அடைத்தோசையும் அண்டங்காக்காயும்

(சிறுகதை)

ஒரு ஊர்ல ஒரு காக்கா இருந்துச்சாம். அந்த காக்காவுக்கு காலையில் இருந்து சாப்பிடறதுக்கு ஒன்னுமே கிடைக்கலையாம். சரி பக்கத்து ஊர்லயாச்சும் போய் ஏதாவது கிடைக்குதான்னு பாக்கலாம்னு கெளம்புச்சாம். கெளம்புன காக்கா கொஞ்ச நேரத்துல டேக் டைவர்சன் போர்ட்களை பார்த்து பார்த்து வேற ஒரு ஊருக்கு வந்துருச்சாம். வீட்லயே தண்ணி குடிக்காம வந்த காக்காவுக்கு தண்ணி ரொம்ப தவிச்சதாம். எங்கனாச்சும் தண்ணி கிடைக்குமான்னு பாத்த காக்காவுக்கு ரொம்ப ஏமாத்தமா போச்சாம். எங்கயுமே தண்ணி இல்ல. அலைஞ்சு திரிஞ்சு ஜகந்நாதன் நகர் ·ப்ர்ஸ்ட் ஸ்டீரீட்ல இருக்கிற ஒரு மொட்டை மாடியில வந்து உக்காந்துச்சாம் அந்த காக்கா. அந்த மொட்டை மாடியில ஒரு பையன் சிகப்பு கலர் சேர்ல உக்காந்து ஏதோ புத்தகத்த வெச்சு படிச்சுட்டிருந்தானாம். அந்த காக்கா அவன் வெச்சிருக்கிறது என்ன புத்தகம்ன்னு பாக்கறதுக்கு முயற்சி பண்ணுச்சு. ஆனா முடியல. அப்பத்தான் ஒரு பொண்ணு படி ஏறி அந்த மொட்டை மாடிக்கு வந்துச்சு. அந்த பொண்ணு கையில ஏதோ வெச்சிருந்துச்சு. வேகவேகமா வந்த அந்த பொண்ணு அந்த பையன் கிட்ட ஏதோ பேசுச்சு. பசியினால காக்காவுக்கு காதடச்சுக்கிச்சு. அவங்க பேசினது எதுவுமே கேக்கல. ஆனா அந்த பையனோட முகத்தில தெரிஞ்ச திகில வெச்சு கண்டிப்பா அவன் அந்த பொண்ணோட ஹஸ்பெண்டாத்தான் டூட்டி பாத்திட்டிருப்பான்னு தெரிஞ்சிகிடுச்சு அந்த காக்கா.

பேசி முடிச்சிட்டு அந்த பொண்ணு மொட்டை மாடியோட ஒரு மூலையில செவத்துமேல கையில வெச்சிட்டிருந்த அந்த அடைத்தோசையை வெச்சது. வெச்சிட்டு அந்த பொண்ணு பாட்டுக்கு நடக்க ஆரம்பிச்சுடுச்சு. மொட்டை மாடியில வாக்கிங் போக வந்திருக்கு போல. ஆமா நாம வானத்தில பறக்கறப்பவே இந்த ஆட்டோக்காரர்கள் “தள்ளி நடம்மே பேமாணி”ன்னு சொல்றப்ப, பாவம் இந்த பொண்ணுக்கு ரோட்ல நடக்க எங்க இடம் கிடைக்கும்? மொட்டைமாடியில தான் நடக்கனும். சாப்பாடு வெச்சா மட்டும் போதுமா? கூப்புட வேணாமான்னு ரொம்ப கோபபட்டுச்சு காக்கா. ஆனாலும் பசி வயித்த கிள்ளுனுதால பரவாயில்ல சின்ன பொண்ணுதானன்னு மன்னிச்சு விட்டுட்டு அந்த அடைத்தோசைய சாப்புட ஆரம்பிச்சது காக்கா. மொதல்ல கொஞ்சம் புளிக்கிற மாதிரி இருந்தாலும் பசின்னால அதுக்கு ஒன்னும் புரியல மாங்கு மாங்குன்னு திண்ணுச்சு. ஆனா தன்னை பாவமா பாத்திட்டிருக்கிற அந்த பையனை அந்த காக்கா கவனிக்கவேயில்ல. அதுக்குள்ள இன்னும் சில காக்காய்கள் அங்க சுத்த ஆரம்பிச்சிருச்சுக. ஆனா இந்த மொட்டை மாடிக்கு பக்கம் வரவேயில்ல ஒன்னு கூட. எல்லாம் பக்கத்தில இருக்குற BSNL டவர் மேல உக்காந்துகிடுச்சுக.

