ரஜினிக்கு நீங்கள் எழுதிய பகிரங்கக் கடிதம் கண்டேன். “உதறுதில்ல” என்கிற உங்களது நக்கலை வெகுவாக ரசித்தேன். வாழ்த்துக்கள்.
“இந்த வார அதிர்ச்சி : திமுக கலைஞர் பற்றி ஓ பக்கங்களில் ஏதும் இல்லாதது“
என்று நீங்களே உங்கள் ஓ பக்கங்களைப் பற்றி அதிர்ச்சி தெரிவித்துக்கொள்கிறீர்கள். உங்கள் அதிர்ச்சி கிடக்கட்டும் விடுங்கள், அது யாருக்கு வேண்டும்? அப்படி நீங்களே உங்கள் ஓ பக்கங்களில் திமுக வரவில்லை என்று அதிர்ச்சியடைகிறீர்கள் என்றால், திமுகவை பற்றியும் கலைஞரைப் பற்றியும் ஒவ்வொரு ஓ பக்கங்களிலும் எழுதிக்குவித்துக்கொண்டு வருகிறீர்கள் என்று தானே அர்த்தம். உங்களுக்கு திமுகவையும் கலைஞரையும் பிடிக்கவில்லை (அல்லது உங்களுக்குள் ஏதோ ஒரு மனஸ்த்தாபம்) என்கிற ஒரே காரணதுக்குக்காகத்தானே வாரா வாரம் எழுதுகிறீர்கள். உங்களுக்கு பிடிக்காத ஒரே காரணதுக்காக, நீங்கள் வாரா வாரம் எழுதிக்கிழிக்கும் பத்தியை படிக்கும் எங்களுக்கு அதில் விசயம் இருக்கிறதா இல்லையா என்று கூட நினைத்துப்பார்க்காமல், கலைஞரையும் திமுகவையும் அட்டாக் செய்யும் ஒரே நோக்கத்தோடு நீங்கள் எழுதுகிறீர்கள். ஒலகஞாநியண்ணே சாதரண வெகு ஜனப் பத்திரிக்கையின் பத்தி எழுத்தாளரான நீங்களே இவ்வளவு அரசியல் பண்ணும் பொழுது உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் வைத்திருக்கும் ரஜினி எவ்வளவு அரசியல் பண்ணுவார்?
ரஜினி அரசியலை சினிமாவுக்கு பயன்படுத்தறார் என்கிறீர்கள், நீங்கள் அரசியலை உங்கள் பத்திக்கு பயன்படுத்துகிறீர்கள். என்ன வித்தியாசம், சொல்லுங்க ஒலகஞாநியண்ணே. ஒரு தளம் கிடைத்துவிட்டது, கையில் பேனாவும் இருக்கிறது, இடஒதுக்கீடு பிரச்சனைக்கப்புறம் நாமளும் பெரிசா ஏதும் எழுதல, என்பதற்காக அப்பாடா ரஜினி மாட்டினாரு, வாய்யா வாய்யா வாய்யான்னு எழுதாதிங்க ஒலகஞாநியண்ணே.
மேலும் அதே பத்தியில்
“இந்த வார பூச்செண்டு : ரஜினிக்கு அழுத்தமான கதையுடன் ஒரு படத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு அளித்ததற்காக“
என்று பத்தி முழுக்க அவர்மீது சேற்றை வாரி இரைத்துவிட்டு, இந்தாப்பா பூச்செண்டு சேறு வாசனை நல்லாருக்காது, பூச்செண்ட முகர்ந்து பாத்துக்கன்னு ஏன் கொடுக்கனும்?
குசேலன், “ஞாநி” அவர்களது தங்கக் கைகளால் பூச்செண்டு வாங்கும் அளவிற்கா நன்றாக இருக்கிறது. தருமி கேட்டது மாதிரி “என் பாடலில் எவ்வளவு பிழைகள் இருக்கின்றனவோ அவ்வளவை நீக்கிவிட்டு மீதம் இருப்பதற்கு பரிசு கொடுங்கள் மன்னா” என்றது போல, படத்திலிருக்கும் ஆபாசத்தையும், அபத்தத்தையும் நீக்கிவிட்டு, மற்றவைக்கு பூச்செண்டு கொடுப்பாராம். பத்தி முழுவதும், குசேலனை தாக்குகிறார், பிறகு பூச்செண்டாம்.
