இந்தியன் ஏர்லைன்ஸ¤ம் சரியான சில்லரையும்!

ஏதோ ரைமிங்காக இருக்க வேண்டும் என்பதற்காக நான் இந்த தலைப்பை வைக்கவில்லை, இதில் அர்த்தம் இருக்கிறது.

இந்தியன் ஏர்லைன்ஸில் நான் இதுவரை ஒரே ஒரு முறைதான் சென்றிருக்கிறேன். மலேசியாவில் இருந்த பொழுது, அவசரமாக அடித்த ஒரு விசிட்டின் போது, இந்தியன் ஏர்லைன்ஸில் போக வேண்டிய சந்தர்ப்பம் வாய்த்தது. அது நாள் வரையில் மலேசியன் ஏர்லைன்ஸில் பயணித்திருந்த எனக்கு, இந்தியன் ஏர்லைன்ஸில் சென்ற இந்த பயணம், மிகுந்த வித்தியாசமாகவே இருந்தது. பயணச்சவுகரியங்களைப் பற்றி நான் இங்கு குறிப்பிடவில்லை. மூன்றரை மணி நேர பயணத்தில் சவுகரியங்கள் பெரிதாக தேவைப்படாது. சரியான நேரத்துக்கு, பாதுகாப்பாக, செல்லவேண்டிய இடத்துக்கு, சென்றால் மட்டுமே போதுமானது. சரியான நேரம் என்பது, இப்ப 9:10 க்கு விமானம் சென்னையில் தரையிறங்க வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள், 9:10 க்கு exactly தரையிறங்க வேண்டும் என்பது முக்கியமல்ல. ஒரு கால்மணி நேரம் அரைமனி நேரம் தாமதத்தை அனுமதிக்கலாம். காரணங்கள்: ஏதாவது எதிர்பாறாத விசயங்களால் – தட்பவெட்ப நிலை சரியில்லை, மிகுந்த மழையாக இருக்கிறது போன்ற காரணங்களால் – கூட தாமதமாகலாம். இந்த காரணங்கள் எல்லாம் தினமும் நடக்காது. என்றோ ஒரு நாள் அல்லது சில மாதங்களில் மட்டும் (மழைக்காலம், பனிக்காலம்) நடக்கும். மேலும் தொழில்நுட்ப பிரச்சனைகளும் விமானம் தாமதமாக செல்வதற்கு காரணியாக அமைந்து விடுவதுண்டு. தொழில்நுட்ப பிரச்சனை தினமும் ஏற்படுமா?

நான் முதன்முதலில் இந்தியன் ஏர்லைன்சில் பயணம் செய்த அன்று விமானம் ஒன்றரைமணி நேரத்துக்கும் மேலாக தாமதம். காரணங்கள் ஏதும் சொல்லப்படவில்லை. நானும் கேட்டுக்கொள்ளவில்லை. அதற்கப்புறம் நான் இந்தியன் ஏர்லைன்ஸில் போகவில்லை. சிங்கப்பூர் வந்ததற்கு அப்புறம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் பயணிக்கத் தொடங்கினேன். ஒரு நாளும் தாமதமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சென்றதில்லை, ஒரு முறை தவிர. ஆனால் அந்த முறை தாமதமானதற்கு ஒரு காரணம் இருந்தது. அதாவது, பேக்கேஜ் செக் இன் செய்து விட்ட ஒரு நபர் கடைசி நேரத்தில், பயணம் செய்யப்போவதில்லை என்று முடிவெடுத்துவிட்டார். அவருடைய பெட்டிபடுக்கைகளை மீண்டும் எடுத்து வைப்பதற்கு தாமதமாகிவிட்டது. இது போன்ற காரணங்களை ஏற்றுக்கொள்ளலாம், இல்லியா?

என் நண்பர்கள் யாவரும் இந்தியன் ஏர்லைன்ஸில் பயணம் செய்பவர்கள். அவர்களை வழியனுப்பி விட பெரும்பாலும் நான் செல்வதுண்டு. அத்தனை முறையும் இந்தியன் ஏர்லைன்ஸ் தாமதமாகவே புறப்பட்டது. ஒரு மணி நேரமோ அல்லது இரண்டு மணி நேரமோ அல்லது மூன்று மணி நேரமோ. நாங்கள் நண்பரை வழியனுப்பிவிட்டு MRT ஏறியிருப்போம், அவரிடமிருந்து கால் வந்துவிடும்: விமானம் ஒரு மணி நேரம் தாமதாம்! என்று. சிரித்துக்கொள்வதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்?

