முப்ப‌த்தியிர‌ண்டு கேள்விக‌ள்

உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

பாலாவின் எழுத்து இன்ஃப‌ர்மேட்டிவ்வாக‌ இருக்கும். என்னை ஆர‌ம்ப‌கால‌த்தில் ஊக்குவித்த‌வ‌ர்க‌ளில் மிக‌ முக்கிய‌மான‌வ‌ர்.அவ‌ர‌து அனாலிஸிஸ் டைப் ப‌திவுக‌ள் என‌க்குப் பிடிக்கும்.

உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?
குர‌ல்வ‌லை? ப்ளாக் ஆர‌ம்பிக்க‌வேண்டும் என்கிற‌ எண்ண‌ம் வ‌ந்த‌வுட‌ன் தோன்றிய‌ முத‌ல் பெய‌ர். அப்ப‌டியே வைத்துவிட்டேன். முத்து? என் தாத்தாவின் பெய‌ர். என்னுடைய‌ அப்ப‌த்தாவிட‌ம் கேட்டால் அவ‌ரு அர்ச்சுன‌ரு என்பார். அர்ச்சுன‌ர் என்றால் சக‌ல‌க‌லா வ‌ல்ல‌வ‌ன் என்று அர்த்த‌மாம். அவ‌ர் அர‌சு ப‌ள்ளியில் த‌லைமை ஆசிரிய‌ராக‌ வேலை பார்த்த‌வ‌ர். நாட‌க‌ம் ந‌டிப்பு இசை என்று ப‌ல‌ துறைக‌ளில் கால் ப‌தித்த‌வ‌ர். ல‌ட்சிய‌ ந‌டிக‌ர் எஸ்.எஸ்.ஆர் என் தாத்தாவின் மாண‌வ‌ர் என்று அப்பா சொல்லுவார். என் தாத்தா இற‌க்கும் பொழுது நான் நான் நிறை மாத‌மாம். அத‌னால் தான் என‌க்கு முத்து என்கிற‌ பெய‌ர் கிடைத்த‌து.

உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
ம்ம்..நிறைய‌.

கடைசியாக அழுதது எப்போது?
என் அண்ண‌ன் ம‌க‌ள் ச‌க்தி எங்க‌ளை விட்டுப் பிரிந்த‌ பொழுது.

உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?
பிடிக்கும். பிடிக்காது. என் கையெழுத்து என் ம‌ன‌ நிலையைப் பொருத்து மாறுப‌டும்.

பிடித்த மதிய உணவு?
டிப‌ன் பாக்ஸில் த‌க்காளி சாத‌ம், த‌யிர் சாத‌ம். வீட்டில் என்றால் வெஜிட்டேரிய‌னில் ப‌ருப்பு க‌த்திரிக்காய் கூட்டு. நான் வெஜ் : மீன் குழ‌ம்பு.

நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா?
இது என்ன‌ கேள்வி? க‌ண்டிப்பாக‌.

கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?
அருவியில‌ தான் குளிக்க‌ப் பிடிக்கும். ஆனால் அருவியில் நான் குளித்த‌தே இல்லை. 😦

ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
க‌ண். சிரிப்பு.

உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
த‌ன்ன‌ம்பிக்கை+ச‌கிப்புத்த‌ன்மை. கோப‌ம்+சோம்பேறித்த‌ன‌ம்.

உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த, பிடிக்காத விசயம் எது?
த‌ன்ன‌ம்பிக்கை+ச‌கிப்புத்த‌ன்மை+பொறுமை; ஒன்றுமில்லை.

மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் ஒரே காரியம்?
ஏதுமில்லை.

இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
அம்மா. அப்பா. ஊர்ல‌ இருக்காங்க‌.

இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
வெறும் லுங்கி ம‌ட்டும்.

என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?
உன் மேல‌ ஆச‌தான் (ஆயிர‌த்தில் ஒருவ‌ன்) நேஷ‌ன்ல் ஜியோக‌ராஃபியில் மெகா ஸ்ட‌ர்க்ச்ச‌ர்ஸ்.

வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
ஸ்கை ப்ளூ.

பிடித்த மணம்?
காஃபி; ம‌ல்லிகை; ம‌ழை ம‌ண் வாச‌னை; செடி ம‌ர‌ங்க‌ள் ம‌ண்டிய‌ இட‌ங்க‌ளில் வ‌ரும் ப‌ச்சை வாசனை.

பிடித்த விளையாட்டு?
க்ரிக்கெட்; டேபிள் டென்னிஸ்;

கண்ணாடி அணிபவரா?
சோடாபுட்டி.

எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
ம‌ர்ம‌ம்; யூகிக்க‌முடியாத‌ க்ளைமாக்ஸ்; திடீர் திருப்ப‌ங்க‌ள் கொண்ட‌ ப‌ட‌ங்க‌ள்; அதே ச‌ம‌ய‌த்தில் தெளிந்த‌ நீரோடை போன்ற‌ அமைதியான‌ அழ‌கான‌ ப‌ட‌ங்க‌ள்; அனிமேஷ‌ன் மூவிஸ் எல்லாம்.

கடைசியாகப் பார்த்த படம்?
தியேட்ட‌ரில் ஒரு வ‌ருட‌த்துக்கு முன்பு குசேல‌ன்; டீவியில் ச‌மீப‌த்தில் LA Confidential.

பிடித்த பருவ காலம் எது?
மெல்லிசான‌ காற்றுட‌ன் கூடிய‌ இலையுதிர் கால‌ம்.

