என் உயிர்த் தோழன் (Full)

1

“என்னாச்சு ரம்யா? ஏன் ரொம்ப நாளா ஸ்கூலுக்கு வரல?”
“ம்ம்..உடம்புக்கு முடியலடா”
“ஜான்டீஸா”
“ம்ம்ம்ம்”
“இப்போ சரியாப்போச்சா”
“ம்ம்”
“ஏன் சரியாவே பேசமாட்டேன்ற?”
“ஒன்னுமில்லடா” “இந்தச் செயின் நல்லாயிருக்கா?”
“சூப்பரா இருக்கு. புதுசா?”
“ம்ம் அவ்வா வாங்கிக் கொடுத்தாங்க”
“ஜான்டீஸ் வந்ததுக்கா?”

சித்தார்த் கேட்டப்போ எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல. ஒரு நாள் அவனுக்கு புரியும்.

“இன்னிக்கு ரிகர்சல் எப்படி இருந்தது?”
“சூப்பரா இருந்தது”
“நான் நடிச்சது பிடிச்சிருந்தா?”
“நீ நடிச்சத விட, அந்த மைக் கீழ விழுந்தப்போ நீ கொடுத்த ரியாக்ஷன் நல்லா இருந்தது”

நல்லா நடிக்கிறான். நல்லா பேசறான். நல்லா படிக்கிறான். எங்க அப்பாவுக்கு இவன ரொம்ப பிடிக்கும். என்கிட்ட நிறைய தடவை அவன பத்தி பேசியிருக்கிறார், ஸ்கூலுக்கு வரும் பொழுதெல்லாம் இவன் கிட்ட பேசாம போனதேயில்ல.அவன் கைய பிடிச்சுக்கிட்டு நின்னு பேசிட்டிருப்பார். அவனுடைய நண்பர்கள் என் அப்பா வருவதைப் பார்த்தவுடன் “டேய் உன்னோட மாமா வர்றாருடா” என்று என் காதுபடவே கிண்டல் செய்கிறார்கள். சித்தார்த் ரொம்ப நல்லவன் இதையெல்லாம் அவன் காதில் போட்டுக்கொண்டதைப் போலவே தெரியவில்லை.

“அப்பா”
….
“அப்பா”
“என்னடா?”
“இனிமே ஸ்கூலுக்கு வரும்போது சும்மா சும்மா சித்தார்த்தோட பேசாதீங்கப்பா”
“ஏன்?”

“பசங்க கிண்டல் பண்றாங்களா?”

“சரி. இனிமே தேவைன்னா மட்டும் பேசறேன்”

ஆனால் இன்றும் அப்பா பள்ளிக்கு வந்திருந்தபோது சித்தார்த்திடம் பேசியதைப் பார்த்த செல்வா வேண்டுமென்றே நான் க்ளாஸ¤க்கு வரும்பொழுது, சித்தார்த்தைப் பார்த்து “டேய் சித்தார்த் மாமா வந்திருந்தாரே. என்ன சொன்னார்?” என்று கேட்டுத்தொலைத்தான். இடியட். நான் தான் க்ளாஸ் லீடர் என்றாலும், கிட்டத்தட்ட அவன் தான் க்ளாஸ் லீடர். நான் உப்புக்குச்சப்பானி. ப்ரிண்ஸி எதுன்னாலும் ரெண்டு பேரையும் சேத்துதான் கூப்பிடுவாங்க.

“மேடம்”
“என்னாச்சு ஆயா?”
“ப்ரின்ஸி மேடம் சித்தார்த்தையும் ரம்யாவையும் கூட்டிட்டு வரச்சொன்னாங்க”
..
“சித்தார்த், ரம்யா போயிட்டுவாங்க”
..

நான் தான் ஏதும் பேசவில்லை என்றால், அவனாவது ஏதாவது பேசியிருக்கலாம். எங்கள் க்ளாஸிலிருந்து பிரின்ஸி ரூம் ரொம்ப தூரம். அட்லீஸ்ட் இன்னைக்கு அப்படி தோன்றியதா? இரண்டு பேரும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை. அவன் இன்றைக்கு ஷ¥ போடவில்லை. வெறும் செறுப்பு தான் போட்டிருந்தான். டை கட்டவில்லை. இன் செய்யவில்லை. ஏன் இப்படி இருக்கிறான்? அதுவும் இன்று ப்ரின்ஸி ரூமுக்கு வேற போனோம். அது சரி. இவன் தான் ஸ்கூலுக்கு செல்லப்பிள்ளை ஆச்சே. எல்.கே.ஜில இருந்து ஒரே ஸ்கூல்ல படிச்சா இப்படித்தான் ஆகும். பெரிய தாதான்னு நினைப்பு. ஆனா ரொம்ப திமிர். ப்ரின்ஸி இந்தமுறை குழந்தைகள் தினவிழாவை நாங்கள் தான் (+2) நடத்தவேண்டும் என்று சொல்லிவிட்டார். திமிர் பிடிச்சவன் போகும் போதும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. வரும் பொழுதும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நான் அவனை திரும்பிக்கூட பார்க்கவில்லை. அவனும் என்னை திரும்பிப் பார்க்கவில்லை.

“ரம்யா. நாங்க இந்தப்பாட்டு செலக்ட் செஞ்சிருக்கோம்”
வெல்வெட்டா வெல்வெட்டா..
மன்மதன் கல்வெட்டா..
“ச்சீ என்ன பாட்டுடி இது? இது ·பிப்த் பசங்களுக்கா?”
“அப்ரூவ் பண்றியா இல்லியா?”
“நான் அப்ரூவ் பண்றனா இல்லியாங்கறது வேற விசயம். சித்தார்த் அப்ரூவ் பண்ணனும்”
“நீ போய் அவன் கிட்ட கேளு.. சரின்னுடுவான்”
“என்ன விளையாடுறியா? இந்த பாட்ட நான் அவன் கிட்ட போட்டு காட்டனுமா?”
“யெஸ்”
“நெவர்”
“லைன்ஸ் தான் அப்படி இருக்கும். ஆனா டான்ஸ¤க்கு இந்த பாட்டு கரெக்ட்டா இருக்கும். ஸீ த பீட்ஸ்..”
..
“என்னவோ சொல்ற..சரி டேப் ரிக்கார்டர கொடு..நீயும் கூட வா..”

நான் போய் அவன் கிட்ட இந்தப்பாட்ட போட்டு காண்பிச்சேன். அவன் ஒன்னுமே சொல்லல. தூக்கிட்டு ஓடிறுன்னு மட்டும் தான் சொன்னான். ஷீபா ஏதோ சொல்ல ஆரம்பிச்சா.. வேற பாட்டு செலக்ட் பண்ணுங்க ப்ளீஸ்ன்னு டக்குன்னு சொல்லிட்டான். அவ வாய மூடிட்டு வந்தா. நாங்க திரும்பி நடந்து வரும் போது கோபால் அவன் கிட்ட ஏதோ சொல்லிருக்கான். அவன் முறைச்சானாம். ஷீபா தான் கேட்க சொன்னான்னா எனக்கு எங்க போச்சு அறிவு. முண்டம். கண்டிப்பா சித்தார்த் ஒத்துக்கமாட்டான்னு தெரியும். பட் ஐ ஜஸ்ட் வாண்டட் டு நோ வாட் ஹீ திங்க்ஸ்.

“எக்ஸ்க்யூஸ்மி மிஸ்”
“யெஸ் கம் இன் சித்தார்த்”



“என்னாச்சு சித்தார்த்”
“நத்திங் மிஸ்”

..
“என்னாச்சுடீ உன் ஆளுக்கு”
“என் ஆளா? உதைப்பேன்”
“என்னம்மோ எல்லாரும் கீழ குணிஞ்சு குணிஞ்சு பாக்குறாங்க?”
“ஆமா..என்னாச்சுடி?”

அவன் பக்கத்து ஊரிலிருந்து பஸ்ஸில் பள்ளிக்கு வருபவன். இன்று கொஞ்சம் லேட். இன்று என்ன இன்று எப்போதுமே அவன் லேட் தான். ப்ரிண்ஸி சித் லேட்டா வந்தா மட்டும் கண்டுகொள்ளாது. அவனை மட்டும் போகச்சொல்லிடும். பணிரெண்டாவது படிக்கிற எருமைமாடு லெட்டா வந்தா போகச்சொல்றதா? ஏன்னா அவன் ஸ்கூலோட ஹீரோ. இன்னிக்கு பஸ்ஸ¤ல ரன்னிங்க்ல இறங்கிருக்கான். கீழ விழுந்துட்டான். ஸ்கூல்ல ஹீரோன்னா, விழுந்தா ரத்தம் வராதா? முழங்கால் எல்லாம் ரத்தம். மிஸ் அங்கிட்டும் இங்கிட்டும் ஓடுது. எல்லோரும் என்ன என்னன்னு பாத்தாங்க. நான் கண்டுக்கிடல. எனக்கென்ன வந்தது?

“சித்தார்த் என்ன ஆச்சு?”
“நத்திங். ஐ யாம் ஓகே ரம்யா”
“கால்ல காயமா?. பஸ்ல விழுந்துட்டியா?”
“ம்ம்..சும்மா ஒன்னுமில்ல..”


(கோபால் சித்தார்த்தின் காதில் ஏதோ சொன்னான்)
“ஏய் ஏன் அழற?”
“உன் மூஞ்சி. நான் எங்க அழறேன்” “லஞ்ச் கொட்டிடுச்சாமே”
“ம்ம்”
“எங்க கூட வந்து சாப்பிடேன்” (மெதுவாக மூக்கை உறிஞ்சுகிறாள்)
“நீ தயிர் சாதமும் பொட்டுகடலையும் தான கொண்டு வந்திருப்ப?”
“வேணாட்டிப்போ”
..

ஆனா இன்னிக்கு அம்மா மோர் குழம்பு கொடுத்திருந்தாங்க. பொட்டுக்கடலை எப்பொழுதும் கொண்டுவருவேன் என்பது உண்மைதான் என்றாலும் அது எனக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் தான். சாப்பாட்டுக்கு போய் யாராவது பொட்டுக்கடலையை தொட்டுக்கொள்வார்களா? இடியட். ஆனா நான் தினமும் பொட்டுக்கடலை கொண்டுவருகிறேன் என்பது அவனுக்கு எப்படி தெரியும்? நான் கூப்பிட்டப்போ வராதவன் சௌமியா கூப்பிட்டப்போ சாப்பிட வந்தான். நண்பர்களையும் அழைத்து வந்திருந்தான். எங்க பதினாலு வருட பழக்கத்தில் இன்றைக்குத்தான் கேர்ள்ஸ¤ம் பாய்ஸ¤ம் ஒன்றாக க்ளாஸில உட்கார்ந்து சாப்பிட்டோம். எல்லோரிடமும் கொஞ்சம் கொஞ்சம் வாங்கிக்கொண்டான். என்னுடைய மோர் குழம்பை வாங்கி சாப்பிடவேயில்லை. நானும் கொடுக்கவில்லை. ஏன் சாப்பிடும் பொழுது ஆட்காட்டி விரலை தனியாக நீட்டிக்கொள்கிறான்? ஸ்டைல்ன்னு நினைப்பு! தடாலடியாக என்னுடைய ஸ்நாக்ஸ் பாக்ஸை அவனே எடுத்து திறந்துவிட்டான். கொஞ்சம் பொட்டுக்கடலை எடுத்து சாப்பிட்டான். அந்த சிவப்பு ஸ்நாக்ஸ் பாக்ஸை ரொம்ப நேரம் கைகளில் மாற்றி மாற்றி வைத்துக்கொண்டிருந்தான். கைகளில் நீள நீளமாக நகம். வெட்டுவானா மாட்டானா? சோடாபுட்டி. சோடாபுட்டி.

“ரம்யா”
“ஆங் என்ன?”
“எங்களோட நாடகத்தில ஒரு நர்ஸ் வேஷம் இருக்கு. நீ நடிக்கிறியா?”
“என்னது நானா?”
“நடிக்கனும்.”
“ஏய் ஸ்டுபிட்டா நீ? இத்தன வருஷத்தில ஒரு நாளாவது நான் ஸ்டேஜ்க்கு பக்கமாவது போயிருக்கனா?”
“போயிருக்க. என்னோட யூகேஜில டான்ஸ் ஆடுற மாதிரி போட்டோ இருக்கு. பாக்குறியா?”
“இடியட் அது யூகேஜில. இப்போ என்னால முடியாது”
“எப்போ பாத்தாலும் படிச்சுட்டுதான இருக்க. கொஞ்ச நேரம் ரிலாக்ஸ்டா வந்து சும்மா நடியேன்”
“முடியாது”
“உன்ன நான் நடிக்க கூட்டிட்டு வருவேன்னு சொல்லிருக்கேன்”
“நீ சொன்னா? நோ.”

அவன் அப்படி மூஞ்ச வெச்சுக்கிறத பாக்க சகிக்கல. ரொம்ப பாவமா இருந்துச்சு. ஆனா இது நாள் வரைக்கும் நான் டான்ஸ்க்காகவோ ட்ராமாவுக்காகவோ ஸ்டேஜ் ஏறினதே இல்லை. எனக்கு ரொம்ப பயம். ஒரு தடவை இங்கிலீஸ் மேம் ரொம்ப வற்புறுத்தி கூப்பிட்டும் வரமுடியாதுன்னுட்டேன். இன்னைக்கு சித் கூப்பிட்டதும் என்ன செய்யறதுன்னு தெரியல. ஆனா இவன் இப்படி என்கிட்ட கேட்டதேயில்ல. பயமாகவும் இருக்கு. என்னோட பெஸ்ட் ப்ரண்ட்டோட ரிக்வஸ்ட தட்டவும் முடியல.

“ஹேய் ரம்யா வாட் எ சர்ப்ரைஸ்”
“சும்மா வந்தேன்”
சித்தார்த் ஓடி வந்தான்.
“ஹே ரம்யா தேங்க்ஸ்.”
தமிழம்மாவிடம் திரும்பி “அம்மா அந்த நர்ஸ் வேஷம்” என்றான்

தமிழம்மா எனக்கு கொஞ்சம் பெரிய டயலாக் கொடுத்தாங்க. கோர்ட் சீன். நான் நர்ஸாக வந்து சித்தார்த்துக்கு ஆதரவாக சாட்சி சொல்லவேண்டும். இது கொஞ்சம் பெரிய டயலாக். சித்தார்த் பக்கத்திலிருந்தே சொல்லிக்கொடுத்தான். என்னால் எவ்வளவு பெரிய கட்டுரையையும் எளிதாக மனப்பாடம் செய்து விட முடியும். ஆனால் இந்த நாடகம். வாசிக்கும் பொழுது நன்றாக சித்தார்த்திடம் சொல்லிவிடுகிறேன். ஆனால் ரிகர்சல்லுன்னு வர்றப்போத்தான் உதறுது.