***

இந்த முறை இந்தியா சென்றிருந்த பொழுது நான் இந்தியன் ஏர்லைன்ஸில் புக் செய்தேன். எல்லோரும் இந்தியன் ஏர்லைன்ஸில் சென்று மிச்சம்பிடிக்கிறார்களே, நாமும் மிச்சம்பிடித்தால் என்ன என்று தோன்றவே, இந்த முடிவை எடுத்தேன். ஒரு மணி நேரம் தானே தாமதம். so what? இந்தியா சென்று மில்லியன் டாலர் ஒப்பந்தத்தையா கை எழுத்திடப்போகிறாய்? என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். இல்லைதான்.

அந்த நாளும் வந்தது. நான் மற்றும் எனது நண்பர் வட்டாரம் ஏர்போர்ட்டில் குழுமியிருந்தோம். என்னுடன் என்னுடைய கலீக் ஒருவரும் பயணம் செய்தார். நான், எனது கலீக் அவரது மனைவி, மற்றும் எங்களது நண்பர்கள் என அன்று மாலை அரட்டைக்கச்சேரி ஏர்போர்ட்டில் ஆரம்பமானது. நண்பர்கள் இருந்ததால் கொஞ்ச நேரம் கழித்து பேக்கேஜ் செக்கின் செய்து கொள்ளலாம் என்று நினைத்திருந்தோம். காயா டோஸ்ட் சாப்பிட்டுக்கொண்டிருந்த பொழுது, விமானம் ஒரு மணி நேரம் தாமதம் என்று சொல்லப்பட்டது. இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டோம். இன்பாக்ட் இதை நான் எதிர்ப்பார்த்திருந்தேன். அரட்டைக்கச்சேரி தொடர்ந்தது. மீண்டும் தாமதம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த முறை எத்தனை மணி நேரம் என்று அறிவிப்பு செய்யப்படவில்லை. காலவரையற்ற உண்ணாவிரதம் போல, காலவரையற்ற தாமதம். அப்படீன்னா, டிக்கட் மூனு மாசத்துக்கு முன்னவே எடுத்து, பர்சேஸ் செய்து, பெட்டி படுக்கைகளை எல்லாம் பேக் செய்து, நாளைக்கு இந்தியா போகக் போகிறோம் என்ற நினைப்போடு தூக்கம் வராமல் தவித்து, காலை ஆபீஸ் சென்று, இரண்டு மணி நேரம் பெர்மிஷன் போட்டுவிட்டு, வீட்டுக்கு வந்து, நண்பனையும் அழைத்துக்கொண்டு, டாக்சி பிடித்து, ஏர்போர்ட்டில் வந்து அமர்ந்து, காயா டோஸ்ட் சாப்பிட்டுக்கொண்டிருப்பவன் என்ன கேனையனா?

***

எந்த ஸ்டுபிட் காரணங்களுக்காகவும் நீங்கள் உங்கள் விமானத்தை தாமதமாக கிளப்பலாம். எத்தனை மணி நேரம் என்று எங்களுக்கு சொல்லவேண்டுமா வேண்டாமா? எங்களை வரவேற்க உறவினர்கள் வருவார்களா மாட்டார்களா? அவர்களுக்கு நாங்கள் தோராயமாக ஒரு நேரம் சொல்லவேண்டுமா வேண்டாமா? உங்களைப் போல irresponsible fellows என்று எங்களை நினைத்தீர்களா? என் நேரம் மட்டுமல்ல, என் நணபர்களின் நேரமும் வீணாகப் போய்க்கொண்டிருந்தது. அதில் பெண்களும் அடக்கம். என்னை வழியனுப்பிவிட வந்தவர்கள் என்னை வழியனுப்பாமல் எப்படி போவார்கள்? முதல்லையே மூணுமணி நேரம் ஆவும் என்று சொல்லித் தொலைத்தால் அவர்கள் வீட்டுக்கு போவார்கள் அல்லவா?

எத்தனை மணி நேரம் தாமதம் என்றே சொல்லாதவர்கள், ஏன் தாமதம் என்றா சொல்லப்போகிறார்கள்?

