என்ன‌ சொல்லி நாங்க‌ அழ‌?


இதையும் இன்னும் கொஞ்ச‌ நாளில் நாம் ம‌ற‌ந்துவிடுவோம். எத்த‌னை விச‌ய‌ங்க‌ளை நாம் ம‌ற‌ந்திருக்கிறோம்?! அல்ல‌து ம‌ற‌க்க‌ முய‌ற்சி செய்கிறோம்?

இத‌ற்கு யார் கார‌ண‌ம்? ஏன் இது ந‌ட‌ந்த‌து? இனியும் இது போன்ற‌ அவ‌ல‌ங்க‌ள் ந‌ட‌க்காம‌ல் இருக்க‌ அர‌சு என்ன‌ செய்ய‌ப்போகிற‌து? த‌டுப்பூசி சில‌ குழ‌ந்தைக‌ளுக்கு ஒத்துக்கொள்ளாது என்று வாத‌ம் செய்வ‌து வேலைக்காகா‌து, அத்த‌னை குழ‌ந்தைக‌ளுக்குமா ஒத்துக்கொள்ளாம‌ல் போகும்? இதை புல‌னாய்வு செய்து அறிக்கை வெளியிட‌ எத்த‌னை நாட்க‌ள் ஆகும்? ப‌த்து நாட்க‌ள்?! ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ அரசு ம‌ருத்துவ‌ம‌னைக்கு ஆம்புல‌ன்ஸ் வ‌ருவ‌த‌ற்கு தாம‌தமான‌து என்று ஒரு செய்தி வெளியாகியிருந்த‌து. தாம‌த‌மாக‌ வ‌ருவ‌த‌ற்கு என்ன‌ கார‌ண‌ம்? இத‌யெல்லாம் விட்டுட்டு ந‌டிகை ம‌ல்லிகா செராவ‌த்தின் மீது த‌மிழ் க‌லாச்சார‌த்தை சீர‌ழித்த‌த‌ற்காக‌ வ‌ழ‌க்காம்! யார் மேல‌ வ‌ழ‌க்கு போட்டா பிர‌ச்ச‌னை வ‌ராதுன்னு பாத்து அவிங்க‌மேல‌ போட‌ற‌து. நீங்க‌ளும் உங்க‌ள் பொதுந‌ல‌ தொண்டும். அட‌ போங்க‌ப்பா.

ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌த்துக்கு ஒரு வார‌த்துக்கு முன்பு திருவ‌ள்ளூர் மாவ‌ட்ட‌த்தில் ப‌வ‌ர் க‌ட் அதிக‌ம் இருந்த‌தால் கூட‌ த‌டுப்பூசி ம‌ருந்து (குளிர்சாத‌ன‌ பெட்டியில் ஒரு குறிப்பிட்ட‌ டெம்ப‌ரேச்ச‌ரில் ம‌ருந்தை வைக்க‌வேண்டும்) கெட்டுப்போயிருக்க‌லாம் என்றும் ஒரு செய்தி வெளிவந்திருந்த‌து. ம‌ருந்தை உப‌யோக‌ப்ப‌டுத்துவ‌த‌ற்கு முன்ன‌ர் அதை சோதிப்ப‌த‌ற்கு ஏதும் வ‌ச‌தி இல்லையா? தெரிய‌லீங்க‌ அதுதான் கேக்க‌றேன்.

என் ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் சொன்னார்: முத்து இதைவிட‌ ஒரு விச‌ய‌ம் என்னை ரொம்ப‌ பாதிச்ச‌து. ச‌ட்ட‌ச‌பையில‌ பாதிக்க‌ப்ப‌ட்ட‌ குழ‌ந்தைக‌ளுக்கு, ஆர‌சு மூனு ல‌ட்ச‌ ரூபாய் நிதி ஒதுக்கி அறிவித்த‌பொழுது, அங்கிருந்த‌ நாம் தெர்ந்தெடுத்து அனுப்பிவைத்த‌ ம‌க்க‌ள், சிரித்துக்கொண்டே கைத‌ட்டி ஆர‌வார‌ம் செய்த‌து.

ந‌ம்ப‌ர் ஒன் புல‌னாய்வு நாளித‌ழ் என்று மார்த‌ட்டிக்கொள்ளும் ஜூவியும் இது போல‌ ஒரு க‌விதை ம‌ட்டும் எழுதிவிட்டு, த்ரிஷாவையோ ந‌ய‌ன்தாராவையோ க‌வ‌னிக்க‌ போய்விடும்.

ஜூவி சார், நீங்க‌ளே இதெல்லாம் புல‌னாய்வு செய்ய‌லேன்னா, வேற‌ யார் செய்வா? இத்த‌னை கோடி ம‌க்க‌ள் வ‌சிக்கும் இந்த‌ நாட்டில் ம‌ருத்துவ‌த்துறையை க‌ட்டுப்ப‌டுத்த‌ தீவிர‌மான‌ ச‌ட்ட‌திட்ட‌ங்க‌ள் வேண்டும். இல்லையென்றால் ம‌க்க‌ளின் ப‌ய‌த்தையும் ந‌ம்பிக்கையையும் ப‌ய‌ன்ப‌டுத்திக்கொள்ள‌ இங்கே நிறைய‌ ந‌ப‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள்.

4 thoughts on “என்ன‌ சொல்லி நாங்க‌ அழ‌?

  1. //ஆர‌சு மூனு ல‌ட்ச‌ ரூபாய் நிதி ஒதுக்கி அறிவித்த‌பொழுது, அங்கிருந்த‌ நாம் தெர்ந்தெடுத்து அனுப்பிவைத்த‌ ம‌க்க‌ள், சிரித்துக்கொண்டே கைத‌ட்டி ஆர‌வார‌ம் செய்த‌து.//அட அது கூட பரவாலில்லை!நம்ம முதல்வர் அவர்கள் இந்த சம்பவத்துக்கு சொல்லும் பதில் “ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 8 குழந்தைகள் இறந்தார்கள்! எங்கள் நான்கு தான் ஆனது!” என்று அறிக்கைவிடுகிறார். இன்னும் தன் ஆட்சியில் கோட்டா முடியவில்லை என்பது மாதிரி!! இது தான் மக்கள் தலையெழுத்து :((((

    Like

  2. //ச‌ட்ட‌ச‌பையில‌ பாதிக்க‌ப்ப‌ட்ட‌ குழ‌ந்தைக‌ளுக்கு, ஆர‌சு மூனு ல‌ட்ச‌ ரூபாய் நிதி ஒதுக்கி அறிவித்த‌பொழுது, அங்கிருந்த‌ நாம் தெர்ந்தெடுத்து அனுப்பிவைத்த‌ ம‌க்க‌ள், சிரித்துக்கொண்டே கைத‌ட்டி ஆர‌வார‌ம் செய்த‌து.////”ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 8 குழந்தைகள் இறந்தார்கள்! எங்கள் நான்கு தான் ஆனது!” //:(

    Like

  3. முத்து,ச‌ம்ப‌வ‌ம் நாலு நாள் முன்னாடி தான் சாமுராய் ப‌ட‌த்தில‌ பார்த்தேன்,நிஜ‌த்தில் இப்பொழுது,எல்லாருக்கும் சினிமால‌ பார்த்து பார்த்து ம‌ர‌த்து பொச்சோ?

    Like

  4. sorry for a very late reply.we the people: அடப்பாவிகளா!சஹ்ரிதயன்: ஆமா மரத்து தான் போச்சு.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s