கற்றது தமிழ்.

முதலில் ஜீவாவுக்கு பாராட்டுக்கள். கொடுத்த கதாப்பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். பின் சீட்டிலிருந்து அடுத்த கமலஹாசன் கிடச்சுட்டான் என்ற கமென்ட் கேட்க முடிந்தது. (ஆனால் ஆவாரம்பூ படத்தில் அரைலூசாக நடித்த வினீத்தைப் பார்த்துக்கூட இப்படித்தான் சொன்னோம்ங்கறது வேற விசயம்!). நன்றாக நடித்திருக்கிறார். அமைதியாக ஆக்ரோஷமாக அன்பாக ஏமாற்றமாக வெறுப்பாக கடைசியில் சைக்கோவாக அருமையாக நடித்திருக்கிறார். படத்தில் வரும் எல்லா கதாப்பாத்திரங்களும் ஷார்ப்பாகவே நடித்திருக்கின்றனர். குறிப்பாக தமிழய்யா. எங்கோ பாத்திருக்கிறோம் என்ற feeling கடைசிவரையில் எனக்கிருந்தது. புதுப்பேட்டையில் அமைச்சராக வருகிறவர் தானே இவர்? புதுப்பேட்டை எனக்கு பிடித்த படங்களில் ஒன்று. செல்வராகவனின் டைரக்சனும், யுவனின் பின்னனி இசையும் (GodFatherஐ அவ்வப்போது நினைவுபடுத்தினாலும்!), தனுசின் நடிப்பும் நன்றாக இருந்தது.

சரி. கற்றது தமிழைப் பார்ப்போம். ப்ளஸ் டூவில் ஆயிரத்து நூறு மதிப்பெண்கள் பெற்ற ஜீவாவுக்கு, உண்மையில் என்ன தான் பிரச்சனை என்பதில் தான் இயக்குனர் கொஞ்சம் (நிறையவே!) தடுமாறியிருக்கிறார். காதலா? பணமா? சமகாலத்தில் தன்னை விட அதிக சம்பளம் வாங்கும் மற்றவர்களைப் பார்த்து பொறாமையா? இல்லை விதியா? படத்தில் வரும் எக்கச்சக்க எதிர்பாராத மரணங்களால் தான் நான் விதியை இழுக்கவேண்டியதாகிவிட்டது. இல்லீன்னா just coincidence? “எனக்கு பணம் பிரச்சனை இல்லை” என்று அவரே மருத்துவரிடம் சொல்கிறார். பிறகு? அவரது வாழ்க்கையில் ஆனந்தி மட்டுமே பிரச்சனை. ஏனென்றால் ஆனந்தியைப் பார்த்தவுடன் (the same old mahanadhi style. ஆனந்தி பாம்பேவுக்கு போகிறார் என்று தெரிந்தவுடனே அவர் என்ன ஆவார் என்பது நமக்கு தெரிந்துவிடுகிறது. எத்தனை படங்கள் பார்த்திருக்கிறோம்!?) மீண்டும் அந்த பத்து வயது சிறுவன் அவனுள் தோன்றிவிடுகிறான். எனக்கு இனிமேல் பிரச்சனை இல்லை என்று கூறிவிடுகிறான். மனப்பிறழ்வு நிலையிலிருந்து வெளிவருகிறான்.

மனப்பிறழ்வு? ஆம். சும்மா இருக்கும் போது அவனது கைகள் தாமாகவே ஆட்டம் காண்கின்றன. ஏன்? கொலைசெய்ய வேண்டுமாம். ஏன்? தெரியவில்லை. போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள், போதையூட்டும் பொருட்கள் கிடைக்காமல் போனால், என்னமாதிரியான ஒரு நிலைக்கு தள்ளப்படுவார்களோ, அதே போலாகிறான் அவன். இதற்கு சமுதாயத்தின் மீது கோபப்பார்வை வேறு. அந்த டாக்டரை ஏன் கொலை செய்கிறான் என்று எனக்கு புரியவேயில்லை. பீச்சில் உட்கார்ந்திருக்கும் ஜோடிகளை இவன் ஏன் கொல்ல வேண்டும்? சமுதாயப்பார்வையா? இதில் என்ன சமுதாயப்பார்வை வேண்டிக்கிடக்கிறது. தனக்கு ஜோடியாக ஆனந்தி கிடைக்கவில்லையே என்கிற ஆதங்கமும் மனப்புழுக்கத்தினாலும் தான் அவன் அவ்வாறான கொலைகளை செய்கிறான். இதில் சமுதாயப்பார்வையே இல்லையே.

