ஒரு ரூபாய் கொடுத்தால்
ஐந்து ரூபாய் கொடுக்கும்
வள்ளல்
பஸ் கண்டக்டர்!
என்ன பண்றது, சென்னையில பஸ்ல போக ஆரம்பிச்சுட்டேன். எவ்ளோ நாள் தான் ஆட்டோவுக்கு 100 ரூபாய் 150 ரூபாய்ன்னு அழறது? சும்மா கொஞ்ச நஞ்சமெல்லாம் கேக்கறதில்ல நம்ப ஆட்டோக்காறங்க. MMDA Colonyயிலருந்து Central Stationக்கு 150 ரூபாயாம். கேட்டா, பெட்ரோல் விலை கூடிப்போச்சாம்? எவ்வளவுய்யா கூடியிருக்கு? அஞ்சு ரூபாய் தானே? நுங்கம்பாக்கத்துக்கு 80 ரூபாயாம்! பஸ்ல டிக்கெட் நாலு ரூபாய். எல்லா ஆட்டோக்களிலும் மீட்டர் பாக்ஸ் இருக்கிறது. அதுவும் டிஜிட்டல். மினிமம் 14 ரூபாய் என்று எழுதப்பட்டிருக்கிறது. (முதல் இரண்டு கிலோமீட்டர்களுக்கு) மேலும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ஆறு ரூபாய் வசூலிக்கப்படவேண்டும் என்பது சட்டம். அப்படியா வசூலிக்கப்படுகிறது? ஏன் இதை யாருமே வலியுறுத்தவில்லை? வலியுறுத்தினா மட்டும் கேட்ருவாய்ங்களா என்ன?.
மீட்டர் போடுவதில் ஆட்டோக்காரர்களுக்கு என்ன பிரச்சனை? கட்டுபிடியாவதில்லை என்று ஒரு ஆட்டோக்காரர் சொன்னார். கட்டுபிடியாகவில்லையா?! எடுத்துக்காட்டாக: இப்பொழுது வடபழனியிலிருந்து டீநகருக்கு மினிமம் 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. டீநகரிலிருந்து வடபழனிக்கு 80 ரூபாய்க்கும் மேலே வசூலிக்கப்படுகிறது. டீநகரிலிருந்து வடபழனிக்கு 6.6 KM. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 55 ரூபாய். ஒரு லிட்டர் பெட்ரோல் சராசரியாக 35 கிலோமீட்டர் கொடுக்கிறது (Bajaj autorickshaw). கூட்டிக்கழிச்சு பாத்தா (ராஜ் டீவியில அண்ணாமலை பாத்தேன்!) fuel price just 11 rupees only. ஆட்டோக்காரர்கள் வசூலிக்கும் தொகையில் மீதமிருக்கும் 65 ரூபாய் யாருக்கு? எங்கே போகிறது?
ஒழுங்கா முறையா சட்டப்படி கட்டணம் வசூலித்தால், அவர்களுக்கு கிடைக்கும் பணம் : 41 ரூபாய். 11 ரூபாய் fuel price கழிச்சா, மீதம் 30 ரூபாய் இருக்கிறது. ஒரு நாளைக்கு எத்தனை சவாரி எடுப்பார்கள்? 20 சவாரி? ஏன் ஆட்டோக்காரர்கள் மீட்டர் போட மறுக்கிறார்கள்? சென்னையிலிருக்கும் bloggers யாராவது, இதை ஒரு case study பண்ணலாம்.
***
சென்னையில் நான் வேலைசெய்துகொண்டிருந்த பொழுது நடந்த ஒரு சம்பவம் எனக்கு இப்பொழுது நினைவுக்கு வருகிறது. அது ஒரு நல்ல மழை நாள். இரண்டு மூன்று நாட்களுக்கு விடாது மழை அடித்த நாட்கள் அவை. அன்று கண்டிப்பாக நான் அலுவலகம் சென்றே ஆகவேண்டும் என்கிற கட்டாயம். மழை அடித்து சற்று ஓய்ந்திருக்கிறது. ஆனால் இன்னும் விட்டபாடில்லை. சைதாப்பேட்டைக்கு பக்கமிருந்து நுங்கம்பாக்கத்துக்கு ஆட்டோ எடுக்கவேண்டும். அந்த ஆட்டோக்காரர் அன்று கேட்ட தொகை (ஆறு வருடங்களுக்கு முன்) 170 ரூபாய். வேறு வழியின்றி ஏறிக்கொண்டேன். உள்ளே ஏற்கனவே இரண்டு பேர் உட்கார்ந்திருக்கிறார்கள். ஓ shareஆ என்றேன், சற்றே தப்பிச்சோம்டா feelingல. இல்ல 170 ரூபாய் நீ (சென்னையில குப்ப கொட்டிட்டு மரியாதை எதிர்பார்த்தால் கிடைக்குமா) மட்டும் தான் கொடுக்கனும், அவங்களுக்கு வேற ரேட் என்றார். நான் ஒன்னும் சொல்லவில்லை.
