இந்தியன் ஏர்லைன்ஸ் பற்றிய complaints blog ஒன்று create செய்திருக்கிறேன். இந்தியன் ஏர்லைன்ஸால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கே சென்று தங்களது புகார்களை பதிவு செய்யலாம். நிறைய புகார்கள் இருக்கும் பட்சத்தில் யாரேனும் முக்கிய புள்ளி அல்லது ரிப்போர்டருக்கு அனுப்பலாம். இது ஒரு முயற்சியே.
புகார்களை மேலதிகாரிகளுக்கும் அவர்களுக்கு மேல் இருக்கும் அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தவேண்டும் என்பதே இந்த புகார் பக்கத்தின் நோக்கம். இந்தியன் ஏர்லைன்ஸ் தொடர்ந்து இந்த மாதிரி தவறுகளை செய்துகொண்டிருக்க முடியாது.
(நான் செல்லவிருந்த விமானம் ரத்து செய்யப்பட்ட அன்று, மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த நான், அன்று அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் சிலரிடம், கையழுத்து வாங்கி வைத்திருக்கிறேன். மேலும் பெரும்பாலன நபர்களின் பாஸ்போர்ட் நம்பர்களும் இருக்கின்றன. புகார்கள் அதிகம் வரும் பட்சத்தில், இதையும் சேர்த்து வைத்து அனுப்பலாம்.)
இதை விட்டு விட்டு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அல்லது டைகர் ஏர்லைன்ஸில் செல்வது தானே என்று கேட்பவர்களுக்கு, முடிந்த வரை இந்தியன் ஏர்லைன்ஸை மாற்ற முயற்சிப்போம். முடியாவிடில் பரவாயில்லை. நமக்கு ஏதும் நட்டமில்லை. நான் இந்த பதிவை டைப் செய்த நேரமும், zohoவை உபயோகித்து புகார் பக்கம் தயாரித்த நேரமும் மட்டுமே வீணடையும். பரவாயில்லை. இல்லையென்றால் மட்டும் என்ன செய்திருக்கப்போகிறேன்.
அடித்தால் மாங்காய் இல்லையேல் கல். நமக்கு பெரிதாக நட்டம் ஒன்றும் இல்லை. ஆனால் நமது புகார்கள் செவிமெடுக்கப்பட்டால் இந்தியன் ஏர்லைன்ஸ் திருந்த வாய்ப்பிருக்கிறது.
உங்களது ஈமெயில் ஐடியை மற்ற யாருக்கும் தெரியப்படுத்த மாட்டேன். இறுதியாக மொத்த புகார்களும் சமர்பிக்கப்படும் போது மட்டுமே, உங்கள் ஈமெயில் சேர்த்து அனுப்பப்படும்.
புகார் பதிவு பக்கத்திற்கு இங்கே செல்லவும்:
பதியப்பட்ட புகார்களைப் பற்றி தெரிந்து கொள்ள இங்கே செல்லவும்.
உங்கள் நண்பர்களுக்கும் இந்த புகார் பக்கத்தின் லிங்க் கொடுக்கவும்.
Air India/Indian Airlines Customersக்கு இந்த மாதிரி நிறைய சோக கதைகள் இருக்கு. கொஞ்சம் இந்த link க check pannunga. you will find around 300 stories on Air Indiahttp://airindiastory.blogspot.com/
LikeLike
//ஆனால் நமது புகார்கள் செவிமெடுக்கப்பட்டால் இந்தியன் ஏர்லைன்ஸ் திருந்த வாய்ப்பிருக்கிறது//அங்கே என்ன மனிதர்களா வேலை செய்கிறார்கள்?எருமை மாடுகள் கிட்டெ போயி கம்ப்ளைண்ட் பண்ணா ஒண்ணும் நடக்காது.இருந்தாலும் உங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன்.
LikeLike