இந்த காக்கா தான் பசியோட இருந்தாலும் மத்த காக்காய்கள சாப்பிட கூப்பிட்டுச்சு. காக்கா மனுசன் கிடையாது பாருங்க, யாரு சாப்பிட்டா என்ன சாப்பிட்டா என்னன்னு இருக்க. ஆனா இந்த காக்கா இவ்வளவு கூப்பிட்டும் மத்த காக்காக ஒன்னு கூட கண்டுக்கிடல. இது கத்தின கத்தல்னால பக்கத்துல சிகப்பு சேர்ல உக்காந்து படிச்சிட்டிருந்த பையன் கடுப்பாகி புத்தகத்தை சட்டுன்னு கீழ வெச்சான். ச்சூ ச்சூ ன்னு அந்த காக்காய விரட்டினான். பிறகு எழுந்து கீழே போனான். சாப்பிட்டது போதும்னு நினைச்ச காக்கா பறக்க தயாராச்சு. அப்பத்தான் அவன் வெச்சிருந்த புத்தகத்த பாத்துச்சு அது ஏதோ கவிதைகள்ன்னு மட்டும் தான் பாத்துச்சு. யார் எழுதினதுன்னு தெரியல. அடைத்தோசைய தின்னாலாவது செமிச்சிடும் இந்தக்காலத்து கவிதைகள்? நமக்கெதுக்கு வம்புன்னு நினைச்ச காக்கா பறக்க முயற்சி பண்ணுச்சு. அதால முடியல. கொஞ்ச தூரம் பறந்துட்டு முடியாம அந்த பையன் வெச்சிருக்கிற புத்தகத்துக்கு பக்கத்துல வந்து உக்காந்துச்சு. காத்துல புத்தக்கத்தோட பக்கங்கள் பறந்துச்சு. ஆர்வக்கோளருல அந்த கேப்ல காக்கா ஒரு கவிதை படிச்சது. கவிதைய படிச்சதுதான் தாமதம், காக்காவுக்கு தலை சுத்த ஆரம்பிச்சிருச்சு. வயிறு குமட்டிட்டு வந்துச்சு. காக்கா அடைத்தோசையை திரும்பி பாத்துச்சு. தான் சாப்பிட்டது போக மீதம் அப்படியே இருந்துச்சு. திரும்பி கவிதை புத்தகத்த பாத்துச்சு. காக்காவுக்கு வாமிட் வர்ற மாதிரி இருந்துச்சு. ஆனா வாமிட் அடைத்தோசைனாலயா இல்ல இப்ப படிச்ச கவிதைன்னாலையான்னு காக்காவுக்கு தெரியல. அப்பத்தான் ஒரு விசயத்தை கவனிச்சது அந்த காக்கா: ஏன் அடைத்தோசைய பாத்தும் நாம கூப்பிட்டும் எந்த காக்காவும் இந்த வீட்டு மொட்டைமாடிக்கு சாப்பிட வரல? நம்மாளுக சாப்பாட்ட பாத்தவுடனே எங்கிருந்தாலும் கும்பலா பறந்து வந்திடுவாங்களே?!

***

பயங்கர அத்துவான காடு. எங்கும் கும்மிருட்டாத்தான் இருக்கனுங்கற அவசியம் இல்லாததால கொஞ்ச வெளிச்சமா இருந்துச்சு. அங்க பாமரும், பட்சனரும் தங்கள் கையில் இருக்கிற வில்லை தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு நடந்துகொண்டிருந்தனர். பட்சனர் கேட்டான்: அண்ணா? என்னா? எனக்கு ஒரு சந்தேகம்? சொல்! பாமானந்த் பாகரின் நாடகத்தில் பாமராக நடிக்கும் அந்த கோமாணந்தபாண்டி எப்படி இவ்வளவு கனமான வில்லையும் தூக்கிக்கொண்டு எப்பொழுதும் சிரித்துக்கொண்டேயிருக்கிறான், நீங்கள் இப்படி திணருகிறீர்களே? கோபமான பாமர், பட்சனரை நோக்கி “நீ அடுத்த பிறவியில் அந்த பாமானந்த் பாகராக பிறக்க கடவது” என்கிற சாபத்தை தூக்கிப்போட்டார். அதிபுத்திசாலியான பட்சனர் டக்குன்னு விலகினதால, பக்கத்துல இருந்த புல் மீது அந்த சாபம் விழுந்தது. (பாமரிடம் சாபம் வாங்கியதால் தான் பாமானந்த் பாகரின் குடும்பம் விடாமல் பாமரைப் பற்றிய நாடகங்கள் எடுத்து அதில் கொஞ்சமும் விளங்காத கோமணந்த பாண்டி போன்றோரை பாமராக நடிக்க வைத்து தங்களது பழியை தீர்த்துக்கொள்கின்றனர் என்பது வேறு ஒரு கிளைக்கதை)

