கிரீடம்

வரிசையாக சில ப்ளாப்புக்கு அப்புறம் அஜித்துக்கு கை கொடுக்க வந்திருக்கும் sweet hit இந்தப் படம். புது இயக்குனர்கள் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகவில்லை. Thats why he is known as the man of confidence. டைரக்டர் விஜய் தன் பணியை கரெக்டாக செய்திருக்கிறார். (அஜீத்தை டைரக்ட் செய்யும் விஜய்?!)

(மலையாள எழுத்தாளர் மற்றும் பிரபல இயக்குனரான லோகிததாஸ் தன் கிராமத்தில் நடந்த ஒரு உண்மைச்சம்பவத்தை வைத்து பிண்ணிய கதையை சிபி மலையாளி 1989இல் கிரிடம் என்ற படமாக டைரக்ட் செய்தார். இதில் மோகன்லாலும் திலகனும் நடித்திருந்தனர். 1990இல் இந்திய அரசின் விருதை பெற்றது இந்தப்படம். 1993இல் இதனுடைய அடுத்த பார்ட்டாக செங்கோல் வெளிவந்தது. மேலும் இதே கிரீடத்தை ஹிந்தியில் ப்ரியதர்சன் ஜாக்கிஷராப்பை வைத்து கர்தீஷ் என்ற பெயரில் ரீமேக் செய்தார்.என் மலையாள நண்பர் ஒருவர் கொடுத்த தகவல் : இது தான் மலையாளத்தில் தொடர்ந்து ஒரு வருடம் ஓடிய திரைப்படமாம்!)
Thanks :துளசி கோபால்

“யாரிடமும் குற்றமில்லை காலம் செய்த குற்றமிதுதான்” படத்தின் முடிவில் வரும் இந்த வரிகள் தான் படத்தின் கரு. ஏற்கனவே நிறையமுறை பார்த்த கதைதான். ஆனால் புதிதாக சொல்லியிருக்கிறார்கள். எங்கேயும் யாருக்காகவும் இயக்குனர் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளவில்லை. முதல் பாதி திரைப்படம் அசத்தல். காமெடி கதம்பம். விவேக், சந்தானம், சத்யன் என்று காமெடிக்கு நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் யாரையும் இயக்குனர் டாமினேட் செய்யவிடவில்லை. எந்த காமெடியும் தனி ட்ராக்காக இல்லை. கதையினோடே வருகிறது. விவேக் வழக்கம்போல ஆங்காங்கே நடப்பு செய்திகளை தூவி சிரிக்கவைக்கிறார். “இது ஏட்டையா வீடா?” என்று கேட்டுவரும் போன் காலுக்கு, “இல்ல வேட்டையாடு விளையாடு ராகவன் வீடு” என்று கண்களை விரல்களை வைத்து விழித்து -கமலஹாசன் மாதிரி – செய்து காட்டுவது அமர்க்களம்.

அஜித் அழகாக இருக்கிறார். அமைதியாக இருக்கிறார். க்ளைமேக்ஸில் அழகாக நடித்திருக்கிறார். கண்டிப்பாக க்ளைமேக்ஸ் பெரிதாக பேசப்படும். (ஒரு நல்ல நடிகரை இன்னும் சரியாக யாரும் use பண்ணவில்ல என்று தோன்றுகிறது) பாந்தமாக வசனம் பேசுகிறார். No punch dialogues. பாத்தீங்களா, பஞ்ச டயலாக்ஸ் இல்லீன்னாலே நல்ல படமோன்னு நினைக்கவேண்டியிருக்கு! முதல் பாதியில் அஜீத்துக்கு நிறைய வேலை இல்லை. அஜீத் த்ரிஷா காதல் அழகாக மலர்கிறது. (ஆனால் அவ்ளோ ஈசியா? யாரவது லவ் பண்ணவங்க சொல்லுங்கப்பா! என்னோட மரமண்டைக்கு ஏறவேமாட்டேங்குது!) த்ரிஷா செம அழகு. உதட்டுக்கு கீழே இருக்கும் மச்சம் செம க்யூட். (ஷ்ரேயா இல்லீனா பானு!!! ரசிகர் மன்றத்துக்கு மாறிடலாமான்னு நினெச்சிட்டிருந்தேன், கிரிடம் த்ரிஷாவைப் பார்த்த பிறகு இப்போதைக்கு கட்சி மாறும் எண்ணம் இல்லை. அடுத்து பீமா வேற வருது. பார்ட்டி நாளுக்கு நாள் அழகாகிட்டே வருது!!) த்ரிஷா ஒரு சீன்ல ரொம்ப கொஞ்சராங்க! அடாஅடா!!!! (ம்ம்ம்..மாஸ்டர் ஆம்லேட்!) தண்ணீர் தொட்டிக்குள் அஜீத்துடன் உட்கார்ந்து கொண்டு த்ரீஷா அஜீத்தின் வீட்டு நபர்களைப் பற்றி அடிக்கும் கமெண்ட்கள் ஜோர். த்ரிஷா, அஜீத் வீட்டுக்கு வந்து, அவர் வரும் வரை பார்க்கமுடியாமல் தவித்து, அவர் வந்தவுடன் கண்டுகொள்ளாமல் ஆக்ட் கொடுப்பது க்யூட். (ஓவர் ஜொல்லுடா!) “அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்” பாடலில் த்ரிஷா அவ்ளோ அழகு!