“கனம்..க்க்” “க்க்கோர்ர்ட்டார் அவர்களே”
“ரம்யா பயப்படாம சொல்லு”
“எதிரே நிற்கும் ப்ராக்கியூஸ்டர்..”
சிரிப்பு.
“ரம்யா ஒரு தடவை நல்லா டயலாக்க பாரு. ஏன் கை நடுங்குது உனக்கு”

என்னால முடியல. ஒரே ஓட்டமா ஓடி வந்துட்டேன். சித்தார்த் பின்னால ரம்யா ரம்யான்னு கத்தறது கேட்டது. க்ளாஸ¤க்கு வந்து ஒரே அழுகை. ஷீபாவும் வாணியும் தான் தேற்றினார்கள். சித்தார்த் அன்றைக்கு க்ளாசுக்கு வரவேயில்லை. அவன் மேல எனக்கு கோபம் கோபமா வந்தது. எனக்கு ஒன்னும் கோபம் வரலை. நான் ஏன் கோபப்படனும்? அவன் கூப்பிட்டதுக்கு ட்ரை பண்ணினேன். அவ்ளோதான்.

“கௌரி தட் வாஸ் ·பெண்டாஸ்டிக்”
“தாங்க்ஸ்”
“டான்ஸ் ரொம்ப ரொம்ப நல்லா இருந்துச்சு. இல்ல ரம்யா”
“ம்ம்”
“உனக்கு க்ளாஸிக் தான் வரும்னு நினைச்சேன். வெஸ்டர்னும் பிச்சு உதறுர”
கௌரி வழிகிறாள்.
“உன்னொட ஸ்டெப்ஸ் எல்லாத்துலயும் ஒரு நளினம் இருந்துச்சு. இல்ல ரம்யா?”
“ம்ம்”
“சித்தார்த் ஷேல் வி மூவ் டு நெக்ஸ்ட் க்ளாஸ்”

இருக்கும். இருக்கும். அது என்ன இல்ல ரம்யான்னு என்னைய கேக்குறது? விழாவுக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கிறது. இன்னிக்கு மத்தவங்க ப்ரோகிராம்ஸ் எல்லாத்தையும் பென்ச்மார்க் பண்ணனும்னு நான் தான் சொன்னேன். அது தான் தப்பா போச்சு. இவன் என்னடான்னா போற வர்ற இடத்துலயெல்லாம் வழியறான். நல்லா இருந்துச்சுன்னா நல்லாயிருந்துச்சுன்னு சொல்லவேண்டியதுதான. அது என்ன நளினமா இருந்துச்சுன்னு வழியல் வேண்டிக்கிடக்கு? சரியான வழிஞ்சான் கோஷ்ட்டி. நானும் அவனும் பேசிக்கிட்டே நடக்கிறத பாத்த செல்வா அங்கிருந்து கத்தினான்: சித்தார்த் கொடுத்துவெச்சவண்டா நீ. இன்னிக்கு சித்தார்த் ரொம்ப சிரிச்சான். வழிஞ்சான். லூசு. அவன் சிரிச்சா அழகாயிருக்கும். ஆனா சிடுமூஞ்சி. சிரிக்கவே சிரிக்காது.

“என்னடி இன்னும் சித்தார்த்த காணோம்?”
“வந்திருவான்”


“செல்வா. சித்தார்த் எப்போ வருவான்?”
“தெரியல ரம்யா. வந்திருக்கனும். நேத்து டெகரேட் பண்ணிட்டு லேட்டாத்தான போனான். வந்திருவான்”
“ப்ரிண்ஸி எப்போ ப்ரோகிராம் ஸ்டார்ட் பண்றதுன்னு கேக்கறாங்க”
“ஸ்டார்ட் பண்ணலாமே!”

“சித்தார்த் வரட்டும் மேடம். வந்திருவான்”

(தொடரும்)

2

அவன் ரொம்ப நேரம் வரலைன்னவுடனே எனக்கு அழுகையா வந்தது. இவ்வளவு கஷ்டப்பட்டு எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு அவன் இல்லாட்டா எப்படி? பஸ் லேட்டோ? பஸ்ல இருந்து கீழே விழுந்துட்டானோ? என் மண்டை குழம்பிக்கிட்டே இருந்துச்சு. கடைசியில் வந்தான். லூசு மாதிரி ஒரு பேண்ட் ஒரு சர்ட் போட்டுட்டு வந்தான். நான் இன்னைக்கு ரெட் சுடி போட்டிருந்தேன். முன்ன ஒரு தடவ சனிக்கிழமை ஸ்பெஷல் க்ளாஸ¤க்கு நான் போட்டுட்டு வந்திருந்தப்போ நல்லாயிருக்குன்னு சொன்னான். நேரே வந்து ப்ரோகிராம் ஸ்கெடியூல் செக் பண்ணிட்டு. ஸ்டேஜூக்கு ஏறிட்டான். ஏதோ கையில பேப்பர் வெச்சிருந்தான். எடுத்து கடகடன்னும் வாசிக்க ஆரம்பிச்சிட்டான். வரவேற்புரை. அவங்க அப்பா எழுதிக்கொடுத்திருக்கனும். இந்த லூசுக்கு இப்படியெல்லாம் எழுத தெரியாது. என் கூட அதிகமா பேசவேயில்ல. பேசும்போது கையவெச்சு மூக்க பொத்திக்கிட்டேதான் பேசினான். முதல்ல ஷீபாதான் குளிக்காம வந்திட்டா போலன்னு நினைச்சேன். அப்புறம் தான் தெரிஞ்சது அவன் மூக்குல அழகா பெரிய ஒரு பரு. சார் அதனால தான் மூக்க பொத்திக்கிட்டே பேசியிருக்கார். பர்சனாலிட்டி கொறஞ்சு போச்சுன்னா? நான் தான் சொன்னேன் : பரு இருந்தாலும் நல்லாத்தான் இருக்க. கைய எடுத்துட்டு நார்மலா பேசுன்னு. அதுக்கபுறமும் மூக்க மூடிட்டேதான் பேசினான்.

“எனக்கும் கவி அரங்கத்துக்கும் என்ன சம்பந்தம்?”
“அதெல்லாம் எனக்கு தெரியாது. நீ ஸ்டேஜுக்கு வரணும்”
“வாட்? நெவர். என்ன ஒரு தடவை அவமானப் படவெச்சது பத்தாதா?”
“நீ ஒன்னும் செய்யவேண்டாம். ஜஸ்ட் வந்து உக்காரு போதும்.”
“வேற யார் யார் வர்றா?”
“ஐ ஹேவ் ஆஸ்க்ட் ஹிந்தி ஜீ அன்ட் சயின்ஸ் மேடம்”
“லூசா நீ? உன் சாய்ஸ் எல்லாம் வித்தியாசமா இருக்கு”
“யெஸ். இங்க இருக்கிற யாருக்குமே கவிதைன்னா என்னன்னு தெரியாது. பின்ன யார கூப்பிட்டா என்ன? நான் எனக்கு பிடிச்சவங்கள கூப்படறேன். யூ ஆர் கம்மிங்”

கூப்பிட்டது மட்டுமில்லாம என்னைத்தான் நடுவில உக்காரவெச்சான். ஆனா அவன் பக்கத்தில உட்கார்ந்திருந்ததால எனக்கு ஒன்னும் தெரியல. என்னை கூப்பிட்டதுக்கு அவன் க்ளீனா காரணம் சொன்னான்: க்ளாஸ் லீடர். சரியான ஆள் தான் நம்மாளு.

(நடு ராத்திரியில எழுந்து லைட்டப்போட்டு டைரிய தேடிக்கண்டுபிடித்து. நம்மாளு என்கிற வார்த்தையை ஒன்றும் தெரியாதவாறு பேனாவை வைத்து அடிக்கிறாள். டைரியையே பார்த்துக்கொண்டிருக்கிறாள்.)

ஆனா பிடிச்சவங்களைக் கூப்பிடறேன்னு சொன்னது எனக்கு பிடிச்சிருந்தது.

“சித்தார்த்”
(மேத்ஸ் புக்கிலிருந்து நிமிர்ந்து பார்க்கிறான்)
“என்னோட ஆட்டோகிராப் புக்.”
“ஓ. ஓகே”
வாங்கி பக்கத்தில் அமர்ந்திருக்கும் சூரியாவிடம் கொடுக்கிறான். மேத்ஸ் புக்கில் மூழ்கிப்போகிறான்.
..
“சூர்யா..ஒரு நிமிஷம்..நான் என் டீட்டெய்ல்ஸ் கொஞ்சம் ·பில் பண்ணிக்கொடுக்கிறேன். ஆட்டோகிராப் புக்க கொஞ்சம் கொடேன்”
“ஓகே ரம்யா. இந்தா”

“சித்தார்த்”
(இப்போ பயாலஜி புக்கிலிருந்து நிமிர்ந்து பார்க்கிறான் சித்தார்த்)
“என்னொட ஆட்டோகிராப் புக்”
“ஓ ஓகே”


“ஹே நான் தான் முதல்ல எழுதப்போறேன்”
“யெஸ் யெஸ் சித்”

எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. ஐ வாஸ் ஹேப்பி. ஐ வான்டட் ஹிம் டு ·பில் அப் பர்ஸ்ட்.

(நடு ராத்திரியில் எழுந்து ஆட்டோகிராப் புக்கை திறந்து பார்க்கிறாள். முதல் பக்கத்தில் “Unshared is an ocean” என்று எழுதப்பட்டு சித்தார்த் என்று கிறுக்கப்பட்டிருந்தது)

“சூர்யா. கொஞ்ச நேரம் இங்க உக்காந்துக்கவா?”
“ஓ ஸ்யர் ரம்யா” சூர்யா எழுந்துகொண்டான்.
“சித்தார்த்”
“என்ன ரம்யா?”
“தமிழ் கட்டுரை போட்டிக்கு போறியா இல்லியா?”
“அதான் போகலைன்னு சொன்னேன்ல”
“போயேன் ப்ளீஸ்”
“ஐ டோன்ட் வாண்ட் டு பார்டிசிபேட். எனக்கு எக்ஸாம் தான் முக்கியம்”
“எக்ஸாக் இருக்கட்டும் நீ நல்லா பண்ணிடுவ. இது எல்லா ஸ்கூலுக்கும் நடக்கிற போட்டி.நீ போயேன் ப்ளீஸ். நீ கலந்துக்கிட்டினா நீ தான் பர்ஸ்ட் வருவ.”
“ரம்யா..”
“எனக்காக போயேன் ப்ளீஸ்”

“எனக்காக. ஐ வாண்ட் டு சீ யூ வின். ப்ளீஸ்”

சொன்னோம்ல. சொன்னோம்ல. எட்டு ஸ்கூளுக்கு நடந்த போட்டில அவன் தான் பர்ஸ்ட் வாங்கினான். ஹி இஸ் ஸ்மார்ட். தலைப்பு ஏதோ பெண்ணிய முன்னேற்றமாம். பன்னிய முன்னேற்றம்னு தலைப்பு கொடுத்திருந்தாக்கூட அவன் தான் பர்ஸ்ட் வாக்கிருப்பான். அவனுக்கு கொடுத்த பரிசை என்னிடம் கொடுத்தான். நான் வேண்டாம்னு சொன்னேன். பிறகு சந்தோஷமாக வாங்கிக்கொண்டேன். ஒரு ஷீல்ட். அவன் பெயர் போட்டது. இப்பொழுது என்னிடம் தான் இருக்கிறது. எப்பொழுதும் என்னிடம் தான் இருக்கும்.

“ரம்யா”
“ஹாய் சித்தார்த்”
“எக்ஸாம் எப்படி எழுதின?”
“குட். நல்லா எழுதினேன். நீ”
“நானும் நல்லா எழுதியிருக்கேன்” “இன்னைக்கு ·பேர்வெல் பார்ட்டிக்கு வருவேல்ல”
“கண்டிப்பா. என்ன கேள்வி இது?”
“இல்ல லேட் ஆயிடும். உங்க அவ்வா விடுவாங்களா?”
“விடுவாங்க”
“வீட்டுக்கு போயிட்டு வருவியா?”
“ம்ம். யூனி·பார்மோட இருக்கவேண்டாம்னு நினைக்கிறேன்”
“ம்ம்”
“நீ வீட்டுக்கு போறியா?’
“ஆமா.”
“பஸ்ல போகனுமே. போயிட்டு வந்திடுவியா?”
“சுதாகரும் வர்றான். ரெண்டு பேரும் எங்க வீட்டுக்கு போயிட்டு ட்ரெஸ் ச்சேஞ் பண்ணிட்டு வந்திடுவோம்”
“என்ன ட்ரெஸ் போடப்போற?”
“என்ன போடட்டும்?”
“என்ன கேட்டா?”
“சரி ஏதாவது போட்டுக்கிறேன்”
….
“ரெட் டீசர்ட் போடு. க்ரீம் பேண்ட் போடுவியே அதப் போடு”
“ம்ம் சரி தொவைச்சிருக்கான்னு தெரியல பாக்குறேன்”
..
“நான் என்ன போடட்டும்?”
“என்ன போடப்போற?”
“சொல்லேன்..”
“ரெட் சுடி போடேன்”

அவன் அப்படி பார்த்ததை நான் பார்த்ததில்லை. என்னையே பார்த்துக்கொண்டிருந்தது போல இருந்தது. நான் எப்பொழுது அவன் பக்கம் பார்த்தாலும் அவன் என் பக்கமே பார்த்துக்கொண்டிருந்தான். நான் குணிந்தே உட்கார்ந்திருந்தேன். ·பேர்வெல் பார்ட்டியில் அவனை திடீர்னு பேசச்சொல்லிட்டாங்க.

