Infosys : Campus Placements withdrawn.

எனக்கு தெரிந்த ஒரு பையன் இன்று என்னை சந்திக்க வந்திருந்தான். 2007-ல் BE ECE முடித்தவன். நல்ல precentage வைத்திருக்கிறான். Infosys-ல் Campus placement கிடைத்திருக்கிறது. Appointment order எல்லாம் கொடுத்தாயிற்று. காலேஜ் முடித்துவிட்டு, பல கனவுகளோடு Infosys campus-க்குள் நுழைந்தவனுக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. Training பிறகு அவர்கள் வைக்கும் test-களில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தொடரமுடியும் என்று அவர்கள் கூறினார்கள். சும்மா கொஞ்ச நஞ்ச test கிடையாது. கிட்டத்தட்ட 20 test-கள். மூன்று மாதங்கள். பிறகு இவனை இங்கு வேலை செய்ய லாயக்கில்லை என்று சொல்லி infosys வீட்டுக்கு அனுப்பிவிட்டது.

இவனை மட்டுமில்லை, இவனுடைய batch-இல் 156 பேர், கடைசியில் Infosys வேலைக்கு எடுத்துக்கொண்டது வெறும் 36 பேரை மட்டுமே! மீதமிருக்கும் 120 பேரும் வேலைக்கு லாயக்கற்றவர்களா? அது நீங்கள் campus interview நடத்தும் போதே தெரியாதா? என்னங்கய்யா இது?! ஒருவர் இருவர் என்பது வேறு விசயம், 120 நபர்களா? இதில் வேறு பிரச்சனை இருக்கிறது.

இவன் இவனது, college-க்கு வந்த முதலாவது கம்பெனியில் place ஆகியிருந்திருக்கிறான். இன்னும் பல company-கள் அதற்கு பிறகு வந்திருக்கின்றன. ஆனால் according to rules, Infosysஇல் place ஆனதால், பிற கம்பெனி interview-களை இவன் attend செய்ய முடியவில்லை. Infosys முதலிலே இவ்வளவு நபர்களை மட்டும் select செய்தால் போதும்னு நினைச்சிருந்தாங்கன்னா வேற company-யில் இவன் place ஆகியிருக்ககூடும் இல்லியா? இவனுக்கு பிறகு மத்த companyயில் (பிற சின்ன கம்பெனிகள் உட்பட) placeஆன இவனது நண்பர்கள் எல்லோரும் settle ஆகி விட்டிருக்கின்றனர்.

இப்பொழுது இவன் resumeஇல் Infosys இருக்கிறது. மூன்று மாதம் training இருக்கிறது. Interviewவுக்கு போகும் இடத்தில் எல்லாம் இதைப்பற்றிய குடைச்சல்கள். இன்னும் வேறு வேலை கிடைத்தபாடில்லை. என்னுடைய batchஇலும் (2001) இதே போல நடந்தது. பல கம்பெனிகள் தங்களது appointment order-களை withdraw செய்துகொண்டன.

படித்து முடித்து புது வேலையில் சேர ஆவலோடு வரும் students இது போன்ற சரிவுகளிலிருந்து மீள்வது மிகுந்த சிரமம். இதோ டிசம்பர் வரையில் time போச்சு. இப்ப வேலை தேடினா experience கேக்கறாங்க. அடுத்த freshers batch (2008) வெளிவந்துவிட்டது.

என்ன செய்யப்போகிறோம் என்கிற அந்த பையனின் கலக்கம் ஒரு வேலை கிடைத்தால் மட்டுமே நீங்கும்.
Freshers recruitment இருந்தால் கண்டிப்பாக சொல்லவும்.

Government, considering the future of the students, have to enforce some restrictions and laws towards companies hiring in the campus. Also colleges must not allow these companies (must have some withdrawn/placement ratio) in to their campus in future.

13 thoughts on “Infosys : Campus Placements withdrawn.

  1. கல்லூரிகள் இத்தகைய நிறுவனங்களை கருப்புவரிசையிலிட்டு பகிஷ்காரம் செய்ய வேண்டும். அரசும் campus select செய்தவர்களை நிறுவனங்கள் குறைந்தது இருவருடங்கள் பணியில் அமர்த்தவேண்டும் என நிர்பந்திக்க வேண்டும்.

