ஸீரோ டிகிரி : ஆப்பிரிக்க எழுத்தாளர் டபாகாவும், பின் டபாகாத்துவமும், non-perpendicular, pythagoras சிந்தனையும்.

oh my god! oh my god! oh! my! god! வேறென்ன சொல்லமுடியும்? எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி இந்த நாவலை(?!) தமிழகம் தாங்கிக்கொண்டுள்ளது? எப்படி இவரது இந்த வகையான எழுத்தை இலக்கியம் என்று ஏற்றுக்கொள்ள முடிகிறது? எப்படி இந்த நாவல் சிங்கப்பூர் நூலகத்தில் இவ்வளவு ஈசியாக யாவரும் எடுத்து படிக்கும் படியாக வைக்கப்பட்டிருக்கிறது? முற்றிலும் குரூரங்களையே கற்பிக்கும் இந்த புத்தகத்தின் கடைசி பக்கங்களில் என் செல்ல குட்டி இளவரசிக்கு என்று நான்கு கடிதங்களை எழுதி தான் கற்பித்த குரூரங்களை கலைய முற்படுகிறார் சாரு நிவேதிதா.

கட்டமைப்பு என்கிற வார்த்தையை நிறைய மக்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். சிற்றிலக்கியவாதிகள் (?! இந்த வார்த்தையையும் சேர்த்துக்கொள்ளுங்கள். எனக்கே தொற்றிக்கொண்டுவிட்டது) அதிகப்படியாக உபயோகிக்கும் வார்த்தை “கட்டமைப்பு” என்பதாகும். இவற்றையெல்லாம் படிப்பதாலேயோ என்னவோ என் நண்பரும் “கட்டமைப்பு” என்கிற வார்த்தையை உபயோகப்படுத்துகிறார். கட்டமைப்பு என்கிற சொல்லைக் கேட்டாலே எனக்கு என்னவோ போல வருகிறது. “புராதான தாயாக விரும்பிய நவீன தந்தை” என்கிற ஜமாலன் அவர்களின் தீராநதியில் வெளி வந்த கட்டுரையில் எத்தனை முறை கட்டமைப்பு என்கிற வார்த்தை வந்திருக்கிறது என்பதை கவனித்து பாருங்கள். Is it a fashion? இதற்கு முன்னர் யாரும் கட்டுரைகள் எழுதவில்லையா? பின்நவீனத்துவம் அடுத்த வார்த்தை. எதற்கெடுத்தாலும் போர்ஹே, கொர்த்தஸார். non-linear முறை என்பது தானகவே அமைய வேண்டும். அல்லது அவ்வாறான சிந்தனை இயற்கையிலே வேண்டும். இதை விட்டுவிட்டு சகட்டுமானிக்கு எழுதிதள்ளிவிட்டு, வீட்டிலிருக்கும் சிறு பிள்ளையிடம் கொடுத்து பக்க வரிசையை கலைக்க சொல்லி, அதை அப்படியே அச்சு ஆபீஸ¤க்கு கொடுத்தது போல எழுதுவது தான் non-linear writinga? ஏன் non-perpendicular phythagoras சிந்தனை எல்லாம் உங்களிடம் இல்லையா? (லத்தீன் அமெரிக்கவாசிகள் pythagoras முறையில் சிந்தித்தவுடன் நாங்களும் சிந்திப்போம் என்கிற உங்களது முனகல் என்னை வந்தடைந்து விட்டதை இங்கே சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்) அந்தமாதிரியும் சிந்தித்து புது “கட்டமைப்பை” உண்டாக்குவதுதானே? இதில் Big-bang theory வேறு. Black hole வேறு. புதுமைபித்தனின் எழுத்துக்கள் மீது சத்தியம் வேறு. இதில் மற்ற எழுத்தாளர்கள் எல்லாம் குமாஸ்தா எழுத்தாளர்களாம்?! காலையில் ஆபீஸ் போய்விட்டு மாலையில் பொழுதுபோக்கிற்காக எழுதுகிறார்களாம். வக்கிரங்களை சொல்வதுதான் புரட்சியா? அப்ப பாரதி செஞ்சது என்ன? என்ன கட்டமைப்பு சார்? என்ன kind of thinking சார்? parallelogram? உங்களோடதுதான் நக்கலா? அப்ப புதுமைப்பித்தன் செஞ்சது? அவரு எல்லாம் சக எழுத்தாளர்களை எவ்வளவு கிண்டல் செஞ்சிருக்கார்? ஆனா அவரோட எழுத்து? அவரோட கட்டுரைகள்? படிச்சிருக்கீங்களா சார்? போர்ஹேக்கு முன்னாடி புதுமைபித்தனை ஒரு வாட்டி படிங்க சார். அவருடைய metaphor மாதிரியில்லீன்னாக்கூட ஒரு 0.00000000000000000000000000000001% அளவுக்காவது எழுதுங்க சார். ஆப்பிரிக்கா. இலத்தீன் அமெரிக்கா. அன்டார்டிக்கா. அன்ஜன்கஞ்சாநீசிபூசியா. ழீ மூசியார். ழாழா அம்னீகாரி. கம்னீகாரி. சம்னீகாரிழாழிகூழாபாப்ழிபு. ழார் கத்தார் சொன்னாரு. பார் மத்தார் சொன்னாருன்னு. உங்களுக்கு என்ன தோணுச்சு? where is originality?

