அரசியலுக்காக ஆட்டம் போடாதீர்கள்!

நான் பெரும்பாலும் வேறு தளங்களிலோ அல்லது நியூஸ் பேப்பரிலோ வெளியான செய்தியையோ கட்டுரையையோ அப்படியே copy-paste செய்ததில்லை. தொடுப்பு மட்டுமே கொடுப்பது வழக்கம். இந்த முறை – ஒரு செய்தியை (சரியாக சொன்னால் ஒரு அறிக்கையை) அப்படியே இங்கே cut-copy-paste செய்கிறேன்.

Hats-Off Rajini!


அரசியலுக்காக ஆட்டம் போடாதீர்கள்- கர்நாடகத்துக்கு ரஜினி சூடு

நான் பெரிதாக மதிக்கிற கர்நாடக அரசியல்வாதிகள் இன்று அரசியல் ஆதாயத்துக்காக ஆட்டம் போடுகிறார்கள். அவர்களை எச்சரிக்கிறேன்… அரசியலுக்காக ஆட்டம் போடாதீர்கள்; அதன் விளைவு மோசமாக இருக்கும். மக்கள் உங்களைச் சும்மா விடமாட்டார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

தமிழ்த் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதியில் பேசிய ரஜினி,

இது ஒரு வித்தியாசமான சந்திப்பு என்றுதான் சொல்ல வேண்டும். மிகவும் அதிகமாகப் பேசி புகழ் பெறுவதும் கஷ்டம், குறைவாகப் பேசி புகழ் பெறுவதும் கஷ்டம். இங்கே பேசியவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டார்கள். நியாயம்தான். நடந்துள்ள விஷயங்கள் அனைத்தும் மனதுக்கு மிகவும் வேதனையைத் தருவதாக உள்ளன.

குறிப்பாக கர்நாடகாவில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டதற்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் மக்கள் மீதான வன்முறைக்குக் காரணமானவர்களைக் கண்டிக்கிறேன்.

பல ஆண்டுகளுக்கு முன்பே ஓகேனக்கல்லின் ஒரு பகுதி கர்நாடகாவுக்கும், மறுபகுதி தமிழகத்துக்கும என ஒதுக்கப்பட்டது. தனக்காக ஒதுக்கப்பட்ட பகுதியிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ள தமிழகத்தை எதிர்ப்பது எந்த விதத்தில் நியாயம்… உதைக்க வேண்டாமா, இதை எதிர்ப்பவர்களை.
நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது. அரசு, சுப்ரீம் கோர்ட் எல்லாம் இருக்கிறதா… மக்கள் யார் பேச்சைக் கேட்கிறார்கள்… யார் சொன்னால் கேட்பார்கள்… புரியவில்லை.

என்ன நடந்தாலும் கைகட்டி வேடிக்கைப் பார்க்க எதற்கு அரசாங்கம்? இந்த வட்டாள்… நாராயணகவுடாவை எல்லாம் விடுங்கள்.

கொஞ்சம் பெரிய தலைவர்கள் ரேஞ்சுக்குப் பேசுவோம்.

கர்நாடகத்தைச் சேர்ந்த நான் மிகவும் மதிக்கிற ஒரு தலைவர் அவர். ஒரு பெரிய கட்சியின் சார்பில் முதல்வராகக் கூட இருந்தவர். சில தினங்களுக்கு முன் அவர் கர்நாடக மக்களைத் தூண்டிவிடும் விதத்தில் பேசியிருக்கிறார். இதை அந்தக் கட்சி சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
காரணம் அங்கே விரைவில் வரப்போகிற சட்டசபைத் தேர்தல். அரசியல் ஆதாயத்துக்காக அப்படிச் செய்கிறார்கள். மக்கள் என்ன முட்டாள்களா.. அவர்களுக்கு ஒன்றுமே தெரியாதா…?

எல்லாவற்றையும் மேலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் கடவுளுக்குச் சமமானவர்கள் மக்கள். அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது. உண்மையாகப் பேச வேண்டும். மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்து கொள்ள வேண்டாம்.

சட்டப்பூர்வமாக நம் தமிழகத்துக்கென்று தரப்பட்ட உரிமையை மறுப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?

மக்களுக்கு ஒரு நாள் நீங்கள் பதில் சொல்லியே தீர வேண்டும். நான் கர்நாடகத்திலிருக்கும் மதிப்புக்குரிய தேவ கெளவுடா, குமாரசாமி, எடியூரப்பா, சித்தராமையா போன்றவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். அரசியலுக்காக ஆட்டம் போடாதீர்கள்… அதன் விளைவு மோசமாக இருக்கும். மக்கள் உங்களைச் சும்மா விடமாட்டார்கள்.

