நீல பத்மநாபன், ஞானகூத்தன், மதில்கள், முத்து, முராகமி, zen

ஒரு மகிழ்ச்சியான செய்தி: ஜுன் 21ஆம் தேதி எனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ஸ்ரீநிதி என்று பெயரிட்டிருக்கிறோம்.

***

ஞானக்கூத்தன் கவிதைகள் என்கிற விருட்சம் வெளியிட்ட கவிதைத் தொகுப்பை படித்துக்கொண்டிருக்கிறேன் அவ்வப்போது. ஞானகூத்தன் 1968 -லிருந்து 1994 வரை எழுதிய கவிதைகளின் தொகுப்பு இந்த புத்தகம்.

என்னைக் கவர்ந்த கவிதைகள் சில:

அதனால் என்ன

பாடச் சொன்னால் வெட்கப்படுகிறார்கள்
பேசச் சொன்னால் கூச்சப்படுகிறார்கள்
ஆடச் சொன்னால் கோணுகிறார்கள்
நடிக்கச் சொன்னால் தயங்குகிறார்கள்
வரையச் சொன்னால் வராதென்கிறார்கள்
கவிதை வருமா என்றால் உடனே
எண்பது பக்க நோட்டுப் புத்தகம்
இரண்டை எடுத்து நீட்டுகிறார்கள்.

அதான?!

நாய்

காலம் கடந்துண்ணும் எதிர்மனைப் பாப்பான்
எச்சிற் களையைத் தெருவில் எறிந்தான்
ஆள் நடவாத தெருவிள் இரண்டு
நாய்கள் அதற்குத் தாக்கிக் கொண்டன
ஊர் துயில் குலைத்து நாய்கள் குரைக்கவும்
அயல்தெரு நாய்களும் ஆங்காங்கு குரைத்தன
நகர நாய்கள் குரைப்பது கருதிச்
சிற்றூர் நாய்களும் சேர்ந்து குரைத்தன
நஞ்சை புஞ்சை வயல்களைத் தாவிக்
கேட்கும் குரைச்சலின் குரைச்சலைக் கேட்டு
வேற்றூர் நாய்களும் குரைக்கத் தொடங்கின
சங்கிலித் தொடராய்க் குரைத்திடும் நாய்களில்
கடைசி நாயை மறித்துக்
காரணம் கேட்டால் என்னத்தைக் கூறும்?

பிரச்னை

திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ ஒருவன் சொன்னான்
களவு போகாமல் கையருகே வை.

இந்த கவிதை தான் முத்தாய்ப்பு:

உயர்திரு பாரதியார்

சிறுவயதில் நான் பார்த்த நடனம் ஒன்றில்
பாடினார் இளம் பெண்கள் இருவரேதோ
பாட்டுக்கு. எவரெழுதித் தந்தா ரந்தப்
பாட்டென்று நான் கேட்டேன் உம்மைச் சொன்னார்.

சிறுவயதில் நான் சென்ற பொதுக் கூட்டத்தில்
சூடுள்ள சிலவரிகள் ஒருவன் சொன்னான்
எவரெழுதித் தந்தவரி என்றேன். வேர்த்த
முகம்துடைத்துக் கொண்டபடி உம்மைச் சொன்னான்

மணியறியாப் பள்ளிகளில் தண்டவாளத்
துண்டொன்று மணியாகத் தொங்கல் போலக்
கவிஞரிலாத் தமிழகத்தில் எவரெல்லாமோ
கவிஞரெனத் தெரிந்தார்கள் உமக்கு முன்பு

அணைக்காத ஒலிபெருக்கி மூலம் கேட்கும்
கலைகின்ற கூட்டத்தின் சப்தம் போலப்
பிறகவிஞர் குரல் மயங்கிக் கேட்குமின்னும்
நீர் மறைந்தீர் உம் பேச்சை முடித்துக்கொண்டு.

மணியில்லாத பொழுது தண்டவாளத்துண்டுகள் மணிகளாக இருக்கின்றன. என்றாலும் ஒரு போது தண்டவாளத் துண்டு மணியாக முடியாது.

***

நீல.பத்மநாபன் அவர்கள் எழுதிய இலையுதிர் காலம் படித்து முடித்தேன். சுவராஸ்யம் இல்லை. சுவராஸ்யத்தைக் கூட விட்டுத்தள்ளுங்கள், நீல பத்மநாபன் அவர்களின் நேர்காணலை தீராநதியில் படித்தேன். 1968ல உறவுகள் என்கிற அழகான (நான் இன்னும் படிக்கவில்லை) நாவலை எழுதியவர். அன்றைக்கே விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டியதாம். அப்ப நான் பிறக்கவேயில்ல! அடப்பாவிகளா. அவருக்கு எப்ப விருது கிடைத்திருக்கிறது பாருங்கள்.