யாருக்கும் இதை தான் எழுதவேண்டும், இதை எழுதக்கூடாது என்று யாரும் கட்டளையிட முடியாது. கட்டளை என்ன சும்மா உன் நல்லதுக்கு தான் சொல்கிறேன் என்று கூட சொல்லிவிட முடியாது. அது அவரவர் விருப்பம். படிப்பதும் அவரவர் விருப்பம் தான். யாரும் என்னை சாரு நிவேதிதாவின் ஸீரோ டிகிரி என்கிற நாவல் (?!) non-linear தனமாக எழுதப்பட்டிருக்கிறது, அப்படித்தான் ஆப்பிரிக்க காட்டில் வாழும் டபாகா என்கிற அதிமேதாவி எழுத்தாளர் (அவர் தான் “பின்டபாகாத்துவம்” என்கிற எழுத்து முறையை தோற்றுவித்தார்) எழுதுவார், அதே போல தமிழிலும் இப்பொழுது உலகத்தரத்தில் (ஹோமோ செக்ஷ¤வல்ஸ் பற்றியும் பெண்களின் அந்தரங்கங்களையும் பற்றி பேசினால் மட்டுமே போதும் அது international தரத்துக்கு வந்துவிடுகிறது) எழுதப்பட்டிருக்கும் நாவல் இது, ஆதலால் கண்டிப்பாக படியுங்கள் என்று யாரும் எனக்கு சொல்லவில்லை. சொல்லப்போனால் இந்த புத்தகத்தை படிப்பதற்காக எடுத்துவந்திருக்கிறேன் என்று சொன்னவுடன் என் நண்பர், அதையா படிக்கப்போகிறீகள் அது “வக்கிரங்களின் ஊற்று” என்று வருணனை செய்தார். பிறகும் நான் எதற்கு படித்தேன்? என் நண்பர் ஓவர் ரியாக்ட் செய்கிறார் என்றே நான் நினைத்தேன்.

சிலர் நக்கலான நடை என்றும் சுஜாதாவுக்கு அடுத்த படியான கவனிக்கத்தக்க நடை என்றும் சொல்கிறார்கள். நடையை விட்டுத்தள்ளுங்கள். எல்லாரும் டயாபடீஸா வந்திருக்கிறது? நடையை கட்டிக்கொண்டு அழுவதற்கு? இந்த குரூரத்தில் நடை எதற்கு? நடையாவது சடையாவது.

இந்த நாவலை படிக்கும் டீன் ஏஜ் குழந்தைகள் கடுமையான மனச்சிதைவும் depressionம் அடைவதற்கு வாய்ப்பிருக்கிறது.வேறு எவ்வளோ புஸ்தகங்களை அவர்கள் தேடிப்பிடித்து படிக்கத்தான் செய்வார்கள். போதாக்குறைக்கு internet இருக்கிறது. ஆனால், அது வேறு இது வேறு. இது இலக்கியம் என்று நாமே அறிமுகப்படுத்தக்கூடாது. இதைப் படித்துவிட்டு இதெல்லாம் most natural thing in the world என்று அவர்கள் நினைத்துவிடலாகாது. Atleast you must give a warning. இதை தடை செய்யவேண்டும் என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன். But categorize it. யாவரும் எளிதாக படிக்கும்படி வைக்காதீர்கள். Atleast to rent this book from library you must have restrictions.

