கம்ப்யூட்டர்களே இல்லையென்றால் என்ன செய்துகொண்டிருப்பாய்?

கம்ப்யூட்டர்களே இல்லையென்றால் என்ன செய்துகொண்டிருப்பாய் என்றொரு 50% மொக்க 50% interesting கேள்வியை என் நண்பர் ஒருவர் என்னிடம் இன்று மதிய சாப்பாட்டின் போது கேட்டார். அவர் கேட்டதற்கும் இப்போ ஆங்காங்கே கமுக்கமாக வாரி வழங்கப்பட்டுக்கொண்டிருக்கும் pink slipகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! சும்மா just like that கேட்டார்.

நான் கம்ப்யூட்டர் பார்த்த பொழுது பதினோறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.(ஐயையோ ஸ்கூல் ஸ்டோரியா?!) நான் மேத்ஸ் பயாலஜி மேஜர் என்பதால் கம்ப்யூட்டர் எனக்கு பாடம் இல்லை. மேலும் மேத்ஸில் வரும் ஒரு சாப்ட்டர் கம்ப்யூட்டருக்கே என் தலை சுற்றும். என்னங்கடா ஒரே ஒன்னு ஜீரோவ வெச்சு ஏதேதோ வித்த காட்டுறாய்ங்கன்னு நினைப்பேன். அப்பொழுதெல்லாம் பின்நாட்களின் இந்த கம்ப்யூட்டர்களை கட்டிக்கொண்டுதான் அழப்போகிறேன் என்று என் மரமண்டைக்கு தெரிந்திருக்கவில்லை. டாக்டர் ஆகப்போகிறேன் என்று தான் சத்தியமாக நினைத்துக்கொண்டிருந்தேன். என் நண்பன் ஒருவனை டாக்டர் என்று தான் என் பள்ளி நண்பர்கள் சிலர் அழைப்பார்கள். அப்படி அழைத்த சிலர் டாக்டர் ஆகிவிட்டார்கள் என்பது வேறு விசயம்! அவன் பிற்காலத்தில் அண்ணாயுனிவர்சிட்டியில் எலக்ட்ரானிக்ஸ் முடித்துவிட்டு இப்பொழுது அதற்கும் சம்பந்தமில்லாத மானேஜ்மெண்ட் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பது வேறு ஒரு விசயம்.

பதினோறாம் வகுப்பில் எங்களுக்கு கம்ப்யூட்டர் முன்னால் உட்காருவதற்கு கொடுக்கப்பட்ட நேரம் வெறும் ஐந்து நிமிஷம். அதுவும் ப்ரிண்ஸ் ஆப் பெர்சியா தாஸ் கேம் விளையாடினோம். விளையாடினேன். அதற்கப்புறம் எனக்கும் கணினிக்குமான உறவு நயந்தாரா சிம்புவின் உறவைப்போல ஆகிவிட்டது; ஓப்பன் விண்டோ சிஸ்டத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிப்பை நான் தேர்ந்தெடுக்கும் வரை.

இப்பொழுதெல்லாம் கம்ப்யூட்டர் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. கம்ப்யூட்டரை விட்டுத்தள்ளுங்கள் இன்டர்நெட் இல்லையென்றால்?

ஒரு வேளை கம்ப்யூட்டர் என்கிற ஒன்றே இல்லாமல் இருந்திருந்தால்?

1. பல்டாக்டர்: டாக்டர் கனவுகளோடு இருந்தாலும் எனக்கு டாக்டர் சீட் கிடைக்கவில்லை, மயிரிலையில் டாக்டர் ·ப்ர·பஷன் என்னிடமிருந்து தப்பியது. இன்று உயிரோடிருக்கும் பல பேஷண்டுகளும் தான். ஆனால் எனக்கு பிடிஎஸ் கிடைத்தது. பல் டாக்டர். ஹோமியோபதி கிடைத்தது. அப்பாவுக்கு ஒரே குழப்பம். எனக்கு குழப்பமில்லை. பல் டாக்டர் படிக்கவும் ஹோமியோபதி படிக்கவும் எனக்கு விருப்பமில்லை. அப்பா அருகிலிருந்த ஒரு டாக்டரிடம் ஆலோசனை கேட்டார். எங்க அப்பா கேட்ட கேள்வி: பல் டாக்டருக்கு படித்துவிட்டு, மாஸ்டர் டிகிரி படிப்பதற்கு இருதய ஸ்பெஷலிஸ்ட் தேர்வு செய்ய முடியுமா என்பதே? Apparantly, முடியாது என்பது பின் நாளில் தெரிந்தது. ஏனென்றால் பல் என்பது வேறு; இருதயம் என்பது வேறு இல்லியா? பல் பிடுங்கும் பொழுது பிரச்சனை ஆகிவிட்டால் பல்லோடு போச்சு! ஒருவேளை நான் கம்ப்யூட்டர் படிக்கவில்லை என்றால், பல் டாக்டராக ஆகியிருந்திருப்பேன். ஹொமியோபதி மருத்துவராக ஆகியிருக்க வாய்ப்பில்லை. ஹோமியோபதி மருத்துவ ரீடர்ஸ் மன்னிக்கவும். Somehow it didnt look interesting.