பாமரும் பட்சனரும் வில் வித்தை மற்றும் பல் வித்தையில் (சிரித்துக்கொண்டேயிருப்பது) கைத் தேர்ந்தவர்கள் என்பதால் தைரியமாக அந்த காட்டில் நடந்து திரிந்தனர். அப்பொழுது அந்த பக்கம் தோன்றிய பருடன் பட்சனரை தனியே அழைத்து, ஏன் இப்படி இந்த காட்டில் சுற்றித்திரிகிறீர்கள்? யாரையவது தொலைத்து தேடிக்கொண்டிருக்கிறீர்களா? அதற்கு பட்சனர் சிரித்துக்கொண்டே நீங்கள் குரல்வலை என்கிற பதிவை படிப்பதில்லையா? நாங்கள் இயற்கைக்கு திரும்புகிறோம். எங்களுக்கு நகர வாழ்க்கை மந்தமாக போய்க்கொண்டிருப்பதால் இங்கே வங்தோம் என்றான். பருடன் குரல்வலையின் முகவரியை வாங்கி தனது இறக்கையில் குறித்துக்கொண்டது.

பருடன் கிளம்ப ஆயத்தமானபோது பட்சனர் தனக்கு தாகம் எடுக்கிறது என்றும் குடிக்க ஏதாவது கிடைக்குமா என்றும் கேட்டார். பருடன் ஒரு நாள் வாழ்க்கை வெறுத்து உயரே உயரே உச்சியிலே படு வேகமாக பறந்து கொண்டிருந்த பொழுது, தான் ஒரு விசித்திரமான ஊரைக் கண்டதாகவும் அங்கே மக்கள் குடிக்கும் ஒரு வகையான கருப்பு நிற பாணத்தை குடித்ததாகவும் கூறியது. வெள்ளை நிறத்தில் இருப்பவர்களும் இந்த கருப்பு நிற பானத்தையே குடிக்கும் விசித்திரத்தை அங்கு தான் தான் கண்டதாகவும், அன்று முதல் தானும் அந்த பாணத்தை குடித்து வருவதாகவும் கூறியது. மேலும் அந்த பாணத்தில் சுகர் அதிகமாக இருப்பதால், ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் பறக்கவேண்டும் என்பதை தனது மருத்துவர் கூறியதாகவும் சொல்லியது.

பட்சனர் மிகவும் சோர்வடைந்திருப்பதால் இந்த பாணத்தை குடித்துக்கொள்ளலாம் என்று ஒரு குடுவையை கொடுத்தது. பட்சனர் தான் அதை குடிப்பதற்கு முன், பாமரிடம் அதை குடுத்தான். எதற்கு வம்பு, முதலில் பட்சனரே குடிக்கட்டும் என்று பாமர் “நீயே முதலில் குடி பட்சனா” என்று தனது தெய்வீக குரலில் கூறி விட்டு சிரித்தார். பாமர் எதற்கு சிரிக்கிறார் என்று புரியாமல் பருடன் முழித்தபோதும், அது தனது சந்தேகத்தை முகத்தில் காட்டிக்கொள்ளவில்லை.