“சித்தார்த். எப்படி இப்படி பேசுற?”
“நல்லாயிருந்துச்சா?”
“ரொம்ப நல்லாயிருந்துச்சு”
“யூ லுக் குட்”
“வாட்” (ஸ்மைல். மைல்ட் வெக்கம். கீழே குனிந்துகொள்கிறாள்)
“சுடி நல்லாயிருக்கு”
“ம்ம்” (வேறு பக்கம் திரும்பிக்கொள்கிறாள்)

பார்ட்டி முடிஞ்சு ரொம்ப நேரம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். எங்கள் பிரிவைப் பற்றி யாருக்கும் கவலையிருப்பதாக தெரியவில்லை. இராவகிவிட்டது. அவனோடு தனியாக பேசவேண்டும் என்று நினைத்தேன். முடியவேயில்லை. அவன் எங்கே போனாலும் என் கண்கள் அவனையே பின் தொடர்ந்தன. சாப்பிட்டுவிட்டு கை கழுவச்செல்லும் போது அவன் வருவதைப் பார்த்தேன். மெதுவாக கை கழுவினேன். மிக மெதுவாக. என்னருகில் வந்தவன் சிரித்தான். இருட்டில் நாங்கள் இருவர் மட்டும். எனக்கு இருதயதுடிப்பு அதிகரித்தது. கைகழுவிக்கொண்டான். கர்சீப் தேடினான். இல்லை. என்னிடம் கை நீட்டினான். என் கர்சீப்பை கொடுத்தேன். முகத்தில் ஒற்றிக்கொண்டு பின் கைகளைத் துடைத்தான். மீண்டும் என்னிடம் கொடுத்தான். சிரித்தான். போகலாமா என்றான்.

“எக்ஸாம் எல்லாம் முடிச்சதுக்கப்புறம் உன்னையெல்லாம் பாக்கவேமுடியாதுல்ல”
“ஏன் சித்தார்த் எப்போவேணுன்னாலும் வீட்டுக்கு வா. நீ தான் வந்திருக்கியே”
“அது இப்போ. ஸ்கூல் முடிச்சாச்சுன்னா உன்ன பாக்கவர்றதுக்கு சரியான காரணம் நான் சொல்லனும். இல்லியா?”

அவன் பஸ்ஸ்டான்டுக்கு போகணும். என் வீடு பஸ்ஸ்டாண்ட் தாண்டித் தான் இருக்கு. அதனால நான் லக்ஷ்மி, சௌமியா, வாணி, சூர்யா எல்லாரும் நடந்தே வந்தோம். அவன் சௌமியாவுடன் தான் பேசிக்கொண்டே வந்தான். என்னிடம் பேசவேயில்லை. நானும் வாணியும்தான் பேசிக்கொண்டே வந்தோம். “ரம்யா” என்றொரு குரல் கேட்கவே திரும்பிப்பார்த்தேன். அப்பா. ஸ்கூட்டரில். நான் வண்டியில் ஏறிக்கொண்டேன். அவன் என் பார்வையில் புள்ளியாகித்தேயும்வரை நான் அவனைப் பார்த்துக்கொண்டேயிருந்தேன்.எனக்கு அழுகையாக வந்தது. ஐ க்ரைட். நாங்கள் ·பேர்வெல் பார்ட்டி முடித்துவிட்டோம். ·பேர்வெல்.

(தொடரும்)

3

“சித்தார்த்”
சித்தார்த்திடம் பேசிக்கொண்டிருந்த லக்ஷ்மி, கணேஷ் எல்லாரும் விலகிக்கொண்டார்கள்.
“ரம்யா”
“நல்ல மார்க் கிடைக்கலையா”
“ம்ம். பரவாயில்ல. 1120”
“ம்ம் நானும் தான்” “ஐ ஹோப் ஐ வில் கெட் மெடிக்கல்”
“எனக்கு கிடைக்காது”
“ம்ம்..”
..
..
“எங்க ஜாயின் பண்ணப் போற”
“தியாகராஜா. கம்ப்யூட்டர் சயின்ஸ்”


“எப்ப பார்க்கலாம்?”
“டைம் கிடைக்கும் போது”

“நான் மதுரை மெடிக்கல் காலெஜில தான் சேருவேன். சென்னை போகமாட்டேன்.”
“ம்ம். போகாத.”

“எப்ப பார்க்கலாம்?”
“எப்பவேணுமின்னாலும்”

“அழாத ரம்யா”
“ம்ம்”

..

“இங்க தான இருக்கப்போறோம். பாத்துக்கலாம்”
“ம்ம்”
“உங்க அண்ணன் வர்றார்”
“ம்ம். எப்போ பார்க்கலாம்?”
“அழாத. கண்ண துடைச்சுக்கோ. உங்க அண்ணன் வர்றார்.”

“என்ன ஆச்சு? ரெண்டு பேரும் நல்ல மார்க் தான வாங்கிருக்கீங்க?”
“இல்லண்ணா. இன்னும் கொஞ்சம் அதிகம் வாங்கிருக்கலாம்”

என் அண்ணன் என்னை அழைத்துக்கொண்டு வந்தபிறகு, யாருமற்ற தனிமையில் அந்த மரத்தினடியில் அவன் நின்றுகொண்டிருந்ததைத் தான் நான் கடைசியாகப் பார்த்தேன். அவன் உடைந்துபோயிருந்தான். ஐ வாண்டட் டு பி வித் ஹிம் ·பார் எ வைல்.

நான் மெடிக்கல்காலேஜில் சீட் கிடைத்ததை பற்றி அவனுக்கு தான் முதலில் லெட்டர் போட்டேன். congrats என்று பதில் லெட்டர் வந்தது. பிறகு புதன் கிழமை தோறும் எனக்கு அவனிடமிருந்து லெட்டர் வரும். நான் ஒவ்வொரு ஞாயிறும் அவனுக்கு லெட்டர் போஸ்ட் பண்ணுவேன். சும்மா என்ன படிச்சோம் என்ன பார்த்தோம்னு. எனக்கு சினிமா பார்க்கிற வழக்கம் இல்லையென்பதால் அவன் சொல்லுகிற சினிமா செய்திகளை சும்மா கேட்டுக்கொள்வேன். ஐ ஆம் நாட் இன்ட்ரஸ்டட் இன் சினிமா. எனக்கு சினிமா பார்ப்பது பிடிக்காது என்பது அவனுக்கு ஆச்சரியமாக இருக்கும். ஸ்கூலிலே அவன் நிறைய தடவை என்னிடம் கேட்டிருக்கிறான். உண்மையிலே நீ சினிமா பாக்கமாட்டியா இல்ல சும்மா சொல்றியான்னு. எனக்கு பாடல்களும் தெரியாது. ஆனால் எனக்கு என்ன பாடல் பிடிக்கும் என்பது அவனுக்கு தெரியும். பாடறியேன் படிப்பறியேன் தான் என்னுடைய ·பேவரிட் சாங். ஏனென்றால் அது மட்டும் தான் எனக்கு தெரியும்.

ஒன்பது மாதங்கள் ஓடி விட்டன. அவன் லெட்டர் எனக்கு கிடைக்கும் பொழுதெல்லாம் எனக்கு அவனை பார்க்கவேண்டும் போல இருக்கும். அவனுக்கு எப்படி இருக்கிறது என்று எனக்கு தெரியாது. அவனுடைய லெட்டரில் ஒரு சின்ன வெற்றிடம் கூட விடாமல் ஏதாவது எழுதியிருப்பான். எங்கள் பள்ளி ஆண்டுவிழா நெருங்கிக்கொண்டிருந்தது. பள்ளி ஆண்டுவிழாவுக்கு பழைய பாட்ச் மாணவர்களை அழைப்பார்கள். வாராவாரம் இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. இன்னும் ரெண்டு வாரம் இருக்கிறது. இன்னும் ஒரு வாரம் இருக்கிறது என்று லெட்டரில் எழுதிக்கொண்டு வந்தோம். இருவருக்குமே ரொம்ப நாள் கழித்து பார்க்கப்போகிறோம் என்கிற ஆவல் இருந்தது. ஐ வாஸ் ஹைலி எக்ஸைட்டட்.

“ஹே சித்தார்த் வந்துட்டான். அங்க பாரு”
“ஹே ஆமா”
எனக்கு கைகள் நடுங்க ஆரம்பித்தன. புல்லரித்தது. கழுத்து சூடாக ஆனது. கைகளை நெஞ்சுக்கு குறுக்காக கட்டிக்கொண்டேன். கைவிரல்கள் சில்லிட்டிருந்தன. அவனைப் பார்த்தேன். ஒன்பது மாதங்கள் கழித்து அவனைப் பார்த்தேன். இங்கதான இருக்கோம் எப்பவேனா பாத்துக்கலாம்னு சொன்னான். இப்ப ஒன்பது மாசம் ஆச்சு. எனக்கு கண்கள் கலங்கின. கொஞ்சம் குண்டாகிவிட்டான் போல. தலையில் முடி நிறைய வைத்திருந்தான். அதே சிரிப்பு. அதே சோடாபுட்டி. எங்களை நோக்கி வேகவேகமாக வந்துகொண்டிருந்தான். அவன் என்னைப் பார்த்தது போலவே தெரியவில்லை. என்னடா ஹேர் ஸ்டைல் இதுன்னு பயாலஜி மேடம் கேட்டாங்க. பக்கத்தில இருந்த ஷீபா அப்பாஸ் ஹேர்ஸ்டைல் மேம் என்றாள்.

இரவாகியது. என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நான் என்ன தப்பு செஞ்சேன். எனக்கு அழுகை அழுகையாக வந்தது. அழுதேவிட்டேன்.

“சித்தார்த்”
“ஹாய் ஷீபா. எப்படி இருக்க?”
“நல்லா இருக்கேன். ரம்யா கூட ஏன் பேசமாட்டேன்ற?”
“பேசினேனே.”
“பொய் சொல்லாத. அவ அழறா”

“பேசறேன்”
“ஏன் இப்படி பண்ற?”

கிளம்பும் முன் என்னிடம் வந்தான். ஏதோ சும்மானாச்சுக்கும் பேசற மாதிரி பேசினான். கிளம்பறேன்னு கிளம்பிட்டான். எனக்கு கோபம் கோபமா வந்தது. அழுகை அழுகையா வந்தது. போடா லூசு. போடா லூசுன்னு திட்டிட்டேயிருந்தேன். ஐ ஹேட் ஹிம். பார்க்கப்போறோம் பேசப்போறோம்ன்னு எத்தனை நாள் காத்திருந்தேன். அன்று தான் வீட்டில் அவ்வாவிடம் முதலில் கோபப்பட்டேன். எனக்கு சாப்பிடவே பிடிக்கவில்லை. அவ்வா சாப்பிட வற்புறுத்தவே “போறீங்களா இல்லியா?” ன்னு கத்திட்டேன். அவ்வா முகம் வாடிப் போச்சு. போயிட்டாங்க. சாரி அவ்வா.

பிறகு அடுத்த புதன் கிழமை அவனிடமிருந்து லெட்டர் வந்தது. பேச என்னவோ போல இருந்ததாம். இடியட். இதெல்லாம் ஒரு காரணமா? நீ ஏன் பேசலன்னு என்கிட்ட கேட்டான். அவன் பேசாட்டி என்ன? நான் ஏன் அவன் கிட்ட பேசல? தாட் டே கேம் அன் வென்ட். ஜஸ்ட் லைக் தட். ஜஸ்ட் லைக் தட்.

இரண்டு மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. நோ கான்ட்டாக்ட்ஸ். லெட்டர் தொடர்பு நின்று போய்விட்டது. ஏன் எதற்கு என்கிற கேள்வி இல்லை. ஜஸ்ட் லைக் தட். நான் இரண்டு முறை லெட்டர் போட்டேன். சும்மா ஏனோ தானோன்னு பதில் எழுதினான். முன்னெல்லாம் கேப் விடாம எழுதறவன் இப்போ ஒரு பக்கம் தான் எழுதினான். இப்போ கொஞ்ச நாளா அதுவும் இல்ல. எனக்கும் எக்ஸாம்ஸ். ப்ராக்டிக்கல்ஸ். டெட்பாடீஸ். ஐ வாஸ் டோட்டலி ஆக்குப்பைட்.

“ரம்யா”
“ஐரினா? என்னப்பா?”
“யாரோ உன்ன பார்க்கவந்திருக்காங்கடி”
“குளிச்சிட்டிருக்கேன். வர்றேன்னு சொல்லு ஐரின்”

மணி இரவு ஏழாகிறது. இன்னேரம் யார் என்னைப் பார்க்க வந்திருப்பா? அண்ணன்? மெதுவாக படிகளில் இறங்கினேன். வானம் இன்னும் இருட்டவில்லை. குளித்து முடித்து வந்ததால் கழுத்தில் மீதமிருந்த நீர்த்துளிகளில் காற்று மோதி அவற்றை உடைத்து நொறுக்கியது. ஜில்லென்று இருந்தது. ஐ ·பெல்ட் ·ப்ரஸ். யார் வந்திருக்கிறா? எங்கே என்று தேடினேன். ஹ¥ இஸ் தட்? செல்வா?

(தொடரும்)

4
“ஹாய் ரம்யா”
“ஹாய் செல்வா? என்ன இந்தப்பக்கம்”
“சும்மா வந்தேன். வரலாமில்ல”
“ஓ ஸ்யர்”

“உட்காரலாமா?”
“ஓ ஸ்யர்”

“என்ன பண்ணிட்டிருந்த”
“சும்மா..ஜஸ்ட் லைக் தட்”

“சாப்பிட்டாச்சா”
“இப்போ போகலைன்னா எனக்கு சாப்பாடு கிடைக்காது”
“இன்னைக்கு ஒரு நாள் சாப்பிடாம டயட்ல இரேன்”

“கேர் ·பார் ஆன் ஐஸ்க்ரீம்”
“ஐஸ்க்ரீம்? நோ செல்வா. ஐ ஹாவ் டு கோ “
“ஜஸ்ட் டென் மினிட்ஸ். ப்ளீஸ்”
“பட்..”
“ப்ளீஸ் ரம்யா.”

“எங்க?”
“ஜஸ்ட் உன் காம்பஸ்ல இருக்கிற க்வாலிட்டி ஐஸ்க்ரீம்முக்கு போவோம்”
….

வழியிலெங்கும் சும்மா எதுனாச்சும் பேசிக்கொண்டே வந்தான். எனக்கு எரிச்சலாக இருந்தது. யாரோ வந்திருக்கிறார்கள் என்று சொன்னதும் என் மனதின் ஓரத்தில் சித்தார்த்தாக இருக்குமோ என்கிற ஆசை இருந்தது. நல்லவேளை ஐஸ்க்ரீம் பார்லர் வேகமாக வந்துவிட்டது.