“கனவெல்லாம்” பாடலின் வரிகள் அருமை. ராஜ்கிரணுக்கு இந்த படம் மேலும் ஒரு மைல்கல். தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கனகச்சிதமாக செய்திருக்கிறார். தவறாக காரைப் பார்க் செய்துவிட்டு, போலீஸ்காரரை அடிக்கும் MLA மகனை, பளார் என்று அறைவதும், வில்லனின் ஆட்களிடம் தனியாளாக சண்டையிடுவதும் கம்பீரம். அந்த fight-sequence நன்றாக இருந்தது. (பிரசாந்த் நடித்த தமிழ் படத்தை நினைவூட்டினாலும் நன்றாக இருந்தது) அப்பா வில்லன்களிடம் அடிவாங்குவதை பார்த்து, அஜீத் பதறி ஓடிவந்து, வில்லனை நன்றாக இரும்புக்கம்பியால் அடித்து துவைத்துவிட்டு, அவன் மூச்சுப்பேச்சில்லாமல் கீழே விழுந்தபிறகு, நடந்துவிட்டதை நினைத்து கையில் வைத்திருக்கும் இரும்புக்கம்பியை பதறி தூக்கியெறிவது அருமை. அஜித் நிறைய இடங்களில் நிறைவாக செய்திருக்கிறார். லவ்விலும் சரி. சண்டையிலும் சரி. குடும்ப பாசத்திலும் சரி. ஓவர் ஆக்ட் இல்லாமல் அளவாக அழகாக செய்திருக்கிறார். costumes, வழக்கம்போல அவருடைய semi-formal ஸ்பெஷல். SI interviewவில் அஜித் செம க்யூட். அந்த shirt. பளிச்சின்னு ஷேவ் செய்யப்பட்ட அந்த முகம். அழகான டை. மறுபடியும் காதல் கோட்டை அஜீத். சொல்லப்போனால் அதைவிட அழகான அஜீத். ஒரு நடுத்தர வர்க்க குடும்பமும், குடும்பத்தின் பாசமும் ஓவர் sentimentஆக இல்லாமல் அழகாக காட்டப்பட்டிருக்கிறது. “

சில காட்சிகள் வழக்கம்போல் இருக்கும் என்று நினைக்கையில் ஆங்காங்கே சில திருப்பங்கள் நம்மை நிமிர்ந்து உட்காரவைக்கின்றன. ஆனால் அவ்ளோ பெரிய வில்லன் தனியாகவே எப்பொழுதும் அடிவாங்குவது கொஞ்சம் நெருடல். க்ளைமாக்ஸ் எதிர்பாறாத ஒன்று. வழக்கம்போல எந்த compromiseஉம் டைரக்டர் செய்துகொள்ளவில்லை. அப்படின்னா அப்படித்தான். தேவையில்லாத சண்டைக்காட்சிகள் இல்லை. ஓரு இடத்தை தவிற வேறு (அதுவும் இங்கே mute செய்யப்பட்டுவிட்டது) எங்கும் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை. ஹீரோவின் துதி இல்லை. இரண்டாம் பாதி கொஞ்சம் இழுவை. மற்றபடி படம் good. GV.Prakashஇன் பின்னனி இசை படம் நெடுகிலும் பாந்தமாக இருக்கிறது, காதுகளை உறுத்தாமல்.

