ஞாநி பேசுகிறார்!

குமுதம் டாட் காமில் ஞாநி பாலகுமாரனிடம் நடத்திய பேட்டி பார்த்தீர்களா? நான் பார்த்தேன். இன்று காலை மூனு மணிக்கு உக்காந்து பார்த்தேன். எனக்கு ரொம்பவும் பாவமாக இருந்தது. பாலகுமாரனுக்கு ஞாநியை சமாளிக்க முடியவில்லையோ என்று தோண்றியது! சகிப்புத்தன்மைன்றார் இல்லைன்றார். கொள்கைங்கறார். கேட்டாங்க எழுதிக்கொடுத்தேங்கறார். தலித் பற்றி ஏன் எழுதவில்லை என்ற கேள்விக்கு அவங்க என்ன எழுதவேண்டாம்னுட்டாங்கன்னு சொல்றார். எனக்கு அவங்க வலி புரியாது அதனால எழுதலன்னு சொல்றார். ஞாநி வசமா புடிச்சார். அப்ப பெண்களை பத்தி மட்டும் எப்படி எழுதுனீங்க? அதுக்கு பெண்களை பற்றியும் நான் இன்னும் சரியா புரிஞ்சுக்கலேன்னு சொல்றார். எனக்கு பாலகுமாரனிடம் பிடிக்காத ஒரு விசயம் adultry. விஜய் டீவியில சில்லுன்னு ஒரு சந்திப்புல அவரே சொன்னது: அவரது தோழியை (ரசிகை) பற்றி. அந்த தோழி பாலகுமாரன் adultery பற்றி எழுதுவதை விரும்பவில்லை என்றும், நீ அதை எழுதினா ரொம்ப convincingஆ இருக்குன்னு அவர் சொன்னதாக சொன்னார். அதே அபிப்பிராயம் தான் எனக்கும். இது மாதிரியான வெகுஜன எழுத்தாளர்கள் இதேயே பற்றி மீண்டும் மீண்டும் எழுதினால் அது ரொம்பவும் natural thing ஆகிவிடுமே! உடனே நம்ப டபாக்காத்துவவாதிகள் எது தப்பு எது சரின்னு நீ எப்படி சொல்ற? உனக்கு யாரு வரையறை கொடுத்தா? யாரு பெர்மிஷன் கொடுத்தா? அப்படி இப்படின்னு கன்னா பின்னான்னு கேள்வி கேக்க ஆரம்பிச்சுடுவாங்க. தப்புன்னோ சரின்னோ இந்த உலகத்துல எதுவுமே தப்பு கிடையாதுன்னா பின்ன ஜெயில் எதுக்கு? எதுவும் தப்பு இல்ல எதுவும் சரியில்ல எல்லாம மாயை அப்படி இப்படின்னு ழார் மத்தார் சொன்னாருன்னு புரியாம பேசறதுதான் இப்போ ·பேசனா போச்சு. ஞாநி கரெக்ட்டா கேட்டார்: உங்களுக்குன்னு ஒரு கொள்கை இருக்கும்மேன்னு! கொள்கை என்பது ஒரு முடிவு. முடிவுகள் மாறிக்கொண்டேயிருக்கும். கொள்கைகளும் மாறிக்கொண்டேயிருக்கும் என்கிறார் பாலகுமாரன். முடிவுக்கே வரமுடியாதுங்கறார். முடிவே கிடையாதுங்கறார். வாழ்க்கையை பாத்து அதிசயச்சுக்கிட்டே இருக்கேன்னு சொல்றார். கொஞ்சநாட்களுக்கு முன்னர் ஆண் பெண் உறவு. adultery. இப்பொழுது ஆண்மீகம். yes! கொள்கைகள் மாறிக்கொண்டேதான் இருக்கின்றன. its quite true. பாலகுமாரன் சுஜாதாவின் தோள் மீதும் திஜாவின் தோள் மீதும் தாவி ஏறியதாகவும் சொன்னார். அவர் சொல்லமறந்தவர்களுள் : Ayn Randஉம் ஒருவர் என்று நான் நினைக்கிறேன். பாலகுமாரனுக்கு ஞாநியை சமாளிக்க தெரியவில்லையா?!