***

நேரம் பறந்தோடியது. இன்னும் ப்ளைட் எப்பொழுது கிளம்பும் என்று யாருக்கும் தெரியவில்லை. ஏற்கனவே மூன்று மணி நேரம் தாமதம். நானும் என் நண்பரும் மட்டும் கிளம்பி என்ன ஆச்சு என்று பார்க்கப்போனோம். அங்கே ஏற்கனவே பெரும் கூட்டம் இருந்தது. என்ன என்று விசாரித்ததில்: ப்ளைட் கேன்சல் செய்யப்பட்டது தெரியவந்தது.

அங்கிருந்த ஒரு நபர், எல்லோருக்கும் அடுத்தநாள் இதே நேரம் சிங்கப்பூரிலிருந்து கிளம்பவிருக்கும் இந்தியன் ஏர்லைன்ஸ¤க்கு போகும்படி சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு நாள் லேட். சிலர் அதையும் கேட்டுக்கொண்டு சரி என்று உள்ளே தாங்கள் ஏற்கனவே செக் இன் செய்து விட்ட பேக்கேஜ் என்னவாகும் என்று கேட்டுக்கொண்டிருந்தனர்.

எனக்கும் என் நண்பருக்கும் ஒன்றும் புரியவில்லை. என்ன இது இவ்ளோ அசால்டா ப்ளைட்ட கேன்சல் செய்துட்டு கூலா அடுத்தநாள் ப்ளைட்டுக்கு போ என்று சொல்கிறார்களே என்று நினைத்தோம். கேன்சல் செய்யப்பட்டதற்கு காரணம் மழையாம். ஏதோ சில தட்பவெட்ப காரணங்களால் ப்ளைட் தாமதம் அல்லது கேன்சல் செய்யப்படும். அது OK. அப்படி என்றால் அந்த விமான நிலையத்தில் இருந்து எந்த ப்ளைட்டும் கிளம்பாது. எல்லாமே கேன்சல் செய்யப்படும். atleast ஒரே இடத்திற்கு செல்லும் விமானங்கள் யாவும் கேன்சல் செய்யப்படும். இங்கே, சென்னைக்கு செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கிளம்பிவிட்டது, மலேசியன் ஏர்லைன்ஸ் கிளம்பிவிட்டது ஆனால் இந்தியன் ஏர்லைன்ஸ¤க்கு மட்டும் ஜலதோஷம் பிடித்து கடும் காய்ச்சல் கண்டு விட்டது, எங்களை வியப்பில் ஆழ்த்தியது. மற்ற விமாங்கள் எல்லாம் ஸ்வெட்டர் போட்டுக்கொண்டா போகிறது? அல்லது யாராவது குடை பிடிக்கிறார்களா?

பிறகு தான் தெரிந்தது: விமானம் பழுதடைந்து விட்டதாம். Technical Problem.

***

இதில் எங்களுடம் பயணம் செய்த ஒரு குழு (முதலமைச்சருடன் கோயம்புத்தூரில் மீட்டிங் என்று சொல்லிக்கொண்டது) ஏன் விமானம் பழுதடைந்தது உங்களுக்கு முன்னமே தெரியாதா? என்று அங்கிருந்த இந்தியன் ஏர்லைன்ஸின் representativeஐ கேட்ட பொழுது, அது எப்படி தெரியும்? விமானத்தை ஸ்டார்ட் செய்யும் போது தானே தெரியும் என்று அவர் அப்பாவியாய் பதிலளித்தார்.

நாங்கள் போராட்டத்திற்கு தயாரானோம். அந்த முதலமைச்சருடன் மீட்டிங் குழுவும், நானும்,என் நண்பரும், அமேரிக்காவில் இருந்து தனது திருமணத்திற்கு செல்லும் மற்றொருவரும் ஒரு குழுவாக சேர்ந்து கொண்டோம்.

எங்களது கோரிக்கை: நாளை இரவு வரை காத்திருக்க முடியாது. எங்களை இன்றே வேறு ஏதாவது ப்ளைட்டில் இந்தியாவுக்கு அனுப்பிவிடு. பயணிகள் நாங்கள் டிக்கெட்டை கேன்சல் செய்தால் அல்லது extend செய்தால் fine வசூலிக்கிறீர்களா இல்லியா?