வெளிநாட்டில் எல்லாம் விருது பெற்ற பின்னர், அந்த எழுத்தாளரின் புத்தகங்கள் அதிகமாக விற்க ஆரம்பிக்கும். இங்கு எப்படியோ? ஆனால் இப்பாவாவது கொடுத்தார்களே. சந்தோஷம். விருது செய்தியையும் நேர்காணலையும் படித்த பின்னர்தான் நான் நூலகத்தில் தேடிப்பிடித்து இலையுதிர் காலத்தை எடுத்து படித்தேன் என்பதை இங்கு சொல்லியாகவேண்டும். அவர் 2005 எழுதிய புத்தகம் இலையுதிர் காலம். இதை முன்வைத்துத்தான் சாகித்திய அகடெமி விருது அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. செய்யாமல் விட்ட ஒன்றை காலம் போன கடைசியில் செய்து சந்தோஷப்பட்டுக்கொள்கிறதோ அகடெமி? தெரியவில்லை. ஆனால் இலையுதிர்காலம் அகடெமி விருதுக்கு ஏற்றதா என்பது சந்தேகமே.

பேசாமல் சாகித்திய அகடெமி விருதை, வாழ்நாள் சாதனை விருது போல அறிவித்துவிடலாமே? நாங்கள் சாகித்திய அகடெமி விருது வாங்கிய ஒரு புத்தகத்தை தேடிகண்டுபிடித்து, நன்றாக இருக்குமென்று நினைத்து படித்து ஏமாற்றமடைய மாட்டோமே!

அவருடைய “தேரோடும் வீதி” அடுத்து படிக்க எடுத்து வைத்திருக்கிறேன்.

***

வைக்கம் முஹம்மது பஷீர் எழுதிய மதில்கள் என்கிற நாவலை ஏர்போர்ட்டில் வாங்கினேன். இன்னொன்று சொல்ல வேண்டும், சாருநிவேதிதா எழுதிய ராசலீலா நாவலையும் பார்த்தேன். 750 ரூபாயாம். வேலில போற ஓணான 750 ரூபாய் கொடுத்தா வாங்குவார்கள்? பேசாமல் வைத்துவிட்டேன். அதை வாங்கி படித்துவிட்டு, மூளை குழம்பி மேலும் ஒரு புல் தரையில் ரத்தம் போன்ற ஒரு கதையை எழுதினேன் என்றால், என்னுடைய ப்ளாக்குக்கு வரும் விசிட்டர்கள் ரூம் போட்டு என்னை அடித்தாலும் அடிக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் நான் எழுதிய சிறுகதைகளிலே எனக்கு மிகவும் பிடித்தது புல் தரையில் ரத்தம் கதை தான். அந்த கதை ஒரு உண்மை சம்பவமும் கூட. The strait times-இல் செய்தியாக அதைப் படித்தேன்.

“Arrested for killing his father in 1958, Mr James was ruled mentally ill by a judge, sent to an asylum for the criminally insane – and then forgotten.

Decades after his doctors pronounced him cured, he remained trapped in a criminal justice nightmare. The hospital could release him only to the prisons authority. The prisons authority could pick him up only under a court order. The courts never called for him because they could not find his file.

When he was finally released, he became a hero in Sri Lanka, and his ordeal a source of embarrassment as it exposed the bloated, inefficient bureaucracy. ”

அதை அப்படியே ஒரு கதையாக எழுதலாம் என்று நினைத்தேன், சாருநிவேதிதாவின் ஜீரோ டிகிரி அப்பொழுதுதான் படித்து முடித்திருந்த நிலையில், என்னால் அப்படித்தான் எழுத முடிந்தது. மேலும் கதையின் நிஜ ஹீரோவான Mr.James ஒரு மனநிலை தவறியவர் என்பதாலும் மனப்பிறள்வு நிலையிலே எழுதலாம் என்று முடிவு செய்தேன்.

***

மதில்கள் நாவல் இல்லை. அது ஒரு குறு நாவல் அல்லது சிறுகதையை போன்ற ஒன்றே. என்னைக் கேட்டால் சற்றே பெரிய சிறுகதை என்று வைத்துக்கொள்ளலாம். “வேணுங்கறது வேணுங்கறபோது கிடைக்காது” என்பது தான் கதையின் கரு.

இதையே அழகாக:
“ஒத்திகை செய்து நடத்தப்படும் நாடகமல்ல வாழ்வு. நம் திட்டங்களையும் தீர்மானங்களையும் சிதறடித்து எதிர்பாரா தருணங்களில் ஓர் விபத்து போல மோதி நம்மை வீழ்த்தி பெப்பே காட்டுவதாகவே இருக்கிறது”
என்கிறார் சந்தியா நடராஜன். (மதில்கள்: பதிப்புரை)

வைக்கம் முஹம்மது பஷிர் எழுதிய கதைகள் எல்லாம் அவரது சொந்த அனுபவங்கள் என்று சொல்லுவார்கள். வைக்கம் முஹம்மது பஷீர் சிறை சென்றிருக்கிறாரா என்பது தெரியாது.

