இயற்கைக்கு திரும்புதல் : பாலாஜி ஷங்கருடனான உரையாடல்

பாலாஜி ஷங்கர் என்பவர் ஒரு Neoவைப் போல. Neo? Mr.Anderson in The Matrix. The Matrix படத்தின் ஒன் லைன் “Get out the System : Free your mind” என்பது தான். Thats what Mr.Balaji Shankar has done.

***

Henry David Thoreau-வின் எண்ணங்கள் தான் பாலாஜிக்கு மனவெழுச்சியை உண்டாக்கின. மகாத்மாவைப் போலவே அவரும் Thoreauவினால் ஈர்க்கப்பட்டார். இயற்கையோடு வாழ்தலையும், எளிமையாக வாழ்தலையும் அவர்கள் பாலாஜிக்கு கற்றுத்தந்தனர்.

***
If a man does not keep pace with his companions, perhaps it is because he hears a different drummer – H D Thoreau in Walden

“ஒரு மனிதன் தன் சகாக்களோடு அணி சேர நடக்கவில்லை என்றால் அவன் வேறு ஏதோ தாளத்தின் இசையில் நடக்கிறான்”

***

தொர்ரோவின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட பாலாஜிக்கு நீண்ட காலமாகவே அவரைப் போல இயற்கையோடு வாழவேண்டும், மீண்டும் இயற்கைக்கு திரும்பவேண்டும் என்கிற ஆசை இருந்து கொண்டே இருந்தது. நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது? எல்லோரும் white collar வேலைகளுக்கு வந்துவிட்டால் விவசாயத்தை யார் கவனிப்பது? சோற்றுக்கு எங்கே போவது? மேலும் நாள் முழுக்க குளிரூட்டப்பட்ட அறைக்குள் கணினியையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்து விட்டு சூரியக்கதிர்கள் கூட நம் மீது பட்டுவிடாமல் மிகக் கவனமாக நாம் வாழும் வாழ்க்கை நம்மை எதை நோக்கி இட்டுச்செல்கிறது? முதுகு தண்டு வலியை நோக்கியா? முதலில் நடுவிரலின் அடிப்பகுதியில் தோன்றி பிறகு மணிகட்டுக்கு முன்னேறி பிறகு தோள்பட்டைக்கு நகரும் நரம்பு வலியை நோக்கியா? எதை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்?

நாம் நமது மூதாதயர்களை விட மகிழ்ச்சியாக இருக்கிறோமா? அவர்களை விட ஆரோக்கியமாக இருக்கிறோமா? அவர்களுக்கிருந்ததை விட ஓய்வான நேரங்கள் நமக்கிருக்கிறதா? இதையெல்லாம் விட அவர்களுக்கு இருந்த இயற்கை வளங்கள் நமக்கிருக்கிறதா? இருக்கும் இயற்கை வளங்களை நாம் அழித்துக்கொண்டல்லவா இருக்கிறோம்? போன்ற எண்ணற்ற கேள்விகள் தொடர்வண்டியாய் பாலாஜியை தாக்கின. கேள்விகளின் கடும் புகை அவரை சூழ்ந்துகொண்டது. எப்படி வெளியேறுவது?

இங்கே தான் Thoreau-வின் புகழ்பெற்ற கேள்வி அவர் முன் தோன்றியது: “How can I earn a livelihood and still have time to live?” இந்த அவசர யுகத்தில் வாழ்வதற்கெங்கே நேரம் இருக்கிறது?

வாழ்க்கையை வாழ்வதற்கு பணம் வேண்டும்; அதே சமயத்தில் அந்த வாழ்க்கையை ரசித்து வாழ நல்ல அமைதியான ஓய்வான மனமும் வேண்டும். என்ன செய்யலாம் என்கிற கேள்விக்கு; தேவைகளை குறைத்துக்கொள் என்பதே அவருக்கு பதிலாக கிடைத்தது.

***

“மண்மீதிலே எந்த மானிடர்க்கும் அளவில்லாத ஆசைகள்
ஒன்றல்லவே ஓராயிரத்தை தாண்டி நிற்கும் தேவைகள்”

என்கிற வரிகளை இன்று யேசுதாஸின் இனிமையான குரலில் கேட்டுக்கொண்டிருந்தேன். உண்மைதான்.