கொஞ்ச நேரத்தில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, அவரே பேச ஆரம்பித்தார். “இப்படி அநியாயமா வாங்குற காச நான் வீட்டுக்கு எடுத்துட்டு போக மாட்டேன். என் புள்ளைக நல்லா இருக்க வேண்டாமா? வீட்டுக்கு போறதுக்கு முன்னையே உங்கிட்ட எக்ஸ்ட்ரா வாங்குன காச குடிச்சே தீத்திருவேன்” பயங்கர calculative, extra காசை மட்டும் தான் குடிப்பாராம். அது சரி, குடிச்சா மட்டும் புள்ளைங்க நல்லா இருப்பாங்களா?
***
நேற்று நுங்கம்பாக்கம் Landmark சென்றிருந்தேன். சும்மா browsing என்று தான் நினைத்து சென்றிருந்தேன். நான் ஐந்து வருடங்களுக்கு முன்னர் பார்த்த புத்தககடைகளிலே மிக பெரியது Landmark தான். அந்த பிம்பம் இன்னும் என் மனதில் அப்படியே இருந்தது. மிகப்பெரியது என்கிற பிம்பம். ஆனால் இப்பொழுது Landmarkக்கு உள்ளே நுழைந்தவுடன் என்னது இது, stationary shop மாதிரி இருக்கு என்றே நினைக்கத் தோன்றுகிறது. Singaporeஇன் PageOne, மற்றும் Malaysiaவின் TimeSquareஇல் இருக்கும் Bordersஐ பார்த்த பிறகு அப்படித்தான் தோன்றும். அதே போலத்தான் Hotel Arunachalaவும். அப்ப ஏதோ பெரியதாய் தோன்றியது, இப்ப சும்மா சர்வ சாதாரணமாய் தோன்றுகிறது.
தாழ்தளை பேருந்து, சொகுசு பேருந்து, automatic ticketing என்று எவ்வளவோ புதிதாக வந்துவிட்டது. ஆனாலும் பஸ்கள் கூட்டமாகத் தான் செல்கின்றன. 100 feet ரோட்டில் அவ்வளவு traffic. Like ஏதோ race நடக்கிற மாதிரி.இந்தப்பக்கம் ஒரு பஸ் வருது, இந்தப்பக்கம் லாரி வருது, நான் உட்கார்ந்திருந்த ஆட்டோ இரண்டுக்கும் நடுவே செல்ல பார்க்கிறது. என்னையும் என் மனைவியையும் signalஇல் நிறுத்தி இறங்கிக்கொள்ள சொல்கிறார். நானும் இறங்குகிறேன். அங்கே ஒரு traffic police நிற்கிறார். எனக்கு பகீர் என்றது. அவர் ஒன்னுமே சொல்லவில்லை, அடித்து பிடித்து சிக்னலை க்ராஸ் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. 100feet ரோட்டில் நிறைய இடங்களில் traffic police இல்லை. சிக்னல் கரெக்ட்டாக தவறாக வேலை செய்கிறது. அல்லது அவ்வாறே design செய்யப்பட்டிருக்கிறது. red signal விழும் போது நிறைய பேர் காத்திருக்கிறார்கள். green சிக்னல் விழும் போது, ஒன்றிரண்டு பேர் மட்டுமே நிற்கிறார்கள். அப்ப எப்படி மக்கள் ஒழுங்கா traffic rules follow பண்ணுவாங்க?
***
GetIt service மிகவும் உபயோகமாக இருந்தது. வீட்டில் internet வேலைசெய்யவில்லை, நாளை flightஇல் மதுரைக்கு போகவேண்டும். ஒரு கால் to GetIt. எங்கள் வீட்டுக்கு அருகே இருக்கும் Travel Agent address அடுத்த இரண்டு நிமிடங்களில் கிடைக்கிறது. நடந்து சென்று கூலாக டிக்கெட் வாங்கிக்கொண்டு வரலாம். அப்புறம் Airtelஇன் 7 days 75 rupees internet. Just one SMS. 75 rupees deducted from your account. settings received. save it. then browse using whatever you have. Laptop or PC. DataCable இல்லீன்னா Bluetooth இருந்தா போதும். Just like that! No application. Nothing.
***
Landmarkஇல் சில புத்தகங்கள் வாங்கினேன்:
1. கணையாழி கடைசிப்பக்கங்கள் – சுஜாதா – 1965-1998
2. ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் – சுஜாதா
3. ஜே.ஜே சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
4. திக் திக் திக் – இந்திரா சௌந்தர்ராஜன்
5. சனிக்கிழமை விபத்து – ”
6. யாரென்று மட்டும் சொல்லாதே – ”
costlyயாகத்தான் இருந்தது. Landmarkஇல் தமிழ் புத்தகங்கள் நல்ல கலெக்சன்ஸ் இல்லை என்றே நினைக்கிறேன். சுஜாதாவும் பாலகுமாரனுமே நிறைந்து கிடக்கின்றனர். வேற எங்கே வாங்கலாம்? second hand bookshops? இல்லீன்னா நல்ல கலெக்சன்ஸ் இருக்கக்கூடிய பெரிய கடைகள்? ஒரு mobile library பத்தி கேள்விப்பட்டேன். விபரம் தெரிந்தவர்கள் துப்பு கொடுக்கவும்.