ஆனந்தியின் மேல் இவன் வைத்திருக்கும் காதல் அழகானது என்பதை மறுப்பதற்கில்லை, அதற்காக பீச்சில் உட்கார்ந்திருக்கும் ஜோடிகளை, அவர்கள் அறியாமலே, பின்னால் கூலாக உட்கார்ந்து கொண்டு துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யச்சொன்னார்களா? என்னங்கடா இது?! உனக்கு வெயிலாக இருந்தால் வீட்டுக்குள் சென்று முடங்கிக்கொள், உன்னையார் பீச்சுக்கு வரச்சொன்னார்கள்? சரி, முதலில் பட்டப்பகலில் கொளுத்தும் வெயிலில், நீ எதற்காக பீச்சுக்கு வந்தாய்? சுண்டல் வாங்கி சாப்பிடுவதற்கா? மதிய வெயிலில் பீச் சூடாக இருக்கும் என்று தெரியாதா என்ன? இங்கிலாந்திலிருந்து இப்போத்தான் இறங்கி வந்திருக்கியா என்ன? அவர்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறதப்பா, உட்கார்ந்திருக்கிறார்கள். உன்னை குடை பிடிக்கச் சொன்னார்களா? வடிவேலு பாஷையில் சொல்வதானால், சுத்த அயோக்கியத்தனமாவுல்ல இருக்கு?

அப்புறம் உட்லாண்ட்ஸ் ஷ¥ போட்டிருக்கிறவன துரத்தி துரத்தி ஷ¥ கேட்பது. செறுப்பையும் ஷ¥வையும் exchange செய்துப்போமா என்று கேட்பது. நான் பிஞ்ச செருப்ப போட்டிருக்கும் போது நீ costlyயான உட்லாண்ட்ஸ் ஷ¥ போடுவியா? நாங்க பாத்திட்டே இருப்பமா? என்று அவனை துவம்சம் செய்கிறார் (செய்வது போல தானே நினைத்துக்கொள்கிறார் என்பது போலவும் பிறகு reverseஇல் காட்டப்படுகிறது. இங்கே தான் இயக்குனர் நம்மை confuse செய்கிறார். ஒரு இடத்தில் இவன் எந்த கொலையும் செய்யவில்லையோ என்று நினைக்கத்தோன்றுகிறது.). கொலை செய்யப்பார்க்கிறார்.அவன் அலறி அடித்துக்கொண்டு ஓடுகிறான். இது என்ன அயோக்கியத்தனம்? நீ ஏன் cigarate குடிக்கிற? வாத்தியார் வேலை செய்து குறைந்த சம்பளம் நான் வாங்குகிறேன்னு நினைக்கிறல்ல? அப்படீன்னா பீடி குடிக்கவேண்டியது தான? எத்தன பேர் பீடி குடிக்கிறவங்க இருக்காங்க? அவங்களைப் போல நீயும் பீடி குடிக்க வேண்டியது தான? எதுக்கு cigarate? உன் girl-friendக்கு ஏன் ஆயிரத்து நானூறு ரூபாய்க்கு சுடி வாங்கற? because you want the best. (atlease the best you can afford!) அதுதான் எல்லாரும் செய்யறது. செய்யறாங்க. அவங்க அவங்களால என்ன என்ன best வாங்க முடியுமோ அத வாங்கறாங்க. உனக்கென்ன வந்தது? அப்படீன்னா எல்லாரும் பிஞ்ச ரப்பர் செறுப்பு போடனும்ங்கறதுதான் உன் கொள்கையா? every one should be poor. அப்படீங்கற மனப்பான்மை. every one has to be rich அப்படீங்கற கொள்கைக்கு எதிர்மறையான negative வாதம். அவம் உட்லான்ட்ஸ் ஷ¥ போட்டிருக்கிறான், அதனால அவன தொரத்தறேன். அவன் கிட்டருந்து பிடுங்கறேங்கறதெல்லாம், டூ மச். என்ன மாதிரியான கொள்கை இது?