நாங்கள் எவ்வளவு போராடினாலும் அந்த representative தான் சொன்னதையே தான் சொல்லிக்கொண்டிருந்தார்.
***

இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், அந்த அமேரிக்க நபரின் திருமணம் நாளை மறுநாள். அதாவது நாளைக்கு அவருக்கு நிச்சயதார்த்தம். முதலில் இப்படி ஒரு சூழ்நிலையை அவரே உருவாக்கிக்கொள்ளலாமா? இவ்வளவு அசால்டா வரலாமா? வந்தாலும், இந்தியன் ஏர்லைன்ஸில் டிக்கெட் போடலாமா? அவர் மிகுந்த டென்சன் ஆகிவிட்டார். மீட்டிங் குழு, தங்களுக்கு நாளை காலை மீட்டிங் இருக்கிறது என்றும் கண்டிப்பாக காலையில் கோயம்புத்தூரில் இருக்க வேண்டும் என்று சொல்கிறது.

இதில் காமெடி என்னவென்றால்: மீட்டிங் மீட்டிங் என்று சொல்லிக்கொண்டிருந்த அந்த குழுவைப் பார்த்து கடுப்பான அந்த representative, உங்க மீட்டிங் பேப்பரை எடுத்துக் காட்டுங்கள் பார்ப்போம் என்று சொல்ல, தடுமாறிய அவர்கள், தேடித் துலாவி, ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினர்.

***
எங்களுக்கு மீட்டிங் இருக்கு சேட்டிங் இருக்கும் அதப்பத்தி உங்களுக்கு என்ன? நீங்க சீட்டிங் பண்ணாம எங்களை ஏதாவது ஒரு ப்ளைட்டில ஏத்திவிடுங்கப்பா என்றே தோன்றியது. கடைசியில் சண்டை போட்டு, மறு நாள் அதி காலை சிங்கப்பூரிலிருந்து பெங்களூர் கிளம்பும், இந்தியன் ஏர்லைன்ஸில் இடம் கிடைத்தது.

அந்த அமெரிக்க நபர், மறு நாள் காலை பதினோறு மணிக்கு பெங்களூரிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் விமானத்தில், தனது மாமாவின் மூலம் டிக்கெட் ஏற்பாடு செய்தார்.

நான், என் நண்பர்களின் மூலம், பெங்களூரிலிருந்து சென்னைக்கு செல்ல டிக்கெட் எடுக்க முற்பட்டேன். முடியவில்லை. சரி பெங்களூர் சென்று பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டேன்.

***

ஆனால் இந்தியன் ஏர்லைன்ஸ் மறு நாளும் லேட். ஒன்பதுரைக்கு பெங்களூர் செல்லவேண்டிய விமானம், சரியாக பத்தே முக்காலுக்கு பெங்களூர் சென்டடைந்தது. நானும் என் நண்பரும் அந்த அமேரிக்க நபரும்அடித்து பிடித்துக்கொண்டு வெளியேறினோம். அந்த அமேரிக்க நபருக்கு இன்னும் சரியாக பத்து நிமிடத்தில் ப்ளைட். அவர் முகம் வெளுத்துவிட்டது. ஒர் வகையில் அவர் லக்கி: அவரது லக்கேஜ் தான் முதலில் வந்தது. அடித்து பிடித்து ட்ராலியில் ஏற்றி வழியனுப்பி வைத்தோம். தூரமாக சென்று கைகாட்டி விட்டு சென்றார். அதற்கப்புறம் ப்ளைட்டை பிடித்தாரா இல்லியா என்பது தெரியவில்லை. பிடித்திருப்பார் என்றே நினைக்கிறேன். அதுவும் தாமதமாகத்தான் கிளம்பியிருக்கும். கண்டிப்பாக.

***

அடுத்தது லக்கேஜ் பிரச்சனை. என் கலீக்கினுடைய லக்கேஜ் வரவேயில்லை. அதில் தான் அவர் நகைகளை வைத்திருந்தார். பயந்து போன அவர், மானேஜரிடம் புகார் செய்ய, அவர் கண்டிப்பாக லக்கேஜ் உங்கள் வீடு தேடி வரும் என்று உறுதியளித்தார். விசயம் என்னவென்றால்: அவருக்கு போன இரண்டு முறையும் லக்கேஜ் ஒழுங்காக வந்து சேரவில்லை. இதை என்னிடம் பிரயாணம் முழுதும் புலம்பிக்கொண்டே வந்தார். சில சமயம் பயந்தால் அப்படியே ஆகி விடும் என்று சொல்வார்கள். உண்மையோ என்னவோ?!

