நிஜ ஸ்பைடர்மேன் and other rants !

அலைன் ராபர்ட் (Alain Robert) என்கிற ப்ரெஞ்சு “ஸ்பைடர்மேன்” உலகத்தின் 85 உயரமான கட்டிடங்களை (including Eiffel Tower in Paris) வெறும் கையை உபயோகித்து ஏறி சாதனை (?) புரிந்திருக்கிறார். இவர் நாளை சிங்கப்பூர் நேரப்படி மாலை ஐந்து மணிக்கு, சிங்கப்பூரில் இருக்கும் ஏதோ ஒரு கட்டிடத்தை ஸ்பைடர்மேன் போல ஏறி சாதனை புரியப்போகிறார். எந்த கட்டிடம் என்பது ரகசியம். நாளை பொறுத்திருந்து பாருங்கள்.

46 வயதான இவர் இதற்கு முன்னர், 1997இல் Great World City என்கிற 18 மாடி கட்டிடத்தை ஏறி கடந்திருக்கிறார். பிறகு 2000இல் ரா·பிள்ஸ் ப்ளேஸ்-இல் இருக்கும் 63 தளங்களைக் கொண்ட யூனியன் பேங்க் கட்டிடத்தில் ஏறிக் கொண்டிருக்கும் பொழுது, 23வது மாடியில் வைத்து கைது செய்யப்பட்டார். “ஜன்னல்களை திறக்க முடியும் என்று நான் நினைத்திருக்கவில்லை, போலீஸ் இரண்டு மாடிகளின் ஜன்னல்களை திறந்து விட்டனர். நான் ஏறமுடியாமல் மாட்டிக்கொண்டேன்!” என்று வருத்தத்துடன் சொன்னார் அவர்.

பெட்ரோனாஸ் ட்வின் டவர் (Petronas Twin Tower), Taipei 101 மற்றும் சமீபத்தில் நியூயார்க் டைம்ஸ் பில்டிங் போன்ற கட்டிங்களையும் ஏறியிருக்கிறார்.

*

மேலும் தற்போது சிங்கப்பூர் வந்திருக்கும் மற்றொரு நபர்: Jimmy Wales. யாரென்று தெரிகிறதா? விக்கிபீடியாவின் நிறுவனர். இந்த முறை நான் இந்தியா சென்றிருந்த பொழுது, புதிய சரவணா ஸ்டோர்ஸ் வளாகத்துக்கு வெளியே படியில் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தபொழுது, என்ஸைக்ளோபீடியாக்களை விற்றுக்கொண்டிருக்கும் (விற்க முயற்சிசெய்யும்) சிலரைப் பார்த்தேன். எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. இந்த மாதிரியான என்சைக்ளோப்பீடியாக்களை இன்னும் யாரெனும் வாங்குகிறார்களா என்ன? இதை விற்பதனால் இவர்களுக்கு என்ன கிடைத்துவிடப்போகிறது? ஒரு மாதத்திற்கு எத்தனை விற்பார்கள்? இது என்சைக்ளோப்பீடியா என்று தெரிந்திருப்பவர்களுக்கு கண்டிப்பாக இணையத்தை பற்றியும் தெரிந்திருக்கும். இணையத்தை தெரிந்தவர்களுக்கு விக்கிப்பீடியாவை கண்டிப்பாக தெரிந்திருக்கும். தெரிந்தால் அவர்கள் காசு கொடுத்து என்சைக்ளோப்பீடியாவை வாங்குவார்களா?

விக்கிப்பீடியாவை 263 மில்லியன் மக்கள் பயன்படுத்துகிறார்களாம். இணையத்தை பயன்படுத்தும் மொத்த மக்கள் தொகையில் 31 விழுக்காடு ஆகும். மொத்தம் 253 மொழிகளில் இயங்கிவருகிறது விக்கிபீடியா.
Encyclopedia Britannicaவில் இருக்கும் ஒவ்வொரு கட்டுரையிலும் சராசரியாக மூன்று தவறுகள் இருக்கிறது என்றும், அதே போல விக்கிப்பீடியாவின் ஒவ்வொரு கட்டுரையிலும் சராசரியாக நான்கு தவறுகள் இருக்கிறது என்றும் Scientific journal Nature – கூறுகிறது.

Whats Jimmy Wales philosophy?
“Imagine a world in which every single person on the planet is given free access to the sum of all human knowledge”

*

Georgia Crisis பற்றிய செய்திகளை புரட்டிக்கொண்டிருந்த பொழுது, இந்த வரிகளை படிக்க நேர்ந்தது: அதே சமயத்தில் புஷ் CNN-இல் ரஷ்யாவை கண்டித்தும் “we will stand behind Georgia” என்றும் கொஞ்சம் கூட சிரிக்காமல் பேசிக்கொண்டிருந்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது? Man, you Rock! எத்தனை பேர் பின்னால் தான் நீங்கள் நிற்பீர்கள்? இந்த சந்தர்ப்பத்தில் நெல்லை கண்ணன் அவர்கள் விஜய் டீவியின் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் சொன்னது என் நினைவுக்கு வருகிறது: “உலகத்தை சிவப்பாக்கிக் கொண்டிருக்கும் மாளிகைக்கி வெள்ளை மாளிகை என்று பெயரிட்டிருப்பது விந்தையாக இருக்கிறது!”

“The moral of the story, though, is quite simple. The same western governments that supported the invasion of Iraq under the slogan of “regime change” and recently recognised the unilateral declaration of independence of Kosovo – another group of European ethnic rebels – are now telling Russia to stop doing similar things in Georgia.”

நச்!