    Like

  2. உங்களுக்கு தெரிந்த பையனுக்கு இப்படி நடந்திருப்பது வருத்தத்திற்குரியது தான்.ஆனால் உண்மை நிலவரம் என்னவென்று கேட்டபோது கிடைத்த தகவல் இது.1. ஒரு கம்பெனியில் தேர்வானால் மற்றொன்றின் தேர்வுக்கு அமர அனுமதி மறுப்பது கல்லூரிதானே ஒழிய தேர்வு செய்த கம்பெனியல்ல.2. இன்ஃபோஸிஸ்ல் தேர்வுசெய்யப்படும்போதே, வேலைவாய்ப்புக்கான விதிமுறைகள் தெளிவாக விளக்கப்படுகின்றன, அதில் இந்த பயிற்சிக்கு பின்னான தேர்வும் அதன் விதிமுறைகளும், பின்விளைவுகளும் சேர்த்தி. தேர்வுசெய்யப்படாமல் போவதற்கு பரீட்சைகள் மட்டுமே காரணமில்லை, அதன் பின் வைவா (viva) என்ற முறையில் குறைந்தபட்ச புரிதலாவது இருக்கிறதா என்று பார்த்து அதிலும் தவறினாலே இவ்வாறு நடவடிக்கை எடுக்கின்றனர். எதற்கு அவரது ரெஸ்யூமில் இன்ஃபோஸிஸ் என்று போட்டுள்ளார்? அது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது? தயவுசெய்து அதை எடுத்துவிடச்சொல்லவும்.எனக்கு தெரிந்த இடங்களில் நான் விசாரிக்கிறேன். எங்கு வாய்ப்பு இருந்தாலும் தெரியப்படுத்துகிறேன்.

    Like

  3. Please find if this can help..Great Oppurtunity. DELL Recruting Freshers Dear All As part of our Diversity Initiatives, we are (probably for the first time) conducting an All India Selection Test for Diversity Students as per the details below: We are planning to recruit more than 1000 new graduates for our new web mail development, in various locations.this is Great Opportunity for Fresh Graduates to work with Dell Qualification: ØBE / B. Tech. – 2008 passouts ( Computer Science, Information Technology, Electronics and all Electronics ,Electronics & Telecommunication, Electronics & Instrumentation etc.) Ø MCA / M.Sc. -2007/08 : Only Computer Science & Information Technology Branch Ø B.Sc./BCA – 2007/08 : Computer Science, Information Technology, Physics, Mathematics, Chemistry, Statistics, Electronics Eligibility Criteria : ØGraduation 60% and Above Ø 10th/12th: 60% and above Ø No Gap in education Ø Willingness to work in shifts, any platform & any location Ø No Supplementary (un-cleared) subjects as on date Ø Good Communication Skills If you have resumes meeting the above criteria you can send it to: Bangalore: offcampus.bangalore @dellmail. com Chennai: offcampus.chennai@ dellmail. com Hyderabad : offcampus.hyderabad @dellmail. com It will be great if you could forward this message to any of your acquaintances who are keen in participating in this test. Please note that as per our regular hiring norms, the students clearing this test with go thru the various levels of Interviews before being made the FTE offers.

    Like

  4. இது இன்போசிஸில் மட்டும் நடப்பதில்லை. பல இடங்களிலும் நடக்கிறது.இதற்கு காரணம் இன்போசிஸ் அல்ல.அன்று வேலைக்கு எடுத்த போது அவர்களுக்கு பலர் தேவைப்பட்டனர்இன்று டாலரின் வீழ்ச்சியால் இது போன்ற நிறுவனங்கள் தடுமாறு கின்றன.ஆட்குறைப்பில் இறங்க வேண்டிய நிர்பந்தத்தில் இது போன்ற தகிடு தத்தங்கள் நடக்கின்றனடாலர் நிலைமை சரியானல் 120 பேரும் தேர்வில் தேர்ந்தெடுகப்படுவார்கள். அவ்வளவு தான். அது போல் 20 தேர்வுகளும் 2 ஆக குறைந்து விடும்

    Like

  5. //அது போல் 20 தேர்வுகளும் 2 ஆக குறைந்து விடும்//அது குறையாது… எனக்கு தெரிஞ்சி 5 வருஷமா அப்படித்தான் இருக்கு… அதுக்கு முன்னாடியும் அப்படி தான் இருந்ததாக சொன்னார்கள்… Computer Science background (BE CSE/IT, MCA) இவர்களுக்கு 6 வார பயிற்சி. மற்றவர்களுக்கு மூன்றரை மாதங்கள் பயிற்சி. இது பல வருடங்களாக நடந்து வரும் முறை. இந்த மூன்றரை மாத பயிற்சிக்கு பல லட்சங்கள் செலவழிக்கிறது நிறுவனம். இவர்களால் நிறுவனத்திற்கு அந்த பயிற்சியின் போது எந்த பலனுமில்லை. (They are not in projects)Comprehensive testல தேர்வாகவில்லையென்றால் Re-Compre அதற்கு பிறகு Viva. இதில் எதுவும் தேறவில்லையென்றால் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். அவ்வளவு தான்…

