ஐ லவ் இளையராஜா -1

ரஹ்மான் ஆஸ்கார் வாங்கியிருக்கிறார் என்பதற்கும் இந்த பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றால் நீங்கள் நம்பித்தானாகவேண்டும். ஏதோ ஏ ஆர் ரஹ்மான் ஆஸ்கார் வாங்கியது பொறுக்காமல் தான் இந்த பதிவை நான் எழுதுகிறேன் என்று நீங்கள் நினைத்துக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பும் அல்ல! 🙂

என்னுடைய அண்ணன் எங்கள் வீட்டில் இருக்கிற எல்லோரது விருப்பப் பாடலையும் கேட்டு அதை ஒரு சீடியில் பதிந்து என் கல்யாணநாள் அன்று ஒலிபரப்பவேண்டும் என்கிற திட்டம் ஒன்றை வைத்திருந்தார். Just for fun. He is a fun packed but a very serious guy. என் கல்யாணம் முடிந்து அவரவர் வீட்டுக்கு அவரக்கா சோத்துக்கு என்று கிளம்பும் முன், ஏர் போர்ட்டில், என் சகலை என் அண்ணனிடம் மொத்தம் எத்தனை luggageங்கன்னு சும்மா செக்பண்றதுக்காக கேட்டார். 1,2,3,4,5,6,7, (அண்ணி) 8, (முதல் குழந்தை) 9, (இரண்டாம் குழந்தை)10 என்று எண்ணி முடித்து மொத்தம் 10 லக்கேஜ்ங்கன்னு அப்பாவியாய் சொன்னார். That was a great timing and that relaxed the situation. எல்லாவற்றையும் PLAN செய்வதில் அவருக்கு இணை அவர் தான். அதையும் வடிவேலு போல “எதையும் plan பண்ணாம பண்ணக்கூடாது!” ன்னு காமெடியாகத்தான் செய்வார். அவர் தான் எனக்கு தமிழ் இலக்கியத்தை அறிமுகம் செய்தார். கி.ராஜநாராயணன், புதுமைப்பித்தன், லாசரா, தி.ஜா என்கிற வேறுவிதமான நூல்களை எனக்கு முதலில் அறிமுகம் செய்தது அவர் தான். அவர் தான் எனக்கு AynRandஇன் எழுத்துக்களை அறிமுகம் செய்துவைத்தார். இன்றைக்குக்கும் zachman frameworkஐ எனக்கு அறிமுகம் செய்துவைப்பதும் அவர்தான். He is a mentor to me. அவரே தான் எனக்கு இளையராஜாவையும் அறிமுகம் செய்து வைத்தது.

என்னிடம் உனக்கு என்ன பாடல் பிடிக்கும் என்றார் என் அண்ணன். நான் சட்டென்று “ஊரு சனம் தூங்கிருச்சு”ன்னு சொன்னேன். இது அவ்வளவு cheerfullஆ இருக்காது. Anything else?ன்னு கேட்டார். இதை எதிர்பார்த்தவன் போல சட்டென நான் “கண்ணே பட்டுக்கவா” பாடலை சொன்னேன். இது போல ஒரு ரொமாண்டிக் பாடல் இனியும் வருமா என்பது சந்தேகமே. என் மனைவி (fiance)யிடம் கேட்டபொழுது அவர் “வெண்ணிலவே வெண்ணிலவே” பாடலை சொல்லியிருக்கிறார். மேலும் என் கஸினிடம் கேட்டபொழுது அவன் நந்தாவிலிருந்து “முன் பனியா முதல் மழையா” சொல்லியிருக்கிறான். என் கஸினின் மனைவி (fiance)யிடம் கேட்டபொழுது அவர் “முன்பே வா அன்பே வா” சொல்லியிருக்கிறார். so என் வயசுள்ள பாப்போ நானும் யூத்துதான்!) அனைவரும் ரஹ்மான் அல்லது யுவன் பாடல்களையே கேட்டிருக்கின்றனர். நான் மட்டுமே இளையராஜா பாடலை கேட்டிருந்தேன்.

நான் ஏழாவது படிக்கும் பொழுது ரோஜா வந்தது என்று நினைக்கிறேன். பாடல்கள் எல்லாம் smash ஹிட். ஹிட்டுன்னா அதுதான் ஹிட். பட்டி தொட்டியெல்லாம் சின்ன சின்ன ஆசை தான். சோட்டி சோட்டி ஆஷாதான். wow புதுவெள்ளை மழையில் அந்த intro எப்படியிருக்கும்! I became an instant fan of Rahman. அப்புறம் வரிசையா ரஹ்மான் sixer தான். காதலன் ஜென்டில் மேன் திருடா திருடா புதிய முகம். I grew up hearing Rahman அண்ட் I was a great fan of Rahman.

