இந்த நூற்றாண்டின் சிறந்த கண்டுபிடிப்பாக எதைக்கூறுவீர்கள் என்று என்னிடம் கேட்டால் நான் சொல்வது: Blog. Blog வருவதற்கு முன்னரும் Personal பக்கங்கள் இருக்கத்தான் செய்தன என்றாலும், அவ்வாறான பக்கங்களை உருவாக்குவது தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கே சாத்தியமாக இருந்தது. Learning HTML was a very big hurdle. இப்பொழுது அந்த தடை நீங்கிவிட்டதால் சொந்த பக்கங்களை வைத்துக்கொள்வது மிக மிக எளிதாகிவிட்டது. தமிழ்வாத்தியார்கள் தமிழ் எழுத்தாளர்கள் எல்லாம் blog வைத்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். ஒரு நாள் என் அண்ணியிடமிருந்து ஒரு மெயில். என்னுடைய அண்ணன் மகள்களுக்கு புதிய ப்ளாக் ஆரம்பித்திருப்பதாக. அவர்கள் வரையும் படங்களை பகிர்ந்துகொள்வதற்கு blog உதவியாக இருக்கிறது. இந்த ப்ளாக் என்கிற கான்சப்ட் வராமல் இருந்திருந்தால், அவர்கள் உலகத்துடன் படங்களை பகிர்ந்துகொள்வது கண்டிப்பாக சாத்தியப்பட்டிருக்காது. Moreover, when someone is listening, when you know there is an audience, your creativity increases exponentially.
*
சில வருடங்களுக்கு முன்னர் வரை நிறைய software magazines ப்ரிண்ட் செய்யப்பட்டுக்கொண்டிருந்தன. திடீரென்று அவையெல்லாம் மாயமாக மறைந்துவிட்டன. கொஞ்சம் கொஞ்சமாக இந்த Programmer’s Magazine culture அழிந்துகொண்டுவருகிறது. Software Magazine was absorbed by Dr.Dobb’s Portal. ASP.NETPro இப்பொழுது இலவசமாக PDF உருவில் கிடைக்கிறது. I am going to unsubscribe CODE magazine. இருக்கிற blogகளை follow ( ?! 😦 ) செய்வதே மிகக்கடினமாக இருக்கிறது.
*
இரண்டு புத்தகங்கள் வாங்கினேன். அரவிந்த் அடிகா எழுதிய The White Tiger மற்றும் Jiang Rong எழுதிய Wolf Totem. The White Tigerஐ ஒரே மூச்சில் படித்துமுடித்தேன். I cannot put it down. மேலும் அவர் நடையில் இருந்த நக்கலை மிகவும் ரசித்துப்படித்தேன். சல்மான் ருஷ்டியிடம் தான் இந்த எழுத்து நடையை நான் வாசித்திருக்கிறேன். அவருக்கு பிறகு இந்தியர்களையும் அவர்களது வாழ்க்கையையும் இவ்வளவு நுனுக்கமாக யாரும் நக்கலடிக்கவில்லை என்றே நினைக்கிறேன். I liked “the minister’s sidekick” என்கிற கதாப்பாத்திரம். ஒரு சாப்டரில் சைட்கிக் (அல்லக்கை) என்று சொல்லிவிட்டால், அவர் அடுத்து வரும் அனைத்து சாப்டர்களிலும் சைட்கிக் தான். முதல் சாப்டரில் சொல்லிவிட்டு பத்தொன்பதாவது சாப்டரில் அவரை பற்றிக்கூறும் பொழுதும் சைட்கிக் தான். மேலும் Rooster Camp மிக அற்புதமான ஒரு உதாரணம். நன் ஹிந்து மதத்தில் எத்தனை கடவுள்கள் இருக்கிறார்கள்? 30,000,000 கடவுள்களா? இருக்கும்ல. காட்பாடில ஆரம்பிச்சு கட்பாடிவரை எண்ணுனோமினா கூடவே வரும். தமிழர்களை நீக்ரோக்கள் என்று சொன்னது வேண்டுமானால் தமிழன் என்கிற முறையில் வருத்தமாக இருந்தது. ஆனால் உக்காந்து யோசிக்கும் பொழுது, நீக்ரோக்கள் சொந்தமண்ணைச்சேர்ந்த மக்கள் என்கிற பொருள் தருவதாயின், தமிழர்கள் நீக்ரோக்கள் என்பது சந்தோஷமே. என் நண்பர் ஒருவருக்கு (இந்தியர்களையும் இந்தியர்களின் அட்ஜஸ்ட் கரோ யார் என்கிற கொள்கையும் வெகுவாக நக்கலடிப்பவர்) forward செய்து வைத்தேன். நாவல்களை படித்திராத அவர், இந்த நாவலை இரண்டே நாட்களில் படித்து முடித்தார். அவ்வளவு உண்மை. இந்த புத்தகத்தை கல்லூரிகளில் பாடமாக வைக்கவேண்டும். பிறிதொரு நாள் இந்த புத்தகத்தைப் பற்றி ஒரு தனிபதிவிடவேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது.