ரஜினியை மானங்கெட பேசிவிட்டு, அதே பத்தியில் பூச்செண்டு தரவேண்டிய அவசியம் என்ன? இப்ப உங்க பேனா உதறுதில்ல?
உங்கள மாதிரி அரசியல் பண்ண அவருக்கு சாமர்த்தியம் பத்தல. இருந்துச்சுன்னா நீங்க சொன்னது போல, கர்நாடகவை எதிர்த்து பேசிட்டு உடனே “எடியூரப்பா இன்று குளித்துவிட்டு வந்ததால் அவருக்கு பூச்செண்டு” என்று ரஜினி பேசியிருக்கக்கூடும்.
மேலும் உங்களைப் போல அவர் இவ்வாறெல்லாம் பேசியிருக்கலாம்:
“
இந்த வார குட்டு: ஒகேனக்கல் திட்டத்தை கர்நாடகா எதிர்ப்பதால், எடியூரப்பாவுக்கு ஒரு கில்லும், வாட்டாளுக்கு ஒரு கொட்டும்.
இந்த வார பூச்செண்டு: பெங்களூரில் IT கம்பெனிகள் நடத்தி தமிழர்கள் பலருக்கும் வேலை கொடுப்பதால், எடியூரப்பாவுக்கு ரோஸ் பூச்செண்டு, வாட்டாளுக்கு லாவண்டர் பூச்செண்டு. “
இப்படியெல்லாம் உங்களைப் போல ரஜினி பேசிருந்தாருன்னா, அவர் பிழைச்சுக்கிடுவார். அந்த சாமர்த்தியம் பத்தலண்ணே, ஞாநியண்ணே. கொஞ்சம் அவருக்கு சொல்லிக்கொடுங்க.
“அரசியலில் நீங்கள் குரல் கொடுத்த பொழுதெல்லாம் அதையொட்டி உங்கள் படம் தயாரிகிக்கொண்டிருப்பது வழக்கம்” என்று பேனா கிடைத்த மெத்தனத்தில் எழுதியிருக்கிறீர்கள்.
எத்தனை முறை ரஜினி தனது படத்தின் ரிலீஸ் தேதிக்கு முன்னர் அரசியல் பேசியிருக்கிறார்? Data கொடுக்கமுடியுமா ஒலகஞாநியண்ணே? சந்திரமுகிக்கு முன்னால் பேசினாரா? “நான் குதிரை” என்று அவர் பேசியது அரசியலா? சிவாஜி வெளியீட்டுக்கு முன்னர், அவர் அரசியல் பேசினாரா? பாட்சா படம் ஜனவரியில் ரிலீஸ் ஆனது, அவர் ஜெயலலிதவை எதிர்த்து எப்பொழுது பேசினார்? அவர் அரசியல் பேசித்தானா அவர் படம் ஓட வேண்டும்? எனக்கு தெரிந்த எத்தனையோ பெண்கள் குடும்பம் சகிதமாக சிவாஜி ரிலீஸ் தேதியன்னைக்கு தியேட்டருக்கு வந்து படம் பார்த்தார்கள். அவர்கள் அரசியலில் துளியும் ஆர்வம் இல்லாதவர்கள்.
“முதன் முதலில் பொது பிரச்சனையில் தெளிவாகப் பேசியது ஒகேனக்கல் பிரச்சனையில் தான்“
ஓகோ அப்படி! இப்ப யார் எப்பப்ப டெளிவா பேசறாங்கங்கறத தேர்ந்தெடுக்கிற பொறுப்பு உங்களோடதா? சொல்லவேயில்ல! இனி மேலும், இந்த வாரம் டெளிவா பேசினவருக்கு ஒரு பூச்செண்டு. டெளிவா பேசாவதங்களுக்கு கொட்டுன்னு ஒரு பகுதி ஆரம்பிச்சிருங்க சார். செம ஐடியா!
“எல்லா கன்னடகாரர்களையும் உதைக்க சொல்லவில்லை” என்று ரஜினி பல்டி அடித்ததாக சொல்லுகிறீர்கள்.