***

தொல் திருமாவின் பேட்டி எனக்கு பிடித்திருந்தது. ஆர்ப்பாட்டமில்லாமல் நிதானமாக கூலாக இருந்தது. அவர் ஞாநியை சரியாக tackle செய்தார். Afterall one has to win an argument. தமிழ் பாதுகாப்பு இயக்கம் (?!) சிங்கள இயக்குனரை (புலிகளின் உரிமை போராட்டத்தை அவமதிப்பதாக அந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்கிற காரணத்தை காட்டி) அடித்ததை குறித்த கேள்வி ஒன்றில் ஞாநி எல்லாருக்கு கருத்து சுதந்திரம் இருக்கிறதல்லவா? அவரும் சொல்லலாம். அதற்கு எதிர்மறையாக நீங்களும் (சீமான் போன்றோரை!) நல்ல கருத்தை (புலிகளுக்கு ஆதரவாக) முன்வைத்து திரைப்படங்கள் எடுங்கள் என்றார். சற்றும் தாமதிக்காமல் திருமா சொன்னார்:

நீங்கள் சொல்வது வீட்டுக்குள்ளே நரகல் இருக்கிறது. அது பாட்டுக்கு கிடக்கட்டும்.
ஊதுபத்தி கொளுத்தி வையுங்கள் என்பதை போல இருக்கிறது என்றார்

. இதையும் அதையும் ஒப்பிட முடியுமா முடியாதா என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், திருமாவின் பதிலடி ரசிக்கும் படியாகவே இருந்தது. அவருடைய தோல்வியை பற்றிக்கேட்டபொழுது: தலித் கட்சி ஒன்றுக்கு கூட இதுநாள் வரையிலும் நிரந்தர சின்னம் கிடைக்காததே தோல்வி என்று குறிப்பிட்டார். அவரது கட்சிக்கு விரைவிலேயே நிரந்தர சின்னம் கிடைக்க வாழ்த்துக்கள்

***

ஞாநியும் இடைவிடாது இட ஒதுக்கீட்டை பற்றி பேசிக்கொண்டுதான் இருக்கிறார். சரியாக பேசிக்கொண்டிருக்கிறார் என்பது தான் இங்கே குறிப்பிடவேண்டும். இடஒதுக்கீட்டில் ஞாநியின் நிலைப்பாடு தான் என் நிலைப்பாடும். 27% இடஒதுக்கீடு சுத்தமாக IITயிலும் IIMமிலும் கொடுக்கப்படவேண்டும். அதாவது: இப்பொழுது 100 சீட் இருக்கிறது என்று வைத்துக்கொண்டால், 27% பிற பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கவேண்டும் என்றால், மேலும் 27 சீட்டுகளை மட்டும் கூட்டி 127 சீட்கள் ஆக்குவது. ஆனால் 27% என்பது 127 சீட்டுக்குத்தானே?!

ஞாநி சொல்வதை கேளுங்கள்:

இப்போது உச்ச நீதிமன்றமும் அரசாங்கமும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சரியில்லை என்பதற்கான இன்னொரு சான்று, உயர் கல்வி நிறுவனங்களில் இடங்களை அதிகரிப்பது என்ற நடவடிக்கையாகும். அதாவது ஒரு ஐ.ஐ.டியில் இப்போது 100 இடங்கள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். பிற்படுத்தப்பட்டவருக்கு இட ஒதுக்கீட்டு உத்தரவின்படி 27 சதவிகிதம் கொடுத்தாகவேண்டும். (இதையே 9 சதவிகிதத் தவணையில் மூன்று வருடங்கள் படிப்படியாகத்தான் தருவார்களாம்.) எனவே 73 இடங்கள் மற்றவர்களுக்கு இனி கிடைக்கும். இதர ஜாதிகளுக்கு (மேல் ஜாதிகள்) 27 இடம் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக என்ன செய்கிறார்கள் என்றால் 100 அப்படியே இருக்கும். புதிதாக 27 உருவாக்கி பிற்படுத்தப்பட்டவர்களுக்குத் தருவார்களாம்.

