என் நண்பர் ராஜாவிடம் (சாஹ்ரிதயன். spelling தெரியல ராஜா! தப்பா இருந்தா மன்னிச்சுக்கோங்க!) என்னைப்பற்றி எழுதித்தாருங்கள் என்று கேட்ட பொழுது கொஞ்சமும் சிரிக்காமல்; என்னைப்பற்றி எழுதிக்கொடுத்த அந்த உயர்ந்த உள்ளத்துக்கு நன்றிகள் பல!
“தேடுதல் உடைய வளரும் எழுத்தாளர் முத்து, கணிப்பொறி துறையில் பணியாற்றிக் கொண்டு ப்ளாக் எழுதுதல், சிறுகதை, குறு நாவல், கட்டுரை என தனது தளத்தை விரிவாக்கி வருகிறார். ஆங்கில மற்றும் தமிழ் எழுதல்களை (இலக்கியம்?!) விரும்பி ஸ்வாசித்து சிங்கையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். குடும்பம், சமூகம் எனவும் அவரது பங்களிப்பு பரவுகிறது. சமீபத்தில் தந்தையாகிருக்கிறார். ”
– Sahridayan
மேலும் இந்த ரணகளமெல்லாம் எங்கிருந்து ஆரம்பிச்சதுன்னு (History of the incident) பாக்கறதுக்கு இந்த பதிவைப் படிங்க!
Biodata!
பெயர்: முத்து MSV
ஊர்: திருப்பரங்குன்றம், மதுரை
தற்போது வசிப்பது: இது என்ன ஊர்; சிங்கப்பூர்!
படிப்பு: BE, MEPCO (பாஸ்!)
முந்தைய தொழில்: தட்டு பொட்டிதல் (ஹை! கண்டுபிடிங்க பாக்கலாம்!)
சமீபத்திய தொழில்: அதேதாம்ப்பா! கூட அப்பா வேலையும்!
பிடித்தது: வாசிப்பது, தூங்குவது, மேலும் தூங்குவது. மேலும் மேலும் தூங்குவது!
பிடிக்காதது: என் கலீக்ஸ¤ம் படிக்கறாங்க, சொல்ல முடியாது!
நீண்டகால எரிச்சல்: சரியாக ஆபீஸ் டயமுக்கு வருகிறவர்கள்!
சமீபத்திய எரிச்சல்: வீட்ல washing machine வேலை செய்யாதது!
நீண்டகால சாதனை: சிறுகதைகள் எழுதுவது (தூங்கி எழுந்து கண்ட கனவெல்லாம் எழுதறது சிறுகதையாய்யா! கொஞ்சம் புரியுற மாதிரி எழுதுய்யா!)
சமீபத்திய சாதனை: எஸ். ராமகிருஷ்ணன் அவர்களிடமிருந்து பாராட்டு (இத ஒன்ன சொல்லிடறான்; எங்க போனாலும்!), தமிழ்மணத்தின் அழைப்பு! (இது வேறையா?!)
பிடித்த எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (ஐஸ்டா மச்சான்!)
பிடித்த பதிவர்: சுஜாதா, ஜெயமோகன் (சரிகட்டியாச்சு!)
படித்ததில் மிகவும் பிடித்த பதிவு: நிறைய இருக்கு! Like வெட்டிப்பயலின் மணமகள் கையேடு! ஆனா இப்பவும் நினைச்ச உடனே சிரிக்கக்கூடிய பதிவு! ப்ராகாஷ்-இன் (என் நைனாவும் சாருநிவேதிதாவும்)
நீண்டகால விருப்பம்: காந்தம் கதையை எழுதி முடிப்பது. ஏதேனும் வார புத்தகத்துக்கு தொடராக கொடுப்பது! (தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா!)
சமீபத்திய விருப்பம்: ஒரு புது கதை எழுதுவது. (ஐயையோ!) அதை publish செய்வது.
சமீபத்திய சர்ப்ரைஸ்: சாலமன் பாப்பையா அவர்களை விமானத்தில் சந்தித்தது! (போட்டோ எல்லாம் எடுக்கலைப்பா!)
நீண்டகால சர்ப்ரைஸ்: தமிழ் பதிவுலக நண்பர்கள்! (எப்படி இவ்ளோ fast-ஆ எல்லா விசயத்தையும் எழுதறாங்க! இன்று தமிழ்நாட்டு பாடப்புத்தகங்கள் வலையேற்றப்பட்டதை நான் அறிந்து கொண்டபொழுது, மா.சிவக்குமார் அவர்களது பதிவில் சர்வேசன் துணையோடு ஒரு ரணகளமே நடந்துவிட்டிருந்தது! Sema fast macchiஸ்!)
என்னை நட்சத்திரமாக தேர்ந்தெடுத்த தமிழ்மணத்துக்கு நன்றி!
நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்களுடன் அசத்துங்கள் இந்த வாரத்தில்….!
LikeLike
வாழ்த்துக்கள்…
LikeLike
வாழ்த்துக்கள் முத்து 🙂
LikeLike
நட்சத்திரம் ஆனதற்கு வாழ்த்துக்கள்
LikeLike
முத்து, அது சஹ்ரிதயன் (சஹ+ஹ்ருதயன்) தான்!Hope the meaning is self explanatory!You can find this word in Jeyakanthan books.
LikeLike
நட்சத்திரம் ஆனதற்கு வாழ்த்துக்கள்…
LikeLike
ஆயில்யன், லக்ஷ்மன்,கிரி,இவன்,சஹ்ருதயன்,வழிப்போக்கன்: நன்றிகள் பல பல!
LikeLike