அவருடைய மனைவிக்கு டாக்டர் அப்பாய்ன்ட்மென்ட் அன்று இருந்தது. இந்தியன் ஏர்லைன்ஸின் irresponsible தனத்தால் அவருடைய மனைவிக்கு அன்றைய அப்பாய்ன்ட்மென்ட் கேன்சல் செய்யப்பட்டது. அவர் மலேசிய தமிழர், மனைவியின் சிகிச்சைக்காகவே சென்னைக்கு புறப்பட்டார். மீண்டும் அந்த பிஸியான டாக்டரிடம் அப்பாய்ன்ட்மென்ட் வாங்குவதற்கு இரண்டு நாள் பிடித்தது. அதுவரை சென்னையில் இவர் எங்கு தங்குவார்? முதலில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு போக பணம் இந்தியன் ஏர்லைன்ஸின் தாத்தாவா கொடுக்கும்? சென்னையில் இரண்டு நாள் தங்குவதற்கு இந்தியன் ஏர்லைன்ஸின் தாத்தாவோட தாத்தாவா பணம் கொடுப்பார்?

***

எனக்கும் முக்கியமான ஒரு வேலை இருந்தது. அது என் வருங்கால மனைவியைப் பார்ப்பது. மற்றும் சென்னையில் நண்பர்களுக்கு பத்திரிக்கை வைப்பது. இவர்கள் அன்றைய காலை என்னை பெங்களூரில் இறக்கிவிட்ட பொழுது, சென்னைக்கு செல்லும் எல்லா விமானங்களும் சென்று விட்டன. அடுத்த விமானம் சாய்ங்காலம் ஐந்து மணிக்கு தான். அன்றைய மதியம் முழுவதும், 200 ரூபாய்க்கு ஒரு வெளங்காத பிரியாணியை ஏர்போர்ட்டிலே சாப்பிட்டு விட்டு, நேரடியாக மதுரைக்கு டிக்கெட் எடுத்து, அன்று சாயங்காலமே மதுரைக்கு வந்து சேர்ந்தேன். என் வருங்கால மனைவியையும் பார்க்கவில்ல, நண்பர்களுக்கு கல்யாணப்பத்திரிக்கையும் வைக்கவில்லை.

***

முடிஞ்சது முடிஞ்சு போச்சு. ஹதம் கதம்.

***

என்னுடைய மனைவியின் ப்ளைட் டிக்கெட்டை extend செய்ய இந்தியன் ஏர்லைன்ஸில் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். முதலில் எப்படியேனும் என்னை திருப்பி அனுப்பிவிடவே அந்த லேடி முயற்சி செய்தார். லைக், உன் மனைவியின் பாஸ்பொர்ட் வேணும் என்றார். எதற்கு என்று கேட்டதற்கு, அவர் சிங்கப்பூருக்கு வந்த தேதி வேண்டும் என்றார். எனக்கு தெரியும் என்றபொழுது, அது தவறாக இருக்கும் முடியாது என்றார். பிறகு ஒரு வழியாக பேசி ஒத்துக்கொள்ளவைத்த பிறகு, only cash என்றார்.

சிங்கப்பூரில் மூலைமுடுக்கெல்லாம் eNets (eNets என்பது debit card system போல) accept பண்ணும் பொழுது, இவர்கள் மட்டும் only cash என்பார்கள். சரி cash எடுத்துவிட்டு வருகிறேன், என்று மீண்டும் வந்த வழியே நடந்து சென்று cash எடுத்துவிட்டு வந்தேன்.

இந்த முறை வேறு பெண்மணி. எனக்கு முதல் லேடிக்கு நடந்த பேச்சுவார்த்தையை இவர் கவனித்துக்கொண்டுதான் இருந்தார்.

