இப்பொழுது சா·ப்ட்வேர் துறையில் வேலை செய்பவர்கள் நிறைய சம்பளம் வாங்குகிறார்கள் ஆனால் மற்றவர்களுக்கு அவ்வாறான சம்பளம் கிடைப்பதில்லை, அதனால் சா·ப்ட்வேர் துறையில் இருப்பவர்கள் எல்லாம் தேசதுரோகிகள் என்பது போன்ற காட்சிகள் வைப்பது தமிழ் சினிமாவுக்கு வழக்கமாகப்போய்விட்டது என்று நினைக்கிறேன். இவ்வாறான காட்சிகள் வைத்தால் வரி விலக்கு உண்டு என்று அரசு அறிவித்திருக்கிறதா என்ன?
அறை எண் 305இல் கடவுள் படத்தை இன்று வசந்தம் சேனலில் பார்க்க நேர்ந்தது. அதில் ஜாவா சுந்தரேசன் என்கிற சாப்ட்வேர் துறையைச் சார்ந்த நபரைப் பற்றிய காட்சிகள் அதிகம். நேரடியாகவே அவர் வாங்கும் மொத்த சம்பளம் அந்த மேன்சனில் குடியிருப்பவர்களது மொத்த சம்பளத்தை விட அதிகம் என்று அந்தப் படத்தில் வரும் ராஜேஷ் குறிப்பிடுகிறார். BSc Computer Science படித்த அவர் 85000 ரூபாய் சம்பளம் வாங்கும் பொழுது, BBA படித்த படத்தின் ஹீரோ 4000 ரூபாய் சம்பளத்துக்கு இன்னும் வேலை தேடிக்கொண்டிருக்கிறார் என்றோரு வசனமும் வருகிறது. இதில் செம கடுப்பான நம்ப ஹீரோ ஜாவா சுந்தரேசனின் அலுவலகத்துக்கு சென்று, அங்கிருக்கும் மேலாளரிடம் இதே கேள்விகளை கேட்டு, இனி எப்படி நீங்கள் சம்பாதிப்பீர்கள் பார்ப்போம் என்று, கேலக்ஸி பாக்ஸின் துணையுடன், அனைவரது விரல்களையும் இல்லாமல் செய்துவிடுகிறார். விரல்கள் இல்லையென்றால் எப்படி கம்ப்யூட்டரை ஆபரேட் செய்வீர்கள், எப்படி இவ்ளோ பணம் சம்பாதிப்பீர்கள்?
அந்த சா·ப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும் அனைத்து மக்களின் விரல்களும் குட்டியாகப் போகும் அந்த காட்சியையும் அவர் சா·ப்ட்வேர் துறையில் பணிபுரியும் மக்களை பயன்படுத்தியே செய்திருக்கிறார், என்கிற விசயத்தை படத்தின் டைரக்டர் சிம்புதேவன் மறந்துவிட்டார். அது கிடக்கட்டும். சிம்புதேவன் இந்த படத்தை இயக்குவதற்கு எத்தனை சம்பளம் வாங்கினார்?
சிம்புதேவனுக்கு இது எத்தனையாவது படம்? அவர் பெரிய கார்ட்டூனிஸ்ட் என்பதெல்லாம் இருக்கட்டும். இது இவருக்கு ரெண்டாவது படம் தானே? எத்தனை மாதங்கள் உழைத்து இந்த படத்தை எடுத்திருப்பார்? 6 மாதங்கள்? குத்துமதிப்பாக ஒரு 25 லட்சம் சம்பளம் வாங்கியிருப்பார் என்று வைத்துக்கொள்வோம். ஷங்கர் இதற்கும் குறைவானதொரு தொகை கொடுத்திருக்கமாட்டார் என்றே நான் நம்புகிறேன். ஆறு மாதங்களுக்கு 25 லட்ச ரூபாய். மாதத்திற்கு எத்தனை லட்சங்கள் வருகிறது? நான்கு லட்சம்! இது சா·ப்ட்வேர் துறையினர் வாங்கும் பணத்தை விட மிகவும் அதிகம்.