2. வாத்தியார்: எனக்கு வாத்தியாராக வேண்டும் என்கிற ஆசையும் நிறைய உண்டு. இப்பொழுது கூட. I think the reason is my father, oppurtunity to interact with kids and you’ll get a lot of free time. புத்தகங்கள் படிப்பதற்கு உபயோகிக்கலாம். மற்றொரு காரணம் : You can be a hero among your students. காமெடியனாகத்தான் நிறைய வாத்தியார்களை மாணவர்கள் வைத்திருக்கிறார்கள் என்றாலும், வெகு சில வாத்தியார்களை தங்கள் மானசீக mentorஆக வைத்திருக்கும் மாணவர்கள் நிறைய பேர் உண்டு. என் அப்பாவை அவரது மாணவர்கள் வைத்திருந்ததை போல. ஏன் எனக்கே அவ்வாறான mentors உண்டு! அதனால் வாத்தியாரக ஆகி இருப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம். அப்படியே ஒரு கவர்மெண்ட் வாத்தியாராக ஆகியிருந்தால், பொங்கலுக்கு பம்ப்பர் பரிசாவது கிடைத்திருக்கும். இன்கிரிமெண்டல் எல்லாம் ஜெட் வேகத்திற்கு உயர்ந்திருக்கிறதாமே?

3. அரசியல்வாதி: நான் ஸ்கூல் படிக்கும் பொழுது என்னுடைய ஹிஸ்டரி மேடம் என்னை பிற்காலத்தில் நீ ஒரு அரசியல்வாதியாகத்தான் வருவாய் என்பார். நிறையதடவை அவ்வாறு கூறியிருக்கிறார். சீரியஸாக. நான் மேடை நாடகங்கள் நடித்ததற்காக இருக்கலாம். இயற்கையாகவே இருக்கும அதிகப்பிரசங்கித்தனமாக இருக்கலாம். இல்லை ஓவர் வாயாகக்கூட இருக்கலாம். ஆனால் அவர் அப்படி தான் சொன்னார். எனக்கு அரசியல் மீது நாட்டம் இருக்கிறதா? கொஞ்சம் இருக்கிறது என்பது உண்மைதான்; அனால் கிடைக்கக்கூடிய அடி உதை குத்துகளை நினைத்தால்; எஸ்கேப். ஒருவேளை கம்ப்யூட்டர் படிக்கவில்லையென்றால், ஊரிலே வாத்தியாராக ஆகி, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அரசியல்வாதியாக ஆகியிருக்கக்கூடும். யார் கண்டார்கள்? எங்க ஊர் பெரிய அண்ணனிடம் தர்ம அடிகள் கூட வாங்கியிருக்க வாய்ப்புண்டு.