நான் சிங்கப்பூர் நூலகத்தை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் : இந்தப்புத்தகத்தை யாவரும் படிக்கும் படியாக (குழந்தைகள், டீன் ஏஜ்) பொதுவில் வைத்திருக்கிறீர்கள். கொஞ்சம் மறுபரிசீலனை செய்யுங்கள். ப்ளீஸ். (இந்திய நூலகங்களில் எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை!)

18 thoughts on “ஸீரோ டிகிரி : ஆப்பிரிக்க எழுத்தாளர் டபாகாவும், பின் டபாகாத்துவமும், non-perpendicular, pythagoras சிந்தனையும்.

  1. எம் எஸ் வி முத்து அவர்களுக்கு,தங்களின் பதிவு கண்டேன். ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் என்று படிப்பதை விட்டு விட்டு ஏன் இப்படி உங்கள் வயதுக்கு ஒவ்வாத புத்தகங்களை படிக்க முயல்கின்றீர் என்று தெரியவில்லை. உலகில் நடப்பதில் 0.0001 பெர்சண்டேஜ் கூட எழுத்தாளர்களால் எழுதப்படவில்லை. உங்கள் மனது மென்மையானது என்று நினைக்கிறேன். ஆனால் உண்மை மிகவும் குரூரமானது. தேவையின்றி மற்ற எழுத்தாளர்களை விமரிசிக்கும் போது வெகு ஜாக்கிரதையாக செய்யுங்கள். எழுத்து என்பது ஒரு தவம். வாந்தி எடுப்பவர்கள் மத்தியில் சில எழுத்தாளர்கள் தவ வாழ்க்கை வாழ்ந்து வரும்போது அதை பகடி செய்வது உங்களது அறிவின் முதிற்சியின்மையினை காட்டுகிறது.

    Like

  2. ஆம்.. எனக்கும் அந்த ஆச்சரியம் வந்தது.. எப்படி இப்படியெல்லாம் என்று.. எப்போதோ ஒரு முறை இப்புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு வந்தது.. இடையிலிருந்து ஓரிரண்டு பக்கங்கள் படித்தவுடனேயே புரிந்து, அன்றே நண்பனிடம் திருப்பிக் கொடுத்தது..அதன் பின் அந்த எண்ணமே வரவில்லை.. இந்நூலைப் பற்றிய விவாதங்கள் அதிகம் இல்லாத நிலையில்், இன்றுதான் உங்களின் பதிவைக் கண்டேன்..

    Like

  3. முத்து,எழுத‌ வ‌ந்த்ட்ட்ம்ல‌ இனிமே க‌ட்ட‌மைப்பு ம‌ட்டும் இல்லை,க‌ட்டுடைப்பு, மூக்குடைப்பு , இச‌ம், பீடை , ச‌டை, குடை, அங்க‌தம், ச‌ங்க‌த‌ம், தெறிப்பு, க‌ட்ட‌ப‌ஞ்சாய‌த்து, ச‌ட்டைய‌ புடிக்கிற‌து, சொறிஞ்சிவிடுற‌து …..நெற‌ய‌ இருக்குங்கொ,

    Like

  4. முத்து அவர்களே, உங்கள் கருத்து குரல்வலையை நெறிப்பது போல் உள்ளது. உங்களை போன்ற ஆட்களால்தான் நாம் இன்னும் பழமைவாதிகளாகவே இருக்கிறோம்.பாரதியையே பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் புரிந்து கொண்டோம்.ஒளித்து வைப்பது, மறைத்து வைப்பது போன்ற தமிழனின் குணம் சிங்கப்பூர் போனாலும் மாறாது என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணம். ///இந்தப்புத்தகத்தை யாவரும் படிக்கும் படியாக (குழந்தைகள், டீன் ஏஜ்) பொதுவில் வைத்திருக்கிறீர்கள். கொஞ்சம் மறுபரிசீலனை செய்யுங்கள். ப்ளீஸ். (இந்திய நூலகங்களில் எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை!///எந்தெந்த புத்தகங்களை, யார் யார் படிக்கவேண்டும் என்று முடிவு செய்ய நீங்கள் யார்?

