இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் : சர்வதாரியும் அப்பாவி தமிழனும்

வலைப்பூ நண்பர்களுக்கு என் இனிய “சர்வதாரி” தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.ஆமாம் சர்வதாரி என்றால் என்ன? “எல்லாவற்றையும் தாங்குபவன்” என்பதா? அப்படீன்னா சர்வதாரி என்றால் “அப்பாவி தமிழன்” என்று தான் அர்த்தம் வருகிறது?! அடடே ஆச்சரியக்குறி! ச(ஸ)ர்வதாரி என்பது தமிழ் பெயர் போல தெரியவில்லையே?

எந்த பழக்கவழக்கமும் தொடர்ந்து மூனு மாசத்துக்கு இருந்தாத்தான் அதை பழக்கமுன்னே சொல்லனும்னு சொல்லுவாங்க. அதாவது இன்னீலேருந்து புதுசா காலையில் எழுந்து ஜாக்கிங் போறோமுன்னு வெச்சுக்கோங்க, நீங்க அத “நான் காலையில் எழுந்து தினமும் ஜாக்கிங் போவேனாக்கும்” என்று உடனே தம்பட்டம் அடிக்க முடியாது. கூடாது. ஜாக்கிங் நீங்க மூனு மாசத்துக்கு தொடர்ந்து போனாத்தான், அத பழக்கம்னு சொல்லலாம். வழக்கமானால் தான் அது பழக்கம்.

அது போல, தமிழ் புத்தாண்டு மாற்றம், போன்ற ஆணைகளை, உண்மையிலே கடைப்பிடிக்கவேண்டுமென்றால், அடுத்த ஆட்சி பதவியேற்று அப்பொழுதும் இந்த ஆணை நீடிக்கிறதா என்று பார்க்கவேண்டும். இதுவும் நம்ப கண்ணகி அவர்கள் படும் அவஸ்தை போல ஆகிவிட வாய்ப்பிருக்கிறது. கண்ணகியைப் போல நாமும் அரசியல் கட்சிகளுக்கு இடையே கிடந்து அல்லாட வாய்ப்பிருக்கிறது.

பள்ளி கூடங்களில் இருக்கும் பாடத்திட்டத்தை மாற்றவேண்டுமே? வருடம் தையிலிருந்தா தொடங்கவேண்டும்? இந்த பஞ்சாங்கம் கணிப்பதை பற்றியெல்லாம் எனக்கு தெரியாது. அதில் இந்த மாசக்கணக்கெல்லாம் இருக்கிறதா என்ன?

மேலும், எனக்கு காலையிலயிருந்து ரொம்ப குழப்பமாகிருச்சு. அதாவது நான் கறி சாப்பிடாமல் கட்டுப்பாடாக இருக்கும் நாட்கள் வெகு குறைவு. அதில் ஒன்று தமிழ் புத்தாண்டு. இன்று மனைவி வேறு ஊரில் இல்லை. எழுந்ததோ லேட். சும்மா burger சாப்பிட்டுவிட்டு வரலாம் என்றால், அதில் கறி இருக்கும். அரசு வேறு இன்று தமிழ் புத்தாண்டு இல்லை என்று சொல்லிவிட்டது. என்ன செய்வது? (ரொம்ப முக்கியம்) கொள்கையை காற்றில் பறக்கவிட்டுவிடலாமா? கட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக நம்மையும் அவர்களைப் போல மாற்றிவிடுவார்கள். யாதும் ஊரே. யாவரும் கொள்கையற்றவர்கள்.

சமீபத்தில் MIDS ஐ சேர்ந்த நாகராஜன் என்பவர் விவசாயத் தற்கொலைச் சாவுகள் குறித்து மேற்கொண்ட ஆய்வின் முடிவில் 89362 பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார். 2002க்கு பிறகு 30 நிமிடத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்வதாக புள்ளிவிபரம் தெரிவித்திருக்கிறார்.
தீராநதி பக்கம் 13 ஏப்ரல் 2008

தமிழ் புத்தாண்டை தை மாசத்துக்கு மாற்றிவிட்டால் போதுமா விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை குறைத்துக்கொள்வார்களா? “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாலுடன் பிறந்த வாயப்பன்” என்று தமிழர்கள் குறித்து நாஞ்சில் நாடன் சொன்னது எனக்கு இப்பொழுது ஞாபகம் வருகிறது.

