ஹோட்டல்கலில் இட்லி தோசை மற்றும் புரோட்டா ஐட்டங்களை பார்சல் செய்பவர்களைப் பார்த்ததுண்டா? பார்சல் டோக்கன் வாங்கிக்கொண்டு தனியாக, அருகில் இருக்கும் டேபிளிலோ அல்லது சுவற்றில் சாய்ந்துகொண்டோ பலமுறை நான் அவர்களைக் கூர்ந்து கவனித்திருக்கிறேன். ஏனோ அவர்கள் பறபறவென்றே வேலை செய்வார்கள். சட்னி கட்டிக்கொடுப்பவர்கள் ஆகட்டும், சாம்பார் கட்டுபவர்கள் ஆகட்டும், இட்லி தோசை கட்டுபவர்களாகட்டும், ஒவ்வொருவரிடமும் அதே அவசரம் தெரியும். ஏதோ இந்த நிமிடத்தில் இத்தனை இட்லிகள் பார்சல் செய்யாவிட்டால் தட்டிலிருக்கும் இட்லிகள் அத்தனையையும் கடோத்கஜன் வந்து தின்று தீர்த்துவிடுவான் என்பது போல அவர்களது அவசரம் இருக்கும்.
இன்றும் முஸ்தபாவுக்கு எதிரே இருக்கும் ஆனந்தபவனில் நான்கு இட்லி மற்றும் இரண்டு தோசைகள் பார்சல் சொல்லிவிட்டு என்னுடைய டோக்கன் நம்பர் ஸ்கிரீனில் தெரியும் வரை, அவர்களை தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். எல்லோரிடமும் அதே அவசரம். இத்தனைக்கும் கூட்டம் அதிகம் இருக்கவில்லை. பிறகும் ஏன் இந்த அவசரம்? பெரும்பாலும் சட்னி கட்டுபவர்களுக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் இருக்கிறது. அது ஒரே பார்சலா அல்லது எத்தனை பார்சல்கள் என்பதே.
இதே போல ஒரு அவசரத்தை நான் காலேஜில் கம்ப்யூட்டர் லேப் அசிஸ்டென்ட்களிடம் தான் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறை கமாண்ட்லைனில் அவர்கள் ஏதோ ஒரு கமாண்ட் டைப் செய்யும் போதும், ஏதோ நியூக்ளியர் பாம் ஒன்றை டிஸ்அஸம்பிள் செய்வது போல அவ்வளவு அவரமாக டைப் செய்வார்கள். சிலர் எக்கோ கமாண்ட் போட்டுவிட்டு, டைப் செய்வது திரையில் தெரியாதவாறு பார்த்துக்கொள்வார்கள். என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என்று நாம் உணர்ந்துகொள்வதற்குள் எல்லாம் நடந்து முடிந்திருக்கும். எல்லாம் சரியாகிவிட்டது என்பது போல பெருமையாக ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றுவிடுவார் லேப் அஸிஸ்டண்ட்.
டெவலப்பர்ஸ் கூட தங்களுக்கு தெரிந்த queryக்களை டைப் செய்யும் பொழுது அதி வேகமாக டைப் செய்வதை பார்த்திருக்கிறேன். I think people do things faster, to proove their mastery. சரியா?
பார்சல் கட்டும் போது நாம் கூர்ந்து அவர்களையே கவனித்து கொண்டே இருப்பதால்,,,, இவனை எப்படியாவது சீக்கிரம் அனுப்பிடனும் என வேகம் வருகிறதோ ?
LikeLike
சுகுமார்: இருந்தாலும் இருக்கும். அழகான பொண்ணு முன்னாடி வந்து நின்னதுன்னா? அப்ப இன்னும் அதி வேகமா பார்சல் கட்டுவாங்கன்னு நினைக்கிறேன்
LikeLike