*
Wolf Totem. Totem என்கிற வார்த்தையை இதற்கு முன்னர் நான் கேள்விப்பட்டதில்லை. Totem என்பது என்னவென்று தெரியாமலே தான் இந்தப் புத்தகத்தை நான் வாங்கினேன். பிறகு encyclopediaவில் தேடியபொழுது காவல் தெய்வங்கள் என்கிற தோராயமான பொருள் வருவது தெரிந்தது. நம்ம ஊர்ல கருப்பசாமி தூண் இருப்பது போல.
முதல் அறுபது பக்கங்கள் படித்துமுடித்திருக்கிறேன். கிட்டத்தட்ட நேஷனல் ஜியோகராபியில் ஒரு த்ரில்லான டாக்குமென்டரி பார்த்தது போல ஒரு உணர்வு. ஓநாய்களின் வேட்டைத்திறனை அற்புதமாக எடுத்துச்சொல்லியிருக்கிறார் எழுத்தாளர்.
*
மங்கோலியாவின் ஒரு பகுதியில் பனி படர்ந்து வருகிறது. அந்த மலையின் ஒரு புறம் காற்று எப்பொழுதும் அழுத்தமாக வீசிக்கொண்டிருக்கும். அதனால் பனி படர்ந்து தங்குவதில்லை. அங்கிருக்கும் புல்வெளி எப்பொழுதும் பனியிலிருந்து தப்பித்துவிடும். ஆனால் மலையின் மறுபுறம் காற்று அவ்வளவாக வீசாத காரணத்தால் பனி ஒரு ஆள் உயரத்துக்கு கூட சேர்ந்துவிடும். பனியினால் மலையில் புல்வெளி மீதம் இருக்கும் இந்தப்பகுதியில் மான்கள் இரைதேட வந்துவிடும். நீண்டநாட்கள் புற்களைப் பார்க்காமல் பயணம் செய்த இந்த மான்கள் ஒரே சமயத்தில் பச்சைப் பசுமையாக இவ்வளவு புற்களைப் பார்த்தபிறகு வாய் ஓயாமல் சாப்பிட ஆரம்பிக்கும். ஒநாய்கள் மான்களை மோப்பம் பிடித்துவிடும். ஆனால் உடனடியாக வேட்டையாடிவிடாது. காத்திருக்கும். மான்கள் புற்களைத் தின்று வயிற்றை நிறப்பும் வரையிலும் காத்திருக்கும். இரை கிடைத்த சந்தோஷத்தில் மான்களும் புற்களை வயிறு வெடிக்கும் அளவிற்கு தின்னும். ஓநாய்கள் மிகத்தந்திரமானவை. நரிகள் தான் தந்திரமானவை என்று பாடங்களில் படித்திருக்கிறோம். ஆனால் அது மிகப்பெரிய பொய். தந்திரம் என்பதை விட ஓநாய்களைப் போல திட்டமிட வேறு எந்த உயிரினத்துக்கும் தெரியாது. மனிதனே மிக தந்திரமான போர் தந்திரங்களை ஓநாய்களிடமிருந்துதான் கற்றுக்கொண்டிருக்கிறான். மான்களை வேட்டையாட ஓநாய்கள் அதிகாலை நேரத்தைத்தான் தேர்ந்தெடுக்கும். இரவுமுழுவதும் தூங்கிவிட்டு சிறுநீர்கழிக்காமல் படுத்திருக்கும் மான்கள். அந்த நேரத்தில் ஓநாய்களை அவற்றை வேட்டையாடும் பொழுது அவற்றால் நீன்ட தூரம் ஓட இயலாது. உண்மைதான். வெகுசில கிழமான்கள் மட்டுமே தூக்கத்தின் நடுவே எழுந்து சிறுநீர்கழித்துக்கொள்ளும். மேலும் அதே ஒரு சில கிழமான்கள் மட்டுமே, புற்களை வயிறு முட்ட தின்னாது. அல்·பா மேல்(Alpha Male) எனப்படும் ஓநாய்களின் தலைவன் உண்டுவிட்டு கலைத்திருக்கும் மான்களை வேட்டையாட பாதி வட்டமாய் தன் சகாக்களை நிறுத்திக்கொண்டு அந்த சரியான தருணத்திற்காக காத்திருப்பான். தருணம் எட்டியவுடன் வேட்டை துவங்கும் பொழுது மான்களுக்கு தாங்கள் செய்துவிட்ட தவறு புரிந்திருக்கும். ஆனால் இந்தப்பாடம் அவைகளுக்கு மிக மிக காஸ்ட்லி.
