PlayList : Muthu’s Most Wanted

சென்னை 600028-ல உன் பார்வை மேலே பட்டால் நான் தூசியாகின்றேன் பாட்டு கேட்டிங்களா? விஜய் யேசுதாஸ் பாடியது. இப்போ அது தான் என்னோட ·பேவரிட் சாங். அப்புறம் உன்னாலே உன்னாலே , ஜூன் போனா ஜூலை from உன்னாலே உன்னாலே. எஸ்பிபி, சித்ரா பாடிய யாரோ யாருக்குள் இங்கு யாரோ யுவனின் வாய்ஸ் எனக்கு எப்பவுமே பிடிக்கும். so, அவரது வாய்ஸ்க்காக வேர்ல்ட் கப்ப ஜெயிக்கப்போறோம்

அப்புறம் that seducing voice ஒ ஓ என்னன்னமோ பண்ணுது பண்ணுது யார் பாடியது என்று பார்த்தேன். அனுஷ்கா. இந்தக்காவா? ஆனா உடம்பை ஏன் “உடும்பு” என்று சொல்கிறார்? உடும்பு செய்யுது இம்சைன்னு சொல்றார். அதுவும் கூட நல்லாத்தான் இருக்கு. (ஓவர் ஜொள்ளுடா!).

உன் சிரிப்பினில் உனக்குள் நான் from பச்சைக்கிளி முத்துச்சரம்.

அப்புறம் என்ன பாட்டு? ம்ம்.. அறியாத வயசு from பருத்திவீரன். ராஜா ராஜா தான். சிலருக்கு அவர் வாய்ஸ் பிடிக்காது. ஆனால் சில girls seductive என்று சொல்லக்கேள்விப்பட்டிருக்கிறேன். அதுவும் இந்தப்பாட்ல first stanza முடிஞ்சப்புறம் மறுபடியும் “அறியாத வயசு” ன்னு அடித்தொண்டையில பாடுவாரு பாருங்க. சூப்பர்.

அப்புறம் ஸ்ரீநிவாஸ் பாடிய மௌனமே உன்னிடம் அந்த மௌனம் தானே அழகு பாடல் from மொழி. வித்யாசாகர் எப்படினாலும் வருஷத்துக்கு பத்து சூப்பர் மெலடி கொடுத்தரார். அதே படத்தில் சுஜாதா பாடிய காற்றின் மொழியே பாடல். அப்புறம் நெஞ்சிருக்கும் வரையிலிருந்து பாம்பே ஜெயஸ்ரீயும், விஜய்யேசுதாசும் பாடிய பிடிச்சிருக்கு பிடிச்சுருக்கு

போக்கிரியிலிருந்து சுசித்ரா பாடிய டோலு டோலு தான் . நீ முத்தமொன்று கொடுத்தால்

அடுத்த பாட்டு கொஞ்சம் பழசு தான் ஆனாலும் என் லிஸ்ட்ல எப்படியோ இன்னும் இருக்கு. யுவன் பாடிய ஏதேதோ எண்ணங்கள் வந்து கண்ணை விட்டு கண் இமைகள் from பட்டியல். ஐ லைக் யுவன்ஸ் வாய்ஸ். இப்போ girls voice-ல எனக்கு பிடிச்சது. ஷ்ரேயா கோஷல். அடேங்கப்பா. கொஞ்சல்ஸ் வாய்ஸ். ஒரு முறை எனக்கு பிடித்தபாடல் கேட்டுப்பாருங்கள்.

அப்புறம் வந்துட்டாருய்யா நம்ப தலை. சூரியனோ சந்திரனோ from சிவாஜி. எஸ்பிபி still rocks.

உன் பார்வையில் பைத்தியமானேன் from சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்.

தாமிரபரணியில் கருப்பான கையால முதல்ல கேக்கும்போது பிடிக்கல. ஆனா வீடியோவில பாக்கும் போது பானுவோட dance steps பிடிச்சிருந்தது. அதுவும் முதல் step. பானுவோட ஸ்டெப்ஸ் பாத்ததுக்கு அப்புறமும் பாட்டு பிடிக்காம போயிருமா என்ன? விஷாலும் நல்லாவே ஆடியிருந்தார். ஒரு சிரிப்பு சிரிப்பாரே, நல்லாயிருந்துச்சு.

இந்தப்பாட்டு கேட்டிருக்கீங்களான்னு தெரியல. வாத்தியார்ன்னு ஒரு படம் வந்துச்சு தெரியுமா? நம்ப ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிச்சது. அதுல ஒரு நல்ல பாட்டு இருக்கு.
எங்கோ பாத்திருக்கிறேன் இமான் பாடியிருக்கிறார்.

கடைசியா: அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சான் டேய் from சிவாஜி. ரஹ்மானே பாடியிருக்கார். பில்லா ரங்கா பாஷா தான். ரஹ்மான் பாடிய பாட்டு சூப்பர்தான். 🙂

எப்போ என்ன பாட்டு கேட்டாலும், தூங்கறப்போ இளையராஜா இல்லீனா சீர்காழி தான். சில சமயம் ரொம்ப பயமா இருந்துச்சுன்னா, லைக் அன்னைக்கு exorcism of emily rose பாத்ததுக்கு அப்புறம் நைட் ரொம்ப பயமாபோயிருச்சு, “மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்” தான். 🙂

4 thoughts on “PlayList : Muthu’s Most Wanted

  1. வணக்கம் முத்து… !உங்களின் அத்தனைப் பாடல் தேர்வுகளும் நன்றாக இருந்தது (அவரவர்க்கான விருப்பம்)எல்லாவற்றையும்விட நான் ரசித்தது அந்தக் கடைசி வரிகள்தான்…// லைக் அன்னைக்கு exorcism of emily rose பாத்ததுக்கு அப்புறம் நைட் ரொம்ப பயமாபோயிருச்சு, “மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்” தான். 🙂 //ரொம்ப நேரம் ரசித்துச் சிரித்தேன்… !வாழ்த்துக்கள்… !

    Like

  2. எனக்கும் சிவாஜி தாங்க most wanted. இது தல மே (May). பல்லேலக்காவும், சடுகுடுவும் விடாமல் துரத்தி கொண்டிருக்கிறது. சம்திங் சம்திங்’கும் கலக்கல். நல்ல செலெக்ஷன் உங்களோடது.

    Like

Leave a comment