4. எழுத்து: நான் பள்ளிக்கூடம் படிக்கும் பொழுது எனது எட்டாம் வகுப்பில் என் அப்பா எழுதிக்கொடுத்த ஒரு நாடகத்திற்கு க்ளைமேக்ஸ் மாற்றி அமைத்தது தான் எனது முதல் எழுத்துப் பணி. அதற்கப்புறம் ஒரு நாடகம் எழுதியிருக்கிறேன். என அப்பாவின் நாடகத்தை தழுவி. சில பல கவிதைகள் எழுதி பலரை படுத்தியிருக்கிறேன். பிறகு என்ஜினியரிங் காலேஜ் வந்த பிறகு இவற்றையெல்லாம் சில வருடங்கள் மறந்தே போனேன். பிறகு சென்னைக்கு வேளைக்கு வந்த பிறகு மீண்டும் தற்செயலாக நடந்த ஒரு சம்பவத்தை வைத்து “அறை நண்பன்” என்கிற கதை ஒன்றை எழுதினேன். த்ரில்லர். என் நண்பர்கள் அனைவருக்கும் அது பிடித்திருந்தது. பாராட்டினர். ஆனால் அதுதான் அவர்களுக்கு வினையாகிவிட்டது. ஆடினவன் காலும் எழுதினவன் பேனாவும் (கீ போர்டும்) சும்மா இருக்காதுன்னு சொல்லுவாங்க, அது உண்மைதான். கூட சேர்த்து எழுதினவன பாராட்டின நண்பனும் சும்மா இருக்கமுடியாதுன்னு சேத்துக்கோங்க. அடுத்தடுத்து எழுதி காமிச்சு அவன வாசிக்கவெச்சு, அவன ஊர விட்டே ஒட வெப்போமில்ல. நல்லாயிருக்குடா மச்சான் எனக்கு வயிறு கலக்குற மாதிரி இருக்கு, கொஞ்சம் போயிட்டுவரவான்னு அவன் எஸ்கேப் ஆக பாத்தாக்கூட விட மாட்டோமில்ல, என்ன பிடிச்சது? எந்த இடத்தில பிடிச்சதுனு கேள்விகள் கேப்போமில்ல. பிறகு சென்னையில் இருக்கும் போதே: நிறைய சிறுகதைகள், ஒரு நாவல் (நசீர்), காந்தம் என்று நிறைய எழுதிவிட்டேன். ஒரு வேளை முழுநேர பாக்கெட் நாவல் எழுத்தாளனாக இருந்திருக்கக்கூடும். யார் கண்டா தாடி கீடியெல்லாம் வெச்சுக்கிட்டு “எழுத்து பித்தர் முத்து” ன்னு கூட ஆகியிருந்திருப்பேன்.

நீங்கள் கம்ப்யூட்டர் இல்லாவிடில் என்ன செய்துகொண்டிருப்பீர்கள்?

இதை தொட‌ர‌வேண்டும் என்றும் இதுக்கெல்லாம் ச‌ரியான‌ ஆள் அவ‌ர் தான் என்றும் என‌க்கு ந‌ம்ப‌த்த‌குந்த‌ வ‌ட்டார‌ங்க‌ள் தெரிவித்த‌தாலும் நான் ப்ர‌காஷை அழைக்கிறேன்.

மேலும்:

பாஸ்ட‌ன் பாலா
பொன்ஸ்
ல‌க்ஷ்ம‌ண்
பினாத்தல்கள் (I loved Thirumangalam Millionaire)
siva

புது வலைப‌திவ‌ர்:
செந்தில் (சூர்யா ப‌திவுக‌ள்)
Bala

11 thoughts on “கம்ப்யூட்டர்களே இல்லையென்றால் என்ன செய்துகொண்டிருப்பாய்?

  1. நல்ல பதிவு…நல்ல கேள்வி…//நீங்கள் கம்ப்யூட்டர் இல்லாவிடில் என்ன செய்துகொண்டிருப்பீர்கள்?//ம்ம்ம்… யோசிக்க நல்ல கேள்விதான் இது..!!!

    Like

  2. எழுத்து பித்த‌ர் முத்து அவ‌ர்க‌ளே, நன்றாக இருந்த‌து, மீண்டும் ஒரு ந‌கைசுவை விருந்து

    Like

  3. முத்து,அழைப்புக்கும் திருமங்கலம் மில்லியனரை ரசித்ததற்கும் நன்றி நன்றி நன்றி!ஒரு சின்ன பிரச்சினை :-)கம்ப்யூட்டர் வராமல் இருந்திருந்தால் நான் என்ன செய்திருப்பேன்? மேபி, இப்போது செய்வதையேதான் செய்துகொண்டு இருப்பேன் 🙂 ஆம். நான் இயந்திரவியலில், கணினியால் அதிகம் பாதிக்கப்படாத அங்கத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன் 🙂 எனவே, இந்த அழைப்பை பொட்டி தட்டும் குலத்தவர்களில் ஒருவருக்கு ரீ டைவர்ட் செய்துவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் நன்றி.