wolf totemஇல் கொடுக்கப்பட்டிருக்கும் ஓநாய்களின் வேட்டைத்திறனின் ஒரு சாராம்சம் இது. படித்துக்கொண்டிருக்கிறேன்.
*
நேஷனல் ஜியோகர·பியில் சிறுத்தை மான்களை வேட்டையாடுவதை வழக்கம்போல காட்டிக்கொண்டிருந்தார்கள். எத்தனை முறை இதைப் பார்த்தாலும் நமக்கு இது போர் அடிப்பதே இல்லை. அதே ஆச்சரியமான அகல விரித்த கண்களுடனே தான் நாம் இப்பொழுதும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். மான்களுக்காக நான் கவலையெல்லாம் படப்போவதில்லை. இந்தமுறை நான் பார்த்தபொழுது ஒரு விசயத்தை கூர்ந்து கவனித்தேன். சிறுத்தை தான் அதிவேகமாக ஓடும் சக்திபடைத்தது. ஆனால் பார்த்திருக்கிறீர்களா, அவை வேட்டையாடும் பொழுது, டப்பென்று எகிறிகுதித்து ஓடுவதில்லை. அதிவேகமாக ஓடும் சிறுத்தை கூட பம்மி பம்மி தான் தனது வேட்டையை துவக்குகிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது? (நீ வேலைவெட்டி இல்லாம சும்மா உக்காந்து டீவி பார்த்துகிட்டிருக்குறன்னு தெரியுது) சும்மாவா திருவள்ளுவர் சொல்லியிருக்கார்:
(அறத்துப்பாலில் பம்மல் அதிகாரத்தில் ஒன்பதாவது குறள்)
பம்முவார் பம்மாதார் பம்மாவிடில் சட்டென
பம்மி பயன்பெ றுவார்.
சிறுத்தைகிட்டருந்து கத்துக்கோங்கப்பா.
*
//இந்த நூற்றாண்டின் சிறந்த கண்டுபிடிப்பாக எதைக்கூறுவீர்கள் என்று என்னிடம் கேட்டால் நான் சொல்வது: Blog//ஆம்ம்ம்ம்ம்ம்ம்
LikeLike
* எனக்கும் இப்போ ஒயிட் டைகர் படிக்க ஆர்வம் எழுந்துள்ளது * மான் கதை அருமை . தகவலுக்கு நன்றி * தலைவா, அப்புறம் ஒரு சந்தேகம் … இந்த நூற்றாண்டு முடிய இன்னும் தொண்ணூறு ஆண்டுகள் இருக்கும் நிலையில் … அதற்குள் சிறந்த கண்டுபிடிப்பாக பளாக்- ஐ எப்படி சொல்கிறீர்கள் … இன்னும் கற்பனைக்கு எட்டாத அறிவியல் அதிசயங்கள் வரும் அல்லவா… படைப்புகளை இன்னுமமும் சிறப்பாகவும் வசதியாகவும் வெளியிடும் கான்செப்ப்டுகள் வரக்கூடும் அல்லவா…?
LikeLike
அண்ணே உங்கள் அண்ணன் குழந்தைகளின் ப்ளாக் இல் அவர்களது படைப்புகள் நன்றாக உள்ளது. அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
LikeLike
ஞானசேகரன்: :)சுகுமார்: வைட் டைகர் கண்டிப்பாக படிங்க. கண்டிப்பாக நீங்கள் சொல்வது போல வேறு ஏதாவது அரிய கண்டுபிடிப்புகள் வரத்தான் செய்யும். அவற்றுள் ஒன்றாக கண்டிப்பாக ப்ளாக் எப்பொழுதும் இருக்கும். நீங்களே குழந்தைகளிடம் உங்களின் வாழ்த்துக்களை சொல்லுங்களேன்.
LikeLike