“ஆனால் இப்போது இந்த ஜெயில் வாழ்க்கை முழுக்க முழுக்க இலக்கியத்துக்காக.. நினைத்துப் பார்த்த போது எனக்கே பெருமிதமாக இருந்தது.” (ப:16)

இந்த கதையை சுரா மஞ்சரியில் மொழிபெயர்த்திருந்திருக்கிறார்.

ஒரு இலக்கியவாதி சிறை செல்கிறார். சிறையில் சில தலைவர்களும் உடன் இருக்கிறார்கள். சிறையின் மதில்கள் தான் “மதில்கள்”. சிறையில் அந்த இலக்கியவாதி ஆனந்தமாக பொழுதைக் கழிக்கிறார். கொஞ்ச நாட்கள் கழித்து அனைவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள். இவரைத் தவிர. தலைவர்கள் எல்லாரும் வெளியே சென்ற பின்னர், இந்த இலக்கியவாதி மட்டும் தனியே பொழுதைக் கழிக்கிறார். அப்பொழுதுதான் பெண்கள் பகுதியில் இருக்கும் ஒரு பெண்ணுடன் பரிச்சயம் ஏற்படுகிறது. இருவரும் பேசிக்கொள்கிறார்கள். பொருட்கள் பறிமாறிக்கொள்கிறார்கள். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்தது கிடையாது. இருவருக்கும் அன்பு பெருக்கெடுக்கிறது. காதலாக மலர்கிறது. இருவரும் பார்த்துக்கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கிறது. நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று இருவரும் தங்களது அடையாளங்களை சொல்லிவைத்துக்கொள்கிறார்கள். அந்த இலக்கியவாதி நாளை அவளை பார்த்து விடலாம் என்று காத்துக்கொண்டிருக்கும் பொழுது, விடுதலை செய்யப்படுகிறார்.

“வை ஷ¤ட் ஐ பி ·ப்ரீ… ஹ¥ வான்ட்ஸ் ·ப்ரீடம்?” என்கிறார் அவர்.

அது தான் வாழ்க்கை! அழகான கதை!

***

ஹருக்கி முராக்கமியின் “The wind-up bird chronicle” படித்துக்கொண்டிருக்கிறேன். ரொம்ப காலமாக படித்துக்கொண்டிருக்கிறேன், கொஞ்சம் கொஞ்சமாக. On and Off. 600 பக்க நாவல் இது. Shantaram 900 பக்க நாவல். ஆனால் Shantaramஐ படித்தது போல தொடர்ச்சியாக Mr.Wind-up birdஐ படிக்க முடியாது. இதுவும் மனப்பிறள்வு சம்பந்தப்பட்ட நாவல் தான்.

இந்த மாதிரியான நாவல்களை தொடர்ச்சியாக படிப்பதனால் சில disadvantages இருக்கின்றன.

  1. நீங்கள் washing machineஇல் துணி போட்டிருக்கலாம். கொஞ்ச நேரத்தில் rinse செய்யும் போது அது sound கொடுக்கலாம். நீங்கள் உடனே washing-machine problem என்று நினைத்திவிடுவீர்கள். நினைத்தது மட்டுமல்லாமல், உங்கள் house ownerக்கும் சொல்லிவிடுவீர்கள். ஏன் தமிழ்மணத்துக்கு கூட சொல்லிவிட வாய்ப்பிருக்கிறது. அப்புறம் அந்த weird feeling வடிந்த பிறகு, தற்செயலாக washing machineஐ பார்க்கும் பொழுதுதான் தெரியும்; “You stupid, there is no problem with the machine, really, the problem is with your stupid head! The water outlet pipe of the washing machine was not released!” huh?!
  2. நீங்கள் நேத்து சாப்பிட பர்கரின் cheese TV remote controlஇல் விழுந்திருந்தால், TV remote controlஐ எடுத்துக்கொண்டு போய் தண்ணீரிலே கழுவி எடுப்பீர்கள். ஏதோ சாப்பிட்டு முடித்த தட்டை கழுவி வைப்பது போல.

An excerpt from the book:

Malta Kano put her elbows on the table and brought her palms together before her
face. “Neither,” she said. “There are no sides in this case. They simply do not exist. This
is not the kind of thing that has a top and bottom, a right and left, a front and back, Mr.
Okada.”
“Sounds like Zen,” I said. “Interesting enough in itself as a system of thought, but not
much good for explaining anything.”

So already weird heads, stay out of these books!

***

5 thoughts on “நீல பத்மநாபன், ஞானகூத்தன், மதில்கள், முத்து, முராகமி, zen

  1. ப்ரகாஷ்,ராகினி : நன்றி!சுகுமார்: எப்படி சார் இருக்கீங்க? அம்மாவும் பொண்ணும் நல்லா இருக்காங்க! சென்னையில் தான் இருக்காங்க, போய் பாருங்க!

    Like

  2. Hi,I would suggest Pallikondapuram and Thalaimuraigal of Neela.Padbanabhan which are his early works instead of his later works

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s