    Like

  5. முத்து…நானும் ஸீரோ டிகிரியை வாசித்தேன் என்ற அளவில் என் கருத்தை இங்கு பதிகிறேன்.முற்றிலுமாக நிராகரிக்கும் அளவுக்கு என்ன இருக்கிறது அந்த புத்தகத்தில்? புத்தகத்தில் இருப்பவையெல்லாம் எங்கும் நடைபெறவில்லையா என்ன.நான் லீனியர் வகை எழுத்துக்கள் என்பது எழுத்தாளன் சமூகத்தில் நடப்பனவற்றைத்தான் எழுதுகிறான். அவன் கற்பனையுலகில் ஒன்றும் உதித்து விடவில்லை.இதற்கு முன் நகுலனின்நினைவுப்பாதை, நவீனன் டைரி நாவல்களை படித்துப் பாருங்கள்.வெறுப்பின் உச்சகட்டத்தை அடைவீர்கள். முற்றிலும் எழுத்தாளனனின் மன அவசங்களை மாத்திரம் கொண்டது. அவனின் உலகம் எழுத்தில் வரும்போது நான்லீனியராகத்தான் இருக்கும்.அதே உத்திதான் இதில் கையாளப்பட்டிருக்கிறது. காலமாற்றங்களுக்கேற்ப கெட்ட வார்த்தைகள் என்பது மட்டும் மாறுபட்டிருக்கிறது. எழுத்தாளன் எதைக் குறித்து எழுத வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாது.இவ்வகை எழுத்துக்களை வரவேற்காவிட்டாலும் நிராகரிப்பது சரியில்லை. ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை அதேசமயம் உங்களுக்கான உதாரணத்தை பிறர் மீது திணிப்பது போலவே உள்ளது இந்த பதிவு.

    Like

  6. இப்புத்தகம் எனக்குக் கிடைக்கவில்லை; கிடைத்தால் படிப்பேன். இவர் “கோணல் பக்கங்கள் ” தவறாது படித்தேன். உள்ளதைச் சொல்லியிருந்தார். பல விடயங்கள் கேள்விப்படாதவை.அது அவரது பார்வை..ஆனால் அது பற்றி உங்கள்; என் பார்வை வேறு படலாம்.ஏற்பது நிராகரிப்பது அவர் அவர் விருப்பம்.புத்தகம் படித்த பின் ;நான் உங்கள் முடிவுக்குக் கூட வரலாம்..

    Like

  7. நண்பர் முத்துவுக்கு, சாருவின் “சீரோ டிகிரீ” பற்றி வழக்கம் போல் ஒரு இலக்கிய தரம் வாய்ந்த விமர்சனம் வந்திருக்கிறது என்று கேள்விப்பட்டு உங்கள் வலைபூவிர்க்கு வந்தேன். அருமை.இரண்டாம் வகுப்பு மாணவன் MBBS வகுப்பிற்கு வந்து உட்கார்ந்து விட்டு “எனக்கு இங்கு நடப்பது ஒன்றும் புரியவில்லை என்றும் எல்லோருக்கும் புரிகிற மாதிரிதான் பாடம் நடத்தணும்னு” சொல்லற மாதிரி இருக்கிறது உங்கள் விமர்சனம்…. வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களும் வாழ்க்கையின் வெற்றி பற்றி பேசுவதும் இலக்கியம் அல்ல.. நிதர்சனமான நிஜம் பற்றி பேசுவது…..///இதைப் படித்துவிட்டு இதெல்லாம் most natural thing in the world என்று அவர்கள் நினைத்துவிடலாகாது. Atleast you must give a warning////இதைத்தான் குமாஸ்தா மனோபாவம் என்றும் குமாஸ்தா வாழ்க்கை முறை என்றும் சாரு சொல்கிறார். you don’t think sex is the most natural thing in the world. செக்ஸ் உலகத்தின் இயல்பான விஷயமாக இருப்பதை சில கலாச்சாரங்கள் மறுப்பதால் தான் செக்ஸ் வக்கிரங்கள் உருவாகின்றன. குறிப்பாக இந்தியாவில் செக்ஸ் ஒரு பாவமாகவே கருதப்படுகிறது. இந்த சமூகத்தில் செக்ஸ்ஐ பற்றி எப்படிப்பட்ட அழகியலுடன் எழுத வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்… இல்லை செக்ஸ் உள்மனம் நிஜம் என்று எதுவுமே எழுதாமல் மத ஒற்றுமை பற்றி ஒரு குறு நாவல் எழுதி இருக்கிறீர்களே அது மாதிரி நகைச்சுவை கலந்து நாடகதனமாகவே எல்லோரும் எழுத வேண்டுமா?( அது எப்படி நண்பரே குஜராத் கலவரக்காட்சிகளை பார்த்த பிறகும் சக மனிதர்கள் துடி துடிக்க கொல்லப்பட்ட பிறகும் மத ஒற்றுமையை முன்னிறுத்தி இப்படி பைங்கிளி கதைகள் எழுத முடிகிறது…) இதை படித்தவுடன் சாருவிடம் ஒன்றே ஒன்று சொல்ல வேண்டும் போல் இருக்கிறது.. “பருத்தி வீரன்” படத்தில் செவ்வாழை டீகடையில் பேசும் வசனம் அது…. வேண்டாம் சாரு திட்டுவார்……. பின்குறிப்பு: //(இந்திய நூலகங்களில் எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை!)//நீங்கள் கவலைப்பட அவசியமே இல்லை.. இந்தியா குறிப்பாக தமிழ்நாட்டில் உங்களைப்போல் ஒழுக்கவாதிய சட்டாம்பிள்ளைகளுக்கு பஞ்சமே இல்லை. உலகத்தின் எல்லா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்த பிறகும் இன்னும் தேவைக்கு அதிகமாகவே இங்கு இருக்கிறார்கள்.. விக்டோரியன் நாகரீகத்தில் ஒரு பட்டை இருந்ததாம் ( i think chastiyan belt) கற்புக்கு 100% garrenty…… அதை இந்திய நாகரீகத்துக்கு தகுந்த மாதிரி வடிமைக்கும் ஆராய்ச்சியில் தீவிரமாக இருந்தாலும் அவ்வப்போது தமிழ் பண்பாட்டையும் காப்பாற்றி வருகிறார்கள். நூலகங்கள் பற்றி சொல்லவே தேவையில்லை….பல ஆண்டுகளுக்கு முன்பே புதிய புத்தகங்கள் வாங்குவதை நிறுத்திவிட்டார்கள்… அறிவாளிகளின் உற்பத்தியை கட்டுப்படுத்துவதற்காக இருக்கலாம்.