என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
1. Joel on Software.
2. Cosmos – Carl Sagan

உங்கள் டெஸ்க்டாப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
ம‌னைவி ம‌ற்றும் குழ‌ந்தையின் ந‌ல்ல‌ புதிய‌ போட்டோ கிடைக்கும் பொழுது.

பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
ப‌ள்ளிக்குழ‌ந்தைக‌ள் ப‌டிக்கும் ச‌த்த‌ம்; ப்ளாக் போர்டில் சாக்பீஸ் சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் நாராச‌மாய் ஒரு ச‌த்த‌ம் கொடுக்குமே அந்த‌ ச‌த்த‌ம்..

வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
இந்தியாவில் விசாக‌ப‌ட்டின‌ம்.

உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
தூங்குவ‌தெல்லாம் திற‌மை லிஸ்டில் வ‌ராது என்ப‌தால்; வேக‌மாக‌ப் ப‌டிப்ப‌து(Fast Reading)

உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
குழ‌ந்தைக‌ளை அடிக்கும் பெற்றோர்க‌ள்;பெற்றோர்க‌ளுக்கு அட‌ங்காத‌ வ‌ள‌ர்ந்த‌ பொறுப்ப‌ற்ற‌ ஆண் பிள்ளைக‌ள்.

உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
நானே.

உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
Nothing Specific.

எப்படி இருக்கணும்னு ஆசை?
ஸ்ட்ராங்காக‌; ஸிக்ஸ் பேக்ஸ்; புஜ‌ ப‌ல‌ம் காட்டுப‌வ‌னாக‌; அம்மா அப்பாவுட‌ன் ஆன‌ந்த‌மாக‌ பொழுதைக் க‌ழிப்ப‌வ‌னாக‌; ம‌னைவி குழ‌ந்தையுட‌ன் இன்னும் நேர‌ம் செல‌வ‌ழிப்ப‌வ‌னாக‌; சிக்க‌ன‌மான‌வ‌னாக‌;

வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
வாழ்க்கை மிக‌ மிக‌ குறுகிய‌து; என‌வே வாழ்ந்துவிடுங்க‌ள்.

நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

1. பொன்ஸ்: என்னைப்போல‌வே திடீர் திடீர்ன்னு எப்ப‌வாச்சும் எழுத‌ற‌வ‌ர்; என்னைப் போல‌ அல்லாம‌ல் எழுதினால் ந‌ச்சுன்னு எழுத‌ற‌வ‌ர்.
2. நிர்ம‌ல்: அமைதியான‌ அழ‌கான‌ சிந்திக்க‌ வைக்கும் ப‌திவ‌ர்; ரொம்ப‌ நாளா ஆள‌வே காணோம்.
3. வெட்டிப்ப‌ய‌ல் (ஏற்க‌ன‌வே எழுதிட்டாருன்னு நினைக்கிறேன்) என‌க்குப் பிடித்த‌ ப‌திவ‌ர்க‌ளில் ஒருவ‌ர்; எந்த‌ விச‌ய‌த்தையும் சுவ‌ராஸ்ய‌மாக‌ எழுத‌க்கூடிய‌வ‌ர்.
4. சுகுமார்: நான் பார்த்து விய‌க்கும் ப‌திவ‌ர்க‌ளில் ஒருவ‌ர்; குறுகிய‌ கால‌த்தில் வ‌லையுல‌கில் பிர‌ப‌ல‌மான‌வ‌ர்; ப‌ய‌ங்க‌ர‌ கிரியேட்டிவ்வான‌ ஆள்;
5. அதிஷா : இவ‌ருடைய‌ ந‌க்க‌ல் என‌க்கு ரொம்ப‌வும் பிடிக்கும்.
6. எஸ் ராம‌கிருஷ்ண‌ன் : பிடித்த‌ எழுத்தாள‌ரைப் ப‌ற்றி மேலும் தெரிந்து கொள்வ‌த‌ற்கு.
7. ஜெய‌மோக‌ன்:பிடித்த‌ எழுத்தாள‌ரைப் ப‌ற்றி மேலும் தெரிந்து கொள்வ‌த‌ற்கு.

***

 

5 thoughts on “முப்ப‌த்தியிர‌ண்டு கேள்விக‌ள்

  1. சாரி பாலா, உங்க‌ க‌மென்ட்ட‌ விர‌ல் த‌வறி (stupid iphone!) ரிஜெக்ட் செஞ்சிட்டேன். உங்க‌ ந‌ன்றியை நான் பாத்துட்டேன்! ந‌ன்றிக்கு நன்றி! 🙂

    Like

  2. அதிஷா ந‌ன்றி. உங்க‌ வ‌லைப்ப‌க்க‌த்தில் வ‌ந்து செக் ப‌ண்ணிப் பார்த்தேன். நீங்க‌ள் எழுதிய‌து க‌ண்ணில் ப‌ட‌வில்லை.ப‌ர‌ணி: ந‌ன்றி!

    Like

  3. சுகுமார்:Not able to comment on Kuralvalai Boss…. Showing Technical error….தலைவா . வஷிஸ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் வாங்கியது போல் இருக்கு … ரொம்ப ரொம்ப நன்றி தல…. உங்க எழுத்தால என்னை பதிவர்னு சொல்லிட்டீங்க…. ( ஹே நானும் பதிவர்தான்.. நல்லா பாத்துக்குங்க நானும் பதிவர்தான்…)(Test)

    Like

Leave a Reply to MSV Muthu Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s