*
ஆட்டோகிராப் ஒரு தத்துவ ஆய்வு என்கிற cheran’s autograph and the antinomies of Totality என்கிற கட்டுரையின் தமிழாக்கத்தை உயிர்மையில் படித்தேன். மற்றொரு angle.

அவள் இவனுடைய கற்பிதம்தான் என்பதும், அவளுடைய குணங்கள் தமிழ் சினிமாவின் மரபிற்கு ஏற்றது போல் திரிக்கப்படுகின்றன என்பதும், அவளுடைய சமூகச் சூழலைக் கதாநாயகனுக்கு சாதகமாகத் திரைப்படம் விவரிப்பதில் உறுதியாகிறது. அவளுடைய தரவாட் மாளிகையைப் பார்க்கும்போது, அவள் தாய்வழிச் சமூகத்தை முதன்மைப்படுத்தும் நாயர் குலத்தில் பிறந்தவள். அந்தக் குலத்தில் விதவை என்ற நிலைக்கே இடம் கிடையாது. மிகவும் மோசமான சூழலில்கூட, அதாவது அந்தக் குலத்தைச் சார்ந்த ஆண்கள் அதிகமாகப் போரிலே இறந்த சூழலிலும், கயிறு (1978) என்ற தகழி சிவ சங்கரனின் நாவலில் வருவது போல, நம் பூதிரி குலத்தில் பிறந்த ஆண்களை வீட்டிற்கு அழைத்து அவர்களுடன் நியோகம் செய்து, பிள்ளைகளைப் பெற்ற பிறகு, அவர்களுக்கு வெகுமதி அளித்து விடை பெறச் சொல்லுவதுதான் அந்தச் சமூகத்தின் வழக்கம். மேலும் இந்த முறையில் தந்தைக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது. மாறாக தாய் மாமனுக்குத்தான் ஆண் பிள்ளைகளை வழிநடத்தும் அதிகாரம் தரப்படும். சொத்துகள் எப்பொழுதும் தாயிடமிருந்து மகளுக்குச் செல்லுமே தவிர, மகனுக்குச் செல்லாது. இதனால், தம்பூராட்டிக்குத்தான் அதிகாரம் அதிகமே தவிர இந்தத் திரைப்படத்தில் வருவது போல தம்பூரானுக்குக் கிடையாது.

அதாவது, ஆட்டோகிராஃப்பில் லத்திகாவின் தந்தைக்குத்தான் அதிகாரம் இருக்கிறது. அவளுடைய தாயையோ நாம் பார்ப்பதே கிடையாது. இதனால் சுயத்திற்கும் மற்றதிற்கும் இருக்கும் கற்பித ஒற்றுமைகளை வரையறுப்பதற்காக, நிஜமான அடிப்படைக் கலாச்சார வித்தியாசங்கள் வெளியேற்றப்படுகின்றன. மேலும், லத்திகாவின் தந்தையும், கணவனாக அவளுக்கு அமைபவனும், அவர்களுடைய அடியாட்களும் தமிழர்களை ‘பட்டி அல்லது நாய்’ என்று கூறி ஒதுக்கும் மலையாள வெறியர்களாக நிறுத்தப்படுகின்றனர். அதாவது, ‘மலையாளி ஒரு கொலையாளி’ என்று வர்ணித்து மலையாளிகளுக்கு எதிராகத் தமிழ்நாட்டில் அந்த மாதிரியான இனவெறிக் கூறுகள் செயல்படாதது போல், திரைப்படம் செயல்படுகிறது. இந்த மாதிரியான இனவெறிகள் ஒன்றொடு ஒன்று முட்டிக் கொள்ளும்போது, எதிர் இனத்தைச் சார்ந்த ஆண்களின் மீது வெறுப்பு எவ்வளவு கூடுகிறதோ அந்த அளவுக்கு அந்த இனத்தின் பெண்களின் மீது ஈர்ப்பு கூடுவது சகஜம். இதனால், அந்தப் பெண்கள் உள்பட அந்த எதிர்-இனத்தைச் சார்ந்தவர்கள் எல்லாம் சுய-இனத்தின் வேட்கைக்கு ஏற்றார் போல் கற்பிதம் செய்யப்படுவார்கள். இறுதியில், லத்திகா, அவளுடயை தந்தை, மற்றும் அவளுடைய கணவன் என்ற மூவரையுமே, தமிழன் செந்திலின் கற்பிதத்தை நிலைநிறுத்துவதற்காக, இந்தப் படத்தின் கதையாடல் காயடித்துவிடுகிறது.”

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=26
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=49

*

*
Btw, Happy Independence Day!

தமிழன் என்று சொல்லடா என்கிற நல்ல நிகழ்ச்சி ஒன்றை விஜய் டீவியில் பார்க்க முடிந்தது. Good Job Vijay!

பார்க்காதவர்கள் கண்டிப்பாக வருத்தப்படத் தேவையில்லை, இனி வரும் வாரங்களில் இந்த நிகழ்ச்சியை மீண்டும் மீண்டும் மறு ஒளிபரப்பாக போட்டு தேய் தேய்ன்னு தேச்சு, தமிழன் என்று சொல்லடான்னு கோபிநாத் சொன்னா, மொத அவன கொல்லுடான்னு சொல்லுறஅளவுக்கு ஆக்கிடும் விஜய் டீவி!

ஜெயமோகன் வெளியிட்டுள்ள (அவரது நண்பர் கிருஷ்ணன் அனுப்பிய) இந்த கடிதத்தை பார்த்தீர்களா?

*

Update:

Alain Robert (The original “SpiderMan” atlast, climbed 45-storey 176m high Suntech city tower one on Saturday (16Aug2008).

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s