நீயும். உன் மீன்களும்.

நீ இல்லாத
இந்த நாட்களில்
மீன்கள் என்னை
வந்தடைந்தன.

மீன்கள் இல்லாத
உன்னுள்
என் செதில்கள் மட்டும்
நீந்துகின்றனவாம்.

***

மீன்கள் என்னை
வந்தடைந்த அன்று
இலைகளற்ற
இந்த மரத்தினடியில்
செதில்கள் இல்லாத நானும்
உன் வெற்றிடமும்
மௌனமாக
அமர்ந்திருந்தோம்.

பேச்சுத்துணை கிடைக்காத
மீன்கள்
இலையில்லாத கிளைகளில்
சென்று ஒட்டிக்கொண்டன.

நீ இல்லாத
உன் வெற்றிடத்தை
உதிர்ந்த இலைகள்
கூட
நிரப்ப மறுக்கின்றன.

***

திடுக்கிட்டு
விழிக்கும் நான்
முன்நகராத
பின்னிரவில்
என்னை உற்றுநோக்கும்
உன்
மீன்களுடன்
பேசத்துவங்குகிறேன்.

ஏனோ,
என் வார்த்தைகள்
கிளைகளை
சென்றடைவதேயில்லை.

***

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s