பட்சனரைத் தொடர்ந்து பாமரும் குடிக்க ஆயத்தமாகும் பொழுது: “Eating or drinking is not allowed in this train” என்கிற சத்தத்தை கேட்டு திடுக்கிட்டு முழித்தார் பாமர். என்ன சொல்கிறார்கள் என்று புரியாமல் என்னை நோக்கினார் பாமர். எனக்கோ ஹிந்தி சரியாக தெரியாது. எனவே “பானி பீத்தே அவுர் கானா காத்தே நகீ அலவுட்” என்றேன். புரிந்துகொண்ட பாமர், குடிக்கலாமா வேண்டாமா என்ற மனக்குழப்பத்தில் என்னைப் பார்த்தார். அலவுட் என்கிற ஆங்கில வார்த்தையை அவர் புரிந்துகொண்டது விந்தையிலும் விந்தையே. ட்ரைனில் பயனிப்பவர்களுக்குத் தான் இந்த விதிகள். நீங்களோ என் லேப் டாப்பிற்குள் இருக்கிறீர்கள், எனவே நீங்கள் குடிப்பதில் தவறில்லை. குடியுங்கள் என்றேன். என் தீர்ப்பை கேட்ட பாமர் ஆனந்தமாக குடிக்க தொடங்கும் முன், பருடன் பறந்துவிட்டிருந்தது.
***

பகழிகை என்கிற மிக அழகான பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்பதால் கொஞ்சம் சுமாரான ஒரு பெண் அந்த அத்துவான காட்டில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தாள். அவள் தனது ரத்தத்தை இளமையாக்கி என்றும் தன்னை அழகாக வைத்திருக்கும் ப்ளட் ஆர்கிட் என்கிற மூலிகையை தேடிக்கொண்டு வந்தாள். மூலிகையை தேடி அழைந்த பொழுது, அப்பக்கமாக சென்ற பூர்ப்பபகை என்கிற அழகிய வஞ்சியை கண்டாள். அவளது அழகைப் பார்த்து அவளுக்கு ப்ளட் ஆர்கிட்டின் இருப்பிடம் கண்டிப்பாக தெரிந்திருக்கும் என்று எண்ணி; ப்ளட் ஆர்கிட் இருக்கும் இடம் உனக்கு தெரியுமா என்று கேட்டாள் பகழிகை. கல் இருக்கும் இடத்தில் சாணி இருக்கும். சாணியும் கல்லும் ஒன்னு. இதை அறியாதவருக்கு ஆர்கிட் மண்ணு என்று சொல்லிவிட்டு எப்பொழுதும் போல ஹா ஹா ஹா ஹா என்று எக்கோ அடித்து சிரித்து டஸ் என்று மறையாமல், தேமே என்று மெதுவாகவே நடந்து சென்று மறைந்தாள் பூர்ப்பபகை.

***

நாள் முழுதும் சுற்றித் திரிந்த பகழிகைக்கு தாகம் எடுத்தது. அப்பொழுது புரியாத மொழியில் யாரோ பேசுவது கேட்கவே திரும்பிப்பார்த்தாள். அங்கே பாமரும் பட்சனரும் கையில் ஏதோ குடுவையுடன் நடந்துவந்துகொண்டிருக்க கண்டாள். குடுவையை கண்டதும் பகழிகைக்கு நாவில் நீர் சுரந்தது.

பகழிகையைக் கண்ட பாமரும் பட்சனரும் பேசுவதற்கு வெட்கப்பட்டனர். பகழிகையே வந்து முதலில் பேசட்டும் என்று காத்திருந்தனர். பொறுமை இழந்த பகழிகை, பாமரிடம் சென்று எனக்கு தாகமாக இருக்கிறது குடிக்க ஏதாவது இருந்தால் குடுங்கள் என்று குடுவையைப் பார்த்து கேட்டாள். அவர்கள் புரியாமல் முழிக்கவே, சைகை மூலம் செய்து காட்டினாள். பாமர் அப்பொழுதும் ஏதும் பேசாமல் இருக்க, பட்சனர் அவர் பாகசத்னி விரதர் என்று சொன்னார்; மேலும் தன்னிடம் புரியாத மொழி பேசும் வெள்ளையான மனிதர்களும் கருப்பு பாணத்தை பருகும் அந்த விசித்திர தேசத்தின் பாணமே இருக்கிறது என்று சொன்னார். அவர் கொடுப்பதற்குள் பகழிகையே முந்திக்கொண்டு பிடுங்கியே குடித்துவிட்டாள்.