    Like

  8. Bee’morgan: ப்ளீஸ் இங்கே பின்னூட்டம் இட்டிருக்கும் புதுமை விரும்பி டபாகாத்துவ நண்பர்களுக்கு எடுத்துச்சொல்லுங்கள் சார்.

    Like

  9. ஜீரோ: புதுமைகளை ஆதரிக்க வேண்டும் என்கிற உங்களது ஆவேசம் வரவேற்க்கதக்கது. புதுமைகள் constructiveவாக இருக்கவேண்டுமல்லவா? எந்தெந்த படங்களை யார் யார் பார்க்கவேண்டும் என்கிற category இருக்கிறதல்லவா? நீங்கள் ஸீரோ டிகிரியை முழுமையாக படித்திருக்கிறீர்களா? படித்திருந்தால் கண்டிப்பாக எல்லோரும் வாசிக்கலாம் என்று சொல்லமாட்டீர்கள். என் பதிவை முழுமையாக படித்தீர்களா? நான் முடிவு செய்யவில்லை ஐய்யா. வேண்டுகோள் தான் வைத்திருக்கிறேன். முடிவு செய்யும் அதிகாரம் எனக்கிருந்தால் இப்படி பதிவெல்லாம் போட்டுட்டு இருக்கமாட்டேன்

    Like

  10. தம்பி: உலகத்தில் நடப்பதெல்லாம் யதார்த்தம் இல்லை. மேலும் non-linear writing என்பது narration style. “நான் லீனியர் வகை எழுத்துக்கள் என்பது எழுத்தாளன் சமூகத்தில் நடப்பனவற்றைத்தான் எழுதுகிறான்” நீங்கள் மேலே சொல்வது போல என்ன எழுதுவது என்பது இல்லை. எப்படி எழுதுவது என்பதை பற்றியது. ஒரு கதையை எங்கிருந்து வேண்டுமென்றாலும் ஆரம்பித்து எப்படி வேண்டுமானாலும் சொல்வது தான் non-linear writing என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். “எழுத்தாளன் எதைக் குறித்து எழுத வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாது.” முற்றிலும் உண்மை. என் பதிவை மேலும் ஒரு முறை படியுங்கள் நானும் அதையே தான் சொல்லியிருக்கிறேன். நகுலனின் எழுத்தை இங்கே உதாரணம் காட்டி அவரை கீழிறக்கிவிடாதீர்கள். ஆப்பிளுடன் (அழுகிப்போன) ஆரஞ்சை ஒப்பிடாதீர்கள்.