தேவைகள் அதிகமாக அதிகமாக மேலும் நாம் நம்மை வறுத்திக்கொள்கிறோம். பணத்தை நோக்கி ஓடுகிறோம், வாழ்க்கையில் தேங்கி நிற்கிறோம். தேவைகளை குறைத்துக்கொள்வதால், இந்த rat raceக்கு நாமும் அடிமையாக மாட்டோமே! கணக்கிலடங்காத எலிகளுடன் நாமும் நம்மை இணைத்துக்கொண்டு அதிகமாக சத்தமிட்டுக்கொண்டும் முட்டி மோதிக்கொண்டும் எதற்காகவோ ஓடிக்கொண்டிருக்கிறோம்; முடிவில் எவருக்கும் முடிவு என்பதே கிடைப்பதில்லை. எதையுமே நாம் சாதிப்பது இல்லை. முடிவாக போராட்டம் இல்லாத மனிதவாழ்க்கை என்பது இல்லை என்கிற அளவுக்கு நாம் கொண்டுவந்துவிட்டோம். ஒரு ப்ளஸ் டூ மாணவன் 1200 மதிப்பெண்களுக்கு 1150 மதிப்பெண்கள் வாங்கியாக வேண்டிய கட்டாயத்தை நாம் உருவாக்கிவிட்டோம்!

***

பாலாஜி ஷங்கர் பெங்களூரில் இருக்கும் IIS-இல் படித்தவர். ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வசித்துவிட்டு, வேலைசெய்து விட்டு பிறகு இந்தியா வந்து சென்னையில் சில காலம் வசித்துவிட்டு, பிறகு அந்த வேலையையும் விட்டுவிட்டு விவசாயத்தை கவனிக்க சென்றுவிட்டார். He got out of the system from which we are unable to get out; and probably will never get out!

ரெண்டு ஹெக்ட்டேர் நிலத்தை மட்டும் வாங்கிக்கொண்டு தனது விவசாயத்தை ஆரம்பித்து, இன்று தனது நிலத்திலிருந்து வரும் வருமானத்தில் ஆனந்தமாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறார். No meetings. No deadlines. No clients. No nothing!

visit him here: http://earth.org.in

***

என் நண்பர் ராஜா நீண்ட காலமாக என்னிடம் இந்த “இயற்கைக்கு திரும்பதல்” என்கிற கோட்பாட்டை பற்றி நிறைய பேசிக்கொண்டிருந்தார். எனக்கு சமயத்தில் எரிச்சலாக இருக்கும். என்னய்யா இயற்கைக்கு திரும்புகிறீர்? சூரியன் மேலே படவில்லையா? உடல் உழைப்பு இல்லையா? காலையில எழுந்து ஜாக்கிங் போ. எக்ஸர்சைஸ் பண்ணு. சூரிய வெளிச்சத்தில நில்லு. இயற்கையோடு இருக்கனுமா? வருசத்துக்கு ரெண்டு முறை கேரளா போ. அவ்வளவு தான். இத விட்டுட்டு “இயற்கைக்கு போறேன்னுட்டு” இருக்கிற வேலையை விட்டுட்டு நான் மாடு மேய்க்கத்தான் போவேன்னா என்ன அர்த்தம்? விவசாயம் பண்ணுவேன்னு சொன்னா என்ன அர்த்தம்?

நம்மில் நிறைய நபர்களின் பெற்றோர்கள் நாம் கிராமத்திலே கிடந்து உழன்று அழிந்து விடக்கூடாது என்கிற காரணத்தினத்தை முன்னிறுத்தியே கிராமங்களை விட்டு வெளியேறினர். நாலு எழுத்து படிச்சா அவன் அவன் பொழப்ப பாத்துப்பான் என்கிற ஒன்றே அவர்களது கனவாக இருந்தது. அவர்களது கனவுகளை தகர்த்தெரிந்து விட்டு மீண்டும் அதே கிராமத்துக்கு செல்லத்தான் வேண்டுமா? என்கிற வாதத்தை நான் அவரின் முன் வைத்தேன்.