நான் உள்ளே கால் எடுத்து வைத்ததும், டப் என்றொரு சத்தம் கேட்டது. பலூன் வெடிக்கும் சத்தம். ஹ¥ய் என்று சத்தம். பின் ஹாப்பி பர்த் டே டூ யூ பாடல். கடையில் இருந்த நீல நிற திரையை விலக்கிக்கொண்டு சௌமியா, கணேஷ், இந்திரா, கோபால், ஷீபா எல்லோரும் வந்தனர். கடைசியாக சித்தார்த் வந்தான். இன்று எனக்கு பர்த்டே.

எல்லோரும் சென்று விட்ட பிறகு, சித்தார்த் என்னை காலேஜ் ஹாஸ்டலில் விட்டுவிட வந்தான்.
இருவரும் ஹாஸ்டலுக்கு வெளியே மரத்தினடியில் இருந்த பெஞ்சில் உட்கார்ந்தோம்.

“எப்படி இருக்க”
“ம்ம்..அஸ் யூ ஸீ”
“யூ ஹேவ் ச்சேஞ்ச்ட் எ லாட்.”
“யூ டூ”
“குட். யூ லுக் குட்.”
“இஸ் இட்? ஓவ் ஓக்கே. அப்பைத்தான் என்னோட கேர்ஸ் ப்ரண்ட்ஸ¤ம் சொல்றாங்க”
“அய்யே..ரொம்ப அலட்டிக்காத..அப்புறம்”
“நத்திங்”
“உன்னோட கேர்ள் ப்ரண்ட்ஸ¤க்கு மத்தில என்னோட பர்த்டே கூட ஞாபகம் வெச்சிருக்கிற”
“ம்ம். ஐ வில்”
“சாப்பிட்டியா”
“இன்னும் இல்ல”
“வீட்டுக்கு எப்படிப் போவ?”
“உனக்கென்ன கவலை?”
“சொல்லுடா”
“வண்டி”
“தள்ளுவண்டியா?”
“ஆமா உங்கப்பா இழுக்கற தள்ளுவண்டிதான்”
“அப்பாவ ஏன் இழுக்கற”
“நான் எங்க இழுக்கறேன். உங்க அப்பா தான் இழுக்கறார் தள்ளுவண்டி”
“ஸ்டுபிட்”
“ம்ம் சரி”
….
….
“நீ என்ன சாப்பிடுவ?”
“என்னவேணுன்னாலும் சாப்பிடுவேன்”
“இன்னிக்கு உங்க கேண்டீன்ல என்ன போடுறாங்க? டெட் பாடி பார்ட்ஸ்ல செஞ்ச ப்ரியாணி தான?”
“உன் மூஞ்சி. ச்சை. உவ்வே”
“மூஞ்சிய கோணலா வெச்சாத்தான் நீ நல்லாயிருக்கிற”
“வாட்” (கோணலா ஒரு சிரிப்பு)
“ஒண்ணுமில்ல”
“அது” (கோணல் சிரிப்பு இன்னும் மாறவில்லை. இமைகள் ஒரு முறை தாழ்ந்து நிமிர்கின்றன. கண்கள் சிரிக்கின்றன.)
“சரி நான் கிளம்பறேன்”
“கிளம்பு” (மெல்லிய சிரிப்பு)
“வர்றேன்”
“வராத” (மிக மெல்லிய சிரிப்பு)
“போயிடுவேன்”
“போகாத”
..
“வா”
..
“உக்காரு”
“உன் வார்டன் திட்டப்போறாங்க”
“திட்டமாட்டாங்க”
“ம்ம். என்ன சொல்லு”
“ஒண்ணுமில்ல”
“இப்பவும் புக்ஸ கட்டிட்டு தான் அழறயா?”
“ம்ம். வாட் எல்ஸ்”
“பாய் ப்ரண்ட்ஸ் வெச்சுக்க வேண்டியதுதான”
“அது இருக்காங்க ரொம்பபேர்”
“ம்ம்ம்.”
“யார செலக்ட் பன்றதுன்னு தான் தெரியல”
“ம்ம்ம்”
“என்ன ம்ம்?”
“யாரையாவது செலக்ட் பண்ணிக்கோ”
“அது எங்களுக்கு தெரியும். ப்ராஸஸ் பண்ணிட்டிருக்கேன்”

“சரி. உனக்கு எத்தனை கேர்ள் ப்ரண்ட்ஸ்”
“மூனு”
“அடப்பாவி. அசால்ட்ட சொல்ற”
“இதுல என்ன இருக்கு”
“பேர் சொல்லு”
“உனக்கெதுக்கு”
“சொல்லுடா”
“முடியாது”
“சொல்லுடா”
“முடியாது போடி”
..
“நான் போட்டா?”
“ம்ம்”
“வார்டன் திட்டுவாங்க”
“ம்ம்” “ஒழுங்கா சாப்பிட்டுட்டு நிம்மதியா படுத்து தூங்கு”
“ம்ம்”
“என்னோட வீட்டு போன் நம்பர் வேணுங்கறவங்க கேட்டு வாங்கிக்கலாம்.”
“ஹை போன் வாங்கியாச்சா”
“ம்ம்”
“சரி நான் ஞாயித்துக்கிழமை வீட்டுக்கு வரும்போது எனக்கு போன் பண்ணு”
“ம்ம்”
“யர்லி மார்னிங்..ஆறு மணிக்குள்ள பண்ணு”
“ம்ம்..என்னது ஆறு மணியா. நோ சான்ஸ்.”
“என்னோட பேசணும்னு நினைக்கறவங்க காலைல ஆறு மணிக்குள்ள பேசுங்கப்பா”
..
“சரி நான் கிளம்பறேன்”
“சென்று வா மகளே”
..
..
“ரம்யா”
“என்ன? போகவிடமாட்டியே”
“க்ரீட்டிங் கார்ட்”
“தாங்க்ஸ். தாங்க்ஸ் எ லாட். இந்த பர்த்டேய நான் என்னைக்குமே மறக்கமாட்டேன்”
“ரொம்ப சென்டிமெண்ட்டா ஆகாத”
“ம்ம்” (கீழே குணிந்து கொள்கிறாள்.)
“சரி. வார்டன் உள்ள விடலன்னா என்ன பண்ணுவ. கிளம்பு.”
“ஏன் உன் வீடு பக்கத்துல தான இருக்கு”
“அடிப்பாவி. வீட்ல உத வாங்க வைக்க பாக்குறயா?”
“சரி. நான் கிளம்பறேன். உன் தள்ளுவண்டிய பாத்து பத்திரமா உருட்டிட்டு போ.”
“சரிங்க மேடம். நீங்க உங்க டெட் பாடிஸ பத்திரமா பாத்துக்கோங்க”

எல்லா ஞாயிறும் சித்தார்த் கரெக்ட்டாக ஆறு மணிக்கு எங்கள் வீட்டுக்கு கால் பண்ணுவான். அஸ் யூஸ்வல் எங்களுக்கும் சிக்னல் இருந்தது. ஒரு கால். ஒரு ரிங். ரெண்டாவது கால். ரெண்டு ரிங். மூணாவது கால். மூணு ரிங். எங்கள் வீட்டில் சித்தார்தை நன்றாக தெரியும் என்றாலும், ஒரு த்ரிலுக்காகத்தான் சிக்னல் வைத்துக்கொண்டோம். மேலும் சித்தார்த் தான் என்று தெரிந்துவிட்டால் அவ்வா, என்னடி ஆம்பள பையனுடன் இப்படி பேச்சு என்று திட்டுவார்கள் இல்லியா? அதற்கு முந்தைய ஞாயிறு வரை லேட்டாக எழுந்திருக்கும் நான், இப்பொழுதெல்லாம் கரெக்ட்டாக ஆறு மணிக்கு எழுந்துவிடுவது அம்மாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவ்வாவுக்கும் தான். எழுந்து ஏதோ நாட்டு நடப்புகளில் ஆர்வம் இருப்பவள் போல பேப்பரை எடுத்துக்கொண்டு ·போனைப் பார்த்து உட்கார்ந்து கொள்வேன். கரெக்ட்டாக ஆறு மணிக்கு ஒரு மணி அடிக்கும்.

ட்ட்ரிங்

ஹலோ சார்
ஹலோ மேடம்
எப்படி சார் இருக்கீங்க
நல்லாயிருக்கேன் மேடம்
என்ன பண்றீங்க சார்
குளிறுது நல்லா போர்வைக்குள்ள இருக்கேன்.
எனக்கும் குளிறுது
எப்படி போச்சு இந்த வாரம்
உன் தொல்லையில்லாம ரொம்ப நல்லா போச்சு
அப்படியா? ஹரிஷ் எப்படி இருக்கான்?
அவன பத்தி இப்போ என்ன?
சரி விடு கேக்காட்டி ஹரிஸ் பத்தி ஏதும் கேக்கலையேன்னு வருத்தப்படுவியேன்னுதான் கேட்டேன்
ச்சேஞ் த டாபிக்
ம்ம் இந்த வாரம் என்ன இன்ட்ரஸ்டிங்..?
பொறுடி..ப்ரண்ட்ம்மா..ம்ம்..ஆமா சிந்து தான்..
அடிப்பாவி.
கண்டுகிடாத..அப்புறம் என்னடி இவ்ளோ வேகமா எழுந்திட்ட..

ஒரு வாரம் ·போன் கால் வரவில்லை. மணி ஆறாச்சு. ஆறரை ஆச்சு. எனக்கு பொறுக்கமுடியவில்லை. அவன் நம்பருக்கு நானே டயல் செய்துவிட்டேன். என் வீட்ல அவனை நன்றாக தெரிந்தாலும், அவன் வீட்ல என்னை அவ்வளவாக தெரியாது. அவன் அப்பா எடுத்தார்கள். டப் என்று கட் செய்துவிட்டேன். பயம். என்ன செய்வது? என்ன செய்வது? நீங்கள் இது மாதிரியான ஒரு சூழ்நிலையில் இருந்தீர்கள் என்றால் தான் உங்களுக்கு இது புரியும். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

எனக்கிருக்கும் ஒரே சாய்ஸ். மீண்டும் கால் செய்வது தான். அதுவும் வேகமாக செய்யவேண்டும். இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டில் எல்லோரும் எழுந்து விடுவார்கள். அப்புறம் பேசவே முடியாது. அப்புறம் அடுத்த வாரம் தான். மீண்டும் டயல் செய்தேன். என் விரல்கள் நடுங்கின. சித்தார்த் எடுத்திருடா. ப்ளீஸ்.

(தொடரும்)

5
மீண்டும் அவனுடைய அப்பா.

“சார்..சீ.சாரி.. அங்கிள்..நான் ரம்யா பேசறேன். சித்தார்த் இருக்கானா..சீ..இருக்காங்களா”
“அடடே..ரம்யாவா? அப்ஸர்வேசன் நாட்புக்க நீயே வெச்சுக்குவியாம். அப்புறம் காலேஜில வந்து வாங்கிக்கிறானாம்”
“அப்சர்வேசன் நோட்? ஓ..ஓகே அங்கிள். சித்தார்த்..”
“சித்தார்த்துக்கு நேத்துலருந்து கொஞ்சம்..கொஞ்சம் என்ன நெறயவே டயரியா..ஆஸ்பத்திரியில இருக்கான்.டாக்டர் ஒரு நாள் தங்கிட்டு போங்கன்னு சொல்லிருக்கார்..நான் இப்போதான் வீட்டுக்கு வந்தேன். நீ கால் பண்ணுவ.. பண்ணினா ஒன்னும் அப்ஸர்வேசன் நோட்டுக்கு ஒன்னும் அவசரமில்லன்னு சொல்லச்சொன்னான்”
“அங்கிள்..சித்தார்த்.. இப்போ எப்படி இருக்கான்?”
“அதான் சொன்னேனே நல்லாயிருக்கான்ம்மா..பத்துபதினோறு மணிக்கெல்லாம் டிஸ்சார்ஜ் பண்ணிருவாங்கன்னு நினைக்கிறேன்”.
“அங்கிள்..அங்கிள் எந்த ஹாஸ்பிடல்?”
“திருமங்கலம். தருண் கிளினிக்ம்மா”
“ஓகே அங்கிள். தாங்க்ஸ்”

“அம்மா”
“நான் சிந்து வீட்டுக்கு போயிட்டு வரட்டுமா?”
“ஏன்? இந்நேரத்திலயா?? நீ போக மாட்டியே? அவ தான எப்பவும் வருவா?”
“ம்ம். அவளுக்கு ரொம்ப உடம்புக்கு முடியலையாம். டயரியாவாம்”
“என்னாச்சு அவளுக்கு? அண்ணன அவ வீட்ல ட்ராப் பண்ணச்சொல்றேன். போயிட்டுவா”
“அவ்வா”
“நான் சொல்லிக்கிறேன்”

அண்ணன எப்படி சமாளிக்கிறதுன்னு நான் யோசிச்சிட்டிருந்தப்போதான், அவனே என்னை தெருமுக்கில இறக்கிவிட்றதா சொன்னான். நல்லதாப்போச்சு. சிந்து வீட்ல இருந்து கொஞ்ச தூரத்தில தான் இருக்கு க்ளீனிக். அக்சுவலா எங்க ஸ்கூலுக்கு பக்கத்தில தான் இருக்கு. ம்ம்..நாங்க படிச்ச ஸ்கூலுக்கு பக்கத்தில தான் இருக்கு. சிந்துவீட்டுக்கு போயிட்டு அவளையும் கூட்டிட்டு போகலாமா? இல்ல நாமளே தனியா போகலாமா? சிந்துவக்கூப்பிட்டா அவ நீ எதுக்கு இவ்ளோ மெனக்கெடுறன்னு கேப்பா. என்ன பதில் சொல்றது. நானே தனியா போறதுன்னு முடிவெடுத்தேன்.

“இங்க சித்தார்த்ன்னு..”
“நேர போய் லெப்ட்ல திரும்பும்மா. ரூம் நம்பர் 89”
“சரிங்க”

நான் வேகவேகமா நடந்து திரும்பறதுக்கும் கௌரி என் மேல மோதறதுக்கும் கரெக்ட்டா இருந்தது.