நான் சென்று உட்கார்ந்த உடன், என்ன வேண்டும் என்று கேட்டுவிட்டு, கூலாக சொன்னார்: 73 dollars. cash. only cash. only exact change. என் கிட்ட சில்லரை இல்லை என்று சொல்லிவிட்டு, சரியான சில்லரை இருந்தால் உட்கார், இல்லீன்னா, அப்படியே எழுந்து ஓடிப்போய்டு, என்பது போல ஒரு பார்வை பார்த்தார். (அவருடைய தோரணை இருந்ததே, அப்பப்பா!) Lucky me, என்கிட்ட சில்லரை இருந்தது.

***
என்னை இந்த பதிவை எழுதத் தூண்டியது அந்தப்பெண்ணின் மனப்போக்கு. I am master, you are servant என்பது போல. உண்மையில் யார் master, யார் servant? காந்தியடிகள் என்ன சொன்னார்? காந்தியடிகள் இருக்கட்டும்.

நான் 73 டாலர் கொண்டுவந்து அவரிடம் கொடுத்து டிக்கெட் extend பண்ண வருவதால் தான் அவருக்கு அந்த வேலை இருக்கிறது என்பதை அவர் மறந்து விட்டார். மறந்தே விட்டார்.

உண்மையிலே, சரியான சில்லரை கொடுக்கவேண்டும் என்பதை நான் ரொம்ப நாட்களுக்குப் பிறகு – டவுன் பஸ்ஸில் கண்டக்டர் சொல்லிக் கேட்டது – அன்று தான் கேட்டேன்.

நான் அந்த பெண்மணியிடம் கேட்டது ஒன்று தான்: இந்த சில்லரை (கேட்க்கும்) பழக்கத்தை இந்தியாவிலிருந்து இங்கு கொண்டுவந்து விட்டீர்கள் போல!

***

15 thoughts on “இந்தியன் ஏர்லைன்ஸ¤ம் சரியான சில்லரையும்!

 1. எத்தனை முறை பட்டும் நம்ம ஆளுங்க திருந்தாத திரும்ப திரும்ப Indian Airlinesல book பண்ணற வரைக்கும் அவங்கள திருத்த முடியாது! இதுக்கும் காந்தி சொன்னது தான் நியபகத்துக்கு வருது. Boycott!

  Like

 2. My flight from Singapore to Chennai was delayed for 1 1/2 days and i have decided not to travel by Indian Airlines anymore. And the Two Ladies in the Air India / Indian Airline office in Singapore – They don’t give respect to South indians.

  Like

 3. இதெல்லாம் சகஜம்ப்பா!!டைகர் விமானச்சேவையை உபயோகப்படுத்துங்களேன்.இது நாள் வரை இந்தியன் விமானச்சேவை எனக்கு காலை வாரவில்லையே?!

  Like

 4. இந்தியன் (ஏர்லைன்ஸ் ) எல்லா நாட்டு service ம் இப்படி தானாஇன்னொரு இந்தியன் (ஏர்லைன்ஸ் ) service time பாருங்க துபையில் இருந்து மதியம் 1.55 க்கு புறப்பட்டு க சென்னைக்கு இரவு 7.30 க்கு போய் சேர வேண்டும் உடனடியாக 8.30 க்கு புறப்பட வேண்டும் ஆனால் தினமும் தாமதமாக புறப்படும் இந்தியன் (ஏர்லைன்ஸ் ) நேரத்தையும் மாத்தின பாடு கிடையாது

  Like

 5. அட விடுங்க பாஸ். இது இன்னைக்கு நேத்தைக்கா நடக்குது. மாற்றம் கொண்டு வரனும்னா அது ஒருத்தரால மட்டும் முடியாதே நம்ம நாட்டுல. நீங்களும் சில பேரும் தான் இந்த மேட்டர்ல கேள்வி கேட்டீங்க. ஆனா பல பேர் கேக்காமயே வேற வழிய பாத்துகிட்டாங்க. இது மாதிரி diverse மக்கள் இருக்குற வரைக்கும் பொறுத்துக்கதான் வேணும்.ஆனா பதிவு சுவாரஸ்யம். பெரிசா இருக்குன்ற feel வரல.