நேற்று கூட மும்பையைச் சேர்ந்த ஒரு பெரிய தலைவர் என்னிடம் சொன்னார், கலைஞரால்தான் பிரச்சினை இவ்வளவு பெரிதாகிவிட்டது என கிருஷ்ணா கூறி வருவதாக…

நான் கலைஞருக்கும் சரி மற்ற தலைவர்களுக்கும் சரி… ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இது நகத்தால் கிள்ளி எறியப்பட வேண்டிய விஷயம். அதற்கு இதைவிட்டால் சரியான நேரம் கிடைக்காது. இப்போது அதைச் செய்யத் தவறிவிட்டால் பின்னர் கோடாலி கொண்டு வெட்டினாலும் பிரச்சினை தீராது.

உங்களது இந்த அரசியல் விளையாட்டில் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான். எனவே இம்மாதிரி உணர்வுப்பூர்வமான விஷயங்களை அரசியலாக்காதீர்கள் என்றார் ஆவேசமாக.

ரஜினிகாந்த் முதல் முறையாக கர்நாடகத்திற்கு எதிராக மிகவும் கோபமாக பொங்கி எழுந்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

6 thoughts on “அரசியலுக்காக ஆட்டம் போடாதீர்கள்!

  1. குசேலன் படம் ப்ரோடச்சன் ஸ்டேஜ் ல இருப்பதும் ஒரு காரணமாக கூட இருக்கலாம்… //கர்நாடகத்தைச் சேர்ந்த நான் மிகவும் மதிக்கிற ஒரு தலைவர் அவர். ஒரு பெரிய கட்சியின் சார்பில் முதல்வராகக் கூட இருந்தவர். சில தினங்களுக்கு முன் அவர் கர்நாடக மக்களைத் தூண்டிவிடும் விதத்தில் பேசியிருக்கிறார்.//… நம்ம மாதிரி சாமானியனுக்கு பேர சொன்னாலே கர்நாடக முதலமைச்சர் தெரியாது… இதுல ஆந்தையார் மாதிரி சொல்லுகிறார்…. சரி விடுங்கப்பா… அரசியலில இதெல்லாம் சகஜம்… யாரும் யாரையும் பகைச்சுக்க மாட்டாங்க…

    Like

  2. Mr.மண்வெட்டியான்: யாருக்கு தான் தன்னலமில்லை? நாம் இந்த வலைப்பூக்களை எல்லாம் எழுதி தள்ளி கிழித்துக்கொண்டிருக்கிறோமே, எதற்காக? மக்களுக்கு நான்கு நல்லது சொல்லி அவர்களை கடைத்தேற்றீ விட வேண்டும் என்பதற்காகவா? தனிமையில் நடுநிலைமையோடு சிந்தித்து பாருங்கள் மண்வெட்டியான். எல்லாரிடமும் தன்னலம் இருக்கிறது. அந்த தன்னலத்தில் பொதுநலம் இருக்கிறதா என்று பார்ப்போம்.

    Like

  3. நடிகர்களில் ரஜினி கொஞ்சம் வித்தியாசமானவர்.எளிமையானவர்,கடவுள் நம்பிக்கை உண்டு என்று தைரியமாக வெளிப்படையாக சொல்லும் நல்ல மனிதர்.(கருப்புப் பணவிவகாரம்,நடிகர்களுக்கு உள்ள சில துறை சார்ந்த குற்றச்சாட்டுகள்-ஆகியவகைகளை -தவிர்க்கவும்).”குணம் நாடி குற்றமுநாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளள் “”நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையால் ஆளப் படும்”—————————–நல்லவர் ரஜினி அரசியலுக்கு வரும் பொன்னாளின் தொடக்கமா இந்த தமிழ் உணர்வுப் பேச்சு ———————————–

    Like

  4. எழில்: உங்கள் வாக்கு உண்மையாகட்டும். சிதறுகாய் போட்டுவிடலாம்! :))

    Like

  5. கருத்து சொல்வதெல்லாம் இருக்கட்டும் முத்து. முதலில் ரஜினி ஒரு நல்ல தமிழ் வாத்தியாரிடம் தமிழ் பேச கற்றுக்கொள்வது நலமாக இருக்கும் என்று நம்புகிறேன்.அன்றிலிருந்து இன்று வரை உனது ரஜினி பற்று குறையாமல் இருக்கிறது :-Dபி.கு: உனக்கு கல்யாணம் ஆகிவிட்டதா?? வாழ்த்துக்கள்!! பெண் பெயர் ‘பி’ ல் ஆரம்பித்து ‘யா’வில் முடியுமா?? :-))))))பி.கு வின் பி.கு: எனது பின் குறிப்பில் எந்த உள்குத்தும் இல்லை, அது வெறும் எ(ண்/ன்) ஜோதிட கணிப்பு மட்டுமே.

    Like

Leave a comment