“அக்கா. நீங்க எங்க இங்க?”
“கௌரி..நீ”
“இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை தானே சும்மா தான இருக்கேன்னுட்டு அப்பா கூட ஹாஸ்பிட்டல் வந்தேன்”
“ஓ..ஓகே”
“அக்கா யூ வில் பி சர்ப்ரைஸ்ட். உங்களுக்கு ஒன்னு தெரியுமா?”
“என்ன?”
“சித்தார்த் ஞாபகம் இருக்கா? ஸ்கூல்ல உங்க ப்ரண்ட்”
“ஆங்… ஞாபகம் இருக்கு”
“அவர் இங்க தான் இருக்கார். டயரியா. போய் பாருங்க ரூம் நம்பர் 89”
“ஓ இஸ் இட்?” “ஓகே நான் போய் பாக்கறேன்”
“ஓகே அக்கா. BYE.”
“BYE”

“ஆமா அக்கா நீங்க எதுக்கு வந்தீங்க..”
“ம்ம்..சும்மா தான்..”

கௌரியோட அப்பாதான் இங்க டாக்டர். என்னை ரொம்ப நல்லா தெரியும். எல்லார் கிட்டயும் உண்மை சொல்லிருந்தாக்கூட ஒன்னும் இல்ல. ஹ்ம்ம்..யாராவது பாத்து கேட்டா என்ன சொல்றது?

டக் டக் டக்
வாம்மா..நீ..
நான் ரம்யாம்மா..சித்தார்த்தோட க்ளாஸ்மேட்..
ஓ..உள்ளவாம்மா..எப்படிம்மா இருக்க
நல்லாயிருக்கேன்ம்மா
சித்தார்த் இங்க இருக்கறது அதுக்குள்ள உங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருச்சா.
ஜஸ்ட் இந்த ஹாஸ்பிடலுக்கு வந்தேன்..கௌரி சொன்னா..
ஓ..கௌரி சொன்னால? இங்க தான் இவ்ளோ நேரம் இருந்தா..இப்போத்தான் தூங்கினான்..வயிறு பெயின் இருக்கும் போல..எழுப்பட்டும்மா
..
எழுப்பட்டும்மா
..
நீ அவன் காலேஜ் க்ளாஸ்மேட்டா?
..
உங்க வீடு எங்க இருக்கு? தூங்கறான்..எழுப்பட்டுமா..

சித்தார்த் ரொம்பவும் ஒல்லியான மாதிரி இருந்தது. முகம் ரொம்பவும் டயர்டா இருந்தது. நான் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன். அவனுடைய அம்மா பேசியதை நான் கவனிக்கவில்லை. என் கவனம் முழுவதும் சித்தார்த் மேலேயே இருந்தது. ஏன் எனக்கு அழுகை வருகிறது. அழக்கூடாது. அவன் கைகளைப் பிடித்தேன். ஜில்லென்றிருந்தது. அவன் நல்லா தூங்கிட்டிருந்தான். எழுப்பறேன்னு தான் சொன்னாங்க. ஆனா எழுப்பவில்லை. கைகளில் பள்ஸ் பார்த்தேன். வயிறை தொட்டுப்பார்த்தேன். அவனுடைய அம்மா பேசாமல் உட்கார்ந்திருந்தார்கள். பிறகு மீண்டும் பல்ஸ் பாக்குற சாக்கில அவன் மணிக்கட்டில ஒரு கிள்ளு கிள்ளினேன். டப்புன்னு முழிச்சுப்பாத்தான். என்னைப் பார்த்தவுடனே பயந்தே போயிட்டான். பிறகு வந்துட்டியா? நல்லாயிருக்கியாங்கற மாதிரி ஒரு சிரிப்பு சிரிச்சான். அவ்வளவுதான். எனக்கு அது போதும். தூங்கி நல்லா ரெஸ்ட் எடுடான்னு சொன்னேன். சொல்லல.

சிந்துவின் வீட்டுக்கு ஓட்டமும் நடையுமாக சென்றேன். அந்த தெரு கொஞ்சம் குறுகலான தெரு. காலையில் இட்லி வியாபாரம் நடந்துகொண்டிருந்தது. எல்லோரும் என்னையே பார்ப்பது போல
இருந்தது. நான் வேகத்தை கூட்டினேன். இங்கிருந்து பார்க்கும் பொழுது சிந்துவின் வீடு தெரியும். தெரிந்தது. பக்கத்தில் எங்களுடைய காரும் தெரிந்தது.

அமைதியாக உள்ளே நுழைந்தேன். அண்ணன் உட்கார்ந்திருந்தான். சிந்து என்னைப் பாவமாகப் பார்த்தாள். அண்ணன் கிளம்பலாமா என்றான்.

ட்ரிங்
ட்ரிங்
ட்ரிங்
ஹலோ
ரம்..
தயவுசெய்து இனிமே கால் பண்ணாத ப்ளீஸ்
டக்

அந்த ஞாயிற்றுக்கிழமை அவன் மீண்டும் கால் செய்த பொழுது, என் அருகில் வீட்டில் இருக்கும் எல்லோரும் உட்கார்ந்திருந்தனர். ஐ விஷ் ஆர் நாட் ஐ டோல்ட் த சேம் எக்ஸாக்ட் ஸ்டுபிட் லைன்ஸ். சித்தார்த்.. சித்தார்த்.. என்னை மன்னிச்சிடுடா ப்ளீஸ். மன்னிப்பியா. ப்ளீஸ். நான் ஹாஸ்டல்ல தங்கல அதுக்கப்புறம். அப்பா என்னை தினமும் காரில ட்ராப் செஞ்சு ஈவினிங் பிக் அப் பண்ணிடுவார். ஒரு நாள் காலேஜில இருந்து அவன் வீட்டுக்கு நான் டயல் செஞ்சேன். அவனுடைய அப்பா எடுத்தார்.

ஹலோ
ஹலோ
சித்தார்த்
சித்தார்த் இல்லியேம்மா. வெளில போயிருக்கான்.
சரி அங்கிள்.

ஒரு நாள் என்னைத் தேடி ஈவினிங் காலேஜுக்கு வந்திருக்கான். நான் தான் காலேஜில தங்குறது இல்லியே. நான் இல்லைன்னு சொன்னதா என் ப்ரண்ட் சொன்னா. ரொம்ப நேரம் அந்த மரத்தினடியில இருக்கிற அந்த பெஞ்சிலே உட்கார்ந்திருக்கிறான். நான் எப்பொழுதும் அங்கே பார்க்கும் அணிலிடமாவது ஏதாவது அவன் சொல்லிருக்கலாம். மறுநாள் நான் அந்த அணிலை நான் தேடிச்சென்றேன்.

துக்கம் தொண்டையை அடைக்க மீண்டும் அவன் வீட்டுக்கு டயல் செய்தேன். இந்த தொலைபேசி உபயோகத்தில் இல்லை. நீங்கள் டயல் செய்த எண்ணை சரிபார்க்கவும். மீண்டும் டயல் செய்தேன். மீண்டும் அதே மெசேஜ். அந்த மரத்தினடியில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். சித்தார்த் ப்ளீஸ் இப்போ வாடா. ப்ளீஸ் இப்போ வாடா. ப்ளீஸ்டா. என்னம்மா க்ளாஸ¤க்கு போகலையான்னு கேட்டது அந்த அணில்.

(தொடரும்)

6

மெல்ல நெருங்கிடும் போது
நீ தூரப்போகிறாய்
விட்டு விலகிடும் போது
நீ நெருங்கி வருகிறாய்

க்ளாஸ் ரூம். ஐ திங் இட் வாஸ் அ மேக் சி·ப்ட் க்ளாஸ் ரூம். நாளைக்கு ஏதோ எக்ஸாம். நாங்க எல்லாம் படிச்சிட்டு இருக்கோம். நான் எப்போதுமே கீழ உக்காந்து தான் படிப்பேன். இன்னிக்கும் அப்படித்தான் படித்துக்கொண்டிருக்கிறேன். சித்தார்த் மேலே பெஞ்சில் உட்கார்ந்திருக்கிறான். இன்டர்வெல். எழுந்து செல்கிறேன்.

காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே
இதயமும் தொலையுதே

அவன் டெஸ்க்கு முன்னால் நின்று கொள்கிறேன். அவனிடம் பேசுகிறேன். அவன் ஏதோ சொல்கிறான். எனக்கு கேட்கவில்லை. மீண்டும் சொல்கிறன். எனக்கு கேட்கவில்லை.

வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் திளைக்கிறேன்
காதலால் நானும் ஒர் காற்றாடி ஆகிறேன்.

என் கால் மேல ஏறி நிக்கிற கீழ இறங்கு லூசு. ஓவ்..சாரி சித்தார்த்..நான்..

வெள்ளிக்கம்..ஹாங்..ஹாங்..
வாட் டூ யூ விஷ் டு ஹாவ் மேம்
ஹாங்
வெஜ் ஆர் நான்-வெஜ்
நான் வெஜ்
ஓகே. வுட் யூ லைக் டு ஹேவ் சிக்கன் ஆர் ..
நோ நோ..ஐ ஆம் வெஜ்…ப்ளீஸ் கிவ் மீ வெஜ் மீல்ஸ்

தூங்கியிருக்கிறேன். நன்றாக தூங்கியிருக்கிறேன். சீட்டில் நன்றாக சாய்ந்து கொண்டு எனக்கெதிரே இருந்த திரையில் சேனலை மாற்றி விமானம் எங்கே பறந்துகொண்டிருக்கிறது என்று பார்த்தேன். அட்லான்டிக் பெருங்கடலில் எங்கோ ஒரு புள்ளியில் சென்று கொண்டிருந்தது விமானம். இன்னும் ஆறு மணி நேரம் இருக்கிறது. நியுயார்க் செல்வதற்கு.

நியுயார்க்கில் பிடியாட்ரிக்ஸ் போஸ்ட் க்ராஜுவேஷன் பண்ணப்போகிறேன். அங்கே என் சித்தி இருக்கிறார். அவர் வீட்டில் தற்சமயம் தங்கிக்கொள்வதாக ப்ளான். எப்படியும் ஒரு வருடம் இருப்பேன். அந்த ஏர்ஹோஸ்டஸ் சிரித்துக்கொண்டே ப்ரேக்பாஸ்ட் கொடுத்தாள். வரண்ட ரொட்டியைப் பிரித்து நிதானமாக பட்டர் தடவினேன். ஜாம் தடவினேன். இன்னும் கொஞ்ச காலத்துக்கு ரொட்டி தான்.

சித்தப்பா விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவருடைய பெரிய வேனில் ஏறிக்கொண்டேன். ரொம்ப தூரம் வேன் சென்றுகொண்டேயிருந்தது. அவர் அப்பாவைப் பற்றியும் குடும்பத்தை பற்றியும் நிறைய கேட்டுக்கொண்டே வந்தார். அகல அகலமான ரோடுகள். பெரிய பெரிய கட்டிடங்கள். பிறகு மீண்டும் அகலமான ரோடுகள். பெரிய பெரிய காலியிடங்கள். வெற்றிடங்கள். பின் மீண்டும் அகலமான ரோடுகள்.

ஒரு மணி நேரம் கழித்து ஒரு சின்ன டவுனுக்குள் நுழைந்தோம். கொஞ்சம் சுற்றலுக்குப் பின் மீண்டும் பெரிய ரோடுகளைக் கடந்து வரிசையாக நின்றுகொண்டிருக்கும் வீடுகளுக்கு அந்துசேர்ந்தோம். பெரிய பெரிய வீடுகள். என் சித்தியும் அவருடைய சின்னப்பையனும் நின்று கொண்டிருந்தார்கள். சித்தி ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள்.

ரொம்ப நேரம் பேசி களைத்த பிறகு மீண்டும் பேசத்தொடங்கினோம். இந்தியாவைப் பற்றி பேசினால் அதற்கொரு முடிவே இருக்காது போல. பழங்கதைகள். அவ்வாவைப் பற்றிய கதைகள். எனக்கு மொட்டை போட்டது முதற்கொண்ட கதைகள். சித்தப்பா நாளை முதல் ட்ரெயினில் எப்படிப் போவது என்கிற பெரிய போரிங் லெக்ச்சர் கொடுத்தார். ரொம்பவும் காம்ப்ளக்ஸ் போல. எனக்கு எதுவுமே மண்டையில் ஏறவில்லை. நாளை ஒரு நாள் என்னுடன் ட்ரெயினில் வருவதாக சொன்னார்.

லைப் இன் யூஎஸ் இஸ் ஸோ டி·பரண்ட். இந்தியாவிலும் எங்கள் வீடு மிகப்பெரியதாக இருக்கும் என்றாலும் இவ்வளவு வசதிகள் கொண்டதாகவும் இவ்வளவு ஸ்டைலாகவும் இல்லை. எனக்கென்று கொடுக்கப்பட்ட அறையில் என்னுடைய லக்கேஜ்ஜை வைக்க சித்தப்பா ரொம்பவே சிரமப்பட்டார். கொஞ்ச நேரம் தூங்கு என்றதும், டப்பென்று போய்ப் படுத்துக்கொண்டேன்.

நிம்மதியான தூக்கம். எழுந்து கீழே போய் சாப்பிட்டுவிட்டு வந்தேன். மீண்டும் தூக்கம்.

எழுந்தபோது மணி என்னவென்று தெரியவில்லை. லக்கேஜ்ஜை பிரிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. எனிவே மணி என்னவென்று பார்த்தேன். இரவு இரண்டு மணி. வீட்டிற்கு பேசவேண்டும் போல இருந்தது. எப்படி பேசுவது என்றுதெரியவில்லை. லக்கேஜ் எடுத்து பிரித்து எனக்கு கொடுக்கப்பட்டிருந்த அலமாரியில் அவற்றை அடுக்கினேன். நாளைய இன்டர்வியூவுக்கு போட வேண்டிய ட்ரஸ் எடுத்து வைத்தேன். சர்ட்டிபிக்கேட்ஸ் டாக்குமென்ட்ஸ் எடுத்துவைத்தேன். மீண்டும் பெட்டில் வந்து உட்கார்ந்து கொண்டேன். தலையனையில் சாய்ந்து கொண்டேன். கால்களை நன்றாக நீட்டிக்கொண்டேன். கைகளை நெஞ்சுக்கு குறுக்காக வைத்துக்கொண்டேன்.