***
இப்பொழுது the 3 mistakes of my life – chetan bhagat படித்துக்கொண்டிருக்கிறேன். Atlast we have realised and started using our strengths என்றே சொல்லவேண்டும். IPL ஒரு மிகச்சிறந்த உதாரணம். பல வெள்ளக்காரன் நொள்ளக்காரனெல்லாம் கையக்கட்டிட்டு உக்காந்திருந்தத பாக்க முடிஞ்சது, மனசுக்கு சந்தோஷமா இருந்தது.
Landmarkஇல் இந்த புத்தகம் அதிகமாக தென்பட்டது. இவரது மற்ற பழைய புத்தகங்களும் மீண்டும் விற்க ஆரம்பித்துவிட்டன என்று நினைக்கிறேன். Five point someone கூட ஆங்காங்கே தென்பட்டது. புத்தகத்தின் விலை 95 ரூபாய்.
இந்த புத்தகத்தில் வரும் ஒரு dialogue.
“they (australia) have twenty million people. we have one billion, growing at two percent a year. Heck, we create an Australia every year. Still they cream us. Something is wrong about this”
இதற்கு பதில் அடுத்த சில பக்கங்களில் ஒரு Australia playerஇன் வழியாக கிடைக்கிறது:
“right now you (India) rely on talent more than training. You have a big population, a tiny number of them are born excellent. Like Tendulkar, or may be like Ali (a little boy in the story, who has some hyper-reflex-kinda gift)”
கிடைத்தால் கண்டிப்பாக படியுங்கள்.
***
சுவையாக உள்ளது உங்கள் குறிப்புகள்.
LikeLike
Muthu, You can go to Newbooklands in T Nagar.-Mathy
LikeLike
// வேற எங்கே வாங்கலாம்? //try Higginbothams in Mount Road
LikeLike
பிரேம்ஜி: நன்றி.மதி: நன்றி. இரவு எட்டு மணிக்கே கடையை அடைத்துவிடுகிறார்களாமே?! பொதுவாக weekdaysலஅலுவலகம் முடித்து வருவதென்றால் எட்டுமணிக்கு மேலே ஆகிவிடுமே! நாளைக்கு போகலாம் என்றிருக்கிறேன்.மனதின் ஓசை: நன்றி. நாளைக்கு போகலாம் என்றிருக்கிறேன்.
LikeLike
நட்சத்திர வாழ்த்துக்கள் மிஸ்டர் முத்து!
LikeLike
சலிப்பூட்டாத எழுத்து நடை அழகு.. 🙂 என் சார்பாகவும் நட்சத்திர வாழ்த்துகள்..
LikeLike
//இப்பொழுது the 3 mistakes of my life – chetan bhagat படித்துக்கொண்டிருக்கிறேன்.Good work by Chetan Bhagat. But I do feel, FPS is Chetan’s best.
LikeLike
ஆட்டோக்கள் பெரும்பாலும் அரசியல் கட்சிக்காரர்கள்,காவல்துறையினர்,லாபம் ஒன்றே குறிக்கோள் என எண்ணும் லேவாதேவிக்காரர்கள் கட்டுப்பாட்டில் உள்ளதால் தான் தாங்கள் சொன்ன பயங்கர அனுபவம்(பகல் கொள்ளை).இதை சரி செய்ய யோசனைகள்.1.share auto வுக்கான பெர்மிட்களை தாரளமாக தந்து ,வரிச் சலுகைகளூம் தரலாம்.2.mini bus உபயோகத்தை ஐ தாராளமாக்கலாம்3.கிராமங்களில் ஓடும் van(town bus charge) களை நகரங்களிலும் அனுமதிக்காலாம்.4.நகரப் பேரூந்துகளில் தனியாரை (ஒரு சில கட்டணக் கட்டுப்பாடுகளுடன்)அனுமதிக்காலாம்.5.தலைநகர் டெல்லி உள்ளது போல் சென்னையில் “metro train” ஐ கொண்டு வரலாம்.6.எல்லாவற்றுக்கும் மேலே அவசியமில்லாத பயணங்களை தவிர்க்க பிரச்சார இயக்கம் தொடங்கலாம்.
LikeLike
“எஸ்.ராமகிருஷ்ணன் புகழ்” வலைப்பதிவர் முத்து அவர்களே…..நட்சத்திர வாழ்த்துக்கள். 🙂
LikeLike
நட்சத்திர வாழ்த்துக்கள்!
LikeLike
நம்ம ஆட்டோ ஓட்டுனர்களை பிடித்து கொஞ்ச நாட்களுகு மும்பாயில் ஓட்டவைக்கலாம்.Take Diversion,Take Diversion என்று போர்டு போடாமல் என்னுடைய கால் டேக்ஸி சுற்றி சுற்றி விருகம்பாக்கத்தில் இருந்து கிண்டி அண்ணா பல்கலை கழகத்துக்கு வாங்கிய பணம் ரூபாய் 234.பணம் கொடுக்கும் போது மனது எரிந்தது.
LikeLike