அப்பொழுது என் அண்ணன் Swedenஇல் இருந்து வந்து சென்னையில் கொஞ்ச நாள் வேலைபார்த்துக்கொண்டிருந்தார். நான் பணிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு லீவில் இருந்தேன். அண்ணனுடன் சென்னையில் கொஞ்ச நாள் தங்கியிருந்தேன். ஊர் சுற்றுவதுதான் வேலை. ஊர் சுற்றிவிட்டு ஏதாவது நல்ல ஹோட்டலில் சாப்பிடுவோம். பாலாஜி பவன் இட்லி, மௌன்ட் ரோட் அரசப்பர் பிரியாணி, சரவணபவன் கதம்ப சாம்பார், வடபழனியில் கையேந்திபவன் சுடச்சுட இட்லி; தக்காளி சட்னி; ஹா·ப்பாயில், உதயம் தியேட்டர் முன் சிக்கன் சிக்ஸ்டி பைவ்; சிக்கன் ப்ரைட் ரைஸ், சரவணபவன் ·பாஸ்ட் புட் சாம்பார் இட்லி, பிட்சா, அஞ்சப்பர் மேலும் சில ·பைவ் ஸ்டார் ஹோட்டல் என்று பல அறிமுகங்கள் எனக்கு அப்பொழுதுதான் கிடைத்தது. பிறகு புக்ஸ். லேண்ட்மார்க்கையும் அப்பொழுதுதான் முதன் முதலாக பார்த்தேன்.

சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்த பிறகு இரவில் இளையராஜா தான். Absorbing and mesmerizing. ரேடியோக்களில் ஒலிபரப்பப்படும் இளையராஜா பாடல்களை அவ்வப்போது கேட்டு வந்த நான், அன்று தான் த ரியல் கலெக்ஷனைக் கேட்டேன். மறுநாள் அவரது கேசட் கலெக்ஷனை தோண்டிப்பார்த்ததில் 99% இளையராஜா கலைக்ஷன்ஸ். டிக் டிக் டிக் படத்திலிருந்து இது ஒரு நிலா காலம் பாடலும் பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலேவும் என்னை ஆச்சரியப்படுத்தின.

அண்ணன் அமெரிக்காவுக்கு போனதுக்கப்புறம் அவரது கலெக்ஷன்ஸ் அனைத்தும் வீட்டுக்கு வந்தது. அப்பொழுது நான் காலேஜ் ஆரம்பித்திருந்தேன். அந்த கலெக்ஷனில் சிந்து பைரவியும், வைதேகி காத்திருந்தாளும் என் ·பேவரிட். நிறைய நாள் எங்களுடைய ஆட்டோ ரீவைண்டிங் ஐய்வா ப்ளேயரில் அந்த கேசேட் காலைவரை மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டேயிருந்திருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் என்றைக்கு முதல்மரியாதை படம் பார்த்தேனோ அன்றிலிருந்து இளையராஜாவின் தீவிர ரசிகனாகிவிட்டேன். முதல்மரியாதை இளையராஜாவின் மகுடம். பாடல்கள் மட்டுமில்லை அதில் அவரது ரீரெக்காரிங்கும் மிக மிக அருமையாக இருக்கும். பாரதிராஜா நிறைய இடங்களில் வசனத்தை நிறுத்திவிட்டு இசையை உரையாடவைத்திருப்பார். நிறைய சொல்லிக்கொண்டு போகலாம் மோக முள், சிந்துபைரவி, சலங்கை ஒலி, சிறைச்சாலை…

என் அண்ணன் இப்பொழுது பேசிக்கொண்டிருந்தபொழுது ஏ ஆர் ரஹ்மான் இஸ் எக்ஸலண்ட். ஹி டிசர்வ்ஸ் ஆஸ்கார் என்றார். இது உண்மைதான். பிறகு முன்பேவா என் அன்பேவா பாடலைக் குறிப்பிட்டு அதில் வரும் ஹம்மிங் போல இளையராஜா கூட போட்டதில்லை என்றார். இது ரஹ்மான் ஆஸ்கார் வாங்கியதால் அவர் மீது படிந்திருக்கும் மரியாதை மற்றும் அங்கீகாரத்தின் அதீத வெளிப்பாடு. முன்பே வா என் அன்பே வா மிக அற்புதமான பாடல் தான் என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் இதைவிட அருமையான பாடல்கள் இளையராஜாவிடம் உண்டு. பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம் ஒரு எடுத்துக்காட்டு. அதில் வரும் நன்னன்னனனா நன்னன்னனனா என்கிற ஜானகியின் குரலும் கூடவே ஒட்டிக்கொண்டுவரும் இளையராஜாவின் இசையும் மற்றுமொருமுறை கேட்டுப்பாருங்கள்.