சரி. சாப்ட்வேர் மக்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள் என்று இவருக்கு தெரியாதா என்ன? தெரியாமல் 1100 மார்க் வாங்கி என்ன பயன்? ஆனந்தி என்ற குறுகிய வட்டத்துக்குள் இருந்தால் அப்படித்தான் இருக்கும். ஆனந்திய விட்டுட்டு கொஞ்சம் வெளில வாங்க சார். உலகத்துல என்ன நடக்குதுன்னு கொஞ்சம் உத்து கவனிங்க சார். survival of the fittest பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா? இல்லீன்ன இப்படி படம் எடுத்து பொலம்ப வேண்டியதுதான். சாப்ட்வேர் இன்ஜினியருக்கு ரெண்டு லட்ச ரூபாய் சம்பளம் என்பதும், ஆபீஸ¤க்கு வா என்று சொன்னதும் வந்துட்டானே என்று அவன் நினைப்பது போல காட்டுவதும், சாப்ட்வேர் மக்களின் மீதான துவேஷம் மட்டுமே, வேறொன்றும் இல்லை. எத்தனை பேர் இரண்டு லட்ச ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள்? எவ்வளவு வரி கட்டுகிறார்கள்? 30% வரி என்பது இருக்கிறதுதானே?

விலைவாசி ஏறியதற்கு யார் காரணம்?இன்று வேளச்சேரியில் ஒரு டபுள் பெட்ரூம் ப்ளாட் என்ன வாடகை? 14ஆயிரம் ரூபாய் ஆனதற்கு சாப்ட்வேர் மக்களா காரணம்? வீட்டு ஓனர் என்னமோ இரண்டாயிரம் ரூபாய் வாடகை கேட்ட மாதிரியும், சாப்ட் வேர் மக்கள், நீங்க ஒன்னும் காமடி கீமடி பண்ணலையே, சும்மா இருங்கசார், இந்தாங்க பிடிங்க பத்தாயிரம்னு சொன்னமாதிரில்லா சொல்றீங்க? யாருக்கு உண்மையில் பேராசை? அவன் வாங்குறான், கொடுக்கட்டும் என்ற எண்ணம் தானே இருக்கு, எல்லார்கிட்டயும்.

ஆனால் படத்தின் கருவே இது இல்லை. தமிழ் இல்லை. தமிழ் படித்ததால் அவன் கஷ்டப்படவில்லை. அதிக சம்பளம் வாங்கும் சாப்ட்வேர் மக்களாலும் இவன் கஷ்டப்படவில்லை. இதற்கு திருக்குறள் வேறு “மயிர் நீப்பின் உயிர் வாழா கவரிமான்”. Just Ego. தமிழ் படித்த நம்ப ஹீரோவுக்கு இப்படி யெல்லாம் ஆனதற்கு யார் காரணம்? அந்த போலீஸ் அதிகாரி? நம்ப தமிழ் ஐயா ஏன் தம் அடிக்கனும்? தமிழ் படிச்சா தம் அடின்னு சொன்னாங்களா? மேலும் அந்த போலீஸ் அதிகாரி, அந்த இடத்தில் (சேச்சிக்கு பக்கத்தில்) வேறு யார் இருந்தாலும், அவ்வாறே கைது செய்திருப்பார் என்பதுதான் உண்மை. போலீஸ்அதிகாரி நம்ப ஹீரோவை அரஸ்ட் செய்யும் போது, இவர் தமிழ் படித்திருக்கிறார் என்பது அவருக்கு எப்படி தெரியும்? நெத்தில எழுதி ஒட்டிருக்கிறாரா என்ன? செய்யறதெல்லாம் செஞ்சிட்டு கடைசில செஞ்சத நியாயப்படுத்தறதுக்கு, என்ன என்னம்மோ தத்துபித்துன்னு பேசறது. இப்படி போறபோக்குல சாப்ட்வேர் மக்கள் மேலயும், (கிடச்ச எல்லார் மேலையும்!) கொஞ்சம் சேத்த வாரி தெளிச்சிட்டு போயிருக்கார் நம்ப டைரக்டர் ராம்.

“If you dare touch me here” என்ற வாக்கியத்தை கரெக்டாக நெஞ்சில் எழுதப்பட்ட டீசர்ட்டை அணிந்த பெண்ணின் மீது நம்ப ஹீரோ கை வைத்தது, என்னைப் பொறுத்தவரையில், not bad, but not good either. Its a challenge, between that girl and any other person she comes in contact with, either a boy or a girl. She is challenging. And he is doing. Thats it baby. அந்த டீசர்ட்டில் எழுதியிருக்கும் வார்த்தைகளுக்கு அர்த்தம் என்னவென்று தெரியாமலா அந்த பெண் அதை வாங்கியிருப்பாள்? எங்கள் சுதந்திரமும்,மண்ணாங்கட்டியும் எங்கே போனது என்று கேட்கும் அரைவேக்காட்டு பெண்ணியப் பிரஜைகளுக்கு, enjoy your freedom without provoking others. எல்லாரும் முத்து மாதிரியே அமைதியா இருப்பாய்ங்களா என்ன? அனால் surprisingly இதற்கு எதிர்மறையான கருத்தையே என் நண்பர்கள் சொன்னார்கள். Just girls sympathy.

