கீழே இருக்கும் இந்த யூடியூப் வீடியோவை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். பார்த்து மனம் வேதனைப் பட்டிருக்கக்கூடும். வெட்கிக் கூசியிருக்கக்கூடும். தமிழனாக இருப்பதற்கு வெட்கிக் கூசியிருக்கக்கூடும்.
சன் நியூஸ் தொலைக்காட்சியில் “இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்கவேண்டாமென்று” சொல்லுகிறார்கள்..நான் சொல்லுவது : “என்னைப்போல emotional guys கூட பார்க்கக்கூடாது. you are warned!”
மாணவர்களுக்குள் சண்டைகள் நடக்கும். இந்த சண்டை மாணவர்களுக்குள் நடக்கும் சாதரண சண்டை போல தெரியவில்லை. எனக்கு அதெல்லாம் பிரச்சனையில்லை. சண்டைகள் நடக்கும் பொழுது மாட்டிக்கொண்ட ஒருவர் இப்படி அடிவாங்குவது வாடிக்கையாக இருக்கலாம். ஆனால் போலீஸ் என்கின்ற ஒன்று அங்கே நின்று கொண்டிருந்ததே. அவர்கள் என்னத்தை செய்து கொண்டு இருந்தார்கள்? ஒருவரை பத்து பதினைந்து பேர் சேர்ந்து அடிக்கும் பொழுது அங்கேயிருக்கும் போலீஸ் அந்த சண்டையை தடுக்காமல், அடிவாங்குபவன் சாகும் வரை வேடிக்கை பார்க்கும் எனில்.. கேட்டால் permission கிடைக்கவில்லையாம்..அட போங்கப்பா.
அசிஸ்டென்ட் கமிஷ்னரை டிரான்ஸ்·பர் செய்தாகிவிட்டது. ஏழு மாணவர்களை அரெஸ்ட் செய்தாகிவிட்டது. Everything is ok now. ****. இன்னும் இது ஒரு மிகப்பெரிய கலவரமாக உருவாகக்கூடும் என்று சொல்லுவது ஒரு மிகப்பெரிய கலவரம் உருவாக வேண்டும் என்று நினைப்பதைப் போன்றது. எவ்வளவு பெரிய கலவரம் உருவானாலும், இந்த சம்பவத்தை, அடி தாங்காமல் மயக்கமுற்று ஒன்றும் செய்யமுடியாமல் கீழே சாய்ந்து விட்ட ஒரு மனிதனை, பெரிய பெரிய கம்புகளை வைத்து விடாமல் அடித்து, கடைசி எழும்புகள் நொறுங்கும் வரை அடித்து நொறுக்கும் காட்டுமிராண்டிக் காட்சியை போலீஸ் கண்டு களித்ததை இன்னும் கொஞ்சநாளில் நம்பர் ஒன் புலனாய்வு பத்திரிக்கைகள் கூட மறந்துவிடும்.
எத்தனையோ விசயங்களை மறந்திருக்கிறோம்..இதை மறக்கமாடோமா என்ன?
எத்தனை நிகழ்வுகளை மறந்திருக்கிறோம்:சட்ட சபையில் ஒரு உறப்பினர் மற்றொரு உறுப்பினரை கன்னத்தில் அடித்தது , மைக்கை எரிந்தது, ம தி மு க ஊர்வலத்தில் எழு பேரை கொலை செய்தது, தர்மபுரியில் ௩ மாணவிகளை எரித்தது, மதுரை தினகரன் அலுவலகத்தில் ௩ பேரை கொன்றது, ஒகேனக்கல், முல்லை பெரியார் நிகழ்வுகள் போல இதுவும் ஒன்று.குப்பன்_யாஹூ
LikeLike
சட்ட கல்லூரியில் படிக்க வரும் மாணவர்கள் பெரும்பாலும் அரசியலில் சேர்வ்தற்கு ஒரு வழியாகத்தான் நினைத்து சேர்கிறார்கள். அங்கு வன்முறை என்பது part of life .மேலும் போலிசார் அங்கு நுழைந்து தாக்கியவர்களை அடித்து தடுத்திருந்தால் “போலிஸ் சர்வதிகாரம் ஒழிக” என்று தமிழகம் எங்கும் போராட்டம் நடத்தி, வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் ந்டததி பிரச்சனையை வேறு மாதிரி திசை திருப்பியிருப்பார்கள். சில வருடங்களுக்கு முன், இது போன்ற வன்முறையில் இறங்கிய சட்ட கல்லூரி மானவர்களை தடுத்த போலிசார் இடமாற்றம் செய்யபட்டதும், இடைநீக்கம் செய்ய பட்டதும் அடிக்கடி நிகழும் நிகழ்வுகள். இதை தடுக்க ஒரே வழி, இது போல் வன்முறை மற்றும் சமூக விரோத செயலில் ஈடு படும் மாணவர்கள் மீது உடனுக்குடன் கடுமையான நடவடிக்கையை கல்லூரி நிர்வாகம் எடுத்து, உடனடியாக கல்லூரியை விட்டு நீக்க வேண்டும்(அதற்கு அரசியல் கட்சிகளின் கடுமையான எதிர்ப்பை சந்திக்க வேண்டி வரலாம் ).
LikeLike