    Like

  6. அனானி: குறைந்தது இரண்டு வருடங்கள் பணியில் அமர்த்த வேண்டும் என்றெல்லாம் இல்லை. அவர்கள் இது போன்ற vigorous testing இருக்கிறது அதற்கப்புறம் தான் வேலை உறுதி என்பதை மாணவர்களிடம் சொன்னாலே போதும். Paper-இல் இருக்கிறது என்றெல்லாம் சொல்லமுடியாது, மாணவர்களுக்கு என்ன தெரியும்?மங்களூர் சிவா: ஆமாம். நம்மால் முடிந்த வரை awareness-ஐ உண்டுபண்ணவேண்டும்.அனானி: தேர்வு செய்த கம்பெனி அளித்த உத்தரவாதத்தினால் தான் கல்லூரியும் மாணவனும் மீண்டும் வேறு கம்பெனிக்கு apply செய்வதில்லை. Contract-இல் இருப்பது என்று சொல்வதெல்லாம் சும்மா. மாணவர்களிடம் தெளிவாக எடுத்துச் சொல்லவேண்டும். Training என்று சொன்னால் அவன் என்ன நினைப்பான்? 25 test, ஒவ்வொரு test-லும் 18 மார்க்குக்கு மேலே வாங்கனும் என்றேல்லாம் சொன்னார்களா என்பது கேள்விக்குறி தான்?! கண்டிப்பாக தகவல் சொல்லவும். உதவியாக இருக்கும்.அபுல்: Thanks.புருனோ: டாலர் வீழ்ச்சி எனுக் காரணம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனாலும் எந்த தைரியத்தில் இவ்வளவு மாணவர்களை அவர்கள் recruit செய்தார்கள்? அப்படியா forecasting மோசமாக போய்விட்டது?!வெட்டிப்பயல்: பல லட்சங்களோ பல கோடிகளோ எவ்வளவு வேண்டுமென்றாலும் செலவழிக்கட்டும் யாருக்கு கவலை?! அவர்களுக்கு தேவை செலவழிக்கிறார்கள்! என்னுடைய காலேஜில் கேம்பஸ் interview-க்கு வந்த ஒரு MNC இவ்வாறு சொன்னது: “We can train even donkeys”. Training-ல வெளில அனுப்பறது rare scenario. கும்பலாக அனுப்புவதென்றால்? something wrong. History repeats?

    Like

  7. குர‌லுக்கு ந‌ன்றீ…..மாணவர்கள் சார்பாக ….பாலா

    Like

  8. //அரசும் campus select செய்தவர்களை நிறுவனங்கள் குறைந்தது இருவருடங்கள் பணியில் அமர்த்தவேண்டும் என நிர்பந்திக்க வேண்டும்//ம்ம்ம்..அப்புறம், அப்படியே இடஒதிக்கிடையும் அமுல் படூதிடலாம், பின்ன 33 % பெண்களுக்கும் ஒரு சட்டமும் போடலாம் அப்புறம் நாடு ரொம்ப வெளங்கிடும்.கேம்பஸ்ல select ஆய் settle ஆனா தான் வாழ்க்கையா. then what about the students who come out from local colleges, are they not surviving. என்னை பொறுத்த வரை திறமை இருந்தால் கொஞ்ஞம் late ஆனாலும் மேலே வந்துடுவான்

    Like

  9. Infosys மட்டுமல்ல விப்ரோவிலும் இதே தான். முணு மாதம் ஒழுங்கா படித்து டெஸ்ட் கிளியர் பண்ணினா தான் பிராஜக்டுல உக்கார வைப்போம்னு முதல் நாளே சொல்லிடுவாங்க. //இன்று டாலரின் வீழ்ச்சியால் இது போன்ற நிறுவனங்கள் தடுமாறு கின்றன.//இதுக்கும் டாலர் வீழ்ச்சிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. Because டாலர் 45 ரூ க்கு இருந்த போதும் இதே தான்.//கும்பலாக அனுப்புவதென்றால்? something wrong. History repeats?// 120 பேர் வெளியே போனார்கள் என்பதால் சம்திங்க் ராங்க் என எப்படி சொல்ல முடியும்? இந்தியாவில் எதுகெடுத்தாலும் மெஜாரிட்டி தான் இல்லையா? :)//Paper-இல் இருக்கிறது என்றெல்லாம் சொல்லமுடியாது, மாணவர்களுக்கு என்ன தெரியும்?//பேப்பரில் என்ன கம்பனி? எவ்ளோ சம்பளம்?னு பாக்க தெரியும். என்ன விதிமுறைகள்?னு பாக்க வேண்டாமா? பி.ஏ படித்த மாணவர்களுக்கு இதுவுமா வாயால சொல்லனும்?நல்ல வேலை கிடைக்க வாழ்த்துகிறேன், என்னாலான முயற்ச்சியும் செய்கிறேன்.

    Like

  10. Hello,I am an Ex-Infosys employee and was recruited from the campus. All conditions and details regarding the training was explained very clearly during the Pre-Placement talk. Nature and duration of the training, number of tests and percentage to be scored to clear the tests were conveyed even before the placement exams. After the completion of all module tests, you have a comprehensive exam, and a re-compre for those who fail. A third chance – viva – is also given to ppl who fail in re-compre also. I think it is fair enough to give a person 3 chances. Entire study material would be given to the trainees beforehand and I dont think there is any reason to find fault with the company. It is only the college administration that stop the students from taking interviews from other companies – not the companies.- Ramya.

    Like

Leave a comment