மாசற்ற கொடி தலையைக்குணியும் தாமரையே பாடல் ரீதிகௌள ராகம் என்று சொல்லியிருக்கிறார். இசையின்பம் தன் பதிவில் ராகத்தைக் கண்டுபிடிக்க பிற பாடல்களின் ராகங்களை தெரிந்துகொண்டு அந்தப் பாடலையும் இந்தப்பாடலையும் கம்பேர் செய்யவேண்டும் என்றார். மாசற்ற கொடி கண்கள் இரண்டால் பாடலும் இதே ராகம் தான் என்கிறார். தலையைக் குணியும் தாமரையேவும் கண்கள் இரண்டாலும் ஒரே ராகத்திலா இருக்கிறது? இருப்பது போலவும் இருக்கிறது. இல்லாதது போலவும் இருக்கிறது.
அது என்ன ரீதிகௌள ராகம்? ஏன் இப்படி பெயர்? ராகங்கள் தெரிந்துகொள்ள ஏதாவது சைட் (வெப் சைட்ட சொன்னேம்ப்பா! நீங்க வேற!) இருக்கிறதா என்ன? இருந்தால் சொல்லவும்.
*
ராகம் எப்படியோ, மாசற்ற கொடி பெயர் நன்றாக இருக்கிறது. மாசற்ற கொடி! எப்படி பிடிக்கிறாங்க பாருங்க? எனக்கு பிடித்த மற்ற ப்ளாகர்களின் பெயர்கள்:
இட்லிவடை
பினாத்தல்
கப்பிப்பய
வெட்டிப்பயல்
ஒன்றுமில்லை (நிர்மல் இப்பொழுது ஏன் பதிவதே இல்லை? இல்லை ஜாகை மாற்றிவிட்டாரா?)
பொட்டீக்கடை (டீ க்கு மட்டும் “” போட்டிருப்பது!)
செந்தழல ரவி (செந்தழல்!)
சர்வேசன் (அவருடைய லோகோவும்)
வால் பையன்
அபி அப்பா
இன்னும் நிறைய அப்பப்போ பாக்கிறப்போ தோணும், இப்போ ஞாபகம் வரல.
*
அபி அப்பா அபியும் நானும் படம் வந்து ரொம்ப நாள் கழித்து படம் பற்றி விமர்சனம் எழுதியிருந்தார். நிறைய விமர்சனங்களைப் படித்துவிட்டு சரி அபி அப்பா அபியின் அப்பாவாச்சே, அபியும் நானும் பற்றி என்ன எழுதியிருக்கிறார் என்று படிக்கப் போனேன், படித்து முடித்து விட்டு, கீழே பின்னூட்டங்களையும் வாசிக்கும் பொழுது என்னையும் அறியாமல் நான் சிரித்து விட்டேன்.
அந்த பின்னூட்டம்: என்னது காந்தி செத்துட்டாரா?
அபி அப்பா, கேலிபண்றதுக்காக எழுதல, தப்பா நினைச்சுக்காதீங்க. இந்த மாதிரி பின்னூட்டக்காரர்களுக்கு பயந்துட்டேதான் நிறைய எழுதாம விட்டுட வேண்டியிருக்கு. நமக்கு ஒரு விசயம் தெரிந்து அதை எழுதனும்னு தோணுறப்போ, பதிவுலகமே அந்த விசயத்தை நார்நாரா கிழிச்சு காயப்போட்றாங்க!
அதனால தான் இப்போ படம் விமர்சனம் எல்லாம் நான் எழுதறதேயில்ல. முன்ன பேச்சுலரா இருந்தப்போ படம் பாக்குறது ஒன்னு தான் தொழில். எந்த மொக்கப் படமா இருந்தாலும் தயங்காம போய் பாத்திட்டு வந்து பதிவு போடுவோம். இப்போ குடும்பம் பெருத்துப்போச்சு. நான் சிறுத்துப்போயிட்டேன்.
அப்படியும் அப்பப்போ படம் பாத்துடறேன். கடைசியாக பாத்த படம் க்ரான் டொரினோ.
செந்தில் எனக்கு பிடித்த பதிவர், அவருடைய இந்த பதிவு கண்டிப்பாக உங்களையும் சிரிக்கச்செய்யும்.
*
சும்மா தமிழ்நாடு அரசு பள்ளிகளைப் பற்றித் தேடிக்கொண்டிருந்த பொழுது இந்த http://www.coimbatoregovtschools.com வெப் சைட் கிடைத்தது. நல்ல முயற்சி. முதலில் பெற்றோர்களுக்கான வெப் சைட் என்று தான் நினைத்தேன். அப்புறம் வெப் சைட் மூலம் பிள்ளைகளின் கல்வித் திறனைத் தெரிந்துகொள்ளக்கூடிய பெற்றோர்கள் எதற்காக அரசு பள்ளிகளில் சேர்க்கப்போகிறார்கள் என்கிற உண்மை பிறகு தான் உணர்ந்தேன். இந்த வெப் சைட் நன்கொடைகளை நோக்கியே நிறுவப்பட்டிருக்கிறது. இதில் இருக்கும் பள்ளிகளின் இன்ஃப்ரா ஸ்ட்ரக்ச்சர் நிலைமைகளையும் தெரிந்துகொள்ளலாம். எப்படி இருந்தாலும் இது ஒரு நல்ல முயற்சியே.
நன்கொடைகளை எதிர்பார்த்து நிற்கினறனவா அரசு பள்ளிகள்? ஆசிரியர்களின் சம்பளம் மட்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்துகொண்டு போகும் பொழுது ஏன் பள்ளிகளின் தரத்தையும் அரசு உயர்த்த முன் வரக்கூடாது?
ஹிந்துவில் வெளிவந்த இந்த செய்தியும் என் கண்ணில் பட்டது.
*