இது என்னுடைய 200வது பதிவு. என்னுடைய மொக்கை பதிவுகளை வாசித்து கடுப்பாகி பின்னூட்டம் இட்டவர்களுக்கும், அப்படியே அப்பீட்டாகிய ரொம்ப நல்லவர்களுக்கும், என்ன பண்றது நம்ப ஆளாகிட்டான்னு சும்மானாச்சுக்கும் பாராட்டியவர்களுக்கும், என் பதிவுக்கு தொடுப்பு கொடுத்து இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஆக்சிஜன் செலுத்திய அன்பர்களுக்கும் நன்றிகள் பல பல!
*
Randy Pausch எழுதிய The Last Lecture என்கிற புத்தகத்தை இப்பொழுது படித்துக்கொண்டிருக்கிறேன். ஒரே மூச்சாக படித்து மூடிவைத்துவிடக்கூடிய புத்தகம் அல்ல அது. Randy Paush-ஐ பற்றி ஒரே நொடியில் நீங்கள் தெரிந்து கொண்டு விடலாம் எனினும், நானும் அவரை பற்றி குறிப்பிட வேண்டும் என்று விரும்புகிறேன்.
கார்னகி மெல்லான் (Carnegie Mellon) யுனிவர்சிட்டியில் கம்ப்யூட்டர் சயின்டிஸ்ட்டாக வேலை செய்து கொண்டிருந்தவர் Randy Pausch. ஒவ்வொரு விரிவுரையாளருக்கும் தனது பணி நிறைவுரும் (retirement) தருணத்தில் கடைசி லெக்சர் என்றொரு சடங்கு உண்டு. அது தான், அவர் அந்த கல்லூரியில் தரும் கடைசி லெக்சர். ஆனால் Randy Pauschக்கோ இந்த கடைசி லெக்சர் தான், அவருடைய வாழ்நாளின் கடைசி லெக்சர்.
Randy Pausch, Terminal Pancreatic Cancerஆல் பாதிக்கப்பட்டவர். August 2007இல் இன்னும் மூன்று மாதம் தான் என்று மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர். Randy Pausch போராடினார். தான் ஆசையாய் காதலித்து மணந்த மனைவியையும், மூன்று குழந்தைகளையும் விட்டுவிட்டு போகக்கூடாது என்று தன்னால் முயன்றவரை போராடினார். ஆனால் முடிவில் விதி வென்றது.
குழந்தைகள் வளரும் பொழுது அவர்களை நெறிப்படுத்த தான் இருக்கமாட்டோமே என்று வருந்தினார். ஆனால் அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான அறிவுரைகளை இப்பொழுதே அவர்களுக்கு சொல்லிவிடலாம் என்றால் கூட, அதை முழுவதுமாக கேட்டு புரிந்துகொண்டு அத்தனையையும் உள்வாங்கிக்கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு இல்லை. அவர்கள் இன்னும் குழந்தைகளே!
தான் கூற நினைக்கும் அறிவுரைகளையும், தனது அனுபவங்களையும் தனது கனவுகளை எப்படி தன்னால் அடையமுடிந்தது என்பதையும் வீடியோவில் பதிந்து வைத்துக்கொள்ளலாம் என்ற அவரது மனைவியின் யோசனையை அவர் நிராகரித்தார். வீடியோவில் தான் மட்டும் பேசிக்கொண்டிருந்தால் குழந்தைகளுக்கு சாதாரண அறிவுரையாக போய்விடும், நானூறு பேர்களின் முன்னால், படித்த லெக்சரர்களின் முன்னால் பேசினால், அவர்களது அமோதிப்பும் சேர்ந்து, குழந்தைகளிடம் சரியாக போய்ச்சேரும் என்று நினைத்து, தனது வாழ்நாள் சாதனைகளை (சாதனைகள் தான், அவரது புத்தகத்தை இல்லையெனில் அவரது லெக்சர் வீடியோவை பாருங்கள்!) ஒன்று திரட்டி ஒரு presentationஇல் தனது கல்லூரியில் The Last Lectureஆக கொடுத்தார். அவரது Topic: Really achieving your childhood dreams!
சாதனை என்பது என்னவென்றால், நினைத்ததை முடிப்பது. கனவுகளை நனவாக்குவது. நம்மில் எத்தனை பேருக்கு அது முடிந்திருக்கிறது? தனது கனவுகளை நிறைவேற்றிவிட்டதாக கூறும் Randy Pauschஇன் The Last Lectureஐ இங்கே பாருங்கள்!
Randy Pausch – July 25 2008இல் உயிர் நீத்தார்.
மொத்தமாக புத்தகத்த படித்துவிட்டு மேலும் சொல்லுகிறேன்.
*
உங்களின் 200 வது பதிவிற்கு என் வாழ்த்துக்கள் 🙂
LikeLike
டபுள் செஞ்சரிக்கு வாழ்த்துக்கள்.சுபாஷ்
LikeLike
உங்களின் 200வது பதிவில் அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழ் வாசகர்களுக்கு Randy Paush-ஐ அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள்.வாழ்த்துகள்..!!
LikeLike
வாழ்த்துக்கள். Randy Pauschன் The Last Lecture வீடியோ பார்த்திருக்கிறேன். Inspiriting!!
LikeLike