இவ்வளவு சம்பளம் வாங்குவதற்கு அவர் என்ன படித்திருக்கிறார். எனக்கு தெரியாது. என்னமோ படித்திருக்கிறார். அவர் படித்த அந்த படிப்பை படித்த அத்தனை பேரும் தமிழ் நாட்டில் அவர் வாங்குகிற சம்பளமா வாங்குகிறார்கள்? பிறகு ஏன் இவர் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்? கேட்டால், அவர் மூளையை (creativity) காரணம் காட்டக்கூடும்.
சிம்புதேவன் கார் வைத்திருக்கிறாரா? படத்தில் வரும் ஜாவா சுந்தரேசனைப் போல அவரும் இன்னும் ரெண்டு படங்கள் கழித்து ஹெலிகாப்டர் வாங்கக்கூடும்.
சூப்பர்.. 🙂 நச் கேள்வி..
LikeLike
🙂
LikeLike
hehehe… 🙂
LikeLike
நல்லாதான் இருக்குது கேள்வி, ஆனாலும் நீங்க ரொம்ப பாஸ்ட்டு.!
LikeLike
நான் வெகு நாட்களாக நினைத்ததை வெளிக்காட்டியிருப்பதற்கு முதல் என் நன்றியை தெரிவித்துக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்.எனக்கு தெரிந்து சில ஆதங்களை இங்கு சொல்ல ஆசைப்படுகிறென்:1. சாப்ட்வேர் என்ஜினியர்கள் சும்மா ஏதோ சம்பளம் வாங்குவதாக நினைக்கிறார்கள், யாரும் சும்மா சம்பளம் வாங்கவில்லை அவரவர் தனிப்பட்ட முறையில் கஷ்டப்பட்டு தான் சம்பாதிக்கிறார்கள், அவரவர் நிலைமையில் இருந்து பார்த்தால் தான் தெரியும். பாவம் சும்மா ஏதாவது படத்தில் வசனம் வைத்தால் மக்கள் மனதில் கொண்டு போய் சேர்த்து விடலாம் என்று நினைப்பவர்கள் இன்று ஏராளமாக இருக்கிறார்கள் என்று பார்க்கும்பொழுது அவர்களுக்கு கற்பனை திறன் தீர்ந்து போய் விட்டதோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.2. ஏன் இப்பொழுது எல்லோருமே சாப்ட்வேர் என்ஜினியர்களை தாக்கி வசனம் எழுதுகிறார்கள் என்றால், அவர்களுக்கு அது தான் முத்து வியாபாரம், அதை வைத்து ஒருவர் பிழைக்கிறார் என்றால் அனைத்து சாப்ட்வேர் என்ஜினியர்களுக்கும் சந்தோஷம் தான், இல்லையா!3. இத்தனை எல்லாம் நெகட்டிவாக சாப்ட்வேர் என்ஜினியர்களை படத்தில் காண்பிக்கிறார்கள், அவர்களுடைய வேலை பழுவையோ, அவர்களுக்கு இந்த வெலையினால் ஏற்படும் உடல், மனம் மற்றும் மருத்துவ ரீதியான தொந்தரவுகளை இது வரை எந்த படத்திலும் காண்பித்ததில்லை. ஏன் அதை எல்லாம் காண்பிக்கலாம் அல்லவா? அட அவங்களுக்கு அதெல்லாம் கண் தெரியாது… எப்படி தெரியும்? 4. பொதுவாகவே சாப்ட்வேர் என்ஜினியர்கள் தான் வீடு மற்றும் நிலம் விலை ஏறுவதற்கு காரணம் என்று இன்று குற்றம் சாட்டுகிறார்கள், அது சரி இதுக்கு முன்னால விலை ஏறவேயில்லையா? அப்பவும் சரி இப்பவும் சரி பல தொழிலதிபர்கள் தான் தாருமாராக விலையை அதிகமாகக் கொடுத்து வாங்கி குவிக்கிறார்கள் என்பது தெரிந்து இருந்தும் இவர்கள் இப்படி யாரோ சாப்ட்வேர் ஆளுகளை தான் காரணம் காட்டுவது அவர்களது புதுமையை தான் காட்டுகறது..!!இதைப் பற்றி விவரிக்க இது பத்தாது…. எழுதிக்கொண்டே போகலாம்… தங்களுடைய வெளிப்படையான கருத்துக்களுக்கு நன்றி.
LikeLike
நல்லாதான் இருக்குது கேள்வி, ஆனாலும் நீங்க ரொம்ப பாஸ்ட்டு.!
LikeLike