இந்த தொடரில் நான் எனக்கு பிடித்த இளையராஜா பாடல்களைப் பற்றி குறிப்பிடப்போகிறேன். பாடல்களை குறிப்பிடுவது மட்டுமில்லாது பாடல்களில் எந்த இடம் பிடித்திருந்தது என்பதையும் குறிப்பிடப்போகிறேன். MP3 cutters நிறைய கிடைக்கிறது. அழகாக கட் செய்து அதை அப்லோட் செய்து அந்த லிங்கை இங்கே கொடுக்கவேண்டும் என்பது ப்ளான்.

இதை ஒரு தொடர் பதிவாகவும் எடுத்துக்கொண்டு நீங்கள் உங்களுக்கு பிடித்தமான இளையராஜா பாடல்களைப் பற்றி பதிவிடவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

update after மாயாவி comment:
தயவு செய்து இந்த பதிவில் ஏ ஆர் ரஹ்மானையும் இளையராஜாவையும் கம்ப்பேர் செய்கிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். அவ்வாறு உங்களுக்கு தோன்றினால் நான் எழுதியதில் ஏதோ தவறிருக்கிறது என்று தான் அர்த்தம். ஒப்பிடும் நோக்கோடு நான் இதை எழுதவரவில்லை. ரஹ்மான் இஸ் எ ஜீனியஸ். அதில் எந்த சந்தேகமும் இல்லை. என்னிடம் ரஹ்மானின் பாடல்கள் அனைத்தும் உண்டு including Delhi-6. Gajinயில் பேக்கா பாடலின் நடுவே திடீரென்று வரும் அந்த ட்ரம்ஸை சிலாகித்து நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். இப்போ கொஞ்ச நாட்களாக இளையராஜாவின் பாடல்களை தொடர்ந்து கேட்டுக்கொண்டு வருகிறேன். கேட்கும் பொழுது மனது குதூகலிக்கிறது. I feel happy. சில இடங்களில் இளையராஜாவே எவ்வளவு பெரிய ரசிகர் என்பது புரிகிறது. He loves music just like us. இதைப் பகிர்ந்துகொள்ளும் நோக்குடனே இந்தப் பதிவு எழுதப்படுகிறது.

14 thoughts on “ஐ லவ் இளையராஜா -1

  1. பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்…. பாடல் கேட்டபடி இதை எழுதுகிறேன்…தொடருங்கள். நானும் தொடர்கிறேன்… ராஜாவின் இசையுடன்..எஸ்.எஸ்

    Like

  2. ennai vitava nee periya raja rasigana?. ennaiya adichchukka aale kidaiyathu. aanalum neenga ennathan solla poringannu pappom.i am waiting for your next post(song).enna patta irukkum…………….

    Like

  3. if u mistake me for me a AR Rahmans fan.. its ok because am i am one. :)sorry to ask u.. have you watched Sachin and Dravid batting.. those are 2 style of batsmen.. so they canot be compared. first of all why should you compare 2 music directors. i dont understand.i serously doubt do u like the music or do u like the music director. whats the problem with us all. they both are 2 music directors of 2 genre who play music. why should you compare??can you please tell me one good reasonfor comparision.?? what have you acheived by this comparision. i would have loved if your post have just speciifed what are all the songs you like. you try to show urself smart by saying nothing bad about ArRahman. will you all please just stop comparing and start enjoying the music from our great tamil misuc directors.sorry if i am offensive. but let us all be proud of the moment and enjoy the great muscians india as produced so far.

    Like

  4. இது கடலை சின்ன டம்ளருக்குள் அடைக்கும் முயற்சி. எத்தனை பாடல்கள்.எனக்கு பிடித்த ராஜாபாடல்களில் சிலமட்டும் உங்கள் விமர்சனத்திற்க்கு.1. அந்திமழை பொழிகிறது2. கண்ணே கலைமானே3. ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணும்4. பொன்மானே கோபம் ஏனோ5. வளையோசை கலகலவென‌6. இதழில் கதை எழுதும் நேரமிது7. இளமை இதோ இதோ8. ஆடல்கலையே தேவன் தந்தது9. நின்னுகோரி வர்ணம்10. சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்11. சுந்தரி கண்ணால் ஒரு சேதி12. அஞ்சலி அஞ்சலி அஞ்சலி13. ராஜா கையை வைச்சா14. என்னைத் தாலாட்ட வருவாளா?15. நான் தேடும் செவந்திப்பூவிதுஇப்பவே கண்ணைக் கட்டுதே இது வெறும் ட்ரைலர் பாடல்கள் தான் மெயின் பாடல்கள் நிறைய உண்டு