அன்றைய இன்டர்வியூ சரியாகப் போகவில்லை. நான்கு எக்ஸாம் வேறு எழுத வேண்டும். எக்ஸாமுக்கு ப்ரிப்பேர் பண்ணுவதே மிகப்பெரிய வேலையாகிப்போனது. வெதர் வேறு சரியில்லை. நல்ல குளிர். இது போல குளிரை நான் பார்த்ததில்லை. குளிருடன் சண்டைபோடுவதுதான் மிகப்பெரிய வேலை. இருக்கும் வேலைகளை செய்வதற்கு எனக்கு நேரம் போதவில்லை.

முழுதாக எட்டு மாதங்கள் ஓடி விட்டன. நான் நியூயார்க் வந்து எட்டு மாதங்கள் ஓடிவிட்டன. எனக்கு இங்கே ஒரு யுனிவர்ஸிட்டியில் இன்டர்ன்ஷிப் கிடைத்துவிட்டது. அதே யுனிவர்ஸிட்டியில் பிடியாட்ரிக்ஸ¤ம் கிடைத்துவிட்டது. கொஞ்சம் ப்ரண்ட்ஸ் கிடைத்திருக்கிறார்கள்.

எனக்கு கொடுக்கப்பட்ட லெப்டாப்பில் என் வேலை போக மீதமிருந்த நேரத்தில் ஈமெயில் அனுப்பக் கற்றுக்கொண்டேன். சாட் செய்யவும் கற்றுக்கொண்டேன். அமெரிக்க இந்திய தோழிகள் சிலரது ஆலோசனையின் பேரில் ஆர்குட்டிலும் மெம்பர் ஆகிவிட்டேன். எனக்கு பெரும்பாலும் நைட் டூட்டி தான் இருக்கும். டூட்டி முடிந்து வருவதற்கு மறுநாள் காலை பதினோரு மணி ஆகிவிடும். அதற்கப்புறம் நன்றாக தூங்கிவிடுவேன். முழு நாளும் தூக்கம் தான். சில நேரம் வீட்டுக்குப் போகணும் போல இருக்கும். சில நேரம் நான் படித்த பள்ளிக்கு செல்லவேண்டும் போல இருக்கும். வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. மிக வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

பெண்களுடை எடுத்தவனே
தங்கக் குடை கொடுத்தவனே
ராசலீலை புரிந்தவனே
ராஜ வேலை தெரிந்தவனே

என் அண்ணனுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. எனக்கு பார்க்கவேண்டும் போல இருக்கிறது.

மோகனங்கள் பாடி வந்து
மோகவலை விரித்தாயே
மோகனங்கள் பாடி வந்து
மோகவலை விரித்தாயே

அவளுடைய ·போட்டாவை யாகூவில் பார்த்தேன். கொள்ளை அழகு. அப்படியே அள்ளிக்கொள்ளலாம் போல இருந்தது.

சேலைகளைத் திருடி – அன்று
செய்த லீலை பல கோடி

சம் டே ஐ வில் கோ டு இந்தியா அன் ஹாவ் ஹெர் இன் மை ஹேண்ட்ஸ். தூங்குதற்கு முன் ஒரு முறை மெயில் செக் பண்ணிவிட முடிவு செய்தேன்.

வானில் உள்ள தேவரெல்லாம்
போற்றிப்பாடும் காதல் மன்னா
வந்தாய் கோபாலனே..

Orkut – Muthu has written you a scrap book entry.
முத்து என்கிற யாரோ ஒருவன் எனக்கு ஆர்குட்டில் மெஸேஜ் அனுப்பியிருந்தான்.

“You have exactly the same name of my friend: Ramya Rajagopal. Just a Hi from me!”

பூ முத்தம் தந்தவனே
வந்தாய் கோபாலனே..
பூ முத்தம் தந்தவனே

வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் போபாலனே
பூ முத்தம் தந்தவனே..

ஐ ஸ்டாப்ட் மை சிடி ப்ளேயர். ஹ¥ இஸ் திஸ் கை? ஐ ச்செக்ட் ஹிஸ் ப்ரெ·பைல்.

(தொடரும்)

7

கொஞ்ச நாட்களுக்குள்ளாகவே நானும் முத்துவும் நண்பர்கள் ஆகிவிட்டோம். அவன் கம்ப்யூட்டர் துறையைச் சார்ந்தவனாம். தற்சமயம் சிங்கப்பூரில் வாழ்ந்து வேலை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் சொன்னான். நாங்கள் இருவரும் கொஞ்சம் பெர்சனல் தகவல் பறிமாறிக்கொண்டோம். எனக்கு முதலில் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. பிறகு அவனுடைய அப்ரோச் எனக்கு பிடித்திருந்தது. நாங்கள் இருவரும் வாரம் ஒரு முறை சாட் செய்வோம். சில நேரங்களில் அவனே என்னை அழைப்பான். நான் ·ப்ரியாக இருந்தால் நான் அழைப்பேன். நான் அழைக்கும் பொழுது அவன் எனக்கு ரிப்லை பண்ணதே இல்லை. லுக்ஸ் லைக் ஹி இஸ் வெரி பிஸி. கேட்டால் ·ப்ரண்ட்ஸோடு அங்கே போயிருந்தேன். இங்கே போயிருந்தேன் என்பான். இல்லீன்னா அந்த புத்தகம் படிச்சேன் இந்தப் புத்தகம் படிச்சேன்னு சொல்லுவான். அதுவுமில்லீன்னா ஏதாவது படம் பாத்துட்டு இருப்பான். ஹி மேக்ஸ் ஹிம்செல்ப் பிஸி. இப்போ புதுசா கதை எழுத ஆரம்பிச்சிருக்கானாம்.

இன்னிக்கு கூட ஒரு கதை அனுப்பிச்சான். கிணறு. நல்லாத்தான் இருந்தது. எத்தனை தூரம் பழகினாலும் அவன் ஒரு முறை கூட எனது ·போன் நம்பரை கேட்க்காமலிருந்தது எனக்கு பிடித்திருந்தது. கேட்டால் கொடுத்திருப்பேனா என்பது சந்தேகம் தான். ஒரு வேளை அவன் கேட்டிருந்தால் எங்களது நட்பு முறிந்து கூட போயிருக்கும். இதை நட்பு என்று சொல்லலாமா என்று எனக்கு தெரியவில்லை. பட் ஐ ·பீல் லை திஸ் இஸ் நாட் ·ப்ரண்ட்ஷிப். இது ஒரு அறிமுகம் அவ்வளவே. என் ஆர்குட் முகவரியில் என் ·போட்டா இருக்காது. அது போல அவன் ஆர்க்குட் முகவரியிலும் ·போட்டா இல்லை. அவர் ·ப்ரபைல்ஸ் ஆர் ரெஸ்ட்ரிக்டட்.

ஒரு நாள் அதிகாலை மூன்று மணி இருக்கும் எனது ரூம் கதவு தட்டப்பட்டது. மெதுவாக மிக மெதுவாக. லைக் சம் டைம்ஸ் யூ டோன்ட் வாண்ட் டு டிஸ்டர்ப் சம் ஒன் ஸ்லீப். பட் யூ ஹேவ் காட் நோ சாய்ஸ். மீண்டும் மெதுவாக கதவு தட்டப்படும் ஓசை. நான் படுக்கையிலிருந்து எழுவதற்கும் செல்·போன் வைப்ரேட் ஆவதற்கும் சரியாக இருந்தது. அந்த நிசப்தத்தில் செல்·போன் டேபிளில் வைபிரேட் ஆகும் சத்தம் கொஞ்சம் திகிலூட்டுவதாகவே இருந்தது. செல்போனை எடுப்பதா கதவைத் திறப்பதா என்று நான் யோசித்துக்கொண்டிருக்கையில் மீண்டும் கதவு தட்டப்படும் ஓசை. இந்த முறை கொஞ்சம் பலமாக. நான் செல்போனை எடுத்துக்கொண்டு கதவைத் திறந்தேன்.

ஹலோ
அண்ணா? என்ன இந்த நேரத்தில?
கதவைத் திறந்தேன்.
சித்தப்பா. சித்தி.
சித்தி என்னாச்சு?
சித்தி: லைன்ல அண்ணனா? பேசு பேசு..


எப்போண்ணா?

ம்ம்
..
ம்ம்
..
ம்ம்

சித்தி.. (சித்தி ·போனை வாங்குகிறார்)
..

எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அருகிலிருந்த சோ·பாவில் உட்கார்ந்துகொண்டேன். கால்கள் லேசாக உதறுவதைப்போல இருந்தது. கைகளை இறுக்கமாக கட்டிக்கொண்டேன். பற்கள் கூட தாமாகவே ஆடுவதைப் போல இருந்தது. மெல்ல நடுங்குவதைப் போல. கிழேயே குணிந்திருந்தேன். இருதயம் நழுவி விழுவதைப்போல இருந்தது. இந்த உலகத்தில் எனக்கு மிகவும் பிடித்தமானவர் யார் என்று கேட்டால், சட்டென்று நான் பதில் சொல்வேன்: அவ்வா. இன்று அவ்வா தவறிவிட்டார். நான் பக்கதில் இல்லை. தூரத்தில் கூட இல்லை. ரொம்ப ரொம்ப தூரத்தில் இருக்கிறேன். எனக்கு அழுகைவரவில்லை. ஆனால் மனதை பிசைவது போல ஒரு இனம்புரியாத என்னவென்று தெரியாத ஒரு உணர்ச்சி. இதே போன்றதொரு வலியை உணர்ச்சியை நான் ஏற்கனவே ஒரு முறை அனுபவித்திருக்கிறேன். அதற்கு காரணமும் அவ்வாதான்.

நான் அழுகாமல் இருந்தது சித்தியை பயமுறுத்தியிருக்க வேண்டும். அவர் அன்று என்னுடனே தங்கிவிடுகிறேன் என்று சொன்னார். சித்தப்பா மட்டும் கிளம்பி வீட்டுக்கு சென்று விட்டார். சொல்லமறந்துவிட்டேன் நான் வீடு மாறிவிட்டேன். எங்கள் யுனிவர்சிட்டிக்கு பக்கத்திலிருக்கும் ஒரு அப்பார்ட்மெண்டில் தற்சமயம் தங்கியிருக்கிறேன். யுனிவர்சிட்டிக்கும் ஹாஸ்பிட்டலுக்கும் இந்த வீடு தான் சௌகரியம். வீடு எனச் சொல்லமுடியாது. ஸ்டுடியோ அப்பார்ட்மெண்ட்.

மறுநாள் சித்தி சென்றுவிட்டார். எனக்கு அன்று நைட் டூட்டி. டூட்டி முடித்து மறுநாள் காலை பதினோறு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். வீடே சூணியம் போல இருந்தது. எங்கும் வெறுமை படர்ந்திருந்தது. என் கம்ப்யூட்டர் டேபிளில் உட்கார்ந்து காலைநீட்டு கைகளை கட்டி உட்கார்ந்தேன். என்னுடைய பழைய ·போட்டோக்களைப் பார்த்துக்கொண்டே வந்தேன். என்னுடைய சில போட்டோக்களை என்னுடன் நான் எடுத்துவந்திருந்தேன். அமெரிக்கா கொஞ்சம் பழகிய பிறகு அவற்றை ஸ்கேன் செய்து என் கம்ப்யூட்டரில் சேமித்து வைத்திருந்தேன். அந்த போட்டாக்களில் என் குடும்பம் முழுவதும் இருக்கும். எல்லா போட்டோவிலும் அவ்வா இருப்பார். அண்ணன் கல்யாணத்தின் போது எடுக்கப்பட்ட படங்கள். அவ்வாவை போட்டோவில் பார்க்க பார்க்க மீண்டும் அதே வலி என்னுள் எழுந்தது. துக்கம் தாளாது இருதயம் வெடித்துவிட வாய்ப்பிருக்கிறதா? அந்த ·போட்டோக்களுடன் எனது பள்ளிக்காலத்து போட்டோக்கள் சிலதும் இருக்கின்றன. ஒரு படத்தில் என் விரல்கள் தாமாகவே நடுங்கின. என் உடம்பு முழுதும் ஒரு அதிர்வு படர்ந்து அடங்கியது. கம்ப்யூட்டர் திரையில் சித்தார்த்தும் நானும் சிறு பிள்ளைகளாக நடனமாடிக்கொண்டிருந்தோம். கண்ணீர் கண்ணங்களில் வழிந்தது. அடுத்த போட்டோ அவ்வாவும் நானும் மட்டும். அவ்வாவின் மடியில் நான் படுத்துக்கொண்டிருப்பதைப் போல. அவ்வாவின் முகம் மிக அழகாக இருந்தது. ஷீ இஸ் ஆன் ஏஞ்சல். என்னுடைய துக்கம் பீறிட்டு எழுந்தது. ஓ வென கதறி அழுதேன். கட்டிக்கொள்ள யாரும் இல்லை. மௌனமாக என்னை வெறித்துப்பார்த்த கம்ப்யூட்டரைத் தவிர.

ஸ்கைப் அழைத்தது. ஒரு முறை. இரு முறை. மூன்றாம் முறை. நிமிர்ந்து பார்க்க விருப்பமின்றி டேபிளிலே படுத்திருந்தேன். செல்போன் அடித்தது. என் ஷிப்ட் தோழி. அவளுக்கு முக்கியமான வேலை ஒன்று இருக்கிறதாம். அவளுடைய ஷிப்ட்டை நான் கவனித்துக்கொள்ள முடியுமா என்றாள். ஐ நீட் எ சேஞ்ச். வீடு பக்கத்தில் இருப்பதில் இது ஒரு சிக்கல். சரி என்றேன்.

கிளம்புவதற்கு முன் யார் என்னை ஸ்கைப்பில் அழைத்திருந்தது என்று பார்க்கலாம் என்று மானிட்டரை ஆன் செய்தேன். ஸ்க்ரீன் உயிர்பெற்றது. முத்து. நிறைய தடவை பிங் பன்னியிருந்தான். கடைசியில் “I need an urgent help! Can you help me pleae? PING ME ONCE YOU ARE ONLINE” என்றிருந்தது.

8

நான் மீண்டும் அழைத்த பொழுது வழக்கம் போல அவன் ஆன்ஸர் பண்ணவில்லை. கொஞ்ச நேரம் பொறுத்திருந்துவிட்டு ஹாஸ்பிட்டலுக்கு கிளம்பினேன். கதவைப் பூட்டும் பொழுது மீண்டும் யாரோ பிங் பண்ணும் சத்தம். முதலில் பேசாம போய்விடலாம் என்று தான் நினைத்தேன். பிறகும் ஏதாவது மிக முக்கியமான விசயமாக இருந்தால் என்ன செய்வது என்று மீண்டும் கதவைத் திறந்துகொண்டு வந்து ஸ்க்ரீனை ஆன் செய்தேன்.