இதில் இரண்டு கோளாறுகள். ஒன்று, மொத்த இடம் இப்போது எவ்வளவு? 127. அப்படியானால் இதில் 27 சதவிகிதம் எவ்வளவு 27 இடமா? இல்லையே. 34 அல்லவா? தொடர்ந்து 7 இடம் ஏமாற்றப்படுகிறது. இரண்டாவது பிரச்சினை இப்படி புதிதாக இடம் உருவாக்கி மேல் ஜாதிகளைக் காப்பாற்றுவதற்காக ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா? சென்ற வருடம் மட்டும் ஐ.ஐ.டி.களுக்கும் ஐ.ஐ.எம்.களுக்கும் இதற்காக தரப்பட்ட தொகை 1400 கோடிகள். அடுத்த 3 வருடங்களில் இன்னும் 1771 கோடி ரூபாய்கள் தரப்படும்.

1771 கோடி ரூபாய்! யாருக்காக செலவிடப்படுகிறது? கேட்டால் think tank. talent hub என்கிற பினாத்தல்கள் வேறு! யாரோட think tank? யாரோட talent hub?ன்னு தான் புரியல!

திருமாவிடம் அவர் பேட்டி எடுத்தபொழுதும் கிரீமி லேயர் பற்றி அவர் சொல்லியிருந்தார். அதாவது கிரீமி (கிருமி அல்ல!) லேயர் என்பது should not be based upon economical justice, it has to be based up on educational justice. அதாவது ஒரு படித்த ஏழை அர்ச்சகரை கட்டிலும் ஒரு பணக்கார படிக்காத நிலக்கிழாருக்கே இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை தரவேண்டும் எனபது. இதில் கிரீமி லேயர் யார் யார் என்பதை வரையறுக்க அரசு வைத்திருக்கும் அளவு எல்லாமே economical based. ஞாநி அதற்கு மாற்றாக முன் வைக்கும் யோசனை என்னவெனில், முதன்முறையாக இடஒதுக்கீட்டில் மூலம் கல்வி பெறும் குடும்பத்துக்கே முன்னிரிமை தரவேண்டும் என்பது. எடுத்துக்காட்டாக: ஒரு குடும்பத்தில் மூன்று தலைமுறைகளாக இடஒதுக்கீட்டின் மூலம் படித்திருக்கிறார்கள். இன்னொரு குடும்பத்தில் இதுவே அவர்கள் இடஒதுக்கீட்டின் மூலம் கல்வி பெறுவது முதல் முறை என்றால், இந்த குடும்பத்துக்கே முன்னுரிமை தரவேண்டும் என்கிற வாதம்.

இதில் ஒரு advantage இருக்கிறது. அதாவது இவ்வாறான சுழற்சிக்கு பின்னர், பல தலைமுறைகளாக இடஒதுக்கீட்டில் பயன் பெற்றுவிட்டதால் அந்த சமூதாயத்தையே இட ஒதுக்கீட்டிலிருந்து அப்புறபடுத்திவிடலாம். கிரீமி லேயரை நடைமுறைப்படுத்துவதால் கொஞ்சம் கொஞ்சமாக இடஒதுக்கீடு பறிக்கப்பட்டுவிடுமோ என்கிற பயம் ஜாதிகளிடமும் அந்த ஜாதி ஓட்டுகளை நம்பி இருக்கும் கட்சிகளிடமும் தெரிகிறது. அதானால் தான் கிரீமி லேயர் கிருமி லேயராக கருதப்படுகிறது. open quotaவிலும் இந்த கிரீமி லேயர் புகுத்தபடவேண்டும்.