  Like

 6. Once I travelled from Paris to Mumbai in Air India. I was about to get inside the flight and one official pulled me aside and offered a business class seat due to overbooking in economy class. I gladly accepted the offer much to the chagrin of my buddies. Now, I went to the seat. To my right was a young western lady in her twenties. After exchanging pleasentaries, were waiting for the flight to take off. It was raining heavily outside Charles De Gaulle and the flight was delayed. After some time, I felt somewhat wet on my right side. Similarly the lady also looking to her left side. Oh gosh, there was a leak in the roof and there is water dripping from above. Complaints to the crew yielded a response, “please adjust, it will stop once the flight takes off”. And it did after an hour. The lady besides me commented with a smirk, “I thought only flights in our country leaks”. I could only gave a sheepish smile back.

  Like

 7. Exactly like the problems I faced. நான், நான்கு முறை இ.ஏ உபயோகப்படுத்தி உள்ளேன், மூன்று முறை டிலே, ஒரு முறை கேன்ஸல்.கிண்டலுக்கு சொல்லல, நெஜமாவேதான்.இதற்கான தவறு, மேலிடத்தில் தான் உள்ளது. சரியான நிர்வாகத் திறமை இல்லாத மேலிடம். கேட் கீப்பர் என்ன பண்ணுவான் பாவம்?நீங்க ப்ளூல டைப் பண்ண எல்லாமே, செவப்புக்கு மாத்துங்க.இதப் பத்தி ஒரு பதிவு நானும் போடணும் 😉

  Like

 8. PRK: ஏன் நம்ப மக்கள் திருந்த மாட்டேன்றாங்கன்றதுக்கும் ஒரு காரணம் இருக்கு. ஏன்னா, இந்தியன் ஏர்லைன்ஸ விட்டாக்கா அந்த டைமுக்கு அவ்ளோ சீப்பா வேற எந்த ப்ளைட்டும் இல்லை. ஏன் jet airways காலை மட்டுமே இருக்கிறது? சிங்கப்பூர் ஏர்லைன்ஸோ இந்தியன் ஏர்லைன்ஸை விட டபுள் மடங்கு காஸ்டிலியாக இருக்கிறது. என்ன செய்ய முடியும்? அனானி: தென்னகத்து மக்களுக்கு மரியாதை தருகிறார்களா இல்லியா என்பதெல்லாம் இருக்கட்டும், மரியாதையை யார் கேட்டா? வேலையை மட்டும் கரெக்ட்டா செய்ய வேண்டியது தான? காசு கொடுத்து ஒரு பொருள் வாங்கினா, கடைக்காரன் மீத சில்லரை கொடுப்பானா மாட்டானா? யார் கண்டிப்பாக சில்லரை கொண்டுவான்னு சொல்லுவா? வியாபாரம் ஆவது முக்கியமல்ல, எனக்கு வேலை குறைந்தால் மட்டுமே போதும் என்று நினைப்பவர்கள் தான்.

  Like

 9. வடுவூர் குமார்: சும்மா சொல்லாதீங்க சார். உங்களுக்கு லேட் ஆகி லேட் ஆகி பழகிப்போயிருக்கும். என்றைக்காவது கரெக்ட் டைமுக்கு ப்ளைட்டை எடுத்திருக்கிறார்களா? யோசித்துப்பாருங்கள். கீழே கொடுத்திருக்கும் கமெண்டுகளில் ஒருவர் ப்ளைட் ஒழுகியது என்று சொல்லியிருக்கிறார். அடப்பாவிகளா? ஒருவருக்கும் ஒழுகினால் என்ன நூறு பேருக்கு ஒழுகினால் என்ன?வலர்: நேரத்தையும் மாற்ற மாட்டார்கள் எதையும் மாற்றமாட்டார்கள். அவர்களுக்கு என்ன வந்தது. இந்திய அரசு மெத்தனமாக இருக்கும் வரையில் இவர்கள் தங்கள் இஷ்டத்துக்குத்தான் இருப்பார்கள்.