மீண்டும் முத்து தான்.

Hi Ramya. Thanks for Pinging me back.
Hi Muthu. Its Ok. How are you? Whats urgent?
You work in Newyork State Hospital right?
Yes..
You major in Pediatrics?
Yes..
There is someting I want you to do. Will you do it for me?
Tell me muthu..
Ennaku oru friend irrukan..he lives in Newyork too..avanoda kuzhanthaiku udambuku mudiyala..unga hospitala thaan admit pannirukaanga
so?
avanoda wife mattum thaan irukaanga. avan business tripkkukaha japan poirukaan..avanoda wife romba bayanthu poirukaanga..
mm..
so please if you are free..summa poi paathutu..ennakaha please make sure everything is OK. He is my best friend.
mm..ok muthu..inga onnum problem irrukaathu..but anyway i will go and see her for you..entha room number..avanga peru..ethavathu details kodu..
room number 102..JKF Wing..avanga peru..mm..Sathya..kuzhanthai peru..Kayal..
ok..pa..i will try my best..
Thanks Ramya. Thanks a lot.
Take it easy. Ciao. Bye.

கதவைப் பூட்டும் பொழுது கொஞ்சம் ·ப்ரஷ்ஷாக உணர்ந்தேன். ஐ நீட் சம் கா·பி. அன்றைய தினம் மீண்டும் புதிதாக ஆரம்பிப்பதைப் போல உணர்ந்தேன். பட் இட வாஸ் அல்ரெடி த்ரி.

என் அறைக்குள் நுழைந்து சட சடவென்று ட்ரஸ் ச்சேஞ் செய்து கொண்டு அன்றைய வேலைகளை லிஸ்ட் போட்டேன். என் தோழி அவளுடைய வேலைகளை லிஸ்ட் போட்டு என்னுடைய கம்ப்ட்டர் மானிட்டரில் போஸ்ட் செய்திருந்தாள். எல்லா குறிப்புகளையும் சரிபார்த்துவிட்டு அன்றைய ரவுண்ட்டுக்கு தயாரானேன். முதலில் முத்துவின் ப்ரண்ட்டோட குழந்தையை விசிட் செய்துவிடலாம் என்று முடிவுசெய்தேன். அவர்கள் இருக்கும் அறை வேறு ப்ளாக்கில் இருக்கிறது. என்னுடைய ப்ளாக்கிலிருந்து கொஞ்ச தூரம். வழியில் எங்கும் மேப்பிள் மரங்கள் அந்த சூழலை அழகாக்கின. எனக்கு பசி வயிற்றைக்கிள்ளியது. ஏதாவது சான்ட்விச் கிடைக்கிறதா என்று பார்க்கவேண்டும். இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது டோனட்ஸ்.

லிப்டுக்காக காத்திருந்தேன். லிப்ட் திறந்துகொள்ளும் பொழுது ஏற்படும் சத்தம் நேரத்துக்கு தகுந்தார்ப்போல் ஒரு உணர்ச்சியை எழுப்புகிறது. சாதாரண நாட்களில் இந்த சத்தத்தை நாம் கவனித்திருக்கவே மாட்டோம். அந்த குழந்தை இருந்த அறையைத் தேடிக்கண்டுபிடித்து யார் விசிட்டிங்க் ரெஸிடென்ட் என்று பார்த்தேன். பிறகு அவரைத் தேடிக்கண்டுபிடித்து என்ன விசயம் என்று தெரிந்துகொண்டேன். ஹி இஸ் கெல்வின். கெல்வினோடு எனக்கு கொஞ்சம் அறிமுகம் இருக்கிரது. அந்தக்குழ்ந்தையைப் பற்றி விசாரித்ததில் ஜஸ்ட் நார்மல் என்று சொன்னார். டயரியா. கொஞ்சம் லேட்டாக ஹாஸ்பிட்டலுக்கு வந்திருந்ததால் அட்மிட் செய்யவேண்டியது ஆயிற்று. ஷி இஸ் பர்·பெக்ட்லி ஆல்ரைட். ரூம்முக்குள்ளே போய் அவளைப் பார்த்தேன். அழகான குழந்தை. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

அவளுடைய அம்மாவைப் பார்த்துவிட்டால் வந்த வேலை முடிந்துவிடும். நான் என் வேலையை கவனிக்கப் போய்விடலாம். முத்துவிடமும் பார்த்தாச்சுப்பா என்று கான்பிடன்ட்டாக சொல்லிவிடலாம். பேஷண்ட்களின் உறவினர்கள் தற்காலிகமாக தங்கிக்கொள்ளும் வெயிட்டிங் ரூமிற்கு வந்தேன். ஓ மை காட். ஹவ் வில் ஐ ஐடன்டி·பை ஹெர்? எனக்கு அவருடைய பெயர் மட்டும் தான் தெரியும். எப்படி இருப்பார் என்று தெரியாது. என்ன பெயர்? மறந்து போச்சா? நல்லவேலையாக அங்கே கூட்டம் அதிகம் இருக்கவில்லை. அதிக இந்தியர்களும் இருக்கவில்லை. ஒரே ஒரு பெண் மட்டும் தான் இருந்தாள்.

யூ மஸ்ட் பி டாக்டர் ரம்யா
யெஸ்..
முத்து அண்ணா சொன்னார்..
ஓ ஒக்கே.. எப்படி இருக்கீங்க?
பாப்பாவ பாக்கலாமா?
இப்போ தான் நான் பாத்திட்டு உங்க டாக்டர் கிட்ட பேசிட்டு வர்றேன்..உங்க பொண்ணு ரொம்ப நல்லா இருக்கா..ஷி இஸ் ஆல் ரைட்..நத்திங் டு ஒர்ரி..
ம்ம்..ரொம்ப டயரியா ஆயிடுச்சு..அவர் வேற ஊர்ல இல்ல..எனக்கு ட்ரைவிங் தெரியாது..கொஞ்சம் அசால்ட்டா இருந்திட்டேன்..
அழாதீங்க சத்யா..யாரும் தெரியாத ஊர்ல இவ்ளோ தூரம் பண்ணிருக்கீங்களே..க்ரேட்..
தூங்கிட்டே இருக்காளே டாக்டர்..
ஒன்னும் ப்ராப்ளம் இல்லை..ஷி வில் பி ஆல்ரைட்..
ஓக்கே டாக்டர்..வந்ததுக்கு தாங்க்ஸ்..
இட்ஸ் ஓக்கே..நான் இங்க தான் இருப்பேன்..இது தான் என்னோட நம்பர்..எதுவும் தேவைன்னா என்னை கால் பண்ணுங்க..சரியா? டோன்ட் வொர்ரி..
ஓக்கே டாக்டர்
டாக்டர்ன்னு சொல்லவேண்டாமே..ரம்யான்னு சொல்லுங்க..
ஓக்கே ரம்யா..
க்கேர் ·பார் எ கா·பி சத்யா? டயர்டா இருக்கீங்க..ச்சியரப்..

இரண்டு நாட்கள் அங்கிருந்துவிட்டு அவர்கள் வீட்டுக்குப் போவதற்குள் என்னுடன் அந்தக் குழந்தை மிகவும் சினேகமாகிவிட்டது. கயலைப் பார்ப்பதற்காகவே நான் காலையும் மதியமும் இரவும் அவர்களது ரூமுக்கு சென்றேன். சத்யாவும் நன்றாகப் பழகினார்.வீட்டுக்குப் போகும் பொழுது கண்டிப்பாக ஒரு நாள் மதிய விருந்துக்கு வீட்டுக்கு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கென்ன எப்பவெணும்னாலும் கூப்பிடுங்க. நல்ல சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சுன்னு சொல்லிவெச்சேன். கயலும் சத்யாவும் சென்றுவிட்ட பிறகு மீண்டும் தனிமை என்னைச் சூழ்ந்து கொண்டது. ஆனால் எனக்கிருக்கும் பணிச்சுமை எனது தனிமையை சூழ்ந்துகொண்டது. நாம் என்னை சூழ்ந்துகொண்டேன்.

முத்து அவ்வப்போது சாட் செய்வான். மேலும் சில பர்சனல் விசயங்களை பகிர்ந்து கொண்டோம். கொஞ்சம் கொஞ்சமாக அவனது தாக்கத்தை என்னுள் உணரமுடிந்தது. நான் புத்தகம் படிக்க ஆரம்பித்துவிட்டேன். என்னுடைய ·பேவரிட் எழுத்தாளர் இப்பொழுது ஹருக்கி முராகமி. ஜப்பானிய எழுத்தாளர். ஒன்றிரண்டுமுறை சத்யாவும் கால் செய்தார். கயலுடனும் பேசினேன். சில நேரம் கயலைப் பார்க்கவேண்டும் போல இருக்கும். ஷி இஸ் சச் எ லவ்லி கிட். முத்து வேறொரு கதை எழுதியிருக்கிறானாம். அனுப்பிவைத்தான். படிச்சு எப்படி இருக்குன்னு சொல்லனும். நல்லாயிருக்குன்னு சொன்னாலும் என்ன நல்லாயிருந்துச்சுன்னு கேப்பான். நல்லாயில்லன்னு சொன்னா என் கதையை புரிஞ்சிக்கிற அறிவு உனக்கில்லைன்னு சொல்வான். அவன் கதை அனுப்பிச்சாமட்டும் கொஞ்ச நாளைக்கு அவன் கூட நான் பேசமாட்டேன். ஒரு நாள் யூ எஸ் வரப்போவதாகச் சொன்னான்.

ஏதோ கன்சல்ட்டண்ட் கம்பெனி மூலமாக ட்ரை பண்ணுகிறானாம். நாளைக்கு அமெரிக்கன் கவுன்சலேட் போகனும் என்றான். பெஸ்ட் ஆப் லக் என்று சொல்லிவைத்தேன். ஆனால் அந்த கம்பெனி நியூயார்க்கில் இல்லை சிக்காகோவில் இருக்கிறது என்றான். எங்கிருந்தால் என்ன, நீ அமெரிக்கா வந்தா கண்டிப்பா நாம மீட் பண்ணுவோம் என்றேன்

ஒரு வெள்ளிக்கிழமை சாயங்காலம் ஆறுமணிக்கு சத்யாவிடமிருந்து கால் வந்தது. அன்று ஒரே மேகமூட்டமாக இருந்தது. கயலுக்கு பர்த்டே பார்ட்டி கொண்டாடப் போகிறார்களாம். என்னையும் வரச்சொல்லி வற்புறுத்தினார். எனக்கும் கயலைப் பார்க்கவேண்டும் போல இருந்ததால் கண்டிப்பாக வருவேன் என்று சொல்லிவைத்தேன். மனம் நல்ல சாப்பாடு கிடைக்கும் என்றும் சொல்லிக்கொண்டது. என் தோழிகள் சிலர் மூவி பார்ட்டிக்கு அழைத்தனர். சினிமாவே பார்க்காதவள் மூவி பார்ட்டிக்கு என்ன டிவிடி எடுத்துப்போகலாம் என்று யோசிப்பதை நினைத்தால் கொஞ்சம் சிரிப்புத்தான் வருகிறது. டைம் ச்சேஞ்சஸ் எவ்ரித்திங். கடைசியில் Mama Mia எடுத்துப்போகலாம் என்று முடிவு செய்துகொண்டேன். ஐ ஜஸ்ட் லவ் மெரில் ஸ்ட்ரீப் அன்ட் ப்ராஸ்னன் இன் தாட் மூவி.

(தொடரும்)

9

மூவி பார்ட்டியில் ஒன்லி கேர்ள்ஸ். செம ஆட்டம். செம ஆட்டம் போட்டார்கள். ஐ த க்யொட்டஸட் பெர்சன். ஐ டுக் கேர் ஆ·ப் சம் குக்கிங். ஹே சொல்ல மறந்திட்டேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஸ்ட்ரிக்ட்லி வெஜிட்டேரியன் என்றாலும் என் நண்பர்களுக்காக நான் சில பார்ட்டிகளின் போது கபாப் சமைப்பேன். இன்று நானும் என் தோழி சனந்தாவும் மூவி பார்ட்டிக்கு வேகமாகவே வந்துவிட்டோம். பார்ட்டி என்னுடைய இன்னொரு ப்ரண்ட் அபயாவின் அப்பார்ட்மெண்ட்டில் நடந்தது. அவள் போனவாரம் 52 செமி எல்சிடி டீவி வாங்கினாள். அதற்காகத்தான் இந்த பார்ட்டி. வேகமாகவே வந்து நான்,அபயா, சனந்தா மூன்று பேரும் குக்கிங் ஆரம்பித்துவிட்டோம். நான் தான் சீ·ப் செ·ப். இன்றைய டின்னர் மெனு: அவியல், உருண்டை குழம்பு, வாங்கிபாத், செட்டிநாடு சிக்கன், சாம்பார், பைனாப்பில் ரசம். கடைசியாக தக்காளி தொக்கு. என்னுடைய ·பேவரிட் உருண்டை குழம்பு தான். மூவி பார்ட்டி தான் என்றாலும் நாங்கள் பார்த்ததென்னவோ ஒரே ஒரு மூவிதான். ஐ ஆம் லிஜண்ட். தட் வாஸ் மோர் தான் இன·ப் ·பார் அஸ். பிறகு அரட்டை அரட்டை அரட்டை தான். அதுவும் சுப்ரியா இருக்காளே சரியான சாட்டர் பாக்ஸ். வாயத் தொறந்தா மூட மாட்டா. அபயா என்னை என் அப்பார்ட்மெண்ட்டில் இறக்கிவிட்டபொழுது மணி காலை மூன்று.

