எஸ் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு,
நான் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நீங்கள் எனக்கு கிட்டத்தட்ட ஒரு விதமான உந்துசக்தி. எழுதுவதற்கு நீங்கள் எனக்கு குரு. உங்கள் கதாவிலாசத்தை படித்த பிறகே, ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் நிறைய கதைகளும் அனுபவங்களும் புதைந்து கிடக்கின்றன என்பதையும், அதை மிகச்சரியாக அந்த நினைவுகளை தட்டியெழுப்பி ரசிக்கும் படியாக எழுதலாம் என்பதையும் அறிந்துகொண்டேன். தமிழ் எழுத்துலகையும் தமிழ் வாசகர்களையும் ஒரு படி மேலே எடுத்துச்சென்றவர்களுள் நீங்களும் ஒருவர் என்பதை யாரும் மறுக்கமுடியாது. உங்களது நெடுங்குருதி எனக்கு மிகவும் பிடித்தமான நாவல்களுள் ஒன்று. என் நினைவில் மட்டுமல்ல தமிழ் எழுத்துலகில் அந்த நாவலுக்கு என்றென்றும் மிக முக்கியமான ஒரு இடம் உண்டு. அப்படிப்பட்ட ஒரு எழுத்தாளர், தாவரங்களின் உரையாடல் என்கிற மிக நுட்பமான ஒரு சிறுகதையை படைத்த ஒரு இலக்கியவாதி, நான் மிகுந்த உயரத்தில் வைத்து மதிக்கும் ஒரு நபர், என் எழுத்துக்களை ரசித்து பாராட்டுவது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மேலும் எழுதவேண்டும் (பிற பதிவர்கள்: இனி ரொம்ப மொக்க போடுவான் போலிருக்கே!) என்கிற எண்ணத்தை கொடுக்கிறது. நாங்கள் (பதிவுலக நண்பர்கள்) தினமும் அலுவலக வேலைகளை முடித்துவிட்டு, வீட்டுக்கு வந்தபிறகு, சில வீட்டு வேலைகளையும் கவனித்துவிட்டு, கிடைக்கிற சில மணித்துளிகளில் டீவி பார்த்து, குமுதம் ஆனந்தவிகடன் போன்ற பத்திரிக்கைகளையும், தீராநதி போன்ற இலக்கிய பத்திரிக்கைகளையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, தினப்பத்திரிக்கைகளையும் பார்த்துவிட்டு, பிற பதிவுகளையும் பார்த்து, சினிமாவும் பார்த்து, மறுநாள் காலை ஒன்பது மணிக்கு அலுவலகத்துக்கு செல்லவேண்டும் என்பது நினைவில் இருந்தும், இரவு மூன்று மணி வரை கண் முழித்து எழுதும் பதிவுகளை, உங்களைப் போன்றவர்களிடமிருந்து கிடைக்கும் பாராட்டுக்கள் தான், அர்த்தமுள்ளவைகளாக மாற்றுகின்றன. உங்கள் பாராட்டு எனக்கு மனநிறைவை அளிக்கிறது. நான் ரசிக்கும் படியாகத்தான் எழுதுகிறேன் என்பதை எனக்கு சுட்டிக்காட்டியது. நான் எழுதிய பல பதிவுகளை நான் உங்கள் பின்னூட்டத்திற்கு பிறகு எடுத்து வாசித்து சீர் தூக்கி பார்த்தேன். Its like self-evaluation. Self Analysis. நன்றி. மிக்க நன்றி. மீண்டும் வருக. நிறைகளை மட்டுமில்லாது, குறைகளையும், முடிந்தால் உங்கள் பணிகளுக்கு மத்தியில் நேரம் இருந்தால், சுட்டிக்காட்டுங்கள்.
இப்பொழுது கூட திராநதியில் நீங்கள் எழுதிவரும் “சித்திரங்கள் விசித்திரங்கள்” பகுதியை படித்துக்கொண்டுதான் இருந்தேன். இவ்வாறான விசயங்களை (ஓவியங்களை பற்றி, அயல் சினிமா, துணையெழுத்து, தேசாந்தரி ) எழுதுவதற்கு என்னென்ன படிக்கிறீர்கள்? இவ்வாறான ஒரு எல்லைகள் விரிந்த ஒரு வாசிப்பு எப்படி சாத்தியமாகிறது? எங்களுக்கும் கொஞ்சம் சொல்லிக்கொடுங்களேன். தாங்கள் படித்த புத்தகங்களையும், புது விசயங்களையும் (like கற்றதும் பெற்றதும்) தமிழ் வாசகர்களுக்கு உங்களை போன்ற எழுத்தாளர்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் அவ்வாறன விசயங்களை நீங்கள் எப்படி தேடிப்பிடித்து படிக்கிறீர்கள் என்பதையும் எங்களுக்கு கற்றுத்தாருங்கள். Teach us how to fish!