அப்படீன்னா எல்லா கன்னடகாரர்களையும் உதைக்கச்சொன்னாருன்னு சொல்றீங்களா? நீங்களே உக்காந்து யோசிச்சிட்டு சொல்லுங்க, எல்லா கன்னடகாரர்களையும் உதைக்க முடியுமா? ஒலகஞாநின்னு பேரவெச்சுக்கிட்டு இப்படி அசட்டுதனமா பேசினா எப்படி? எல்லா கன்னடகாரர்களையும் உதைக்கறதுக்கு எவ்வளவு நேரம் ஆகும்? கால் வலிக்குமா வலிக்காதா?
“குசேலன் பட வெளியீட்டை கர்நாடகாவில் தடை செய்ய முனைந்ததுதான் உங்கள் பல்டிக்கு காரணம்” என்கிறீர்கள்.
கண்டுபிடிச்சுட்டாருய்யா நம்ப ஒலகஞாநியண்ணே. ஆமா அதுக்குத்தான். இது தான் சின்ன குழந்தைக்கு கூட தெரியுமே! என்ற சொல்லை உங்களை போல ஒலகஞானம் கொண்ட பத்தி எழுத்தாளர் உபயோகிக்கலாமா? நெஞ்சில் கையை வைத்து சொல்லுங்கள், நமக்கு தண்ணீர் வராததற்கு அவர்கள் மட்டும் தானா காரணம்? நீங்கள் தெருக்களில் குழாயடி சண்டைகளை பார்த்ததில்லையா? ஏன் சென்னையில் லாரி தண்ணீர் பிடிக்க சென்றதில்லையா? ஆமா ஆமா திமுக பற்றிய செய்திகளை பூதக்கண்ணாடி வைத்து நாள்தோறும் தேடிக்கொண்டிருந்தால், எப்படி இதற்கெல்லாம் நேரம் இருக்கும்? நம்ப தெருவில, இந்த பக்கம் தெருவில வர்ற அடிகுழாய் தண்ணிய அந்தப் பக்கம் தெருவில இருக்கிற மக்களுக்கு கொடுக்க மாட்டேங்கறாங்க ஒலகஞாநியண்ணே. அப்ப அவங்கள என்ன சொல்லுவீங்க? தமிழ்த்தெரு-வெறியர்கள்? மேலும் ஒரு ஐடியா சார். கப்புன்னு பிடிச்சுக்கோங்க: இந்தவாரம் குழாயடி சண்டை போட்டவர்களுக்கு கொட்டு. குழாயடி சண்டை போடாதவர்களுக்கு பூச்செண்டு.
“பத்து பேரை தனியாளாக அடித்துப் போடுவது…எல்லாம் திரையில் தான் சாத்தியம்” என்று சொல்லியிருக்கிறீர்கள்.
நடிகர்கள் அப்படித்தாண்ணே. நீங்க உண்மையிலே ரஜினி திரும்பி மொறச்சு பாத்தா தீக்குச்சி பத்திக்கும்னு நினைச்சீங்களாண்ணே? ஐயோ பாவம். இந்தமாதிரியான குற்றச்சாட்டு, நாங்கள் பள்ளிக்கூடம் படிக்கும் போது, ரஜினிரசிகர்களுக்கும் கமல் ரசிகர்களுக்கும் இடையே நடக்கும் சண்டைக்குத்தான் பயன்படுத்துவோம். ஒலகஞாநியண்ணே இத தன்னோட ஒலகபத்தியில எழுதியிருக்கிறது ஆச்சரியமா இருக்கு.
““அது யாரோ ஒரு ரைட்டர் ஒரு படத்துல எழுதிய வசனம். அதை நான் பேசியிருக்கேன். அதை உண்மைன்னு நீங்க எடுத்துக்கிட்டா நான் என்ன செய்யறது” என்று சொல்லுகிறீர்கள். எவ்வளவு நேர்மையான, சரியான பதில் ! இதைப் பல வருடங்கள் முன்பே நீங்கள் சொல்லியிருந்தால் இப்போது வந்திருக்கும் எந்தப் பிரச்னையும் உங்களுக்கு வந்திராதே.” என்கிறீர்கள்.