தாகம் அடங்கிய பகழிகை ஆர்கிட் செடியை மீண்டும் தேடத்தொடங்கினாள். பட்சனர் இது யாருடைய காடு என்று கேட்கவே, பகழிகை பாவணர் என்கின்ற மன்னனுக்கு சொந்தமான காடு என்று சொல்லிவிட்டு தன் வழியில் நடக்க தொடங்கிய பொழுது, திடிரென்று எக்கோ அடிக்கும் குரலில், பாமர் யானை ஒன்று இங்கிருந்து ஒரு கல் தொலைவில் மாடுகள் ஏப்பம் விடும் இடத்திற்கு பக்கத்தில் சானம் இட்டுள்ளது என்று கூறிவிட்டு தனது தெய்வீக சிரிப்பை உதிர்த்தார். சாபம் வாங்கிய புல்லாகிய பாமனந்த் சாகர் பாமரின் இந்த சிரிப்பு கொஞ்ச ஓவர் ஆக்ட் என்று நினைத்துக்கொண்டார்.

***

பாமரின் சொற்களை மனதில் வைத்து வழியை கண்டுபிடித்து சரியாக யானை சானம் இருக்கிற இடத்திற்கு வந்தாள் பகழிகை. இங்கே எங்கே ஆர்கிட் இருக்கிறது என்று தேட ஆரம்பித்தாள். எங்கு தேடியும் ஆர்கிட் கிடைக்கவில்லை. சோர்வான பகழிகை தெரியாமல் யானை சானத்தை மிதித்து விட்டாள்.

சானத்தை எங்கே தொடைப்பது என்று நினைத்துக்கொண்டிருக்கையில் அருகில் ஒரு பெரிய கல் தென்பட்டது. அப்பொழுதுதான் பூர்ப்பபகையின் அந்த வார்த்தைகள் மீண்டும் எக்கோ அடித்தது: சாணியும் கல்லும் ஒன்னு. இதை அறியாதவருக்கு ஆர்கிட் மண்ணு. மண்ணு. மண்ணு. மண்…ஆகா பாமரே என்னே உந்தன் கருணை என்று நினைத்துக்கொண்டாள். உடனே தனது காலை அந்த கல்லில் வைத்து தேய்த்தாள் பகழிகை.

இடி இடித்தது. மின்னல் வெட்டியது. காற்று பலமாக அடிக்கத் தொடங்கியது. கல் சட்டென்று மறைந்து அங்கே கசுவாகத்திரர் தோன்றினார். கசுகாகத்திரர் கடும் கோபத்தில் இருந்தார். மனிதனாக உட்கார்ந்தால் தான் ஐட்டம் பாடல்களை போட்டு நமது தவத்தை கெடுக்கிறார்கள் என்று கல்லாக மாறி தவம் செய்தால் பேதை பெண் இப்படியா செய்வாய் என்று கடும் சினம் கொண்டும் கத்தத் தொடங்கினார். அவர் அவ்வாறு கத்துவதால் தான் அவருக்கு கசுவாகத்திரர் என்ற பெயர் வந்தது. கடும் சினத்தில் கசுவாகத்திரர் கீழ்வருமாறு கூறினார்: என்னுடைய தவத்தை கெடுத்த பகழிகையே; இந்தா பிடி சாபம். இந்த நொடிமுதல் நான் அண்டங்காக்க்காயாக மாறி இந்த உலகத்தை சுற்றித்திரிவேனாக. ஜென்மங்கள் பல தாண்டி பாமரின் மனைவி கீத்தா கொடுக்கும் அடைத்தோசையை சாப்பிட்ட பிறகே நான் ஜென்ம சாபல்யம் பெறுவேன் என்றார்.

பகழிகை வாயடைத்துவிட்டாள். தான் தவறாக தனக்கே சாபம் கொடுத்துவிட்டதை அறியாமல் தனது நீண்ட தாடியை நீவிவிட்டபடியே இருந்தார் கசுவாகத்திரர். சுவாமி என்ன சொல்லிவிட்டீர்கள் உங்களுக்கு நீங்களே சாபம் கொடுத்துக்கொண்டீர்களே என்பதை அவள் எடுத்துச்சொன்ன பிறகு தான் கசுவாகத்திரருக்கு உறைத்தது. அதற்குள் அவர் அண்டங்காக்காயாக மாறத்தொடங்கியிருந்தார்.

