தமிழ் சினிமா : என் பரிந்துரை

சாம்பார் வடையின் இந்தப் பதிவைப் பார்த்ததும், நாமும் எழுதினால் என்ன என்று நினைத்தேன். எவ்ளோ படம் வாழ்க்கையில் பார்த்திருப்போம்? அதற்கு எவ்ளோ நேரம் செலவழித்திருப்போம்? மொத்தம்?

ஒரு மூன்றாவது வகுப்பு படிக்கும்போதிருந்து படம் பார்க்கத் தொடங்கியிருப்பேன் என்று வைத்துக்கொள்வோம், இப்போ எத்தனை வருடங்கள் ஆச்சு? கிட்டத்தட்ட 20 வருஷம் ஆச்சு. (முத்து வயசாயிடுச்சுடா உனக்கு!) ஒரு வருசத்துக்கு averageஆ 52 வாரங்கள்ன்னு வெச்சுக்கோங்க..மொத்தம் எத்தனை வாரங்கள் ஆச்சு? 20*52 = 1040 வாரங்கள் ஆச்சு. ஒரு வாரத்துக்கு ஒரு படம்ன்னு வெச்சுக்கிட்டாக்க மொத்தம் 1040 படங்கள் ஆச்சு. ஒரு படம் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் ஓடுதுன்னு வெச்சுக்கோங்க, மொத்தம் 2080 மணி நேரம் படத்துக்காக செலவழிச்சிருக்கேன். மொத்தம் 87 நாட்கள். இது minimum amount of time. அடேங்கப்பா!

இவ்ளோ நேரம் படம் பார்க்க செலவழிச்சுட்டு, வருங்கால மக்களுக்கு படம் சிபாரிசு பண்ணலைன்னா என்ன அர்த்தம், நீங்களே சொல்லுங்க? சினிமாவும் இசையும் (முக்கியமா குத்துப்பாட்டு!) இந்தியர்களின் இதயத்தில் இருக்கிறது. சினிமா நடிகர்கள்? அரியணையிலிருக்கிறார்கள்.

ஆனால் பிடித்த படங்கள் என்பது வேறு, வருங்கால சந்ததியனருக்கு சிபாரிசு செய்வது என்பது முற்றிலும் வேறு. எடுத்துக்காட்டாக, 7G ரெயின்போ காலனி எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. ஆனால் அதை என் சந்ததியினருக்கு நான் சிபாரிசு செய்வேனா என்பது சந்தேகம் தான். செய்யமாட்டேன் என்றே நினைக்கிறேன்.

நான் சிபாரிசு செய்யும் படங்கள் இவைதான்:

எம்ஜிஆர்
நாடோடி மன்னன்
ஆயிரத்தில் ஒருவன்
மலைக்கள்ளன்
எங்க வீட்டுப் பிள்ளை
உலகம் சுற்றும் வாலிபன்

சிவாஜி
உத்தம புத்திரன்
மனோகரா
பராசக்தி
அந்த நாள்
புதிய பறவை
பாச மலர்
பாவமன்னிப்பு
பலே பாண்டியா
ஆலயமணி
பாரதவிலாஸ்
வீரபாண்டியகட்டபொம்மன்
கப்பலோட்டிய தமிழன்

முட்டக்கண் ராமச்சந்திரன்
சாரங்கதாரா
சபாபதி
அடுத்த வீட்டு பெண்

ஸ்ரீதர்
நெஞ்சம் மறப்பதில்லை
நெஞ்சில் ஓரு ஆலயம்
தேனிலவு
காதலிக்க நேரமில்லை

ஜெய்சங்கர்,ரவிச்சந்திரன்
அதே கண்கள்
மூன்றெழுத்து
வல்லவன் ஒருவன்

பாலச்சந்தர்
நினைத்தாலே இனிக்கும்
எதிர் நீச்சல்
சர்வர் சுந்தரம்
சாது மிரண்டால்
மேஜர் சந்திரகாந்த்
அவர்கள்
வறுமையின் நிறம் சிவப்பு
மனதில் உறுதி வேண்டும்
சிந்து பைரவி
உன்னால் முடியும் தம்பி.

ரஜினி

முல்லும் மலரும்
பில்லா
ஜானி
தில்லு முல்லு
படிக்காதவன்
குரு சிஷ்யன்
தம்பிக்கு எந்த ஊரு
மன்னன்
தளபதி
அண்ணாமலை
பாட்ஷா
சந்திரமுகி

பாரதிராஜா
பதினாறு வயதினிலே
நிழல்கள்
ஒரு கைதியின் டைரி
முதல் மரியாதை
சிகப்பு ரோஜாக்கள்
டிக் டிக் டிக்

மோகன்
விதி
நூறாவது நாள்

கமல்
விக்ரம்
வாழ்வேமாயம்
மூன்றாம்பிறை
சலங்கை ஒலி
சத்யா
அபூர்வ சகோதரர்கள்
சாணக்யன்
வெற்றிவிழா
நாயகன்
மைக்கேல் மதன காமராஜன்
குணா
சதிலீலாவதி
குருதிப்புனல்
காதலா காதலா
பஞ்சதந்திரம்
வசூல்ராஜா
விருமாண்டி
அன்பே சிவம்
வேட்டையாடு விளையாடு