7 thoughts on “இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் : சர்வதாரியும் அப்பாவி தமிழனும்

  1. ///”கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாலுடன் பிறந்த வாயப்பன்” என்று தமிழர்கள் குறித்து நாஞ்சில் நாடன் சொன்னது எனக்கு இப்பொழுது ஞாபகம் வருகிறது.///:))வாலுடன் பிறந்த வாயப்பருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்

    Like

  2. அரசியல்வாதிகள் அடுத்த ஆட்சி பற்றி மட்டும் சிந்திப்பார்கள்.அதுவும் தமிழகத்தில் இலவசங்களின் ஆனந்த நடனத்தின் வரலாற்று வெற்றி கண்டு(இடைத்தேர்தல்கள் தந்திட்ட உறிதி செய்யப்பட்ட வெற்றிகள் சட்டமன்ற,உள்ளாட்சி,பிற தேர்தல்கள் ஆகியவற்றின் முடிவுகள்).வரும் தேர்தல் களில் எங்களுக்கு வாக்கு அளித்து நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எல்லோருக்கும் 3 வேளை வயிறார அருசுவை உணவு,வருடத்த்க்கு 6 set நாகரிக உடைகள்,வசிக்க வசதியான வீடு,ஒரு டாடா நானோ மகிழுந்து ,அனைத்து கடன் களும் ரத்து,என்று எல்லா கட்சிகளும் போட்டி போட்டு சொன்னாலும் அதையும் தாங்கும் நம் புண்ணிய பாரதம்.எழுதி வைத்து கொள்ளுங்க்ள்————————–இலவசத் திட்டங்கள் முழுமையாக நிறுத்தப்பட்டு நலிவடைந்த உன்மையான எழை மக்கள்(விவசாயிகள்,நெசவுத் தொழிலாளர்கள்,தினக்கூலிகள்,மீனவர்கள்,ஒடுக்கப்பட்ட மக்கள்) அடையாளம் கண்டு அரசின் நலத்திட்டங்கள் சென்றடையும் அதிசயம் நடக்குமா!.(தேசப் பிதாகாந்தி கண்ட ராம ராஜ்யம் மலருமா?)அப்பாவிகளின் கண்ணீர் துடைக்கப்படும் நற்செயல் நனவாகுமா!. சர்வதாரி ஆண்டு “எல்லாவற்றையும் கொடுக்குமா?”

    Like

  3. சரவணகுமார்: வாலுடன் பிறந்த வாயப்பருக்கு நன்றிகள்! :)எழில்: நீங்கள் முதலில் சொன்னது வேண்டுமானால் நடக்க வாய்ப்பிருக்கிறது. ஒரு புனைக்கதையாகக் கூட நீங்கள் எழுதலாம். ஆனால் இரண்டாவதாக சொன்னது கண்டிப்பாக நடக்க வாய்ப்பில்லை. நம்ம விதி!

    Like

  4. //அது போல, தமிழ் புத்தாண்டு மாற்றம், போன்ற ஆணைகளை, உண்மையிலே கடைப்பிடிக்கவேண்டுமென்றால், அடுத்த ஆட்சி பதவியேற்று அப்பொழுதும் இந்த ஆணை நீடிக்கிறதா என்று பார்க்கவேண்டும்.//இதில் பார்பதற்கு என்ன இருக்கிறது கண்களை மூடிக்கொண்டு சொல்லலாம் “நீடிக்காது” என்று!இந்த பதிவை பின்னூட்டங்களுடன் பார்க்கவும்…http://maalaimayakkam.blogspot.com/2008/04/blog-post.html

    Like

  5. சரி சித்திரையில் விட்டால் மட்டும், குறைந்துவிடுமா..மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு கேள்விப்பட்டியிருக்கேன். பக்கத்திலிருப்பவன் மொட்டையோட, உங்க முழங்காலுக்கு முடிச்சு போடுவீங்க போலிருக்கே..நடத்துங்க..நடந்துங்க///தமிழ் புத்தாண்டை தை மாசத்துக்கு மாற்றிவிட்டால் போதுமா விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை குறைத்துக்கொள்வார்களா? “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாலுடன் பிறந்த வாயப்பன்” என்று தமிழர்கள் குறித்து நாஞ்சில் நாடன் சொன்னது எனக்கு இப்பொழுது ஞாபகம் வருகிறது///

    Like

  6. ezhil said… (தேசப் பிதாகாந்தி கண்ட ராம ராஜ்யம் மலருமா?)************ராம ராஜ்யமா? அவரு காட்டுலே கிடந்தே கழுவேறிப் போனாறு. இதுல எங்கெய்யா ராஜ்யம் கண்டாரு? அவரு ஆட்சியில உள்ள ஏதாவது ஒன்னு ரெண்டு சட்ட திட்டங்களை எடுத்துப் போடுங்கய்யா பார்ப்போம் என்னத்த ராஜ்யம் செய்தாருன்னு.

    Like

  7. //மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு கேள்விப்பட்டியிருக்கேன். பக்கத்திலிருப்பவன் மொட்டையோட, உங்க முழங்காலுக்கு முடிச்சு போடுவீங்க போலிருக்கே..நடத்துங்க..நடந்துங்க//நீங்கள் இன்னும் கருத்தை புரிந்து கொள்ளவில்லை TBCD. கேள்வி என்னவென்றால் உயிர் போகும் பிரச்சனை இருக்கையில் மயிர் போகும் பிரச்சனையை கட்டிக்கொண்டு அழுவானேன்??

    Like

Leave a comment