தான். அதுவும் இந்த வீட்ல தனியா முழிச்சிருக்கறது கஷ்டம். அதுவும் நாளைக்கு காலி பண்றோம். கடைசி நாள் இன்னிக்காவது முத்துகிட்ட பேசுவோம்ன்னு பண்ணென்டு மணிக்கு நடமாடறவைங்க அப்ரோச் பண்ணாய்ங்கன்னு வெச்சுக்கோங்க என்ன பன்றது. இதுல The Exorcism Of Emily Rose படத்துல பண்ணென்டு மணிக்கு கெடியாதுமே, மூனு மணிக்கு தாமே அவிங்கல்லாம் கெளம்புவாய்ங்கன்னு சொன்னாய்ங்க. அன்னிக்கிருந்து காலையில பிஸ் அடிக்க கூட எழுந்திருக்கறதில்ல. சைனீஸ் பேய்க எல்லாம் எத்தன மணிக்கு கெளம்புதுகளோ யாருகண்டா? இந்த The Exorcism Of Emily Rose, சும்மா சொல்லக்கூடாது ரெண்டு மூனு இடத்துல ரொம்ப பயமாப் போச்சு. Emily Rose தங்கை நடு ராத்திரி அக்காவோட ரூம்ல ஏதோ சத்தம் கேக்குத்துன்னு மெதுவா மெதுவா வந்து Emily Emilyன்னு ஸ்வீட்டான வாய்ஸ்ல கூப்பிடறப்போ அது சுவரு பூராம் நகத்தால கீறி ஒரு சவுண்டு கொடுக்கும் பாருங்க அடேயப்பா. அதுக்கப்புறம் exorcism பண்றப்போ. அதுக்கப்புறம் Emilyயோட பாய் ப்ரண்ட் அவளோட ரும்ல இருந்துட்டு டுபாக்கூர் நல்லா தூங்கிடுவான். அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு எங்கடா emilyய காணோம்னு மெதுவா திரும்பி பாப்பான் பாருங்க: emily Z மாதிரி வளஞ்சு வளஞ்சு படுத்து முகத்த மட்டும் அவன நோக்கி திருப்பி கண்ண தொறந்தமாதிரி இருப்பாபாருங்க, ஒரு நிமிஷம் நடுங்கிடுச்சு.
என்ன சொல்லவந்தேன்? ம்ம்ம்..அன்னக்கி சனிக்கிழமை சாயங்காலம் செம தலவலி, தூங்கிடலாம்னு நெனச்சு பின்ன வேணாம்னு முடிவு செஞ்சேன். வாங்கிட்டு வந்திருக்கற படங்கள்ள ஏதாவது ஒன்ன கொஞ்ச நேரம் பாத்துட்டு அப்புறம் தூங்கிடலாம்னு நெனச்சேன். வாங்கின படங்கள் : மொழி, அழகிய தீயே, கண்ட நாள் முதல் அப்புறம் பச்சைக்கிளி முத்துச்சரம். இதுல நாலையுமே நான் பாத்திட்டேன். ஆனா நாலு படங்களும் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும். எத்தன தடவ வேணும்னாலும் பாக்கலாம். இந்த நாலில் எனக்கு பிடிச்சது மொதல்ல, கண்ட நாள் முதல். பிரசண்ணா எனக்கு பிடிக்கும். ஆனா இந்த படத்தில் ஸ்பெஷல் லைலா தான். பிரசன்ன கூட(just friends) பைக்ல போகும் போது, அவளோட மானேஜர் அந்த வழியா கார்ல வருவார். லைலா பிரசன்னாகிட்ட அந்த மானேஜர் தொல்ல தாங்கமுடியல ஓவர் ஜொல்லுன்னு போட்டுக்கொடுத்திடுவா. பிரசண்ணா உடனே பைக்க விட்டு இறங்கி மானேஜர்கூட கார்ல ஏறிட்டு வழியெல்லாம் அவர அடிச்சு தொவச்சு கிளம்புன இடத்துக்கே கொண்டுவருவார். வந்தஉடனே அந்த மானேஜர் லைலாகிட்ட மன்னிப்பு கேப்பார். அவர் போனப்பிறகு லைலா பிரசன்னாவ கட்டிக்குவா. இனிமே நான் வேலைக்குப்போகலன்னு க்யூட்டா முகத்தவெச்சுகிட்டு சொல்லுவா பாருங்க.ஹ¤ம்ம்ம். அப்புறம் ஒரு நாள் லைலா வீட்ல கோபமா ரூம்ல கதவசாத்திக்கிட்டு வெளிலவராம இருப்பா, யார் யாரோ வந்து கதவதட்டுவாங்க திறக்கமாட்டா, அப்பத்தான் நம்ப ஹீரோ ப்ரசண்ணா வருவார். வந்து ஹலோ லைலா நான் ப்ரசண்ணா வந்திருக்கேன் கதவதிற என்பார். உடனே கதவு திறக்கப்படும். லைலா வெளில வந்து : ப்ரசன்னா என்ன பெரிய இவனா? அவன் தட்டுனா திறக்கனுமா? முடியாது போடா என்பார். செம க்யூட். இது மாதிரி அந்த படம் முழுக்க கடைசியில லைலா பிரசன்னாவுக்கு ஒரு slap கொடுக்கறவரைக்கு க்யூட் தான். ஐ லவ் திஸ் மூவி.