ஒலகஞாநியண்ணே, அவர் இப்பொழுது சொல்ல என்ன நேரம் வந்துவிட்டது? சினிமாவிலிருந்து விலக்கிக்கொள்கிறாரா? அடுத்து அதிக பொருட்செலவில் தயாராகப் போகும் ரோபோ லைனில் இருக்கிறது. அவர் இந்த கேள்வியை படத்தில் வைத்திருக்கவே தேவையில்லை. வாசுவை பார்த்து ஒரு கண்ணசைவு செய்தால் போதும். அப்படியிருக்க அவர் இந்த வசனத்தை படத்தில் வைக்கவேண்டிய அவசியம் என்னவென்று கொஞ்சம் யோசிச்சீங்களா? சின்ன பிள்ளை மாதிரி குதிக்கிறீங்க? இவர் அஞ்சு வருசத்துக்கு முன்ன இத சொல்லிருந்தாலும், இன்னும் அஞ்சு வருசத்துக்கு முன்னால சொல்லிருந்தா எல்லாருக்கும் நல்லதுன்னு சொல்லியிருப்பீங்க.
““நான் வந்தா என்ன வராட் என்ன ? நீங்க உங்க வேலையைப் பாத்துகிட்டுப் போக வேண்டியதுதானே” என்கிறீர்கள். மக்கள் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க்கொண்டுதான் இருந்தார்கள். நீங்கள்தான் வந்து அரசியல் டயலாக் பேசி உங்கள் பக்கம் கவனத்தைத் திருப்பினீர்கள்.“
இது அபத்தமோ அபத்தம். சின்னப்பிள்ளைகள் சண்டையிட்டுக்கொள்வதைப் போல.”நான் பேசாட்டுக்கு பேசாட்டுக்கு தாம்ம்மா இருந்தேன், இவந்தான் என்னய கிள்ளிவெச்சுட்டான்னு” சொல்றமாதிரி. அட்லீஸ்ட் உங்களோட பத்தி ஞானத்தையாவது யூஸ் பன்ணியிருக்கலாமே?!
“சுந்தர்ராஜனின் இன்னொரு கேள்விக்கு படத்தில் பதிலே இல்லை. வயசுப் பொண்ணுங்க கிட்ட வந்து `பழகிக்குங்க’ என்று பேசும் கேவலத்தைப் பற்றிக் கேட்கிறார். பதிலே இல்லை.“
பழகிக்கங்கன்னு சொல்றதுல அப்படி என்ன கேவலம் இருக்குன்னு எனக்கு புரியலண்ணே. அது ஒரு காமெடிக்குத்தானே வெச்சாங்க? ஓகோ படத்துல வர்றதயெல்லாம் சீரியஸா எடுத்துக்கிற ஆளா நீங்க? இது கேவலம்ன்னா இதவிட கேவலமா வேற எந்த படத்திலயும் இதுவரைக்கும் எதுவுமே வரலீங்களா ஒலகஞாநியண்ணே? குமுதம் “மூன்று பக்கங்களுக்கு மிகாமல் ரஜினியை பற்றி எழுதவும்” அப்படீன்னு சொன்னாங்களா? எதையெதையோ பிடிச்சு எழுதியிருக்கீங்க gap fill பண்ணியிருக்கீங்க?
“சூப்பர் ஸ்டர் இமேஜ் ஒகேனக்கல் வெள்ளத்தில் அடித்துப்போய்விட்டது” ஆமாப்பா, சொல்ட்டாரு கேட்டுக்கங்க. இப்ப “ரஜினி தூற்று” வெள்ளத்தில் நம்ப ஒலகஞாநியண்ணே பிச்சுக்கிணு போறாரு. எத்தனை பேர் படிச்சிருப்பாங்க. ரஜினி பத்தி எழுதிருக்காருன்னு. என்னோட பழைய boss கூட கேட்டார்: தலைவரை பத்தி யாரோ ஞாநிங்கறவரு ஏதோ எழுதிருக்காராமில்ல, இன்னைக்கு குமுதம் படிக்கனும்.
சார், ஞாநிசார், ஒலகஞாநிசார், பேமஸ் ஆகிட்டீங்க சார். வாழ்த்துக்கள்.