நல்ல வேலை ரமணா மாதிரி அதிக சம்பளம் வாங்குற முதல் பத்து பேரை கடத்தி வந்து, அதில் அதிக சம்பளம் வாங்கும் முதல் நபரை கொலை செய்வது போல காட்டவில்லை. அப்படி படம் வந்தாலும் வரும்.

மேலும் பாரதியின் அன்னை அன்னை பாடலை ஜீவா பாடுவது பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. நன்றாக நடித்திருக்கிறார் என்று சொல்லலாமே தவிர, அந்த call centre பையனிடம் பேசுவதெல்லான், ரொம்ப டூ மச். நாற்பதாயிரம் ரூபாய்க்கு உன் பெயரை மாத்திக்கிட்டியே, அப்படீன்னா நிறைய காசு கொடுத்தா, அப்பா அம்மாவை மாத்திக்குவியான்னு கேக்கறதெல்லாம் திமிர் தனம். உனக்கு அவன் ஏதோ கொஞ்சம் காசு சம்பாதிச்சு, குடும்பத்த காப்பாத்தறது பிடிக்கலையா? உன்ன மாதிரி நடுரோட்ல கல்ல தூக்கிட்டு ஓடினா, வாடா மாப்ள வா, ன்னு சொல்லி, அன்னை அன்னை பாட்ட மொத்தமா உக்காந்து பாடி பஜன பண்ணுவீங்களா என்ன?

உண்மையில கால் சென்ட்டர்ல வேலை பாக்குற எத்தன மக்கள் car வச்சிட்டு இருக்காங்கப்பா? நிறைய நபர்களின் சம்பளம் வெறும் ஆறாயிரம் ரூபாய் தான் என்பது நம்ப டைரக்டரின் கவனத்தில் விழவில்லை போலும். யாரவது சொல்லுங்கப்பா அவர்கிட்ட.

மொத்தத்தில் படம் தெளிவற்ற அசட்டுத்தனமான complaint. Except that childhood nostalgia மற்றும் தமிழ் ஐயா. I really loved him. க்ளைமாக்ஸில், குகைக்குள் இருந்து ஹீரோவும் ஹீரோயினும், கூடவே அவர்கள் சிறு பிள்ளையாக இருந்த பொழுது, அவர்களுடன் விளையாடிய அந்த நாயும் வெளியேறுவது, அற்புதமான அழகான கவிதை.

நான் அஜீத்துக்கு எழுதிய கதையில், சாப்ட்வேர் மக்களுக்கும், மற்ற இன்ன பிற வேலை செய்பவர்களுக்கும் இடையே இருக்கும் economical gap பற்றித்தான் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், அந்த economic gapஐ சரிப்படுத்த, கொலை solution அல்ல. அன்றைக்கும் (முன்பு) central govtஇல் வேலையில் இருப்பவர்கள் மற்ற எல்லாரையும் விட அதிக சம்பளம் வாங்கிக்கொண்டுதான் இருந்தார்கள். பாங்க் ஆபீஸர் வீட்டு பையன்கள் , நாம் summer leaveஇல், தெருவில் திருடன் போலீஸ் விளையாட, அவர்கள் இந்தியா முழுதும் ஓசில டூர் போகத்தான் செய்தார்கள். மற்றவர்கள் அவர்களை கொலையா செய்து கொண்டிந்தார்கள்? economic gap is always there. இப்போ கொஞ்சம் அதிகமா இருக்கு.

இவ்ளோ சம்பளம் வாங்கும் இவ்ளோ மக்கள் 30% வரி கட்டுகிறார்களே, அதெல்லாம் எங்கேயப்பா போகிறது? அதை கேட்பதை விட்டுவிட்டு, உட்லாண்ட்ஸ் ஷ¥வை பிடுங்க ஓடறது, சுத்த சின்னப்பிள்ளத்தனமால்ல இருக்கு.

9 thoughts on “கற்றது தமிழ்.