அதற்கு என் நண்பர் சொன்னார்: நீங்க இப்படி எல்லாரும் white collar jobsக்கு போனா யார் விவசாயம் செய்யுறது? சோறு எங்கே கிடைக்கும்? நான் சொன்னேன்: விஞ்ஞானம் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. எல்லாவற்றிர்கும் மாற்று இன்றில்லாவிட்டால் நாளை வரத்தான் போகிறது. அதே போல சோற்றுக்கு பஞ்சம் ஏற்படும் காலத்தில் நாம் “necessity is the mother of invention” என்கிற வாதத்தின் அடிப்படையில் சாப்பாட்டுக்கு மாற்றாக ஏதாவது கண்டுபிடித்தே தீருவோம். ஆங்கில science fiction படங்களில் வருவதைப் போல காலை எழுந்தவுடன் just ஒரு capsule மட்டும் போதும், நாள் முழுவதும் பசிக்கவே பசிக்காது! போதும்ல? இதுக்கு எதுக்கு விவசாயத்துக்கு போகணும்? சரிப்பா விவசாயத்துக்கு எல்லாரும் போறம்ன்னு வெச்சுக்குவோம்; இந்த கண்டுபிடிப்புகள் எல்லாம் யார் கண்டுபிடிக்கிறது?

எடுத்துக்காட்டாக நானும் பாலஜி ஷங்கரும் உரையாடிய Google Chatஐயும் அதற்கு உதவிய இன்ன பிற நெட்வொர்க் சமாச்சாரங்களையும் என் லேப்டாப்பையும் யார் கண்டுபிடிப்பது? மனிதகுளம் என்பது கடுமையான சீற்றம் கொண்ட ஒரு ஆற்றைப் போல. வழிநெடுகிலும் கிடக்கும் கற்களையும் மணலையும் உருட்டிக்கொண்டு அது சென்று கொண்டேயிருக்கும். we continue to evolve. நாம் ஆற்றோடு ஓடிக்கொண்டிருக்கிறோம். பாலாஜி ஆற்றின் திசையை திருப்பச் சொல்கிறார். பரிணாம வளர்ச்சி இல்லையேல் நாம் குட்டையாக தேங்கிவிடுவோம். அனைவரையும் விவசாயத்துக்கு திருப்ப வேண்டும்; simplify என்பது தாரக மந்திரமாக இருக்கும் பட்சத்தில் எல்லாரும் காந்தியை போல ஆடை உடுத்தாமலே இருப்போம். “இன்புற்றிருப்பதையன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே” என்று வாழ்ந்தால் விஞ்ஞானம் எப்படி வளரும்?

இப்படி சும்மா நானும் ராஜாவுமே பேசிட்டிருந்தா எப்படின்னுட்டு பாலாஜி ஷங்கருக்கு ஒரு ஓலை அனுப்பிச்சேன். அவரும் நான் ரெடி நீங்க ரெடியான்னு எனக்கு பதில் ஓலை போட்டார். அப்படி நாள் குறிச்சது தான் இந்த திங்கள் கிழமை இரவு 11:30 சிங்கப்பூர் நேரம். நானும் பாலாஜியும் பேசிய பேச்சுக்கள் தான் இந்த பதிவுக்கு வித்து.

***

பாலாஜி ஷங்கர் சொன்னார்: If you really look at it, நீங்கள் ஆற்றோடு ஓடவில்லை. நீங்கள் ஆற்றை எதிர்த்து நீச்சல் அடிக்கிறீர்கள். நான் தான் ஆற்றோடு ஓடுகிறேன். இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளும் இயற்கையுடனே ஒத்துவாழ்கிறது; மனிதன் மட்டுமே அதை மாற்ற முயற்சிக்கிறான். நான் மாற்ற முயற்சிக்கவில்லை. மேலும் அவருடைய நண்பர் சொன்னதாக சொன்னார்: “Now nobody makes easy chair! Life is no more easy!” நினைத்துப் பார்த்தால் எவ்வளவு உண்மை?

***

Lets imagine today I dont have to go to office, I dont have to send my children to school, I dont have to go to the market to buy things; அப்படீன்னு வெச்சுக்கோங்களே then I will become a tedious terror to the economy! என்றார் பாலாஜி. அப்படியென்றால் economy growth என்பதே இருக்காதே! அதற்கு அவர் சொன்னார்: GDP growth என்பதெல்லாம் சும்மா. எத்தனை விழுக்காடு மக்கள் வளர்ச்சியடைந்திருக்கிறார்கள்? இது corporationsஐ மட்டுமே வளர்ச்சியடையவைக்கும். நாம் rural economyஐ வளர்த்தால் ஒழிய பரவலாக வளர்ச்சி என்பது இருக்காது.

