சுஜாதா குறிப்பிட்ட நாபகோவின் சிறுகதை: எனக்கு புரியவில்லை

நாபகோவ் எழுதிய சிறுகதை ஒன்றை சுஜாதா கணையாழியில் 1966ஆம் வருடம் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு அப்பா, ஒரு அம்மா; ஒரே மகன் பைத்தியமாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான். ஆஸ்பத்திரி வேறு ஊரில் இருக்கிறது.

பெற்றோர்களுக்கு ஒரு தினம் ஆஸ்பத்திரியிலிருந்து டெலிபோன் வருகிறது. பையன் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் உடனே புறப்பட்டு வரும்படியும். உடனே என்றால் மறுதினம் தான் போக முடியும்; அதற்குள் என்ன நேர்ந்துவிடுமோ என்று கவலைக் கடலில் இரவெல்லாம் விழித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது:

டெலிபோன் மணி அடிக்கிறது. பதற்றத்துடன், பயத்துடன் அதை எடுக்கிறார் அப்பா.

“ஹென்றி இருக்கிறானா?” என்கிறது ஒரு பெண் குரல்.
“ஹென்றி என்று இங்கு ஒருவரும் இல்லை; தப்பு நம்பர்” என்று வைத்துவிடுகிறார்.

மறுபடியும் சில நிமிஷம் கழித்து டெலிபோன் அடிக்கிறது.
“ஹென்றி இருக்கிறானா?” அதே பெண்.
“மிஸ், உனக்கு என்ன நம்பர் வேண்டும்?”
“5365849”
“என் நம்பர் 5365840- ஒன்பதுக்கு பதில் சைபரைச் சுழற்றுகிறாய் போலிருக்கிறது”
“ரொம்ப தாங்க்ஸ்” என்று அந்த பெண் வைத்துவிடுகிறாள்.

கதையில் இன்னும் ஒரு வரி தான் இருக்கிறது.
சில நிமிஷம் கழித்து மீண்டும் டெலிபோன் மணி அடிக்கிறது.

நாபகோவின் புத்திசாலித்தனம் புரிகிறதா?

***
எனக்கு புரியவில்லை. புரிந்தவர்கள் கொஞ்சம் சிரமமெடுத்து, இந்த மரமண்டைக்கு புரியவைக்கவும்.

7 thoughts on “சுஜாதா குறிப்பிட்ட நாபகோவின் சிறுகதை: எனக்கு புரியவில்லை

  1. சரியான இலக்கத்தை அந்தப்பெண்ணிடம் சொல்லி விட்டதால் அந்தப்பெண் திரும்பவும் போன் பண்ண சந்தர்ப்பம் இல்லை. எனவே போன் ஆஸ்பத்திரியிலிருந்துதான் வருகிறது..!.

    Like

  2. இதில் என்ன குழப்பம்? அந்த ஃபோனில்தான் மகனை பற்றிய கெட்ட செய்தி வரும். இது நம்பிக்கை கொடுப்பது போல ஏமாற்றி கழுத்தறுக்கும் வாழ்க்கையின் அபத்தங்களில் ஒன்று.இதே போல இன்னொரு கதையிலும் சுஜாதா எண்டிங் தந்திருக்கிறார். கல்யாண நாளன்று ஒரு பெண்ணுக்கு காலை முதலிலிருந்தே எல்லாமே இனிமையான அனுபவங்கள். அன்று மாலை வெளியூருக்கு விமானத்தில் பயணம் ஆகிறான் அவள் கணவன். மேலும் இனிய அனுபவங்கள் தொடர்கின்றன. கதையின் கடைசி வரியில் இரவு 11.50 மணி வாக்கில் ஃபோன் அடிக்கிறது. அது எதற்காக இருக்கும் என நினைக்கிறீர்கள்?இன்னொரு கதை அசோகமித்திரனுடையது. இரவு முழுக்க ரௌடி கும்பலிடமிருந்து தாக்குதலை எதிர்ப்பார்த்து குடும்பம் உட்கார்ந்திருக்கிறது. சிறு சிறு ஓசைகள் பயத்தை உண்டு பண்ணி பிறகு ஒன்றுமில்லை என ஆகிறது. இரவு மணி 11, 12, 1, 2 என்று கடிகாரம் காண்பிக்கிறது. பிறகு எல்லோருமே 3 மணிவாக்கில் உறங்க ஆரம்பிக்கின்றனர். கதையின் கடைசி வரி: “விடியற்காலை 4 மணிக்கு முதல் கல் வந்து விழுந்தது”.அன்புடன்,டோண்டு ராகவன்

    Like

  3. அந்தக் கடைசி டெலிஃபோன் மணி, ஹாஸ்பிடலிலிருந்து வந்திருக்கலாம்(அவர்கள் மகன் இறந்த செய்தியாக). அல்லது அந்த ராங் நம்பராகவே கூட இருக்கலாம். முடிவை வாசகரின் ஊகத்துக்கே விடும் உத்தி இது.

    Like

  4. முத்து,நானும் இதே கதையை சில மாதங்களுக்கு முன் பதிவிட்டிருக்கிறேன்.அதில் ஒரு அனானி நண்பரின் பதில் சற்று உதவுகிறது./signs and symbols by vladimir nobakov. பற்றிச் சொல்கிறீர்கள்.கதையின் கருத்தே அது தான். கடைசி வரியில் சொல்லப்படும் இந்த டெலிபோன் மணி அடிப்பது மகனின் மரணச் செய்தியோ என்ற கேள்வியை எழுப்பும்.அல்லது மகனின் மரணம் பற்றிச் சொல்ல விழையும் நர்ஸ் பெற்றோரின் நிலையை அறிய இந்த விளையாட்டை விளையாடியிருக்கலாம் என்ற எண்ணமும் தோன்றுகிறது. /http://enn-ennangal.blogspot.com/2007/01/3.html

    Like

  5. கோகுலன்: இது புது view.டோன்டு சார்: நானும் அப்படி தான் நினைத்தேன். But I was not able to connect with the wrong calls. Thanks for other stories too!!யோசிப்பவர்: ம்ம். wrong call-ஆகவே இருக்கட்டும்.பரத்: Thanks for the info. I have found the original story.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s