 1. படத்தை ஒரு ஓட்டை சிடி’யில பார்த்துட்டு ரெண்டுநாளா அதை பத்தி எழுதனும்னு நெனச்சுகிட்டே இருந்தேன். ரெண்டு தடவை ஃட்ரப்ட் டெலிட் செஞ்சாச்சு.. உங்களுக்கு தோணின மாதிரியே எனக்கு தோணுச்சு. தப்பா இப்படி எல்லாம் தப்பா சொல்லி கொஞ்ச நஞ்சம் தப்போன்னு யோசிக்கறவங்களையும் இது தான் சரி’ன்னு முடிவு செய்ய வச்சிடுவாங்க போல..btw .. welcome back 🙂

  Like

 2. முத்து, நா கூட எழுதியிருக்க்கேன்.. டைம் கிடச்ச்சா படிச்சுட்டு வாங்க… கச்சேரிய நிதானமா வெச்சுக்குவோம் ::-)ராசா, நீங்க தப்பு தப்புன்னு சொல்றது, தியேட்டருக்குப் போகாம சிடியில பார்த்ததைத்தானே? 🙂

  Like

 3. //புதுப்பேட்டையில் அமைச்சராக வருகிறவர் தானே இவர்? //அவர்தான் டும் டும் டும் போன்ற படத்தை இயக்கிய அழகம் பெருமாள்.

  Like

 4. தலைவா!இதே மாதிரி மாசத்த்துக்கு நாலு படம் பாருங்கஅப்படியாச்சும் பதிவு வரும்ல.

  Like

 5. கொங்கு ராசா: வருகைக்கு நன்றி. உங்க பதிவையும் படிச்சேன். உங்க பதிவில எனக்கு link கொடுத்ததுக்கு நன்றி.ப்ரகாஷ்: வருகைக்கு நன்றி. உங்க பதிவையும் படிச்சேன். கச்சேரிய எப்ப வேணும்னாலும் வெச்சுக்கலாம் சார்.அனானி: ரொம்ப ரொம்ப தாங்க்ஸ். எனக்கு அவரை ரொம்பவும் பிடிக்கும். அவர் தான் அழகம்பெருமாள் என்று தெரிந்து கொண்டது சூப்பர். ஏன்னா எனக்கு டும் டும் டும் மிகவும் பிடித்த திரைப்படம்.தம்பி: வருகைக்கு நன்றி தல. இதே மாதிரி நாலு படம் பாத்தா பதிவு வருதோ இல்லியோ கண்டிப்பா லூசாயிடுவேன் நான்.

  Like

 6. சூப்பர் விமர்சனம்!!!எனக்குத் தோன்றியதையே நீங்களும் எழுதியிருக்கிறீர்கள்.

  Like

 7. நேத்துத்தான் இந்தப்படம் பார்க்க ஆரம்பிச்சு, இன்னிக்குக் காலையில் முடிச்சோம்.என் மனசுலெ இதைப்பத்தி எழுதணுமுன்னு தோணுச்சு. என்னாங்கடா இப்படியெல்லாம்….? தமிழ்ப் படிச்சா இப்படியெல்லாம் ஆயிருமா? எதோ மெண்டலோட கதையை எடுத்த மாதிரி இருக்கேன்னு நினைச்சுக்கிட்டே, நம்மாட்கள் யாராவது விமரிசனம் போட்டாங்களான்னு வலையில் தேடுனேன்.சினி சவுத், தமிழ் சினிமாவுலெ வர்ற விமரிசங்களை எப்பவுமே கணக்கில் எடுத்துக்கறதில்லை என்றது வேற விஷயம்:-)பொதுவா எந்த சினிமாவையும் பார்க்கரதுக்கு முன்னே விமரிசனங்களைப் படிக்கும் வழக்கம் இல்லை. எந்த ஒரு முன் முடிவும் வந்துறக்கூடாதுன்னுதான்.நான் நினைச்சதை அப்படியே எழுதிட்டீங்க. (எனக்கும் ஒரு வேலை மிச்சம்)அந்தப் பையன் ‘ஜீவா’ நடிச்ச ராம் படத்தோட ரெண்டாவது பார்ட்டா இது?அந்தத் தாடி மேக்கப் சகிக்கலை. படத்துக்காக ரொம்ப இளைச்ச மாதிரி இருக்கு உருவம்.நாய் செத்ததுதான் வருத்தமாப்போச்சு.

  Like

 8. இதே படத்தை நான் ரொம்ப நாள் கழித்து பார்த்து விட்டு எனது ப்ளாக்கில் எழுதினேன். சாப்ட்வார் மக்கள் பற்றி படத்தில் காட்டியதை நானும் கண்டித்திருந்தேன். முடியம் போது இந்த லிங்கில் வாசிக்கவும். “கற்றது தமிழ் – ஒரு தாமதமான விமர்சனம்”http://veeduthirumbal.blogspot.com/2008/09/blog-post.html

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s