காந்தம் என்கிற எனது நாவலை நான் எழுத ஆரம்பிக்கும் முன்னர் (சென்னையில் இருந்த பொழுது) ஒரு சாம்பிளாய் நான் எழுதிய கவிதை நடை கதை. ஒரே ஒரு அத்தியாயம் தான் எழுதினேன். அப்புறம் உரைநடைக்கு மாறிவிட்டேன். இன்று வீடு மாற்றும் பொழுது கண்டெடுத்த என் டைரியில் இதைப் பார்த்தேன்.
திக்கெட்டும்
கும்மிருட்டு
வரிசையாய்
குடிசைகள்.
நித்திரையில்
மக்கள்
சுறுசுறுப்பாய்
சந்திரன்.
வெளிச்சமாய்
விட்டில் பூச்சி.
துணை தெடும்
பல்லி
ரத்தம் கேட்கும்
கொசு.
ரத்தம் கேட்கும்
கொசு.
அள்ளிக் கொடுத்த
மேகம்.
ஓய்ந்து போன வானம்
தெருவெல்லாம்
குட்டை.
சளக்..சளக்..
குட்டை தள்ளாடியது.
ஒடுங்கிய குஞ்சாய்
சிறுமி.
தெருவிளக்கு
விடுமுறை
எடுத்துக்கொண்டதால்
இவள்
தடுமாறி நடந்தால்
பதற்றமாய் தெடினாள்.
‘அப்பா’
நடுங்கியது குரல்.
எங்கும்
பரவியது
பயரேகை.
நாய்கள்
தூக்கம் கலைத்தன.
எழுந்து நின்று
வெறித்தன
வேகமானாள்
சிறுமி.
‘அப்பா’
அழத் துடங்கினாள்.
கால் இடறி
கீழே விழுந்தாள்
ஒரு கால்
மேல்
கிடந்தாள்.
‘டேய்..’
உளறினான்
ஊரறிந்த
குடிமகன்.
சிறுமி
மகிழ்ச்சியானாள்
முகத்தை
உற்று நோக்கினாள்
‘அப்பா’
அசைவில்லை.
குட்டையில்
நீர்
அள்ளினாள்.
முகம் துலைத்தவனின்
முகத்தில்
அடித்தாள்.
பிதற்றினான்
பித்தன்.
கடமை அறியா
கயவன்.
‘அப்பா’
பயமாயிறுக்கிறதப்பா.
அம்மா
புரண்டு அழுகிறாள்
தம்பி பிறக்கப் போகிறானாம்.
நீ வாப்பா’
சிந்தனையில்லாதவன்
செவிமெடுக்கவில்லை.
போதையில்
காதை இழந்தவன்.
பயனில்லாததால்
புறப்பட்ட இடத்திற்கே
புறப்பட்டாள் சிறுமி.
அமைதியாய்
வீடு.
ஆறுதலாய்
பக்கத்துவீட்டு
பாட்டி
அம்மா
தூங்கிக்கொண்டிருந்தாள்.
‘உனக்கு
தம்பி பிறந்திருக்கிறானம்மா’
உள்ளே ஓடினாள்
சிறுமி.
கருப்பாய்
அழகாய்
குழந்தை.
குனிந்து
உச்சி முகர்ந்தாள்.
கண்ணத்தில்
முத்தமிட்டாள்.
அருகில்
அமர்ந்தாள்.
அழ்ந்த
உறக்கத்தில் இருந்தான்
ஆளப்பிறந்தவன்.
super muthu.
LikeLike