இருபதினாயிரம் பேருக்கு வேலை கொடுக்க இந்தியன் பேங்க் பரிட்சை வைக்கிறார்கள் அதை இருபது லட்சம் பேர் எழுதுகிறார்கள். அதுவும் ஒரு மிகப்பெரிய வேலையும் இல்லை. பத்தாயிரம் ரூபாய் தான் சம்பளம். சென்னையில் குடியிருக்க அவன் நாலாயிரம் ரூபாய் வாடகை கொடுக்கவேண்டும். மேலும் கரண்ட் பில் மருத்துவம் குழந்தைகள் படிப்பு போன்ற அத்தியாவிசய தேவைகள் போக அவனுக்கு என்ன மீதம் இருக்கும்?

***

சிங்கப்பூரில் வேலை செய்யும் நிறைய நபர்கள் குழந்தைகளின் படிப்பு செலவுகளை சமாளிக்க முடியாமல் இந்தியாவில் தங்களது பெற்றோர்களின் வீட்டில் தங்கவைத்து படிக்கவைக்கின்றனர் என்கிற பொழுது வேறு என்ன சொல்வது. அப்படி சேமிக்க முடியாத மனிதன் வேறு என்ன செய்வான் rat raceஇல் இன்னும் அதி வேகமாக ஓட ஆரம்பிப்பான். என் தாத்தா என் அப்பாவை பத்து வயசு வரை தோளில சுமந்து கொண்டு பள்ளிக்கூடத்துக்கு கூட்டி செல்வாராம். என் அப்பா என்னை ஏழாவது படிக்கும் வரை பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச்செல்வார். நான் என்ன செய்வேன்? என் தாத்தாவைப் போல நான் என் குழந்தைகளை தோளில் தூக்கிக் கொண்டு பள்ளிக்கூடத்துக்கு போகமுடியுமா? இவ்வாறெல்லாம் யோசித்தால்; சுத்த லூசாயிருப்பான் போல இருக்குன்னு நினைக்க வாய்ப்பிருக்கு. மேலும் இக்கால குழந்தைகளே அதை விரும்புவார்களா என்பது சந்தேகமே! மற்ற பசங்க கேலி செய்றாங்க என்று சொல்லிவிடுவார்கள்

***

Ecological Foot Print பற்றி தெரியுமா என்று கேட்டார்?
Ecological Foot Prints represent the land and water it takes to provide us with the things we use and to absorb our wastes.

எனக்கு தோராயமாக 7 ஹெக்ட்டேர் வந்தது. உங்களுக்கு எவ்வளவு தேவைப்படும் என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

***

upper class இந்தியர்களுக்கு ரெண்டு ஹெக்டேர் மூணு ஹெட்டேர் நிலம் தேவைப்படுமாம். நான் upper upper சுந்தரர் மாணிக்கவாசகர் இந்தியன் போலருக்கு; 7 ஹெக்டேர் தேவைப்படுது. அமெரிக்கர்களுக்கு பத்து ஹெக்டேர் தேவைப்படுமாம். நான் மேலே குறிப்பிட்ட அந்த வலைத்தளத்தின் கேள்விகளுக்கு பதிலளித்துக்கொண்டிருக்கையில், Mode Of Travel சம்பந்தபட்ட கேள்விகள் நிறைய கேட்கப்பட்டன. இதனால் மற்றும் packed foods and meat சாப்பிடுவதால் நிலம் அதிகமாக தேவைப்படுகிறதாம்! சிங்கப்பூரே கிட்டத்தட்ட Packed Food மாதிரித்தான்!

மேலும் பாலாஜி சொன்னது:
இப்ப இருக்கிற resources இப்ப இருக்கிற மக்கள் தொகைக்கே பத்தாது. அறுபது எழுபது விழுக்காட்டு மக்கள் Low ecological food printஇல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். They dont travel much; they dont consume resources and they are not part of the central economy!

நாம் நிறைய electronic சாதனங்கள் பயன்படுத்துகிறோம். We employ lot of labour saving machinery, Like washing machine, mixi, grinder, fridge. Inspite of using these electronic devices for our house chores; we enjoy much less leisure than an average villager! Isnt this a paradox? வாழ்க்கையில குறிக்கோள் இல்லாத வெற்றிடம் ஆகிவிடுகிறோம்.

So when you see this its an unsustainable life style; no body is free enough; every body says we need more more!