எழுதியதை மாற்ற முடியுமா என்று என்னிடம் கேட்டார் கசுவாகத்திரர். நான் என்ன செய்வேன். நான் வெறும் பதிவர். வரலாற்று பதிவர். அதுவும் பின் தொடரும் நிழலின் குரலை படித்த பதிவர். வரலாற்றின் குரல் ஒலித்துக்கொண்டேயிருக்கும் என்பதை அறியாதவனா நான். மேலும் வரலாற்றை நான் மாற்றத்தேவையில்லை. காலமும் காற்றும் கோட்டையையும் கரைக்கும். எனக்கு பின்னால் வரும் பம்ப்பர் என்னும் புனைக்கவிதை நிபுணர் அவ்வாறு செய்வார். ஆம் அப்படியே ஆகுக. ஓம் சத் சத்.

பதிவரே வரலாறு மாற்றப்பட்டால் என் சாபம் மாறுமா என்று கேட்டது காக்காய். வரலாறு மாறலாம். ஆனால் அது கொடுக்கும் தகராறு என்றைக்கும் மாறாது என்றேன் சூசகமாய். இதைக்கேட்ட காக்காவாக இருக்கும் கசுவாகத்திரருக்கு நாக்கு வெளியே தள்ளியது. இதைப் பார்த்த பகழிகை “ஓ நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க” என்று ஆடிப்பாடத் தொடங்கினாள். பின்னர் என்னைப் பார்த்து: வரலாற்று பதிவரே. ப்ளட் ஆர்க்கிட் எங்கே இருக்கிறது என்று உங்களுக்காவது தெரியுமா என்று கேட்டாள்.

***

அடைத்தோசையை சாப்பிட்ட அண்டக்காக்காய் சட்டென்று கசுவாகத்திரராய் மாறியது. அந்த பையன் உட்கார்ந்திருந்த சிகப்பு சேரில் சென்று உட்கார்ந்து கொண்டது. பிறகு அவன் வைத்திருந்த கவிதை புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தது. நான் எவ்வளவு எடுத்து சொல்லியும் கேட்காத கசுவாகத்திரர் அந்த கவிதையை படித்துவிட்டு நான்கு கோழிகளை ஒரே முழுங்கில் முழுங்கிய பாம்பு போல படுத்துக்கிடந்தார்.

பின்னர் எழுந்து படிகளின் வழியே இறங்கினார். யாருடா இது தாடியும் கீடியுமா என்று பயந்து போன அந்த பெண் வீல் என்று கத்தாமல் யோவ் யாருய்யா நீ என்று கேட்டாள். செம கடுப்பான கசுவாமித்திரர் ஏ கீத்தா உன் வீட்டுக்காரன் பாமர் எங்கே என்றார். யாருடா கீத்தா பாமர்ன்னு உளறுராருன்னு யோசிச்சுது அந்த பொண்ணு. யோவ் தாடி ஒழுங்கா சொல்லு யாரு நீ? என்று கேட்டாள். கோபம் அடைந்த அந்த கசுவாகத்திரர் இந்தா பிடி சாபம் என்று சொல்லும் போது” ஏ நாக்கு முக்க நாக்கு முக்க” என்ற பாடல் ஒலிக்கும் நான் கூட எதிர்பார்க்கவில்லை. ஒன்றும் பேசாமல் கசுவாகத்திரர் படியிறங்கி சென்றார்.

***

மறு நாள் தினத்தந்தியில் நீண்ட தாடியுடன் விசித்திர மனிதர் சென்னையில் நடமாட்டம். கடும் வெயிலையும் பொறுட்படுத்தாமல் பஸ்ஸில் புட்போர்ட் அடித்தார் என்கிற செய்தியை அனைவரும் படித்து வியந்தனர்.

அந்த மாதத்தின் தீராநதியில் பின்நவீனத்துவமும் முன்தாடியும்: ஒரு விவாதம் என்கிற நகைச்சுவை கட்டுரையில் ஜெயமோகன் அந்த தாடி வைத்த கேடி பாலாவின் நான் கடவுள் படத்தில் நடித்த எக்கச்சக்க சாமியார்களுள் ஒருவராக இருக்கக்கூடும் என்ற தகவலை சொன்னதை யாரும் கண்டுகொள்ளவில்லை.

மேலும்..

போதும் போதும் பாப்பா தூங்கிருச்சு..நிறுத்துங்க விட்டா அளந்துட்டே போவீங்க!