  Like

 10. //நான் சென்று உட்கார்ந்த உடன், என்ன வேண்டும் என்று கேட்டுவிட்டு, கூலாக சொன்னார்: 73 dollars. cash. only cash. only exact change//உண்மையாகவே சில்லரையா (25 பைசா, 50 பைசா அல்லது 1 ரூபா இல்லாட்டி 10 சென்ட்,25 சென்ட் )தந்து இருக்க வேண்டும். இதுக்கு அவங்களை சொல்லி குத்தம் இல்லை. மேனெஜ்மென்ட் சரி இல்லை. எதாவது compaint பண்ணினாலும் எதுவும் action எடுக்க முடியாது. action எடுத்தா union வச்சு ப்ரச்சனை resolve ஆகி விடும்.ஏங்க எந்த government companyல் கஸ்டமருக்கு ஒரு சுமாரான ( சிறந்த சர்விஸ் இல்லைஇ) சர்விஸ் கிடைச்சுருக்கு.. இதுக்கு எல்லாம் ஓரே வழி இதை எல்லாம் இழுத்து மூடிவிட்டு எல்லாம் தனியார் மயமாக்கி விடவேண்டும். அதுக்கு தான் ஒதுக்க மாட்டேன்றார்கள், Union வச்சு தள்ளி போட்டு கொண்டே வருகிறார்கள்.

  Like

 11. ஆனந்த லோகநாதன்: வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. ம்ம்.. தனியார் மயமா? செய்யலாம். ஆனால் இந்திய அரசுக்கே, பெரும்பான்மை பங்கு இருக்கவேண்டும்.

  Like

 12. புரிகிறது – அவதிப்படுபவர்கள் நாம் தான். என்ன செய்வது – நானும் பல முறை இதில் சென்றிருக்கிறேன். தவறு நிகழ வில்லை. ஒரு சமயம் தவறுகள் இல்லாமல் செயல் படுவது விழுக்காடு குறைவா ? தெரியவில்லை. அவரவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் பேசுகிறோம். பொதுவாக இந்தியன் ஏர்லைன்ஸ் சேவை தரக் குறைவென்று ஒரு கருத்து இருக்கிறது. மற்ற ஏர்லைன்ஸ்களோடு ஒப்பு நோக்குகையில் உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் நிறை குறைகளைப் பார்க்கும் போது ஆப்பிளையும் ஆரஞ்சையும் ஒப்பு நோக்குவது போல் இருக்கிறது. என்ன செய்வது. நாம் தான் ஆப்பிளா ஆரஞ்சா எனத் தீர்மானித்து வாங்க வேண்டும்.

  Like

 13. ஒழுகுதுன்னு சொன்ன அதே அனானிதான். அந்த மேற்கத்திய பெண்ணின் நாட்டைச் சொன்னேனா? அவர் க்யூபாவைச் சேர்ந்தவர் ;-)ஏகபோகம் இருக்கும் எல்லா இடங்களிலுமே இந்த மெத்தனம் தானாகவே தலைதூக்கிவிடும். அது அரசாங்கமானாலும், தனியார் துறையானாலும். ஹூம்ம்ம்…., BSNL கூட நான் மல்லுக் கட்டிக்கொண்டிருக்கும் கதை ஒரு நெடுங்காவியம்! இத்தனைக்கும் தனியாரிடம் போட்டி இருக்கையிலேயே அவ்வளவு மெத்தனம்.இந்த வியாதிகெல்லாம் சீனச் சிகிச்சைதான் சிறந்தது போல.

  Like

 14. Most people do not know that IA and IA were once founded and efficently run by J.R.D.Tata right from 1930s upto 1956 when the COngress ‘socialist’ govt ‘nationalised’ them for better ‘service’ to the people and stop ‘concentration of wealth’.Results are as quoted above. First of all the attitude of public sector emplyees is ‘indifference’ to the customers and ‘no one can do a damn’ mindset. They simply can not be fired or even suspended for incometencey or laziness, etc.Unions are stong and the ‘communists’ will shout if there is any move to deregulate labour policy. hence…even worse is the plight of MTC bus commuters in Chennai, etc who have to put with terrible shortage of buses and rickty and leaking buses. Mu.Ka nationalised them in 1969 and until then TVS, LGB, etc offered excellent services. Until labout act is modified and hire and fire policy is adopted (as in unorganised and tiny units), employees performance and accountablity of all govt organisations and companies will not improve. better if IA and AI are privatised ; all staff fired and then re-hired on contract basis with stingent review policy.But there is little chance for all that. and we can continue moaning and complaining…

  Like

 15. BSNL ஆபீஸ்னு நம்பர் குடுத்தாங்க கால் பண்ணினா LIC ஆபீஸ் னு சொல்றாங்க எங்க போய் முட்டிக்கிரதுன்னு தெரியல அதுமாதிரித்தான் இதுவும் இந்தியால இதெல்லாம் சாதாரணமப்பா……..

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s