பச்சைக்கிளி முத்துச்சரம் ஒரு தைரியமான அப்ரோச். ஆனா நிறைய ஆங்கில படங்கள் இதே போல இருக்கு. லைக் derailed அப்புறம் out of time. ஆனா தமிழ்ல இது கொஞ்சம் புதுசு. ஹீரோ திரைக்கு பின்னால என்ன கூத்தடிச்சாலும் திரையில் நல்லவராகத்தான் வருவார். அதுவும் நம்ப சரத்குமார் மாதிரி சுப்ரீம் ஹீரோஸ் கேக்கவே வேணாம். ரொம்ப ரொம்ப நல்ல ரொல்ல தான் நடிப்பாரு. ஆனா இந்த படத்துல வர்றது போல சம்பவங்கள் நடக்காமலா இருக்கு. ரொம்ப நாளைக்கு முன்ன ஜீவில படிச்ச ஒரு நியூஸ். ஈஸ்ட் கோஸ்ட் ரோட்ல ஒரு தடவ ஒரு ஜோடி நைட் ரொம்ப லேட்டா பைக்ல ஊருக்கு திரும்பி வந்திட்டு இருந்திருக்காங்க. போலீஸ் போஸ்ட் அவங்கள் நிறுத்தியிருக்காங்க. பாத்தா அந்த பொண்ணு முகம் முழுதும் காயம். அப்புறம் கையெல்லாம் கூட. சுடி கிழிஞ்சிருக்கு. போலீஸ் என்ன நடந்துச்சுன்னு எத்தனதடவ கேட்டும் பதில் சொல்ல மாட்டேன்டுருச்சுக. அப்புறம் போலீசு நீங்க இப்படி மவுனமா இருந்தா நாங்க எப்படித்தான் அவிங்கள புடிக்கறதுன்னு வருத்தப்பட்டு கேட்டபிறகு தான் அவிங்க சொன்னாய்கலாம்: இவன் என்னோட மனைவி இல்ல. என்னோட கலீக். வெளில தெரிஞ்சா இவளோட வீட்டுக்காரனும் என்னோட வீட்டுக்காரம்மாவும் எங்கள டைவர்ஸ் பண்ணிடுவாங்க. so, உலகத்தில எல்லாமே நடக்குது இல்லீங்கல. ஆனா அத தைரியமா கதையா சொல்றப்போதான் அந்த சம்பவங்கள் எல்லார் கண்லயும் படுது. எல்லாரும் உஷார் ஆவறதுக்கு ஒரு சந்தர்ப்பம். அதுவும் பெரிய ஹீரோ ஹீரோயின் நடிக்கறப்போ ஒரு effect இருக்கு இல்லியா? கடைசி பைட் தேவையில்லதான். ( விஜய் டீவியில காத்து கருப்பு ஓடிட்டு இருக்கு. ஒரு சில சமயங்களில் தனியா உக்காந்து பாத்தம்னா இது கூட கொஞ்சம் பயமாத்தான் இருக்கு!)