மணிரத்னம்
மௌனராகம்
அஞ்சலி
இருவர்
அலைபாயுதே

பாக்யராஜ்
அந்த 7 நாட்கள்
இன்று போய் நாளை வா
தூரல் நின்னு போச்சு
இது நம்ம ஆளு

விசு
சம்சாரம் அது மின்சாரம்

விஜயகாந்த்
ஊமை விழிகள்
அம்மன் கோவில் கிழக்காலே
வைதேகி காத்திருந்தாள்
கேப்டன் பிரபாகரன்
புலன்விசாரனை

பிறபடங்கள்
ஓர் இரவு
பஞ்சவர்ணக்கிளி
பாமா விஜயம்
சாந்தி நிலையம்

வருஷம் 16
என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
பூவிழி வாசலிலே
பூவே பூச்சூடவா
அக்னி நட்சத்திரம்
அரங்கேற்றவேளை
ஆண்பாவம்

கரும்புள்ளி (“என் உயிர் தோழன்” பாபு)
பாரதி
உதயம் (நாகார்ஜூன், அமலா, ரகுவரன்)

சூரியன்
நாட்டாமை

ஜென்டில் மேன்
இந்தியன்
ஜீன்ஸ்
முதல்வன்

அழகி
புதியபாதை
ஹவுஸ்புல்

காக்க காக்க
மௌனம் பேசியதே
நந்தா
கஜினி
கில்லி
காதல் மன்னன் (அஜீத்)
ஆசை
சேது
தில்
மொழி
காதல்
பருத்தி வீரன்
ராம்
காதலுக்கு மரியாதை

கனா கண்டேன்
கண்ட நாள் முதல்

ஜீவா (சத்யராஜ், அமலா)
நடிகன்

பாதாள உலகம்
மாயாபஜார்

மைடியர் குட்டிச்சாத்தான்
ஜெகன்மோகினி
பதிமூனாம் நம்பர் வீடு
உருவம்
48 மணி நேரம் (ரேவதி)
ஷாக்

இன்னும் நிறைய படங்கள் இருக்கு லிஸ்ட்ல, இன்னொரு தடவை சொல்றேன்.

11 thoughts on “தமிழ் சினிமா : என் பரிந்துரை

 1. தஞ்சாவூர்காரன் : பெரும்புள்ளி தான். பிழைக்கு மன்னிக்கவும். நல்ல காமெடி படம் அது. ஏனோ ஓடவில்லை.வடுவூர் குமார்: வருகைக்கு நன்றி. 7ஜி ரெயின்போ காலனி இளைஞர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்றெல்லாம் நான் நினைக்கவில்லை. ஆனால் திரைக்கதைக்காகவும் அந்த பர்ஸ்ட் மழை இன்ட்ரோவுக்காகவும், பாடல்கள் மற்றும் பின்னனி இசைக்காகவும், அந்த கடைசி ட்விஸ்டுக்காகவும், அதற்கப்புறமான அந்த கடைசி பத்து நிமிடங்களுக்காகவும் பார்க்கலாம் அவ்வளவே.

  Like

 2. எம்.எஸ்.வி முத்து அவர்களே,நான் நினைத்தபடியே பட்டியலிட்டுள்ளீர்கள். நன்றி. உங்கள் பட்டியலில் உள்ள பலவும் எனது பட்டியலிலும் இருக்கு.அப்படியே இந்தப் படங்கள் – எதனால் அல்லது எதற்கு உங்களுக்குப் பிடித்தது எனவும் ஓரிரு வரிகள் எழுதினால் பலருக்கும் உதவியாக இருக்கும்.மீண்டும் நன்றிகள்.

  Like

 3. சுகுமார்: sorry for the late reply, somehow i missed your comment. how are you? mudhalali eppadi irrukaar? inga ellarum nalam. sivaji?! how did i missed it out?!Ve.Bala : thanks for the comment. continue reading!! I will try to give a pleasant reading experience!!ஜன்னல்: ஏங்க? உங்ககிட்ட லிஸ்ட் இருந்தா சொல்லுங்க? விட்டுப்போன படங்களைப் பார்க்கிறேன்.

  Like

 4. ஆச்சரியமாக இருக்கு திரு. (மன்னிக்கவும் பெயர் தெரியவில்லை). பெரும்புள்ளி கொஞ்சம் வருடங்களுக்கு முன்பு நான் மிகவும் ரசித்துப் பார்த்த படம். நண்பர்கள் வட்டாரத்தில் பெரிதாக ஒன்றும் பேசியதில்லை. என்னைத் தவிர இன்னொருவரும், அந்த பெரும்பாலானோரால் மறக்கப்பட்ட படத்தை சிலாகிக்கும்போது ஆச்சரியமாகவும் மிகுந்த சந்தோஷமாகவும் இருக்கிறது.

  Like

 5. என்ன ஒரு ஆச்சரியம் இதில் பெரும்பாலான படங்களை நானும் ரசித்தேன். இதில் எனக்கு அதிகம் பிடிக்காத படங்கள் என்றால் “குரு சிஷ்யன்”, “வெற்றி விழா”, “விருமாண்டி” பின் கடைசியில் சொன்ன பேய் படங்கள் சில.. அவ்வளவு தான். இவை தவிர பெரும்பாலும் பிடித்தது ஆச்சரியம் தான்!!நல்ல லிஸ்ட்.. நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் முத்து

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s