    Like

  4. பதிவு அருமை, ஆனால் தொழில் ரீதியாக இல்லாமல் பொழுது போக்கு பற்றி பதிவு இருக்கும் என நினைத்தேன்.கம்ப்யுட்டர் இல்லாமல் விடுமுறை நாட்கள், தினசரி மாலை பொழுது எல்லாம் சமாளிப்பது எப்படி. எனக்கு மிக கடினம்.சினிமா, டி வி , கதை புத்தகங்கள், கிரிக்கெட் இவற்றின் மீது ஈடுபாடு குறைந்த நிலையில் எனக்கு இருக்கும் ஒரே பொழுது போக்கு சாதனம் கம்ப்யுட்டர், இணைய அரட்டை, வலை பதிவு, பின்னூட்டம்.குப்பன்_யாஹூ

    Like

  5. முத்து, அழைப்புகு நன்றி…. ரெண்டொரு நாளிலே போட்டுவிடுகிறேன்.

    Like

  6. நிமல்: நன்றி! நீங்களும் எழுதுங்க நிமல்! வெங்கட்ரமணன்: நீங்க சொன்னமாதிரியே செஞ்சுட்டேன்!பொன்ஸ்: அவசியம் எழுதுங்க!அனு: நல்லாயிருந்துச்சா?

    Like

  7. சுரேஷ்: நெனச்சேன் சுரேஷ். ஆனாலும் உங்கள் திருமங்கலம் மில்லியனர் ஏற்படுத்திய தாக்கம் அதை overrule செய்துவிட்டது. என்னுடைய நண்பன் ஒருவனுக்கு fwd செய்துவிட்டேன்.குப்பன் யாஹ¥: இன்டர்நெட் இன்றி ஒரு அனுவும் அசையாது என்பது பலரது வாழ்க்கையில் உண்மைதான். நினைத்துப்பாருங்கள் பாஸ்டன் பாலாவெல்லாம் என்ன செய்வார், பாவம்!ப்ரகாஷ்: ப்ரகாஷ், அழைப்பை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி! கண்டிப்பாக எழுதுங்க!

    Like

  8. //டாக்டர் ஆகப்போகிறேன் என்று தான் சத்தியமாக நினைத்துக்கொண்டிருந்தேன்.//நியாபகம் இருக்கிறது!!!//என் நண்பன் ஒருவனை டாக்டர் என்று தான் என் பள்ளி நண்பர்கள் சிலர் அழைப்பார்கள். அப்படி அழைத்த சிலர் டாக்டர் ஆகிவிட்டார்கள் என்பது வேறு விசயம்!//நண்பனா, தோழியா??? அவனா அவளா…????//அவன் பிற்காலத்தில் அண்ணாயுனிவர்சிட்டியில் எலக்ட்ரானிக்ஸ் முடித்துவிட்டு இப்பொழுது அதற்கும் சம்பந்தமில்லாத மானேஜ்மெண்ட் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பது வேறு ஒரு விசயம்.//யாரப்பா முத்து அது????//பதினோறாம் வகுப்பில் எங்களுக்கு கம்ப்யூட்டர் முன்னால் உட்காருவதற்கு கொடுக்கப்பட்ட நேரம் வெறும் ஐந்து நிமிஷம். அதுவும் ப்ரிண்ஸ் ஆப் பெர்சியா தாஸ் கேம் விளையாடினோம். விளையாடினேன்.//அது பிரிண்ஸ் ஆப் பெர்சியா அல்ல Dangerous Dave என்று நினைக்கிறேன்.//டாக்டர் கனவுகளோடு இருந்தாலும் எனக்கு டாக்டர் சீட் கிடைக்கவில்லை, மயிரிலையில் டாக்டர் ·ப்ர·பஷன் என்னிடமிருந்து தப்பியது. இன்று உயிரோடிருக்கும் பல பேஷண்டுகளும் தான். ஆனால் எனக்கு பிடிஎஸ் கிடைத்தது. பல் டாக்டர். ஹோமியோபதி கிடைத்தது//ம்… நம் மக்கள் பலருக்கும், நான் உள்பட, BDS மற்றும் ஹோமியோபதி கிடைத்தது நினைவிருக்கிறது!!//என அப்பாவின் நாடகத்தை தழுவி. சில பல கவிதைகள் எழுதி பலரை படுத்தியிருக்கிறேன்.//ஒத்துக்கொள்ளப்பட வேண்டிய விஷயம்.உனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக கேள்விப்பட்டேன்… வாழ்துக்கள்!!!

    Like

Leave a comment