நெகிழ்ச்சியுடன்,
MSV Muthu
நேற்று காலையில் தொடங்கிய தேசாந்திரியை மாலையில் முடித்தேன். கையில் இருப்பது யாமம். அதை தொடங்க முடியாமல்அவ்வூர்களில் நானும் அலைந்துக் கொண்டு இருக்கிறேன். ராகுல சாங்கிருதயானுக்கு பிறகு இன்னும் ஒரு அருமையான ஊர் சுற்றி.நெடுங்குருதி என்னால் படிக்க இயலவில்லை. ஆரம்ப பத்து பக்கங்களுடன் நிற்கிறேன். உப பாண்டவத்தில் அறிமுகமான எஸ்.ராவின் எழுத்துக்கு நானும் ஒரு ரசிகை. தொடர்ந்து பேசலாம்.பி.கு முத்து! பதிவுகளை சிறு பத்திகளாய் பிரித்துப் போட்டால் படிக்க செளகரியமாய் இருக்கும்.
LikeLike
அன்புடன் உஷா அக்கா: நெடுங்குருதி முதல் ஐம்பது பக்கங்கள் நகர்த்துவது சிரமமாக இருக்கும்.முடிவில் சில கண்ணீர் சொட்டுக்கள் நிச்சயம்.படித்து பாருங்களேன்.!
LikeLike
அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை. ஒரு விதத்தில் நான் ஆ.வி.க்கு தான் நன்றி சொல்லனும். அதில் தான் அவருடைய தொடரான “துணையெழுத்து” படித்து அவர் எழுத்தின் மீது எனக்கு ஆர்வம் உண்டானது.அன்புடன்,நாகை சங்கர்.
LikeLike
உஷா: வருகைக்கு நன்றி. கண்டிப்பாக நெடுங்குருதி படியுங்கள். ஆரம்பம் கொஞ்சம் அலுப்பாக இருந்தாலும் பக்கங்கள் நகர நகர ஜன்னோலர சீட் போல குளிர்ந்த காற்று உங்களை அலுப்பின்றி கடத்திசெல்லும். இப்ப தான் யாமம் படித்து முடித்தேன். நிறைய யோசிக்க வேண்டியுள்ளது. நானும் நிறைய நாட்களாக இதை (பதிவுகளை பிரித்து சிறிது சிறிதாக போடுவது) பற்றி யோசித்துக்கொண்டுதான் இருந்தேன். ஆனால் சின்னதாக பதிவு போட்டால் என்னவோ போல இருக்கிறது!!!! கண்டிப்பாக சிறிது சிறிதாக பதிவுகளை பதிவு செய்கிறேன்.சிங்.செயகுமார்: வருகைக்கு நன்றி.நாகை சங்கர்: உங்களுக்கு மட்டுமில்லை எனக்கும் ராமகிருஷ்ணன் அவர்களை பழக்கப்படுத்தியது ஆவி தான். “இருட்டு ஒரு நீருற்றைப் போல எல்லா திசைகளிலும் கொப்பளித்துக் கொண்டிருந்தது” என்று அவரைத்தவிர யாரால் எழுத முடியும்? வருகைக்கு நன்றி.
LikeLike
முத்தூ சார்,பாரா பிரித்துப் போடுங்கள் என்று சொன்னேன். சின்ன பதிவாய் போட சொல்லவில்லை. யாமம் நேற்றுதான்முடித்தேன். இரவு என்டிடீவியில் லாம்டன் பற்றி ஒரு டாக்குமெண்ட்ரி.பதிவு போட்டு விட வேண்டியதுதான் :-)சிங், நெடுங்குதியை தூக்கிக் கொண்டு போனவனைத் தேடிக்கொண்டு இருக்கிறேன் 🙂
LikeLike
உஷா: லாம்டன் பற்றிய டாக்குமென்டரியா கண்டிப்பாக அதையும் இணைத்து பதிவு போடுங்கள். நானும் யாமம் படித்து முடித்து விட்டேன். ஆனால் எனக்கு பிடித்திருக்கிறதா இல்லையா என்கிற மனக்குழப்பத்தில் இருக்கிறேன். என் நண்பர் ஒருவர் படித்துக்கொண்டிருக்கிறார். அவர் படித்து முடித்தவுடன் விவாதம் செய்துவிட்டு பதிவு போடலாம் என்றிருக்கிறேன். பதிவு போடாமல் விட்டுவிடவும் வாய்ப்பிருக்கிறது.
LikeLike