உருபடியா வாழனும் அப்படீன்னா இந்த planetஅ காப்பாத்தனு அப்படீன்னா நம்ப தேவைகளை நாம குறைச்சுக்கனும் தேவைகள்னு சொல்றதக்காட்டிலும் ஆடம்பரங்களை குறைத்துக்கொள்ளவேணும். இத நான் கண்கூடா பாத்துட்டேன் நான் நிறைய சம்பளம் வாங்கிய போது சந்தோஷமா இல்ல ரொம்ப கம்மியா சம்பாதிக்கும் போது ரொம்ப ஆனந்தமா இருக்கேன். நான் ரொம்ப freeயா இருக்கேன். சம்பாதிக்கிறத இந்த கிராமத்திலையே invest செய்யறேன். Mutual Fundsஇல் invest செய்யவில்லை.
we are employing organic forming; அதனால நிறைய நபர்களை பணிக்கு அமர்த்தியிருக்கிறோம். அடுத்த வருஷம் மாடு வெச்சு உழனும்னு நினைச்சிருக்கோம்.

My plan is to cause minimal damage to the environment and still live a good life style. Like windmill வெச்சு motor ஓட்டறது.
If government wants it can implement it.

ஐம்பதாயிரம் கோடி ரூபாய்ல ஆரம்பக்கல்வி ஐம்பதாயிரம் கோடி ரூபாய்ல கடன் தள்ளுபடின்னு பண்றாங்க, இதுக்கு ஆயிரம் கோடி ரூபாய்ல windmill போட்டாங்கன்னாக்க current தேவையில்ல. இதெல்லாம் பண்ணாம nuclear energyன்னு நாடே கவுந்தாலும் பரவாயில்லன்னு அதத்தான் பண்ணுவேன்னு சொல்றாங்க.

நாற்பதாயிரம் கோடிரூபாய் இந்தியன் கவர்மெண்ட் spends for fertilizer subsidy!

நேத்துக்கூட பேப்பர்ல படிச்சேன் ஐந்தாயிரம் கோடி ரூபாய்ல ஏதோ தொழிற்கூடமோ ஏதோ திறக்கிறார்களாம், இது ஐம்பதாயிரம் வேலைகளை உருவாக்குமாம்?! அப்படீன்னா ஒரு வேலைக்கு பத்து லட்சம் ரூபாய் அரசு செலவழிக்கிறது. manufacturing sectorஇல் சராசரியாக ஒருவருக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வரைதான் சம்பளம் கிடைக்கும்.

***

அடுத்த வருடத்தில் இருந்து தனது மகனுக்கு தானே பாடம் சொல்லிக்கொடுக்கப்போகிறாராம். பாடம் என்றால் சாயங்காலம் சும்மா ரெண்டு அரட்டு போட்டுட்டு என்னடா படிச்சிட்டியா? ஒழுங்கா மார்க் வாங்கி என் மானத்த காப்பாத்துவியா? ங்கற மாதிரி இல்ல. பள்ளிகூடத்துக்கே அனுப்பாமல் தானே பாடம் சொல்லிக்கொடுத்து பரிட்சை எழுத வைப்பது. சும்மா try பண்ணப்போறேன் என்றார். NIOS websiteக்கு கொஞ்சம் போய்ப்பாருங்கள்.

***

(அடுத்த பகுதியில் சந்திப்போம்)

8 thoughts on “இயற்கைக்கு திரும்புதல் : பாலாஜி ஷங்கருடனான உரையாடல்

  1. இப்ப‌ தான் கொஞ்ச‌ம் நின்னு, நிதானிச்சு இய‌ற்கையை, ந‌ம்ப‌ளுடைய‌ வாழ்க்கையை பார்க்க‌ ஆர‌ம்பிச்சிருக்கோம்,வாழ்த்துக்க‌ள் முத்து,அடுத்த‌ ப‌குதியை ஆவ‌லுட‌ன் எதிர்பார்க்கும்,ச‌ஹ்ரித‌ய‌ன்

    Like

  2. இன்னைக்கு வந்து படிச்சிருக்கேன் இந்தப்பதிவு, நல்ல பதிவு…பகிர்வுக்கு நன்றி…:)இயற்கைக்கு திரும்புதல் என்பது எல்லோராலும் முடியாத காரியம் என்பது என் எண்ணம், அவரவர் வாழ்க்கை அவரவருக்கு திருப்தியாக இருக்க வேண்டும்.. இல்லையா…?

    Like

  3. கிருஷ்ணன்: நன்றி! அவருக்கே சொல்லிவிடுங்கள்!சஹ்ரிதயன்: எழுதறேன் சார்! வேகமா எழுதறேன்.

    Like

Leave a comment