என் ப்ரண்ட் ஒருத்தன் (கோனபாட்டில் கோவிந்தன்) மொழி படத்த எப்படியாச்சும் பாத்துப்புடனும்னு ரெண்டு தடவ யூசூன் வரைக்கும் போனான். ஒரு தடவ 300 பாத்திட்டு வந்தான். இன்னொரு தடவ வேற ஏதோ படத்த பாத்திட்டு வந்தான். ரெண்டு தடவையும் நான் எஸ்கேப். என்னோட சாபம் தான் அவனுக்கு டிக்கெட் கிடைக்கலன்னு சொல்லிட்டிருந்தான். முஸ்தபால மொழி சிடிய பாத்தானா விடுவானா? வாங்கிட்டான். அன்னைக்கே பாத்துட்டோம். வேற வேலை? ஆனா நல்ல படம் தான். சில டுபாக்கூர் படங்களுக்கு மூனு மணிநேரம் செலவழிக்கறதுக்கு இது எவ்வளவோ பெட்டர். ரொம்ப நல்ல படம்ங்க. ஆனா எனக்கு ப்ருத்திவிராஜை பிடிக்காது. கனா கண்டேன்ல அவர எனக்கு பிடிச்சிருந்தது. ஆனா பாரிஜாதம்ல அவ்வளவா பிடிக்கல. (உனக்கு பிடிச்சா என்ன பிடிக்காட்டி என்ன மேட்டருக்கு வா!) ப்ரகாஷ்ராஜ் வரவர பின்னி எடுக்கறார். அந்த காக்ரோச்ச எங்க அட்மிட் பண்ணியிருக்கீங்கன்னு கேக்கறப்போ குபீர் சிரிப்பு. ஜோதிகா தான் ஹீரோ. ஹீரோ ஹீரோ ஹீராதி ஹீரோ. ஜோதிகா உங்க யார் கிட்டயும் இல்லாத மொழி ஒன்னு என்கிட்ட இருக்கு அது மௌனம்னு சொல்றப்போவும், பிருத்திவ், ஜோதிகாவுக்கு இசையை உணர கற்றுத்தரும் போதும் க்ளைமாக்ஸிலும் அட்டகாசம். க்ளைமாக்ஸில் ஜோதிகா ரோஸ் நிறப்புடவையில் அட்டகாசமாக இருந்தார். சூர்யா ஒழிக.
என்னப்பா சொல்ல வந்தேன்? ம்ம்ம்..அன்னக்கி சனிக்கிழமை சாயங்காலம் என் ப்ரண்ட் மட்டும் வற்புறுத்தலைன்னா அந்த படத்த மிஸ் பண்ணியிருப்பேன். அது சென்னை 600028. ஏற்கனவே அந்த க்ரூப் தயாரித்த உன்னைச் சரணடைந்தேன் பாத்திருக்கறேன். அடிதடி படங்கள் அதிகம் வந்த அந்த காலகட்டத்தில் அந்த படம் ஒரு வித்தியாசமான முயற்சிதான். ஆனா ஓவர் நாடகத்தனன். இங்கிலீஷ்ல இந்த படம் வந்தா Gayன்னு சொல்லிருவாய்ங்க. ஆனா சென்னை 600028 சூப்பரோ சூப்பர். ரொம்ப நாளைக்கு அப்புறம் full படமும் காமெடி. லைக் உள்ளத்தை அள்ளித்தா. ஆனா இந்த காமெடி நேச்சுரல். நாம டெய்லி வாழ்க்கையில் பாக்கறதுதான் ஆனா பெர்பெக்ட்.