    Like

  11. ஞான பாஸ்கர்: கீழே இருக்கு சார். நீங்க இந்த கமெண்ட் கொடுக்கும் போது அந்த கமெண்ட் வரல.ஞான பாஸ்கர்: சீரோ டிகிரிக்கு இலக்கிய தரம் வாயந்த விமர்சனம் முதலில் தேவையா? இலக்கியத்துக்கு தானய்யா இலக்கிய தரம் வாய்ந்த விமர்சனம் செய்யமுடியும்? அதே தான் நானும் கேட்கிறேன். ஏன் இரண்டம் வகுப்பு மாணவன் கண்களில் படும்படி இந்த புத்தகத்தை வைத்தீர்கள் என்று. “MBSS படித்த ஞான பாஸ்கர் போன்றோருக்கும் மட்டும்” என்று அட்டையிலே போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். மேலும் MBBS படித்த நீங்கள் ஏன் இரண்டாம் வகுப்புக்கு வந்து “எனக்கு MBBS பாடம் புரிந்துவிட்டது, உனக்கு ஏன் புரியலை?” என்று கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை. எது நிதர்சனமான நிஜம்? எங்கோ ஒரு மூலையில் நடப்பதை எழுதுவது நிதர்சனமான நிஜமா? “you don’t think sex is the most natural thing in the world” என்று கேட்டிருக்கிறீர்கள். “இதைப் படித்துவிட்டு இதெல்லாம் most natural thing in the world என்று அவர்கள் நினைத்துவிடலாகாது” என்றே நான் சொன்னேன். I was not talking about just sex. நான் அந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் வக்கிரங்களையும் குரூரங்களையும் பற்றியே சொன்னேன். மேலும் ஸீரோ டிகிரி போன்ற நாவல்களை படித்துவிட்டுத்தான் அறிவாளிகள் உருவாகிறார்களா என்ன? புதுசா இருக்கே?!

    Like

  12. முத்து, உண்மைகளை ஒத்துக்கொள்ளவும், படிக்கவும் ஒரு தைரியம் வேண்டும். யார் எந்த பாஷையில் பேசுகிறார்களோ அந்த பாஷையில் பேசினால் தான் புரியும். வேறென்ன சொல்ல..

    Like

  13. Guyz,Everybody has their own rights to express about their perceptions, there is nothing to defend or offend here.Opinion differs from person to person based on their mindset doesn’t it Muthu?

    Like

  14. சிங்கப்பூர் நூலகத்தில் இதனுடன் ராச லீலாவும் கிடைக்கும். இவர் மொழி பெயர்த்த உலகின் அழகான பெண்(?) உம் கிடைக்கும். ஏதோ பெரிய எழுத்தாளர்களாம். நானும் புத்தகங்கள் படித்திருக்கேன். இன்று வரை குற்றமும் தண்டனைக்கு நிகராகக் காணக் கிடைக்கவில்லை. முடிஞ்சா அதை பீற் பண்ண எழுதலாம். புற்போக்கு, பிற்போக்கு, வயித்துப் போக்கெல்லம் வேணாம்.அப்புறம் சீரோ டிகிரி அப்படி என்ன இருக்கு அதில்? மஜா மல்லிகாவிடம் இல்லாததா? ஆனாலும் பொது நூலகத்தில் கிடைக்கவிட்டிருப்பது தப்புத் தான். உலகம் முன்னேறுகிறது. அதற்காக வீட்டுப் பெண் ஒருத்தி நீலப் பட சூட்டிங் போயிட்டு வந்தால் டீ போட்டுக் கொடுக்க எத்தனை பேர் தயார்?

    Like

  15. சாருவை பற்றி உங்களுடய விமர்சனம் சரியே…ஆனந்த விகடனில் படித்துது….சாருவுக்கும்,சகிலாவுக்கும் உள்ள இரண்டு ஒற்றுமை …1) இருவருமே தமிழ் நாட்டில் பிறந்து Keralaவில் பிரபலம் ஆனவர்கள்…2)….இரண்டாவது ஒற்றுமை உங்களுக்கே தெரியும்…

    Like

Leave a comment