இடஒதுக்கீட்டை தலைமுறைகளாக அனுபவித்து விட்டவர்கள் தங்கள் ஜாதியில் இருக்கும் இன்னும் இடஒதுக்கீட்டை பெறாத மற்ற குடும்பங்களுக்கு வழிவிடவேண்டும். அப்பொழுதுதான் இட ஒதுக்கீட்டின் குறிக்கோள் நிறைவுபெறும். அனைவருக்கும் கல்வி என்கிற நிலை உருவாகும். மேலும் கொஞ்ச காலத்துக்கு பிறகு இடஒதுக்கீடே தேவையில்லை, எல்லாரும் பயன் பெற்றாகிவிட்டது என்று தூக்கிவிடவும் செய்யலாம்! சமச்சீர் கல்வி கிடைக்கப்பெறும்!

***

இப்படி எல்லாரையும் மடக்கி மடக்கி கேள்வி கேட்கும் ஞாநியிடம் ஒரு கேள்வி:
ஞாநி சார் நீங்கள் தனியார் அலுவலகங்களில் வேலைவாய்ப்புக்கு இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறீர்களா?

***

5 thoughts on “ஞாநி பேசுகிறார்!

 1. இரண்டு பேட்டிகளையும் பார்த்தேன். 1. பாலகுமாரன் பேட்டியில், எவ்வளவோ நல்ல சுவாரஸ்யமான விசயங்களை பற்றி பேசியிருக்கலாம், அதை எல்லாம் விட்டு விட்டு, ஏதோ நீதிமன்ற கூண்டிலே நிப்பாட்டி வழக்குரைஞர் கேட்பதுபோல், அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் மடக்கி மடக்கி கேட்டது கொஞ்சம் கூட நல்லா இல்ல. பாலகுமாரன் பதில் சொல்ல முடியாமல் திணறியது சற்று ஆச்சரியமாகவே இருந்தது. நீங்கள் இரண்டு மனைவியோடு வாழ்கிறீர்கள், உங்கள் மனைவி இரண்டு கணவனோடு வாழ நினைத்தால் அனுமதிப்பிர்கள என்ற கேள்வி எல்லாம் கொஞ்சம் ஓவர். 2. திருமா பேட்டியை பொருத்தவரையில், எந்த குறையும் இல்லை. நன்றாகவே கேள்வி கேட்டார். அவரும் சளைக்காமல் பதில் சொன்னார். 3.பதில் சொல்லுவதில், சமாளிப்பதில் ஒரு இல்லக்கியவாதிக்கும் அரசியல்வாதிக்கும் எவ்வளவு வித்தியாசம் என்பது இந்த இரண்டு பேட்டியையும் அடுத்ததுது பார்த்தல் நன்றாக புரியும்.

  Like

 2. பேச்சு த‌ந்திர‌ம் த‌ன‌க்கு தெரியாது / வ‌ராது என்று தெரிந்தும் திரு.பால‌குமார‌ன்எப்ப‌டி ஞானியிட‌ன் பேட்டிக்கு ஒத்துக்கொண்டார் என்ப‌து தெரிய‌வில்லை.ச‌ஹ்ரித‌ய‌ன்

  Like

 3. ராஜா: sorry for a very late reply. நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. இலக்கியவாதியாகவும் அதே சமயம் தெளிந்த அரசியல்வாதியாகவும் இருக்கும் திறமை வெகுசிலருக்கே வாய்க்கும்.சஹ்ரிதயன்: சும்மாதான இருக்கோம்னு நினைச்சிருப்பார்.

  Like

 4. நீங்கள், நம்மாழ்வார் மடற்றும் ஷாலினி (டாக்டர்) ஆகிய இரு பேட்டிகளயும் பார்த்துவிட்டுச் சொல்லவும்…

  Like

 5. ஞானிக்கு கமலையும் பிடிக்காது இளையராஜாவையும் பிடிக்காது. இவர்கள் மீது சேற்றை வாரி இறைப்பதே இவருக்கு முழுநேர தொழில். பொதுவாக இவருக்கும் சாருவுக்கும் ஒத்து வராது. ஆனால் இவர்கள் இருவரையும் எதிர்ப்பதில் ஒற்றுமையானவர்கள்இவர்களை எதிர்பதின் மூலம் பிரபலம் தேடுகின்றார்கள்

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s