மக்கள் இன்னமும் புத்தகங்கள் படிக்கிறார்கள்!

சில சமயங்களில் பதிவிடும் போது, தினமும் ஒரு பதிவிட எப்படியும் வாய்த்துவிடும். சில சமயங்களில் வாரக்கணக்கில் ஒரு பதிவு கூட எழுதாமல் விட்டுவிடுவோம். எழுத ஏதும் கிடைக்கவில்லை என்கிற அர்த்தம் இல்லை. நேரம் கிடைக்காதது ஒரு காரணமாக இருந்தபொழுதிலும், சும்மா இருப்பதே சுகம் என்று இருக்கும் ஒரு மனநிலை தான் காரணம். திடீரென்று ஒரு நாள் எழுத ஆரம்பித்தால், பதிவுகள், ரயில் பெட்டிகள் போல ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து வந்துகொண்டிருக்கும்.

ஒரு புத்தகத்தை முழுதாக வாசித்து நிறைய நாட்கள் ஆகிறது. புத்தகத்தை எடுத்து படித்தே நிறைய நாட்கள் ஆகிறது. பஸ்ஸிலோ ரயிலிலோ அல்லது ஏதாவது ஒரு விசயத்துக்காக காத்திருப்பின் பொழுதோ அருகில் யாரேனும் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தால் வயித்தெரிச்சல் தான் வருகிறது. நான் ஐ·போன் வைத்திருக்கிறேன். நீங்கள் கடும் வெயிலையும் பனிபொழிவையும் ஒரு சேர பார்த்திருக்கிறீர்களா? நான் பார்த்ததில்லை. நீங்களும் பார்த்திருக்கமாட்டீர்கள் என்றே நினைக்கிறேன். அது போன்ற ஒரு விசயம் தான் இந்த ஐ·போன். முட்டாள்தனமான ஆனால் அதே சமயத்தில் மிகச்சிறந்த device இதுதான். ஐ·போனில் நான் ரசிக்கும் விசயம் : Multi zoom. கடந்த சில ஆண்டுகளாக நான் நிறைய PDAக்கள் மாற்றி மாற்றி வைத்திருந்திருக்கிறேன். HPiPAQ, O2 மற்றும் Black Berry. என் நண்பர்கள் சிலர் HT, dopod,Nokia E series மற்றும் ஆம்னியாக்கள் வைத்திருப்பதையும் பார்த்திருக்கிறேன். ஆனால் மேலே சொன்ன ஒரு PDAவில் கூட ஐ·போனில் இருக்கும் அளவுக்கு வசதியாக internet browse செய்ய முடியாது. எம்.எம்.எஸ், எஸ்.எம்.எஸ் ·பார்வேர்ட் செய்ய முடியாதது போன்ற விசயங்கள் எனக்கு ஒரு பொருட்டேஅல்ல. I need browsing; that is realy fantastic in iPhone.

ஐ·போன் வாங்கிய பிறகு (அக்ச்சுவலா ஐ·போன் என் மனைவிக்குத் தான் வாங்கினேன்!) ஏனோ புத்தகம் எடுத்துச்செல்வதில்லை. என் நண்பர்கள் அடித்த கமெண்ட்: முன்பெல்லாம் முத்துவோட பையில புத்தகம் இருக்கும்; இப்போ காலை சாப்பாடு, மதிய சாப்பாடு என்று பைய திறந்தா ஒரே டப்பாக்கள் மயமா இருக்கு! உண்மைதான். ஆனால் புத்தகம் எடுத்துச்செல்லாமல் இருப்பதற்கு பையில் இடமில்லாதது காரணம் இல்லை. மனமிருந்தால் மார்க்கபந்து! எடுத்துச்செல்ல விருப்பமில்லாததே காரணம். ஐ·போனில் என் கூகிள் ரீடரைத் திறந்தால், நேரம் போவதே தெரியாது. அதற்கப்புறம் இருக்கவே இருக்கிறது டிவிட்டர். அதற்குள்ளாக ஆபீஸ் வந்துவிடும். அப்புறம் மீண்டும் வீடு திரும்பும் போது அதே ரீடர் மற்றும் டிவிட்டர். ஐ மிஸ் மை புக்ஸ்.