    Like

  5. அருமை. ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.என்னுடைய முதல் தெரிவு, ‘பகல் நிலவு’ திரைப்படத்திலிருந்து ‘பூமாலையே தோள் சேரவா’ பாடல். அந்தத் தொடக்க இசைத் துணுக்கு, ஒரு அருவி குதித்தோடும் உணர்வை என்னுள் எப்போதும் உண்டாக்கும்.

    Like

  6. ellorum melody solvanga naan konjam western beat song tharenappappa thitthikkum muttham-Japanil kalyana Raman onnum theriyadha pappa-soorakkottai singakutti adiyei-neengal kettavai sengamalam sirikkuthu-thavanikanavugal kiliye ilankiliye-ratchashan yaar thoorigai thantha oviyam-paparu pattanam parunane raja-neengal kettavaiangam unathangam-nalla thambi azhahaha siritthathu-december pookkalperai sollava-gurukaviriye kavikkuyile/santhana katere-aduttha varisumeendum meendum vaa/enjodi/vanidhamani-vikram rajarajachozhan-rettai val kuruviraja mahal-pillainila ippa ivlo than pirahu innum konjam padal tharuhiren

    Like

  7. நெறைய பேர் தொடர் ஆரம்பிச்சு, தொடராம போயிடறாங்க. :)நீங்க அடிச்சு ஆடுங்க. அட்லீஸ்ட், வாரத்துக்கு ஒரு பாட்டாவது வரட்டும். எந்த பாட்ட எடுத்துக்கிட்டாலும் சரி. ஏன்னா, எல்லாமே முத்துக்கள் 🙂

    Like

  8. என்னை அதிகம் கவர்ந்தவை “ஜாநி” திரைப்பட பாடல்கள் .மனதை மயிலிறகால் வருடுவது போல் இருக்கும் நினைக்கும் போதே .வன்முறைக்கு கூட மெல்லிய இசை கொடுத்திருப்பார் படத்தில்

    Like

  9. எஸ்.எஸ்: :)அனானி: இல்லீங்க‌ண்ணா. உங்க‌ளுக்கு பிடிச்ச‌ பாட‌ல்க‌ளையும் சொல்லுங்க‌ண்ணா.வ‌ந்திய‌த்தேவ‌ன்: ந‌ல்ல‌ க‌லெக்ஷ‌ன். இந்த‌ப் பாட‌ல்க‌ளும் வ‌ரும்.இந்திய‌ன்: என‌க்கும் தொட‌க்க‌ இசை ரொம்ப‌வும் பிடிக்கும். ஷ‌பி: என‌க்கு யார் தூரிகை த‌ந்த‌ ஓவிய‌ம் ரொம்ப‌வும் பிடிக்கும். என்னுடைய‌ லிஸ்டில் இதுவும் இருக்கிற‌து.ச‌ர்வேச‌ன்: எழுத‌னும்னு தான் ஆசை. எழுதுவேன்.பூங்குழ‌லி: ஜானி ப‌ட‌ப் பாட‌ல்க‌ளும் ச‌ரி இசையும் ச‌ரி மிக‌ புதுமையான‌வை. ஜானி இல்லாம‌லா?புருனோ: கோபுர‌வாச‌லிலேவில் அனேக‌மாக எல்லாப்பாட‌ல்க‌ளும் என‌க்கு பிடிக்கும். கேள‌டி என் பாவையே, காத‌ல் க‌விதைக‌ள் ப‌டித்திடும் நேர‌ம் எல்லாமே தூள்.

    Like

  10. ILayaraja’s music embraces our VERY SOUL. மனசை என்னவோ செய்யும். Few music makes u tapFew pass above that observe its intellectual nuances.Very few gets past to get on to our very soul. IR’s music .. is magical.regarding comparing arr or anyone else with ir,lemme just finish it off saying.dont compare apples and oranges, let ppl chose their own based on their needs.AFter every flavour is unique

    Like

  11. hai friends hey guys dont compare to god and nowadays samiyargal (like nithyananda) the god is Illayaraja and the samiyar is A.R.R ok because he theft all the musics from western and arab area songs ok. you go and search at youtube copy cat ARR and listen that where he took all the songs.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s