எனக்கு ஒரு கனவு இருக்கிறது. அது குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி கிராமப்புற மக்களுக்கு கொடுக்கவேண்டும் என்பது.
நான் சில அரசு பள்ளிகளுக்கு சென்றிருக்கிறேன். வகுப்பில் ப்ளாக் போர்டு, டேபிள், சாக்பீஸ் போன்ற விசயங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் வாத்தியார் இல்லாமல் இருக்கலாமா? அதை விட கொடுமை வேறு என்ன இருக்கமுடியும்? நிறைய அரசு பள்ளிகள் அப்படித்தான் இருக்கின்றன. நான் எல்லா ஆசிரியர்களையும் சொல்லவில்லை. பல நல்ல ஆசிரியர்கள் இருக்கிறார்கள். நான் அவர்களைக் காயப்படுத்த விரும்பவில்லை. ஆனால் வகுப்புக்கு வந்துவிட்டு மாணவர்களை அவர்களாகவே பாடம் படித்துக்கொள்ளச்சொல்லிவிட்டு தூங்கும் ஆசிரியர்களைப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் குக்கிராமங்களில் தான் இது போல நடக்கின்றன என்று நினைக்கிறேன். மொத்த பள்ளிக்கும் ஒரே ஆசிரியர் தான் இருப்பார். மிஞ்சிப்போனால் இருவர் அல்லது மூவர். மூவர் இருந்தாலும், பெரும்பாலும் மூவரும் வருவதில்லை. சொல்லிவைத்துக்கொண்டு லீவு போட்டு விடுகிறார்கள். அல்லது பெர்மிசன் என்கிற பெயரில் மதியம் கிளம்பிவிடுகிறார்கள். டிஇஓ திடீர் விசிட் அடித்தால் மட்டும் அவர் என்ன செய்யப்போகிறார்? வேலை பார்க்கும் நமக்கு மனசாட்சி வேண்டும். சம்பளம் வாங்குகிறோமா இல்லையா?
ஆசிரியராக இருந்துகொண்டு மாணவர்களுக்கு சரியாக பாடம் சொல்லிக்கொடுக்காமல் இருப்பது பெரும் துரோகம். அந்த ஏழை அறியா மாணவர்களுக்கு நீங்களும் பாடம் சொல்லிக்கொடுக்கவில்லையென்றால் யார் தான் சொல்லிக்கொடுப்பார்கள்? இங்கே பணிரெண்டாம் வகுப்புக்கு கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ், மாத்ஸ் பாடம் எடுக்க வேண்டிய ஆசிரியர்களைப் பற்றி நான் சொல்லவில்லை. அதெல்லாம் அடுத்த லெவல். இதுவும் தவறு தான் என்றாலும் பணிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எப்படியோ படித்துக்கொள்ளத் தெரியும். அவர்களுக்கு புரிந்துகொள்கிற வயது. ஆனால் பச்சிளம் குழந்தைகள்? They need a good start.
சம்பளம் போதவில்லையா? I dont think so.
இப்படி இருக்கும் பொழுது செய்யும் வேலையில் மட்டும் ஏன் தொய்வு? ஆசிரியராக இருந்துகொண்டு நீங்கள் என்னென்ன செய்யலாம்? எப்படி எப்படி பாடம் எடுக்கலாம்?
1. கொஞ்சம் செலவு செய்ய மனமிருந்தால் போதும் அட்டகாசமாய் சார்ட்கள் வாங்கி வெட்டி ஒட்டி பாடம் எடுக்கலாம்.
2. கதைகள் படித்து அழகாய் குழந்தைகளுக்கு சொல்லலாம்.
3. கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகளுக்கு பொது அறிவு கற்றுக்கொடுக்கலாம். அதற்கு முதலில் நீங்கள் கற்க வேண்டும். விஜய் டீவியில் நீயா நானாவில் ஒரு முறை ஆசிரியர்கள் பற்றிய நிகழ்ச்சியில் “சந்திராயன் வெற்றியா தோல்வியா?” என்கிற கேள்விக்கு ஒரு ஆசிரியருக்குக் கூட விடை தெரியாமல் இருந்தது கொஞ்சம் வருத்தப்படவேண்டிய விசயம்.
4. ஆங்கிலம் நீங்கள் படித்துகொண்டு குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுக்கலாம்.
5. சுத்தம் கற்றுக்கொடுக்கலாம்.
6. ஒழுக்கம் கற்றுக்கொடுக்கலாம்.
7. ரைம்ஸ் கற்றுக்கொடுக்கலாம். எத்தனையோ வீசிடிகள் மற்றும் டீவிடிகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. உங்கள் டீவிடி ப்ளேயரை எடுத்துக்கொண்டு (வீட்டில் டீவிடி ப்ளேயர் இல்லையென்று மட்டும் சொல்லாதீர்கள்!) ஊரில் இருக்கும் பொது டீவியில் அந்த வீசிடிகளை போட்டுக் காட்டலாம்.
8. புதிதாக விளையாட்டு கற்றுக்கொடுக்கலாம். புட் பால் வாங்கிக்கொடுங்கள். கிரிக்கெட் பேட் வாங்கிக்கொடுங்கள். பாட்மிட்டன் ராக்கெட் வாங்கிக்கொடுங்கள். உங்கள் குழந்தைகள் குடிக்கும் காம்ப்ளானுக்கு இலவசமாக கிடைக்கும் டென்னிஸ் பந்துகளையாவது அட்லீஸ்ட் கொடுங்கள்.
9. டீம் ஸ்பிரிட் கற்றுக்கொடுக்கலாம். உங்களுக்கு தெரிந்திருந்தால்.
10. இலக்கியம் கற்றுக்கொடுக்கலாம்.
11. தேடலை கற்றுக்கொடுக்கலாம். உங்கள் ஹேர்பின், ஹேண்ட்பேக், கண்ணாடி, செருப்பு பொன்றவற்றை தேடச்சொல்கிறீர்களே அதைப் பற்றி நான் சொல்லவில்லை, அறிவுத் தேடல் பற்றி சொல்கிறேன். Teach them how to acquire knowledge.
12. உங்கள் பிள்ளைகளை ஒரு நாள் பள்ளிக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு தெரிந்தவற்றைக் கற்றுக்கொடுக்கச்சொல்லுங்கள். பகிர்ந்துகொள்ளச்சொல்லுங்கள்.
நான் சொன்னவை மிக மிக குறைவு. குறைந்த செலவில் நீங்களே அரசை எதிர்பார்க்காமல் இன்னும் நிறைய செய்யமுடியும்.முயற்சி செய்யுங்கள். Find a role model and be a role model.
The Three Cups of Tea கிடைத்தால் படியுங்கள்.
அருமையான யோசனைகள் தல…. சம்பந்தபட்டவர்கள் பார்த்தல் நன்றாக இருக்கும்….(இதான் உங்க ஊரு… இதுக்கு இன்னிக்கு நல்லாது செய்யாமா விடாதீங்க…. )
LikeLike
சுகுமார்: சிவாஜி படத்தில வர இந்த டயலாக் ரொம்ப சின்னப்பிள்ளத்தனமா இருக்கும்! ஆனாலும் உங்களுக்கு நக்கல் ஜாஸ்தி.
LikeLike
என்ன தலைவா…நீங்களும் ஒரு நாள் 5000 கோடியோட இங்க வந்து MSV பவுண்டேஷன் ஆரம்பிப்பீங்க அப்படிங்கற நம்பிக்கைல தான் சொன்னேன் தலைவா… சத்தியமா நக்கல் பண்ணல…..( அப்ப கூட என்ன விவேக் மாதிரி ஹெல்புக்கு சேத்துக்குங்க…… )
LikeLike