இன்று ஆபிஸிலிருந்து வீட்டுக்கு MRTயில் வந்துகொண்டிருக்கும் பொழுது, என் அருகே நின்றிருந்த ஒரு நபர் ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தார். என்னிடம் ஒரு கெட்ட பழக்கமிருக்கிறது. அநேகமாக புத்தக பிரியர்கள் அனைவருக்குமே இந்த நோய் இருக்கும் என்று நினைக்கிறேன். பக்கத்தில் படித்துக்கொண்டிருக்கும் நபர் என்ன புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறார் என்று தெரிந்துகொள்ளாவிட்டால் எங்களுக்கு மண்டை வெடித்து சுக்குநூறாகிவிடும். நானும் எவ்வளவோ முயற்சி செய்தேன். அப்பொழுது தான் கவனித்தேன் அந்த நபருக்கு அருகில் பின்னால் நின்றுகொண்டிருந்த ஒரு நபர் சீரியஸாக எட்டிப்பார்த்து அந்த நபர் திறந்துவைத்திருக்கும் பக்கங்களை ஓசியாக படித்துக்கொண்டிருந்தார். He must be very bored. கடைசியாக என் பிரயத்தனங்களை பார்த்து பாவப்பட்ட அந்த நபர், சும்மா ரிலாக்ஸ்டாக புத்தகத்தை மடிப்பது போல மடித்து எனக்கு அந்த புத்தகத்தின் தலைப்பைக் காட்டினார். One night at a call center.

அந்த நபர் படித்துக்கொண்டிருக்கும் பொழுது நான் அவரின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். புத்தகம் படிக்கும் பொழுது வாசிப்பவரின் முகபாவனைகளை எனக்கு ரசிக்கப்பிடிக்கும். நான் எழுதிய கதைகளை என் நண்பர்களுக்கு படிக்க கொடுக்கும் பொழுது, அருகில் உட்கார்ந்து அவர்களின் முக மாற்றங்களை கவனித்துக்கொண்டிருப்பேன். பெரும்பாலும் அவர்களது முகம் ஏதோ மலச்சிக்கலில் மாட்டிக்கொண்டிருப்பதைப் போன்றே இருக்கும். ஆனால் இந்த நபர் பல்வேறு உணர்ச்சிகளை காட்டிக்கொண்டிருந்தார். சிரிப்பு. வெட்கம். சிரிப்பு கலந்த வெட்கம். அவர் வாசித்தலை பறிபூரணமாக ரசித்துக்கொண்டிருந்தார்.

ஐ·போன்களும் கின்டில்களும் Audio Booksஉம் வந்துவிட்ட பிறகும் மக்கள் இன்னமும் பேப்பர் புத்தகங்களை படித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

5 thoughts on “மக்கள் இன்னமும் புத்தகங்கள் படிக்கிறார்கள்!

  1. //ஐ·போன்களும் கின்டில்களும் Audio Booksஉம் வந்துவிட்ட பிறகும் மக்கள் இன்னமும் பேப்பர் புத்தகங்களை படித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.//பேப்பர் புத்தகங்களை படிக்கும் போது ஏற்படும் நெருக்கம் மற்ற mediumகளில் எனக்கு இருந்ததில்லை.

    Like

  2. ஞான‌சேக‌ர‌ன்: ம்ம்..ஆமாம்நிம‌ல்: என‌க்கும் அப்படித்தான். பேப்ப‌ர் புத்த‌க‌ங்க‌ளின் வாசனையே த‌னிதான்.

    Like

  3. புத்தகங்களை கையில் வைத்திருக்கும் போது மற்ற மின் சாதனங்களில் வராத ஒரு தெம்பான உணர்வு மனதில் வருகிறது. அது மட்டுமல்லாமல் புத்தகத்தை கையில் வைத்து படித்தால் வீட்டில் கொஞ்சம் மரியாதையாய் பார்கிறார்கள் வேறு வேலைகள் எதுவும் செய்ய சொல்வதில்லை . மற்ற மின் சாதனங்களை வைத்து நாம் படித்து கொண்டிருந்தாலும் அதில் ஏதோ படம் பார்த்து கொண்டிருப்பதாக நினைக்கிறார்கள்

    Like

  4. சுகுமார்: சோ வேலையில‌ருந்து த‌ப்பிக்க‌ புத்த‌க‌த்தை யூஸ் ப‌ண்றீங்க‌?!

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s