***

12 thoughts on “அடைத்தோசையும் அண்டங்காக்காயும்

  1. டே..ங்கப்பா…சாமி, தெரியாம இந்த பக்கம் வந்துட்டன்டா…இங்க ஒருத்தர் ரத்தம் வர அறுத்துட்டாரு…யாராவது வந்து காப்பத்துங்களேன்….

    Like

  2. குரல்வலைன்னு ஏன் பேர் வெச்சீங்கன்னு இப்பத்தான் புரிஞ்சிது… ரொம்ப அழுத்தமா பிடிச்சிட்டீங்க தல…. சூப்பர் மொக்ஸ்… …. வால் நட்சத்திர வாழ்த்துக்கள்

    Like

  3. பி. கு.. இது சிறுகதையாம்… அப்போ அண்ணாவை கூப்பிட்டு உலக தொலைக்காட்சியில் ஒரு பெரும் தொடரை எழுத ச்சொன்னா… விளங்கிடுமய்யா….. உண்மையா சொல்லுங்க… தமிழ் பேப்பர்ல வர கன்னித்தீவு நீங்க எழுதுறதுதானே? 😉

    Like

  4. முத்து, அப்ப‌டியே ஒரு டிக்ஷ‌ன‌ரி கொடுத்திடுங்க‌. :)ந‌ல்லாவே புனையிறீங்க‌,வாழ்த்துக்க‌ள்,ச‌ஹ்ரித‌ய‌ன்

    Like

  5. //டே..ங்கப்பா…சாமி, தெரியாம இந்த பக்கம் வந்துட்டன்டா…இங்க ஒருத்தர் ரத்தம் வர அறுத்துட்டாரு…யாராவது வந்து காப்பத்துங்களேன்….//ரீப்பீட்டேய்..காக்கா மட்டும் இருந்தப்போ எதோ நல்லா இருந்துச்சு…இடைச்செருகல் வந்நதுக்கப்புறம் ஒண்ணுமே புரியல.தசாவதாரம் எபெக்ட்டா????

    Like

  6. //அடைத்தோசைய தின்னாலாவது செமிச்சிடும் இந்தக்காலத்து கவிதைகள்? நமக்கெதுக்கு வம்பு//ஆமா.நமக்கெதுக்கு வம்பு…?//பாமரிடம் சாபம் வாங்கியதால் தான் பாமானந்த் பாகரின் குடும்பம் விடாமல் பாமரைப் பற்றிய நாடகங்கள் எடுத்து அதில் கொஞ்சமும் விளங்காத கோமணந்த பாண்டி போன்றோரை பாமராக நடிக்க வைத்து தங்களது பழியை தீர்த்துக்கொள்கின்றனர் என்பது வேறு ஒரு கிளைக்கதை//ஜூப்பரு…//மனிதனாக உட்கார்ந்தால் தான் ஐட்டம் பாடல்களை போட்டு நமது தவத்தை கெடுக்கிறார்கள்//நல்ல நையாண்டி..வெகுவாக ரசித்தேன்…

    Like

  7. /Natty said… குரல்வலைன்னு ஏன் பேர் வெச்சீங்கன்னு இப்பத்தான் புரிஞ்சிது… ரொம்ப அழுத்தமா பிடிச்சிட்டீங்க தல…. சூப்பர் மொக்ஸ்… …. வால் நட்சத்திர வாழ்த்துக்கள்/ரிப்பீட்ட்டேய்ய்ய்ய்

    Like

  8. மொதல்லே கொஞ்சம் புரியலை அப்புறம் என்னன்னு தெரிஞ்சதும் ஹைய்யோ…..:-)))))நட்சத்திர வாழ்த்து(க்)கள்.ஆர்கிட் இருக்கும் இடத்தை எனக்கும் சொல்லணும்,ஆமா.

    Like

  9. முதலில் மிக மிக தாமதமாக பதில் எழுதுவதற்கு மன்னிக்கவும்:ஈர வெங்காயம்: ஓவரா வெங்காயம் நறுக்கினா, கண்லருந்து ப்ளட் தான் வரும்!தமிழ் பிரியன்: எழுதி விட்டு, என்னடா சொல்லப்போறாங்கன்னும் உக்காந்துட்டிருக்கிறப்போ வந்த + கமெண்ட். –/–

    Like

  10. தமிழ்பறவை: ரசித்தமைக்கு நன்றிகள் பல பல பல!துளசி கோபால்: ரொம்ப ரொம்ப நன்றி!

    Like

Leave a comment