அன்று காலை மீண்டும் சத்யாவிமிருந்து கால். இன்று கயலின் பர்த்டே. இந்த முறை அவரது கணவர் பேசினார். கண்டிப்பாக இன்றைய பார்ட்டிக்கு வந்துவிடவேண்டும் என்று சொன்னார். கயலும் தன் பங்குக்கு அழைத்தாள். மழலை. அன்று காலை வரை போகலாமா வேண்டாமா என்கிற மனக்குழப்பத்தில் இருந்த நான், இத்தனை முறை என்னை அழைத்தவுடன் சரி போவது என்று முடிவு செய்துகொண்டேன். போய்வரத்துணையாக அபயாவையும் அழைத்துக்கொண்டேன். டு யு வான் ட் டு ந்நோ வை? அஸ் சிம்ப்பிள் அஸ் தாட். சி ஹேஸ் க்காட் எ கார். 🙂

அவர்களது வீடு மான்ஹாட்டனில் இருந்தது. நல்ல அழகான வீடு. வீடு நன்றாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. லானில் தான் பார்ட்டி. ஒரு சிலர் தான் லானில் நின்று கொண்டிருந்தனர். ஒரு வயதான அம்மா நின்று கொண்டிருந்தார். அவரை எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. அவரும் என்னை எங்கோ பார்த்திருக்க வேண்டும். என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். அபயாகூட கேட்டாள்: யாருடி அவங்க. தெரிஞ்சவங்களான்னு. எனக்கு நினைவுக்கு வருகிற மாதிரி இருக்கு. ஆனால் வரவில்லை. வேறு யாரையும் எங்களுக்கு தெரிந்திருக்கவில்லை. அவர்களுக்கும் எங்களை தெரிந்திருக்கவில்லை. மெதுவாக உள்ளே நுழைந்தபொழுது சத்யா வேகமாக படிகளில் இறங்கி வந்து எங்களை வரவேற்றார். பின்னாலயே கயலும் ஓடி வந்தாள். நான் அபயாவை அறிமுகம் செய்துவைத்தபிறகு வந்திருந்த மக்கள் தொகையில் ஐக்கியமானோம். கயல் என்னுடனேயே இருந்தாள். அபயா கயலுடன் விளையாட ஆரம்பித்துவிட்ட பிறகு நான் சத்யாவை பார்க்க கிச்சனுக்கு சென்றேன். சத்யா மீன் பொறித்துக்கொண்டிருந்தார். அவருடன் இரண்டு மூன்று பெண்கள் இருந்தார்கள். எல்லோரும் ப்ரண்ட்ஸ். அறிமுகப்படலம் முடிந்து, நானும் அவர்களுடன் சேர்ந்து சமையலை கவனித்தேன். வேறு யார் யாரோ வந்து சத்யாவை சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர். எனக்கு இன்னும் அந்த அம்மா யாரென தெரியவில்லை. “சத்யா. த கேக் இஸ் ரெடி. டு யு வான்ட் டு சீ இட்?”

எல்லோரும் திரும்பிப்பார்த்தோம். என் கையில் வைத்திருந்த எக் ப்பீட்டர் நழுவி கீழே விழுந்தது. “இட்ஸ் ஓக்கே சித்தார்த். அதான் நீங்க பாத்திட்டீங்கல்ல. டெபிள்ல வெச்சிருங்க” “ஹலோ” எல்லோரும் சித்தார்த்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். சித்தார்த் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தான். ஹி வாஸ் ஷாக்ட். பின் எல்லோரும் என்னைப் பார்த்தனர். “ஹலோ. சித்தார்த் ஏன் பேயரைஞ்ச மாதிரி இருக்கீங்க?” “ஹலோ” அங்கிருந்த ஒருவர் வேண்டுமென்றே “தம்தன தம்தன தம்தன…ஆ..ஆ..ஆ” ரிதம் ஒலிக்கவிட்டார். ·பெர்·பெக்ட் டைமிங். அவரது ·போனில் இருந்த ரிங் டோன் போல. “ஹலோ சித்தார்த். டு யூ நீட் கர்ச்சீ·ப்” என்று தன் கர்சீ·ப்பை எடுத்து நீட்டினாள் மற்றொரு பெண். “நோ ஐ திங்க் ரம்யா நீட்ஸ் கர்சீ·ப். யு சீ த எக் ப்பீட்டர் ·பெல் ·ப்ரம் ஹெர் ஹேண்ட்.” என்று ஒருத்தி சொன்னவுடன் கிச்சனே அதிரும் அளவுக்கு எல்லோரிடமும் சிரிப்பலை. “வாட் ரம்யா? இதுதான் சித்தார்த். எங்க வீட்டில மேல தங்கியிருக்கிறார். பாச்சுலர். சித்தார்த் இது தான் ரம்யா. டாக்டர். இவங்களும் பாச்சுலர் தான்” மீண்டும் சிரிப்பு.

சில்லென மெல்லிய தென்றலும் வந்திசை சொல்லியது
சுவை அள்ளியது மனம் நில்லென சொல்லியும் துள்ளியது
பெண்மனம் பூவினும் மெல்லியது
தவிக்கும் நினைவோ எனைக்கிள்ளியது
மல்லிகை முல்லையில் பஞ்சணையோ
மன்னவன் தந்தது நெஞ்சணையோ
மின்னிய மின்னலும் கன்னியின் எண்ணங்களோ
இனி கனவுகள் தொடர்ந்திட

பாடல் தொடர்ந்து நின்றது. இட்ஸ் நாட் ஜஸ்ட் ரிங் ட்டோன். எல்லொரும் சிரித்தனர். என்ன புரிஞ்சுச்சுன்னு இதுங்க சிரிக்குதுங்களோ தெரியல. “ஓ நைஸ் டு மீட் யூ ரம்யா. சாரி. நைஸ் டு மீட் யூ டாக்டர். பைத வே சத்யா சொன்ன மாதிரி நான் வீட்டுக்கு மேல தங்கல, இந்த வீட்ல இருக்கிற முதல் மாடியில தங்கியிருக்கேன்.” “ஐய்யடா.. ப்ளேடு தாங்கல. சித்தார்த் ரம்யா வந்ததும் வராததுமா ஆரம்பிக்காத. பாவம் ரம்யா” “ஓகே தென் சியூ ரம்யா” போய்விட்டான். என் கைகளின் நடுக்கம் இன்னும் நிற்கவில்லை. இஸ் திஸ் கால்ட் அஸ் ப்ளட் ரஷ்? இதற்கும் மேலும் இதயம் துடிக்கமுடியுமா என்பது எனக்கு சந்தேகம் தான்.

நான் கிச்சனை விட்டு வெளியேறினேன். “ஹாய் டாக்டர்” “ஹாய்” “நான் தான் கயலோட அப்பா. பக்கத்திலிருக்கிற காஸ்க்கோவுக்கு போயிருந்தோம். அப்படியே கயலோட கேக்கையும் வாங்கிட்டு வந்தோம். எப்ப வந்தீங்க? டேய் சித்தார்த் இங்க வா.” “எஸ் பாஸ்” “இவங்க தான் டாக்டர் ரம்யா.” “முன்னாடியே தெரியும் பாஸ்” “ஓ முன்னமே தெரியுமா?” “ஐ மீன் கிச்சனில இப்போ தான் பார்த்தேன்” “ஓ ஓகே ஓகே அப்போ அறிமுகம் எல்லாம் முடிஞ்சாச்சு.” “‘ஓக்கே ஹவ் யுவர் டைம்”

அபயாவும் வந்து சேர்ந்தாள். “ஹாய் ரம்யா யாருடி இந்த ஹேண்ட்சம் பாய்?” என்று காதில் கிசுகிசுத்தாள். “கொஞம் வாய மூடறியா. ப்ளீஸ்” “ஹாய் நீங்க?” “நான் தான் அமெரிக்க ஜனாதிபதி. உங்க டாக்டர் சொல்லலியா?” “நோப். அடிப்பாவி அமெரிக்க ஜனாதிபதியப் பத்தி என்கிட்ட சொல்லவேயில்ல. உன்னோட ப்ரண்டா?” “நீங்க யாரு?” “ம்ம் நான் செக்கரட்டரி ஆ·ப் ஸ்டேட்” “ஓகே தென் நைஸ் டு மீட் யு. எப்போ சைனாலருந்து திரும்பி வந்தீங்க?” அபயாதான் சாட்டர் பாக்ஸ்ன்னா, இவன் அதுக்குமேல வாயாடியா இருக்கான். மாறவேயில்ல.

பார்ட்டி முடிஞ்சது. ஐ ·பெல்ட் ஹேப்பி. ஐ ·பெல்ட் ச்சியர்ட். ரொம்ப சந்தோஷமா இருந்தது. சித்தார்த்த மறுபடியும் பார்ப்பேன்னு நான் நினைச்சுக்கூட பாக்கல. ஆங். நான் பார்த்த அந்த அம்மா, சித்தார்த்தோட அம்மா. சட்டென்று திரும்பிப் பார்த்தேன். அவர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். நான் எழுந்து அவரிடம் சென்றேன். “அம்மா என்னை தெரியுதா?” “எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குப்பா. ஆனா சரியா தெரியல” “சித்தார்த் டயரியா வந்து ஹாஸ்பிட்டல்ல இருந்தப்போ ஒரு நாள் வந்து பார்த்தேனே. ரம்யா” “ஆமா ஆமா. நினைவிருக்கு. நீ இங்க என்னம்மா பண்ற?”

சித்தார்த்தோட அப்பாவும் வந்து சேர்ந்தார். சித்தார்த்தின் அப்பாவும் அம்மாவும் கூடவே இருக்காங்க. ஹி இஸ் லக்கி. சித்தார்த்தின் அப்பாவைப் பற்றி எனக்கு முன்னமே ஸ்கூள் படிக்கும் போதே தெரியும். சச் எ லைவ்லி பெர்சன். லைக் சித்தார்த்.

அன்று நானும் அபயாவும் கிளம்பும் வரை அவன் என்னுடன் பேசவே இல்லை. கிளம்புகிறோம் என்றதும், அபயா ஜனாதிபதிகிட்ட சொல்லலையான்னு கேட்டா. அப்புறம் ஜனாதிபதியே எங்களை சென்ட் ஆ·ப் பண்ண வந்தார். அபயாவை காரில் இருக்க சொல்லிவிட்டு, “ரம்யா கேர் ·பார் எ வாக்?” என்றான். நோ என்று நான் சொல்வேனா என்ன?

குளிர். அவன் கைகளை கட்டிக்கொண்டிருந்தான். முகம் கொஞ்சம் மெச்சூர்டாக இருந்தது. கொஞ்சம் அழகாக இருந்தான். க்ரீன் ரவுண்ட் நெக் போட்டிருந்தான். க்ரீம் பேண்ட் போட்டிருந்தான். முடியை மேலிழுத்து சீவியிருந்தான். அளவாக மிசை வைத்திருந்தான். எனக்கு இதயம் புல்லட் ட்ரெயின் போல பறந்தது. அட்ரினலின் படுத்தும் பாடு.

“How are you, Doc?”
“As you see, Geek”

10
(இறுதிப் ப‌குதி)

Re: Re: Re: Hello!?
From: Ramya Rajagopal (ramya_raja81@gomail.com)
Sent: 07 August 2007 03:45AM
To: Muthu (muthu_se@gomail.com)

Hey Muthu,

Gr8! pa. my wedding is in B’lore. i’ll mail u the wedding invitation too. if u can make it that wud be gr8. We r flying to Paris for our honeymoon on 10th sept. If our plan changes i’ll surely make it for ur wedding.

vera enna news? shopping all done or yet to start? am going crazy here shopping.Siddharth is going overboard buying me stuff coz he says he still hasnt come to terms that we r getting married for real and his dream is actually going to turn to reality. He is very cute.

sometimes when u least expect things happen. i was so much in love with him right from the beginning n little did i realize that he too loves me the same way.i was too scared to admit it simple reason being that i cud get rejected. I’ll mail u our pics very soon. U shud meet him he is a very nice person.

seri poren vellai irruku. keep in touch n say hi to —— from us.tk care.

Ramya

From: Ramya Rajagopal
To: Muthu
Sent: Tuesday, February 27, 2007 11:56 AM
Subject: Re: Re: Hello!

hey thanx pa. he is right now here with me as am sending this mail.he is on call. oh! you know we’ve been such good friends for a longtime now suddenly am not being able to talk to him, look at him or hold hands. as friends we used to tease eachother etc now ever since he proposed to me its all so different.

all we’ve been doing since he came here is going out,eating out inspite of the nasty cold weather. he always been the vayadi but now his mouth is totally sealed n i am doing the talking. its me the chatter box now.

seri poren he is staring at me.keep in touch and i’ll be re-locating to India very soon enroute i’ll make sure that we meet u in Singapore.

tk care,
Ramya

—– Original Message —–
From: Ramya Rajagopal
To: Muthu
Sent: Tuesday, February 27, 2007 8:09 AM
Subject: Hello!

Hi Muthu,

Thankx for the wishes. This was a total surprise for me too. He is my childhood friend and we grew up together. I’ve always loved him but never had to guts to confess to him coz wasnt sure how he wud react. I didnt wantto lose my friendship over this.

On Valentine’s day we were having a party at my friend’s apt and all of a sudden he walks in. I am so excited to see him coz for past few days i was trying to reach him n was worried as he always picks up my ph but it drove me nuts. I called home to check on him n they said he is busy. Little did i realize there was a whole consipiracy happening behind my back.

He gives me this huge teddy bear and wishes me for a Valentine’s day and suddenly in total movie style he kneels down and takes the ring from the bear’s fingers(which i didnt notice at all) and proposes. I didnt know how to react i started to cry.he just hugged me and i said yes. Its a dream come true for me and i still cant believe this happened.

Everyone in our family knew he is going to propose except me of course. His name is Siddharth. I’ll mail u the pics of us pretty soon. He is still here.We r getting engaged on March4th.

Avan romba nallavan therima. I am too excited.anyways i’ll keep in touch. Whats news from ur end? Tk care,
Ramya

(முற்றும்)

One thought on “என் உயிர்த் தோழன் (Full)

  1. Once they meet in part 9 and we come to know he’s still a bachelor… the climax could be guessed…. But the emails in part 10 along with the proposal were interesting to read!Any reader would go to a wild guess that Sathya’s hubby could probably be Sidharth since both Muthu & Sidharth studied Computer Science & probably that’s how they became friends. Sathya’s hubby was missing starting from the hospital scene until the very end but it’s the author’s talent to keep that as suspense to make the story more interesting! (Sathya’s hubby’s name was never mentioned throughout the story!)What I liked the most in this story is that a male author could bring into words the feelings of a female so realistically! And how every part ended with a suspense making the reader eager to read the next one!Recently I also happened to read Nazeer & “Yaarum Yaarudanum Illai” on your blog…. Seemed I had somehow missed these treasures earlier. You are really gifted with this talent Muthu… please don’t stop it ever in your life!

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s