க்ளைமாக்ஸ் கூடங்க. பைனல்ல போராடி கப் ஜெயிப்பாய்ங்கன்னு நினச்சா, அத கூட காமெடி பண்ணிட்டாய்ங்க. இளவரசு நானும் ஆடறேன் ஆடறேன்னு சொல்லிட்டேயிருப்பார். கடைசில யாரோ வரலைன்னு, இளவரச ஆடக்கூப்பிடுவார் நம்பாளு (அவர் பேரெல்லாம் மறந்துபோச்சு! ஆனா மொத்தத்தில அவரத்தான் எனக்கு பிடிச்சது). இளவரசு ரொம்ப பீளிங்கா ஏண்டா ஜெயிக்க வேண்டிய மேச்ச என்ன ஆடச்சொல்றீங்க, அர்ணால்டு இருப்பான் அவன ஆடச்சொல்லுங்கன்னு சொல்லுவார். நம்பாளு கொஞ்சநேரம் பாத்துட்டு, சும்மா கேட்டா இவர் ஏன் இப்படி ப்ளீங்கா பேசறார்ன்னு சொல்லுவாரே பாக்கலாம். சீரியஸ கூட காமெடி ஆக்கிட்டாங்க. சின்ன பசங்ககூட பெட்டிங் மேட்ச் போட்டு முப்பத்தி சொச்சம் ரன் அடிச்சுட்டு, பவுலர் கிட்ட டேய் லெக்லையே போடுறா, முப்பது ரன் தான்டா அடிச்சிருக்கோம்னு ரொம்ப பீளிங்கா சொல்றது. (எங்களுக்கு இதே மாதிரி ஒரு அனுபவம் இருக்கு. சென்னையில NGO காலனி க்ரவுண்ட்ல, சின்ன பசங்ககூட ஆடி மொத்தத்துக்கு 12 ரன் தான் அடிச்சோம். அப்புறம் மொதோ ஓவர் நான் தான் போட்டேன். மூனு பால் மூனு ·போர். நாலாவது பாலும் ஒரு ·போர் அடிச்சு ஜெயிச்சாய்ங்க. நல்லவேலையா நாங்க பெட்டிங் எல்லாம் கட்டல.) அப்புறம் க்ரவுண்ட விட்டு ஒருத்தன் வெளில அடிச்சுடுவான். (நம்ப எல்லோரும் rules வெச்சிருப்போம்ல. வெளில அடிச்சா அவுட்டான்னு. அதே மாதிரிதான்). இன்னொருத்தன் பால் எடுக்க சுவரேரி குதிச்சு வெளில ரோட்டுக்கு போகனும். சுவர் வரைக்கும் வேகமாக ஓடி, சுவர் ஏறுவதற்கு முன்னாடி, திரும்பி அடிச்சவன போடா பொறம்போக்குன்னு திட்டிட்டு போவான் பாருங்க. exactly நம்ப பண்ணதுமாதிரிதான். “ஓ ஓ என்னன்னமோ பண்ணுது பண்ணுது” வாய்ஸ் ரொம்ப seducing. அந்த பாட்டுக்கு ஆடுற அம்மணி first introduceஆகும் போதே தெரிஞ்சிடுச்சு அந்த பாட்டு இந்த அம்மணிக்குத்தான்னு. எல்லா பாடலுமே நல்லாயிருக்கு. எனக்கு பிடிச்சது எஸ்.பி.பி “பாடிய யாரோ யாருக்குள் இங்கு யாரோதான்”.
விஜய் டீவில ஜில்லுன்னு ஒரு ஜோடி (அனிதா ஜோடி! அழகிய அசுரா அழகிய அசுரா பாடியவர்) ஓடிட்டிருக்கு. அந்த தம்பதியினரில் மனைவி கணவரைப் காமிச்சு, மமதிகிட்ட, எந்த functionக்கு போனாலும் இவர் லேட்தான்னு சொல்லுவார். அதற்கு மமதி அவர்களைப் பார்த்து, “ஏன் எல்லா functionக்கும் லேட்டாப்போறீங்க, நீங்க ரெண்டு பேரும் dress எங்க பண்ணுவீங்க ஒரே ரூமிலா?” ன்னு கேக்கறார். மமதி நீங்க ஓபராவி·ப்ரே இல்லீங்கோ. அவங்க மமதியின் இடக்கை கண்டுகொள்ளவில்லை. கண்டுகொண்டாலும் பதில்சொல்ல விரும்பவில்லை.
சென்னை – 6000028, நீங்கள் சொன்னது போல பார்க்கிறவர்களை எல்லாம் கல கலவென சில்லரை கொட்ட வைக்கிறது. Hilarious humour! சிவாஜிக்கு சில நாட்கள் முன் ரீலீஸ் செய்தது, அசத்தலான துணிச்சல். வெற்றியை தொடும் உழைப்பு தான்.தலவலி போயிருச்சிங்களா?
LikeLike
லக்ஷ்மணன்: ம்ம். படம் ரொம்பவே நல்லாயிருந்தது. நல்ல காமெடி. அதுவும் சென்னைப் பசங்க நல்லா என்ஜாய் பண்ணி பாக்கலாம். படம் பாத்தவுடனே தலைவலி பறந்து போயிருச்சு சார். அதுவும் இந்த படம் இன்னொரு ஷ்பெஷல். என்னோட ரெண்டு engineering classmates-அ மீட் பண்ணினேன். Pleasant surprise.
LikeLike