ஒரு தந்தையின் கனவு நிறைவேறாமலே போனது மட்டும் கொஞ்சம் வருத்தமாக இருந்தது. கடைசியில் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் கிரிமினல்கள் லிஸ்டில், வரதனின் (வில்லன்) போட்டோ கிழிக்கப்பட்டு அதே இடத்தில் சக்தியின் (அஜீத்) போட்டோ ஒட்டப்படுகிறது. “யாரிடமும் குற்றமில்லை காலம் செய்த குற்றமிதுதான்” என்ற வரிகள் விஜய் ஏசுதாஸின் கனீர் குரலில் ஒலிக்கிறது. வரதனும் இப்படித்தான் குற்றவாளி ஆகியிருப்பாரோ என்று ஒரு நிமிடம் யோசிக்கவைக்கிறது. அது சரி. பிறக்கும்போதே எல்லோரும் குற்றவாளிகளாகப் பிறக்கிறார்களா என்ன?

எப்போதுமே மலையாளத்திலிருந்து தமிழுக்கு ரீமேக் செய்யப்பட்ட படங்களைப் பார்த்துவிட்டு, மலையாள ஒரிஜனலைப் பார்க்கும் போது, மலையாள ஒரிஜினல் பெட்டர் என்றுதான் எனக்கு தோன்றும். உதாரணத்திற்கு, அண்ணா நகர் முதல் தெரு. இதன் ஒரிஜினலான “காந்திநகர் பர்ஸ்ட் ஸ்ட்ரீட்” எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. சத்யராஜ்-ஜனகராஜ் (மாதவா எங்கேயோ போய்ட்டடா!) காமெடியும் நன்றாகத்தான் இருந்தது இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் மோகன்லால்-சீனிவாசன் காம்பினேஷன் அவர்களை விட நன்றாக இருந்ததாகவே தோன்றியது. எனக்கு சீனிவாசனை ரொம்பவும் பிடிக்கும். அதற்கப்புறம், சந்திரமுகி. (நான் சொல்லத் தேவையில்லை!) இப்பொழுது கிரீடம். கிரீடத்தைப் பற்றி என் மலையாள நண்பர் சஜீத்திடம் சொன்னபோது சட்டென்று உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். மலையாள கிரீடம் கண்டிப்பாக பார்க்கவேண்டும்.

8 thoughts on “கிரீடம்

  1. //வரதனும் இப்படித்தான் குற்றவாளி ஆகியிருப்பாரோ என்று ஒரு நிமிடம் யோசிக்கவைக்கிறது// படம் முடிஞ்சு வூட்டுக்கு திரும்ப நடக்கும்போது இது தான் பேசிகிட்டே வந்தோம்..//அதுவும் இங்கே mute செய்யப்பட்டுவிட்டத// இங்கயும் 🙂

    Like

  2. //காந்திநகர் பர்ஸ்ட் ஸ்ட்ரீட்//காந்திநகர் செகண்ட் ஸ்ட்ரீட் தான் செரி ;-)நல்ல விமர்சனம்

    Like

  3. என்னப்பா இது. இளமையா இருக்காருன்னு சொல்லியே படங்களை ஓட வைச்சிருவீங்க போலருக்கு. இங்க இவருன்னா, அந்தப் பக்கம்.. வேணாம் வாயை ரொம்ப கஷ்டப்பட்டு மூடி வைச்சிருக்கேன். இங்க திறக்கிறதாயில்லை. ;)அஜித் நடிச்ச படங்க்ள்ல முகவரி ரொம்ப பிடிக்கும். நீங்க எழுதியிருக்கிறதைப் பார்த்தா, பார்க்கலாம் போலருக்கே. பார்த்திட்டு சொல்லுறேன்.[த்ருஷா… பாத்து. சிங்கப்பூர் மூழ்கப்போவுது. 😉 I can’t stand her.]-மதி

    Like

  4. மதி: ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கீங்க! எனக்கும் முகவரி ரொம்பப் பிடிக்கும். இந்த அதிரடி ஆக்சன் ஹீரோக்கள் (அட்லீஸ் அப்படி நினைத்துக்கொண்டிருப்பவர்கள்!) பாந்தமாக சாந்தமாக நடித்தால் நமக்கு பிடித்திருக்கிறது. வெறும் குப்பைகளாக கொடுத்ததால், படம் கொஞ்சம் பரவாயில்லாமல் இருந்தால் கூட, நமக்கு நன்றாக இருப்பதாக தோன்றுகிறது இல்லியா? Thrisha?! cant stand her?! அப்படியெல்லாம் சொல்லப்படாது! I love her!கார்த்திகேயன்: Thanks!

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s